Thursday, March 31, 2011

வரும்... ஆனால் வராது - வடிவேலு


திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனை ஆதரித்து நடிகர் வடிவேல் இன்று ஐஸ்அவுஸ், ஜாம்பஜார் பகுதிகளில் பேசியதாவது:-

வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் வீடு சிறக்கும். அதே போல் நாட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் நாடு சிறக்கும். கலைஞர் பெரியவர் 5 ஆண்டில் நிறைய திட்டங்களை தந்திருக்கிறார். சொன்னதை செய்துள்ளார். அவர் தலைமையில் மீண்டும் ஆட்சி வந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.

கலைஞர்போல்  ஜெயலலிதா அம்மையாரும் திட்டங்களை பட்டியல் போட்டு அறிவித்துள்ளார். கலைஞர் திட்டங்கள் வரும். ஆனால் அவங்க (ஜெயலலிதா) திட்டங்கள் வரும்... ஆனால் வராது அ.தி.மு.க. ஆட்சியில் எதுவும் வராது.

பொதுமக்கள் மத்தியில்  வேட்பாளரை விஜயகாந்த் அடிக்கிறார். மற்ற தலைவர்கள் யாராவது இப்படி அநாகரீகமாக நடந்ததுண்டா? சிந்தித்து பாருங்கள். விஜயகாந்த்  அவரது கட்சி வேட்பாளர்கள் 41 பேர் பெயரை வரிசையாக சொல்ல  முடியுமாமுடியாது.

இவ்வாறு வடிவேல் பேசினார்.

வடிவேலை காண ஐஸ்அவுஸ் பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.


இன்றைய பதிவுகள்...







No comments:

Post a Comment