தமிழ்சினிமாவில் ஒரு வார்த்தை இருக்கிறது. ஓப்பனிங் ஹீரோ! பொழுது சாய்ந்ததும் பல ஹீரோக்கள் 'ஓப்பனிங்' ஹீரோவாக இருப்பார்கள், அது வேறு. ஆனால் நிஜ ஓப்பனிங் ஹீரோக்களை இப்போது விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு நம்பிக்கை குறைந்து போய்விட்டார்கள் ரசிகர்கள். படம் நல்லாதான் இருக்கு. ஆனால் ஓப்பனிங் இல்லை என்று வெகு சாதாரணமாக முதல் நாளே காமெண்ட் அடிக்கும் ரசிகர்கள், ஒரு படத்தின் ஓப்பனிங்கை நேரில் பார்த்து பேஸ்த் அடித்துப் போயிருக்கிறார்கள். அது சாந்தி என்ற திரைப்படம். (அலோ... இது அந்த டைப் படம்தாங்க)
ரசிகர்களின் வெகு நாள் ஆவலை பூர்த்தி செய்ய வருகிறாள் என்ற செய்தித்தாள் விளம்பரங்களோடு கடந்த சில மாதங்களாகவே பில்டப் கொடுக்கப்பட்ட இந்த படம், கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டருக்கு வரும் என்று தேதி குறிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 80 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது சாந்திக்காக.
சென்னையில் சின்ன தியேட்டர் கிடைத்தால் கூட போதும் என்று தவிக்கும் பல படங்களுக்கு மத்தியில் பெரிய பெரிய தியேட்டர்களை ஒதுக்கிக் கொடுத்தார்கள் சாந்திக்கு. ஆனால் வெள்ளிக்கிழமை வரவேண்டிய இத்திரைப்படம், அன்றைய தினம் தியேட்டருக்கு வரவேயில்லை. காலை ஒன்பது மணிக்கே தியேட்டர் வாசலில் காத்திருந்த வாலிப வயோதிக அன்பர்கள்(?) இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஏன் படம் ரிலீஸ் ஆகவில்லை? நாம் சாந்தி திரைப்பட வட்டாரத்திடம் விசாரித்தோம். படத்தின் சில ரீல்களில் சவுண்ட் சரியாக லிங்க் ஆகவில்லையாம். இந்த தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய பிரிண்டை மும்பைக்கு அனுப்பியிருக்கிறோம். வந்ததும் சில தினங்களில் ரிலீஸ் என்றார்கள்.
இப்போ சவுண்டாங்க முக்கியம்?
No comments:
Post a Comment