திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா போட்டி யிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிட 28 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். நேற்று 5 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர்.
இதனிடையே பிரதான கட்சியை சேர்ந்த 5 வேட்பாளர்கள் தவிர மீதமுள்ள 18 சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தேர்தல் அலுவலர் குணசேகரன் தலைமையில் நடந்தது. அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் ராம.ராஜேந்திரன், ரவி, தூதை செல்வம், சண்முகம் ஆகிய 4 பேரும் தங்களுக்கு முரசு சின்னம் கேட்டு தகராறு செய்தனர்.
இதனால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. தலைமை தேர்தல் முகவர் செல்வராஜ், வக்கீல் சரவணன் ஆகியோர் தேர்தல் அலுவலரிடம் சென்று எங்களது கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வின் முரசு சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என வலியுறுத்தினர். இதற்கு சுயேட்சை வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் சுமர்சிங் குர்ஜார் தகராறு செய்த சுயேட்சை வேட்பாளர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குலுக்கல் முறையில் தேர்தல் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர் சுமர் சிங்குர்ஜார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து 3 மணி நேரம் நடந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
குலுக்கல் முறையில் சுயேட்சை வேட் பாளர் பி. ரவிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அகில பாரத இந்து மகாசபை சார்பில் போட்டியிடும் ரவிசங்கர் அய்யர் தனக்கு மோதிரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தகராறு செய்தார். ஆனால் தமிழகம் முழு வதும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால் ரவிசங்கர் அய்யருக்கு ஒதுக்க முடியாது என கூறியதால் தேர்தல் பார்வையாளர் சுமர்சிங் குர்ஜார் அதற்கான உத்தரவை காண்பித்தார்.
இதனை தொடர்ந்து மீதமுள்ள மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங் கள் ஒதுக்கப்பட்டன. ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு: அ.தி.மு.க.வினர் எதிர்ப்பால் பரபரப்பு திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் போட்டியிட 28 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். நேற்று 5 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதனிடையே பிரதான கட்சியை சேர்ந்த 5 வேட்பாளர்கள் தவிர மீதமுள்ள 18 சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தேர்தல் அலுவலர் குணசேகரன் தலைமையில் நடந்தது.
அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் ராம.ராஜேந்திரன், ரவி, தூதை செல்வம், சண்முகம் ஆகிய 4 பேரும் தங்களுக்கு முரசு சின்னம் கேட்டு தகராறு செய்தனர். இதனால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. தலைமை தேர்தல் முகவர் செல்வராஜ், வக்கீல் சரவணன் ஆகியோர் தேர்தல் அலுவலரிடம் சென்று எங்களது கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வின் முரசு சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என வலியுறுத்தினர்.
இதற்கு சுயேட்சை வேட்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் சுமர்சிங் குர்ஜார் தகராறு செய்த சுயேட்சை வேட்பாளர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குலுக்கல் முறையில் தேர்தல் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர் சுமர் சிங்குர்ஜார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து 3 மணி நேரம் நடந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.
குலுக்கல் முறையில் சுயேட்சை வேட் பாளர் பி. ரவிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அகில பாரத இந்து மகாசபை சார்பில் போட்டியிடும் ரவிசங்கர் அய்யர் தனக்கு மோதிரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தகராறு செய்தார்.
ஆனால் தமிழகம் முழு வதும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால் ரவிசங்கர் அய்யருக்கு ஒதுக்க முடியாது என கூறியதால் தேர்தல் பார்வையாளர் சுமர்சிங் குர்ஜார் அதற்கான உத்தரவை காண்பித்தார்.
இதனை தொடர்ந்து மீதமுள்ள மற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
No comments:
Post a Comment