Thursday, March 31, 2011

முட்டையால் அடித்தவர்களுக்கு வாக்குசேகரிப்பா? குஷ்புவுக்கு நடிகர் செந்தில் கேள்வி


நடிகை குஷ்பு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு அக்கட்சிக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் நடிகர் செந்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.


அவர் பிரச்சாரத்தின் போது,   ‘’குஷ்பு வடநாட்டுப்பொண்ணு.    அந்த பொண்ணு நம்ம நாட்டுக்கு பிழைக்க வந்தது.   

அதை நாம எதாவது சொன்னோமா? ஆனா அந்த பொண்ணு என்ன சொன்னது தெரியுமா?   தமிழ்நாட்டு பொண்ணுகளுக்கு கற்பு இருக்கான்னு கேட்டு கதிகலங்க வச்சிடுச்சு.

அப்படி கேள்வி கேட்ட குஷ்புவை ராமதாசும், விடுதலை சிறுத்தைகளும் விரட்டி விரட்டி வழக்கு போட்டார்களே.   


அக்கட்சியினர் முட்டையால் அடித்தார்களே.       இப்போது எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவுங்களுக்கு ஓட்டு கேட்டு போகுது அந்த பொண்ணு’’ என்று கேள்வி எழுப்பினார்.


இன்றைய பதிவுகள்...







No comments:

Post a Comment