Monday, March 28, 2011

விஜயகாந்த் மீது கார்த்தி சிதம்பரம் பாய்ச்சல்


செங்கம் பெங்களூர் மெயின் ரோட்டில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதனை கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது,

’’சொன்னதை செய்பவர் செய்வதை சொல்பவர் தான் கலைஞர். இலவச டி.வி. கியாஸ், 108 ஆம்புலன்ஸ், என பல்வேறு மக்கள் திட்டங்களை கூறி அதனை 100க்கு 100 சதவீதம் முடித்து செயல்படுத்தும் கூட்டணி தான் என்றும் மத்தியிலும் மாநில சேவையில் திறம்பட இருக்கிறது.



போயஸ் கார்டன் சென்றவுடன் கேப்டன் சிப்பாயாக மாறிவிட்டார். தேர்தல் முடிந்ததும் சிப்பந்தியாக மாறிவிடுவார். தேர்தல் அறிக்கைகளை ஜெயலலிதா காப்பியடித்து உள்ளார்.  இதற்கு முன் அளிக்க மனம் இல்லாத எதிரணியினர்.

இப்போது எப்படி கொடுப்பார்கள். ஏழை, எளிய மக்கள் தொகுதிக்காக பாடுபடும் பண்பானவர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை சிறப்பாக சேவை செய்யும் மனம்பக்குவம் மனிதர் அவர்’’ என்று கூறினார்.



இன்றைய பதிவுகள்...






No comments:

Post a Comment