Thursday, March 31, 2011

ஆர்யாவிடம் துக்கம் விசாரிக்கும் ரசிகர்கள்



தமிழ் சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கும் மலையாளி ஆர்யா,   ஒரு மலையாள திரை விழாவில் தமிழ் சினிமாவைப்பற்றி மிகவும் கேவலமாக பேசினார். 


இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.    ஆர்யா படத்திற்கு செறுப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.  கடைசிவரை ஆர்யா மன்னிப்பு கேட்கவில்லை.    வருத்தம் மட்டும் தெரிவித்தார்.

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்தார்ர். இந்திய அணி ஜெயிக்காது என்று நினைக்கிறேன்.

பாகிஸ்தான் அணி சிறந்த அணியாக உள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர். சாகித்அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித்தருவார் என்று கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் நிலவியது.

இந்த நிலையில் நேற்றையை போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது.    இந்திய அணி அபார வெற்றி பெற்றது.   இதனால் மூக்கு உடைபட்டு வெட்கி தலைகுணிந்துள்ளார் நடிகர் ஆர்யா.

துக்கம் விசாரிப்பது போல் அவரை ரசிகர்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்களாம்.



இன்றைய பதிவுகள்...









No comments:

Post a Comment