தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார் திரிஷா. ஆனால் சர்ச்சைகளும் அவரை தொடர்கிறது. ஐதராபாத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இது வரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன். ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது.
அது எனக்கு நிறைவேறி உள்ளது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.
என்னைப் பற்றி ஆதார மில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை வழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.
தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து இருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய் பக்கபலமாக இருப்பார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்.
பழைய கதாநாயகிகள் போல் இப்போதைய நாயகிகள் நடிப்பது இல்லை என விமர்சிக்கின்றனர். பழைய படங்களில் நாயகிகளை முதன்மைபடுத்தி கதைகள் இருந்தன. ஆனால் இப்போது நாயகிகளை கவர்ச்சிப்படுத்திதான் படம் எடுக்கிறார்கள்.
வில்லியாக நடித்தால் முழுதிறமைகளையும் வெளிப்படுத்த முடியும். படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி வில்லி வேடங்களில் நடிக்கிறேன். திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. கல்யாணம் ஆனால் அழகு போயிவிடும் என்று சில பெண்கள் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்தின் உச்சகட்ட நாடகம் :வயிற்றில் அடித்துக்க...
- வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் த...
- காடுவெட்டி குரு சொன்னதை நானும் சொன்னால் அமைதியாக த...
- கேப்டன் தாக்குவது சித்தரிக்கப்பட்ட காட்சி: அடிப்பட...
- சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இய...
- தமிழ்நாட்டின் மீது காங்கிரசுக்கு அக்கறை கிடையாது;வ...
- வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை! - சோ...
- என் கையில் அடிவாங்கிறவன் நாளை மாகாராஜா ஆவான்! - சொ...
- கனிமொழி மீதும் பாய்கிறது குற்றப்பத்திரிக்கை?
- 'விஜய் எஸ்கேப்'-பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்: எஸ்.ஏ...
- கருப்பு எம்ஜிஆருக்கு பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ்...
- விக்ரமுக்கு 'நோ' விஜய்க்கு 'எஸ்'.. ரஜினிக்கு..?
- விஜயகாந்த் விவகாரம்: அதிமுகவினர் - பாமகவினர் மோதல்...
- அ.தி.மு.க.வை விஜயகாந்த் கைப்பற்ற ரகசிய திட்டம் -வ...
- ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
- வேட்பாளரை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்த ...
No comments:
Post a Comment