Wednesday, March 30, 2011

காங்கிரஸ் வெற்றி பெற்றால்..... சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதியில் அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்  நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தடா சந்திரசேகர், தமிழர் அரப்பா, தலைமை நிலைய பேச்சாளர் பேராவூரணி திலீபன்இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டோம்னிக் ரவி, மற்றும் திரைப்பட இயக்குநர்கள் செல்வமணி, செல்வபாரதி உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.



கூட்டத்தில் சீமான்,  ’’மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படையை கண்டுகொள்ளாமல் தமிழின அழிப்பிற்கு துணை போய் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை நாம் வீழ்த்த வேண்டும்.

இனி ஒரு முறை இந்த மண்ணில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வருங்கால தமிழ்ச் சொந்தங்கள் அனைவருடைய வாழ்க்கையும் கேள்விக்குறியாக ஆகிவிடும்.


காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது என்பது நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள் மட்டுமல்ல தமிழனாக பிறந்த ஒவ்வொரு தமிழனுக்குமான கடமை’’ என்று  பேசினார்.


இன்றைய பதிவுகள்...







    No comments:

    Post a Comment