உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருக்கோவிலூர் ஒன்றிய மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை உளுந்தூர்பேட்டையில் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் மாசிலாமணி பேசும்போது,
’’மதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தற்போது புதிய எழுச்சியை பெற்றுள்ளது. உண்மையான திராவிட இயக்கமாக மதிமுக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த முடிவை நாம் எடுக்கவில்லை.
அதிமுக தலைமை அந்த நிலையை ஏற்படுத்தி உள்ளது. சாமானிய மக்களையும் தேர்தலில் நிற்க வைத்து பெரிய பண்ணையாளர்களை தோற்கடிக்க வைத்தவர் அண்ணா. இப்போது நான்கு சினிமாவில் நடித்துவிட்டு கட்சி ஆரம்பிக்கின்றவர்கள் நான்தான் அடுத்த முதல்வர் என கூறுகின்றனர்.
தேர்தல் மட்டுமே மதிமுவுக்கு நோக்கம் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக கூட்டணி தர்மத்தை காத்து வந்தோம்.
6 ஆண்டுகளாக தோழமை உணர்வுடன் இருந்த நமக்கு 6 சீட் ஒதுக்கியது அதிமுக. இப்படிப்பட்ட துரோக செயலை எந்த அரசியல் கட்சியும் இதுவரை சந்தித்தது இல்லை.
தன்னை கேப்டன் என கூறி வந்தவர் தற்போது அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார். இனி எந்த காலத் திலும் அவரது முதல்வர் கனவு பலிக்காது.
தேர்தலுக்கு பிறகு ஒரு கூட்டணி உருவாகும். எதிரிகளைகூட விட்டுவிடலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை வீழ்த்த வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களை வீழ்த்துவோம்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment