அப்போது அவர், ‘’இந்த மதுரை மக்கள் வீரம் செரிந்தவர்கள் அதே வேளையில் மண்ணின் மருமகள் என்பதால் உங்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
மதுரை மத்திய தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். அப்போதுதான் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும். தேர்தல் வந்துவிட்டால் திருமங்கலம் கலாச்சாரம் வந்து விடுகிறது. கட்டப்பஞ்சாயத்தும் அதிகரித்துள்ளது. இங்கு மக்கள் மவுனமாக இருக்கிறார்கள்.
இந்த மவுன புரட்சி நமக்கு வெற்றி புரட்சியாக மாறும். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி 400 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள். பாதாள சாக்கடை வசதி சரிஇல்லை. சாலை வசதி சீர் செய்யப்படவில்லை. மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டு தலையை வீசியதாக 5 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மை இல்லை என்றால் 5 பேரும் விடுதலை செய்யபாடு படுவோம். ரேசஷன் கடைகளில் பொருட்கள் எடை குறைவாகத்தான் வழங்கப்படுகிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்று கேப்டன் செயல்பட்டு வருகிறார். இப்போது புரட்சி தலைவி ஜெயலலிதா உடன் புரட்சி கலைஞர் கேப்டன் கூட்டணி அமைத்து உள்ளார்.
இந்த இரு புரட்சி கூட்டணி மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க கூடிய கூட்டணியாகும். எங்கள் கேப்டன் சினிமாவில் மட்டும் தான் நடிப்பார். ஆனால் மக்களிடம் நடிப்பவர் கருணாநிதி. எந்த திட்டம் அறிவித்தாலும் அதன் பலன் கலைஞருக்கு தான் போகும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொல்வார்.
இப்போதும் இலவச டி.வி. கொடுத்து கேபிள் இணைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு மக்கள் பணம் அவரது குடும்பத்துக்கு சென்றுள்ளது.
இதுபோன்ற நிலை இனிமேலும் ஏற்படாமல் இருக்க கேபிள் இணைப்பு அரசுடமையாகவும், தே.மு.தி.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமோக வெற்றிபெற செய்ய கேட்டுக்கொள்கிறேன். பாரத போரில் அர்ச்சுணன் வெற்றி பெற்றது போல் நமது வேட்பாளர்கள் வெல்வார்கள்’’ என்று பேசினார்.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்தின் உச்சகட்ட நாடகம் :வயிற்றில் அடித்துக்க...
- வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் த...
- காடுவெட்டி குரு சொன்னதை நானும் சொன்னால் அமைதியாக த...
- கேப்டன் தாக்குவது சித்தரிக்கப்பட்ட காட்சி: அடிப்பட...
- சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இய...
- தமிழ்நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது;வ...
- வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! - சோ...
- என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொ...
- கனிமொழி மீதும் பாய்கிறது குற்றப்பத்திரிக்கை?
- 'விஜய் எஸ்கேப்'-பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்: எஸ்.ஏ...
- கருப்பு எம்ஜிஆருக்கு பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ்...
- விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
- விஜயகாந்த் விவகாரம்: அதிமுகவினர் - பாமகவினர் மோதல்...
- அ.தி.மு.க.வை விஜயகாந்த் கைப்பற்ற ரகசிய திட்டம் -வ...
- ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
- வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த ...
No comments:
Post a Comment