சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் டைரக்டர் முகில் இயக்கத்தில் உருவாகியுள்ள "கண்டேன்" படத்திற்கு "யு" சான்று கிடைத்துள்ளது. ஏப்ரலில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த சாந்தனு பாக்யராஜ், சக்கரக்கட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதனைத்தொடர்ந்து சித்து +2 படத்தில் நடித்தார். ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்தது. இதற்கு அடுத்து கண்டேன், ஆயிரம் விளக்கு, நண்பா டூ இடியட்ஸ் என்று அடுத்தடுத்து கையில் படங்களை வைத்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இவற்றில் கண்டேன் படத்தின் சூட்டிங் முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. இதில் இவருக்கு ஜோடியாக புதுமுகம் ரேஷ்மா நடிக்கிறார். ஏ.சி.முகில் இயக்குகிறார். இவர் பிரபல நடிகரும், நடன இயக்குநரும், டைரக்டருமான பிரபுதேவாவிடம் "போக்கிரி" படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார்.
இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும் என்று கூறுகிறார் இயக்குநர். இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் "யு" சான்று வழங்கியுள்ளனர். ஏப்ரல் 14ம் தேதி திரையிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
No comments:
Post a Comment