உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மொகாலியில் நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஆஷிஸ் நெஹரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரசாக் கிலானி ஆகியோர் பார்க்கின்றனர். அதன்படி தொடக்க வீரர்களாக சச்சினும், ஷேவாக்கும் களம் இறங்கி விளையாடினர் முதல் ஓவரில் இந்தியா 4 ரன் எடுத்த்து ஷேவாக் அதிரடியாக விளையாடி வந்தார். வகாப் ரியாஸ் வீசிய 6-வது ஓவரில் ஷேவாக் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் 38 ரன் எடுத்தார்.
இதில் 9 பவுண்டரிகளும் அடங்கும். பின்னர் களம் வந்த காம்பீர் 27 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி சச்சின் அரை சதம் அடித்தார். காம்பீர் அவுட் தொடர்ந்து பின்னர் களம் வந்த கோக்லி 9 ரன்னிலும், யுவராஜ் சிங் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். அடுத்ததாக வந்த கேப்டன் டோனி விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடி வந்தார் சிறப்பாக விளையாடி வந்த சச்சின் 37-வது ஓவரில் அஜ்மல் பந்தில் அப்ரிடியிடம் கேட்ச் ஆனார். அவர் 85 ரன்கள் எடுத்தார்.
அடுத்ததாக வந்த ரெய்னா அடித்து விளையாடி வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த டோனி 25 அடித்தருந்த போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 205 ரன்னக இருந்தது. பின்னர் வந்த ஹர்பஜன் சிங் 12 ரன்னில் அவுட் ஆனார். அதைதொடர்ந்து வந்த வீரர்கள் ஜாகீர்கான் 9 ரன்னிலும் நெக்ரா 1 ரன்னிலும் பெவுலியன் திரும்பினர்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது. ரெய்னா 38 ரன்னுடனும் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிக பட்சமாக வகாப் ரியாஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மிஸ்பா உல்-ஹக் 56 ரன்கள் (76 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். கடைசி கட்டத்தில் மிஸ்பா உல்-ஹக் அதிரடியை வெளிப்படுத்தினார். ஹபீஸ் 43 ரன்கள், சபீக் 30 ரன்கள், உமர் அக்மல் 29 ரன்கள், அப்ரிடி 19 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இரு நாட்டு பிரதமர்கள்...
இந்தக் அரையிறுதிப் போட்டியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசாக் கிலானியும் நேரடியாகக் கண்டுகளித்து வருகின்றனர். இதையொட்டி, மைதானத்தைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, தன்னுடைய வருகை இரு நாட்டு நல்லுறவில் முக்கிய முன்னேற்றத்தை கொண்டு வரும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி கருத்து தெரிவித்திருந்தார்.
இன்றைய பதிவுகள்...
- ஓட்டு வேட்டை தொடங்கியது வீடு வீடாக, சரக்குடன் பிரி...
- இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்...
- பாகிஸ்தானை வீழ்த்தி பைனலில் அசத்தலாக நுழைந்தது இந்...
- உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டி...
- காங்கிரஸ் வெற்றி பெற்றால்..... சீமான் பேச்சு
- போதை பொருள் கடத்தலில் தொடர்பா?-திரிஷா ஆவேசம் ;திரை...
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொல்வார்... பிரேமலதா பே...
- விஜயகாந்தின் உச்சகட்ட நாடகம் :வயிற்றில் அடித்துக்க...
- வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் த...
- காடுவெட்டி குரு சொன்னதை நானும் சொன்னால் அமைதியாக த...
- கேப்டன் தாக்குவது சித்தரிக்கப்பட்ட காட்சி: அடிப்பட...
- சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இய...
- தமிழ்நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது;வ...
- வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! - சோ...
- என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொ...
- கனிமொழி மீதும் பாய்கிறது குற்றப்பத்திரிக்கை?
- 'விஜய் எஸ்கேப்'-பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்: எஸ்.ஏ...
- கருப்பு எம்ஜிஆருக்கு பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ்...
- விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
- விஜயகாந்த் விவகாரம்: அதிமுகவினர் - பாமகவினர் மோதல்...
- அ.தி.மு.க.வை விஜயகாந்த் கைப்பற்ற ரகசிய திட்டம் -வ...
- ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
- வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த ...
தல அது அரையிறுதி போட்டி தல
ReplyDeleteதவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி தல
ReplyDeleteதவறுக்கு வருந்துகிறேன் ...
தவறு திருத்தப்பட்டுள்ளது தல