ரசிகர்களின் வேண்டுகோளுக்காக, நடிப்பதில்லை என்ற முடிவை வாபஸ் பெற்றுள்ளதாக திவ்யா கூறியுள்ளார். 'தண்டம் தஷகுணம்' என்ற கன்னட படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு செல்லாததால் திவ்யா மீது புகார் செய்தார் தயாரிப்பாளர் கணேஷ். தன்னிடம் வாங்கிய கடனை தயாரிப்பாளர் தராததால்தான் விழாவுக்கு செல்லவில்லை என்றார் திவ்யா. இதையடுத்து கன்னட தயாரிப்பாளர் சங்கம் திவ்யாவுக்கு ஒரு வருடம் தடை விதித்தது. ஆனால், நடிகர் சங்கம் திவ்யாவுக்கு ஆதரவாக கொடி பிடித்தது. இதற்கிடையில் திவ்யா, ‘கன்னட திரையுலகினருடன் சண்டைப்போட என்னிடம் சக்தி இல்லை. இதனால் கன்னட சினிமாவில் இனி நடிக்க போவதில்லை’ என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், ‘இந்தப் போட்டியில் நான்தான் வென்றேன். எனக்கு நடிகர் சங்கமும் நல்ல உள்ளம் கொண்ட திரையுலகினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனது பணம் திரும்ப கிடைத்துவிட்டது. எனது ரசிகர்கள் தொலைபேசியிலும் இணையதளம் மூலமாகவும் கன்னட சினிமாவை விட்டு செல்ல வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டதால் என் முடிவை வாபஸ் பெற்றுள்ளேன்’ என்று திவ்யா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment