Thursday, March 31, 2011

ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை விந்தியா


கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.சி. ஆறுக்குட்டியை ஆதரித்து நடிகை விந்தியா பெரிய நாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது வாக்காளர் மத்தியில் நடிகை விந்தியா பேசினார்.

அவர்,  ‘’தி.மு.க.வினர் கருணாநிதி மீண்டும் 6 முறையாக முதல்வராக வரவேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு குஷ்பு, பாக்கியராஜ், வடிவேல் போன்றவர்கள் ஆதரவாக உள்ளனர்.


 கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் எல்லா வகையிலும் பின் தங்கி விட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, அராஜகம் போன்ற வற்றால் தமிழ்நாடு நலிந்து போய் விட்டது. இதற்கு தீர்வு காண வேண்டுமெனில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.

ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து விட்டது. ஆகவே அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மருதமலை சுல்தானியாபுரம் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பொது மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்படின்னா ஜெயலலிதா ஆட்சியில் தவறு செஞ்சாங்க, அதனால தான் மக்கள் அவங்களுக்கு தண்டனை கொடுத்து வீட்டில உக்கார வச்சிட்டாங்க என்பதை ஒத்துகொள்றாங்களா ...? அது சரி விந்தியா இப்படி பேசியது ஜெயலலிதாவுக்கு தெரியுமா தெரிந்தால் பாவம் விந்தியா கதி என்ன ஆகுமோ ....!!


இன்றைய பதிவுகள்...





No comments:

Post a Comment