மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் விஜய் சும்மா இருக்கமாட்டார், தட்டிக்கேட்பார் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கலைஞர் வசனம் எழுதிய 3 படங்களை நான் இயக்கியிருக்கிறேன். ஒரு படைப்பாளியாக நான் இன்றும் அவர் ரசிகன் தான். ஆனால் எப்பொழுதுமே நான் ஒரு திமுககாரன் என்று சொன்னதேயில்லை.
ஒரு குடும்பத்தில் தந்தை தவறு செய்தால் மகன் தட்டிக் கேட்பான். நானும் அந்த கோபத்தில் தான் தட்டிக்கேட்கிறேன். ஆட்சியில் மாற்றம் ஏற்படவே அதிமுகவை ஆதரிக்கிறேன்.
புரட்சித்தலைவி ஆட்சிக்கு வர நானும், விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் பாடுபடுவோம். நான் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவிருக்கிறேன். ஆனால் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மாட்டார். அவர் அரசியலுக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகும். அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சில இடங்களில் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக செயதிகள் வெளியாகின்றன. அதில் உண்மை இல்லை.
நான் எடுத்துள்ள சட்டப்படி குற்றம் என்ற படத்தை ஆளும் கட்சியை தட்டிக்கேட்கும் வகையிலும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் எடுத்திருக்கிறேன்.
மக்கள் இயக்கம் மக்களுக்காகத்தான். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது தட்டிக்கேட்கும். மக்களுக்கு பிரச்சனை என்றால் விஜய்யும் சும்மா இருக்க மாட்டார், தட்டிக்கேட்பார். அதிமுக ஆட்சி மலர பாடுபடுவோம் என்றார்.

No comments:
Post a Comment