Wednesday, March 30, 2011

ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு


திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிராகவும் நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்து வருகிறார்.   இன்று சென்னையை அடுத்த தாம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்.


அப்போது அவர்,   ’’கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு லூஷூ வந்திருக்கு.  அது வந்திட்டு என்ன சொல்லுது.    ’’நாடு சரியில்ல...ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு.( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) நான் நாட்டு மக்களுக்கு விடுதலை  வாங்கித்தரப்போறேன்.’’ன்னு சொல்லுது.


என்ன இப்ப வெள்ளைக்காரன் பிரிட்டிஷ் ஆட்சியா நடந்துக்கிட்டிருக்கு.     நீ விடுதலை வாங்கித்தர்றதுக்கு.  


அந்த லூஸூ முதல்ல என்ன சொல்லுச்சு.  நான் மக்களோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு.     தெயவத்தோடுதான் கூட்டணின்னு சொல்லுச்சு.       மக்களும் கலைஞரும் ஒண்ணுதான்.    அது ரெண்டும் கலைஞர்கிட்ட வந்தாச்சு.




இப்ப நீ எங்க போய் கூட்டணி சேர்ந்திருக்க.   சீட்டுக்காக போய் சேர்ந்திருக்க.     அது சீட்டுக்காக சேர்ந்த அணி அல்ல.   சீட்டிங் அணி.    காசு வாங்கிட்டு போய் சேர்ந்திருக்க நீ.   பிளடி ஃபூல்.    

யார ஏமாத்துற நீ.   மொதல்ல என்ன சொன்ன நீ.     30,40க்கு போறதெல்லாம் எலும்பஅ பொறுக்குற நாய் நான் இல்லன்னு சொன்னீல்ல.      இப்ப 41 எலும்ப வாங்கியிருக்க. அதுக்கு பேரு என்னநீதான சொன்ன.   30,40 வாங்குறதுக்கு நான் நாயில்லன்னு.  


கூட்டணி ஏன் சேர்ந்தீங்கன்னு பத்திரிக்கைகாரங்க கேட்குறாங்க.   அதுக்கு நீ என்ன சொல்லுற.   இப்ப கூட்டணி சேரனுங்குறது அவசரம்னு சொல்லுற.   என்ன கக்கூஸ் போற அவசரமா?


எம்.ஜி.ஆரின் நிறமும் கிடையாது.  குணமும் கிடையாது.   அப்புறம் எதுக்கு எம்.ஜி.ஆருன்னு சொல்லிக்கிட்டு திரியற.  நீ இந்த மக்களுக்கு என்னத்த புடுங்க போற?’’ என்று விஜயகாந்தை விளாசி எடுத்தார்.


இன்றைய பதிவுகள்...







    1 comment:

    1. VADIVELU KAMADI EPPO MUDIYUMANNU THERIYALA PADATHULA AVARODA KAMADI EDUPADALANNU MEDAYILA VANTHUTTARNNU NINAIKKARAN,
      DMK PRACHARAM PANNA SONNA VADIVELUVA VAHUKITTU KAMADI......GEEMADI....PANNIKITTU IRUKKU LOOSU PAYALUNGALA.....

      ReplyDelete