41 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாது என, ராமதாஸ் பேசினார்.
திருக்கோவிலூரில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ்,
நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் யாருமே இல்லை. குறிப்பாக 41 இடங்களில் போட்டியிடும் தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியாது.
திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கலைஞர் தலைமையில் நானும் திருமாவளவன், தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். விழுப்புரம், திண்டிவனத்தில் பேசப் போகிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்
போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.
கலைஞர் சொன்னதை அப்படியே ஜெயலலிதா சொல்கிறார். விஜயகாந்த் பற்றி நான் எதுவும்
பேசியது கிடையாது. அந்தக் கட்சிப் பெயரும் எனக்குத் தெரியாது. ஆனால் கும்மிடிப்பூண்டியில் பேசிய விஜயகாந்த் என்னை போராட்ட மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் சொன்னதைப்போல் நான் ஒரு போராட்ட மன்னன்தான். நான் செய்த போராட்டங்கள் ஏராளம். தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக போராட்டம் செய்தேன்.
விருத்தாசலத்தில் இருந்து ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் தொகுதி மக்கள் சரியானப் பாடம் புகட்டுவார்கள். காரணம் இத்தொகுதி மக்கள் ஏமாற மாட்டார்கள். ஆனால் ஏமாற்றுபவர்கள் ஏமாந்து போவார்கள் என்றார்.
இன்றைய பதிவுகள்...
- விஜயகாந்த் வண்டவாளம் எனக்கு தெரியும்: நெப்போலியன்
- விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் 10 வேட்பாளர்கள்...
- கலைஞருடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; கலைஞர் சந்...
- ஜெயலலிதாவுடன் போட்டியிடும் வேட்பாளர்களும் ; ஜெ. சந...
- சட்டப்படி குற்றம் :திரை விமர்சனம் :
- மார்க்கெட் போன முன்னாள் கதாநாயகன்: ஸ்டாலின்
- மதிமுக வெளியேறியது குறித்து மா.கம்யூ கருத்து
- தலைவர் ஆவாரா தல?
- விஜயுடன் பணிபுரிவது புது அனுபவம் : ஷங்கர்
- விஜயகாந்த்தை வருங்கால முதல்-அமைச்சர் என்று அழைக்க ...
- காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு
No comments:
Post a Comment