Wednesday, March 30, 2011

விஜயகாந்தின் உச்சகட்ட நாடகம் :வயிற்றில் அடித்துக்கொண்டு விஜயகாந்த் கண்ணீர்


அரியலூர் மாவட்டம் செந்துரையில் குன்னம் தொகுதி தேமுதிக வேட்பாளர் துரைகாமரஜை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.  


அப்போது அவர்,  ‘’எனக்கு வலி இருக்கு.   வலி இருக்குறதுனாலதான் பேசுகிறேன்.(அடித்தொண்டையில் பேசுகிறார்)    எனக்கு மனுக்கள் வந்து குவியுது.   ஒவ்வொரு மனுவையும் பிரித்துப்பார்த்தால் பஞ்சம், பசி,பட்டினி என்றுதான் இருக்கு.  இதுதானாஏமாத்து உலகம்தானாமக்கள் ஏமாந்துதான் போகனுமா?




எத்தனை எம்.எல்.ஏ.  இருக்கீங்க. என்னய்யா பன்றீங்க.   மக்கள் என்னய்யா கேட்டாங்க உங்ககிட்ட.    பத்துகோடி கொடு அஞ்சுகோடி கொடுன்னா கேட்டாங்க.

மூனு வேள சோத்துக்கு கூட வழி இல்லாம இருக்காங்கடா பாவி பசங்களா’’ என்று சொல்லிவிட்டு கண்ணீருடன் வயிற்றில் அடித்துக்கொண்டார்.  பின்பு பேச்சுவாக்கில் கண்ணீரை துடைத்துக்கொண்டு,


’’அதைக்கூட செய்யாத இந்த கட்சிகளுக்கு எதுக்கு நீங்க ஓட்டுப்போடுறீங்க.  ஏண்டா விஜயகாந்த் இப்படி பேசுறான்னு நினைக்காதீங்க.   உண்மையிலே எனக்கு வந்த மனுக்கள படிச்ச ஆத்திரத்துல இப்படி பேசுறேன். 



எல்லா மனுக்களையும் படித்துப்பார்த்து என்னால் ஆன உதவிகளை செய்துவருகிறேன்.  தேர்தலுக்கு பிறகும் நான் நடிப்பேன்.   நடித்து அதில் வரும் பணத்தைக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்வேன்.


  உழைச்சுதான் நான் மக்களுக்கு கொடுப்பேன்.    ஊழல் செய்து கொடுக்கமாட்டேன்’’ என்று ஆவேசமாய் பேசினார்.


இன்றைய பதிவுகள்...





    No comments:

    Post a Comment