Thursday, March 31, 2011

விஜயகாந்த்தை அவரது கூட்டணியே நம்பவில்லை: திருமா


அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரம் செய்தார்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் சொன்னதை செய்வார். புதிய திட்டங்களை அறிவிப்பார். பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கே ஆபத்தில் முடியும் என்றார்.


இன்றைய பதிவுகள்...






No comments:

Post a Comment