வானம் படத்தின் சூட்டிங் ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் வேளையில் படத்தின் சூட்டிங்கின் போது சிம்புவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக சிம்புவும், ஹீரோயினாக அனுஷ்கா நடிக்கின்றனர். இவர்களுடன் பரத், சோனியா அகர்வால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வேதம் படத்தை இயக்கிய கிரிஷே இப்படத்தையும் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இதனிடையே இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் ஜெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் சூட்டிங்கின் போது இரும்பு கம்பி ஒன்று தாக்கி சிம்புவுக்கு காயம் ஏற்பட்டது. வலி பொறுக்காமல் துடித்து போன சிம்புவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் படக்குழுவினர். அங்கு சிம்புவை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், ஆபரேஷன் முடித்த பின்னர் இரண்டு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஓரிரு நாளில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. சிம்புவுக்கு ஏற்பட்ட காயத்தால் வானம் படத்தின் சூட்டிங் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோன்று ஏற்கனவே இருமுறை வானம் பட சூட்டிங்கின் போது சிம்புவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment