Sunday, October 31, 2010
எவரெஸ்ட் சிகரத்திலும் இன்டர்நெட் வசதி வந்தாச்சுங்க .....
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களின் வசதிக்காக அந்த மழையின் 17ஆயிரம் அடி உயரத்தில் உள்ள முகாமில் ஹைஸ்பீடு இன்டர்நெட் இணைப்பு செய்து கொடுக்கப்பட்டு உள்ளது . நேபாள நாட்டில் உள்ள என்செல் என்ற டெலிகாம் கம்பெனி இந்த வசதியை செய்து கொடுத்துள்ளது . இது சுவீடிஷ் நாட்டு டெலிகாம் கம்பெனியான டெலியா சொனேராவின் துணை கம்பெனியாகும் இந்த கம்பெனி எவரெஸ்ட் பகுதியில் 7 இடங்களில் 3 ஜி பேஸ் ஸ்டேசன்களை அமைத்துள்ளது . இதன் மூலம் மலை ஏறுபவர்கள் கம்பி இல்லாத இன்டர்நெட் வசதியினை பெற முடியும் வீடியோ கால் வ்சத்யையும் பெற முடியும் . ( என்னங்க இது கூத்து நமக்கு இங்கேயே ஒழுங்கா நெட் கிடைக்க மாடேங்குது இவங்க என்னனா மலை ஏறுரவங்களுக்கு எல்லாம் நெட் வசதி செஞ்சு கொடுகாங்க )
இதுவரையில் தகவல் தொடர்புக்காக மலை ஏறுபவர்கள் அதிக பளுவான சாட்டிலைட் சாதனங்களை தூக்கி கொண்டு சென்றார்கள் ஆனாலும் செல்போன் வசதி மட்டுமே அவர்களுக்கு கிடைத்து வந்தது ஆனால் இப்போது இந்த வசதி மூலம் இணையத்தள வசதியும் கிடைக்கிறது .( இன்னும் என்ன அங்கேயே பொய் உக்காந்து 'சாட்' பண்ண வேண்டியது தான் நெட் கட் ஆகாதுல்ல...எப்படி நம்ம ஐடியா .....?)
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....
அன்னை வேளாங்கண்ணி ஆலய வரலாறு ...
தமிழர்களின் கிறிஸ்தவாக்கத்தி்ன் வேளாங்கண்ணியின் பங்களிப்பு
மரியன்னையின் பிறந்த நாளே வேளாங்கண்ணியின் திருநாள்வேளாங்கண்ணி தமிழர்களிடை உள்ள மரியன்னை திருயாத்திரைத் தலங்களில் தலைசிறந்ததாக விளங்குகிறது. நாகைபட்டினத்திற்கருகே உள்ள இத்திருத்தலம் பிரான்சிலுள்ள லூர்த்து திருப்பதி போர்த்துக்கல்லில் உள்ள பற்றிமா திருப்பதி போன்று பல இலட்சம் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய அருட்பதியாக இன்று திகழ்கிறது. ஆயினும் தமிழர்களிடை கிறிஸ்தவத்திருமறையை முதலில் எடுத்து வந்த தத்துவபோதக சுவாமிகள் எனப்பட்ட றெபேர்ட்டு நோபிலி (1577-1656) மதுரைக்கு வருவதற்கு முன்னரே இவ்வாலயம் நிறுவப்பட்டிருந்துள்ளமை முக்கியமான வரலாற்றுத் தகவலாக உள்ளது. ஆயினும் இவரது நோக்கு கிறிஸ்தவ சமயக் கருத்துக்களைத் தமிழில் நூல்களாக வெளியிடுவதாக இருந்தமையால் 21 நூல்களைத் தமிழில் எழுதிய போதிலும் அவற்றில் கிறிஸ்தவ ஆலயங்கள் குறித்த விபரங்கள் எதனையும் தரவில்லை.
தமிழில் நூல் எழுதிய முதல் ஐரோப்பியர் றெபேர்ட்டு நோபிலி தமிழகத்தில் கிறிஸ்தவத் திருமறையை அறிமுகம் செய்து தைரியத்தேவன் என்ற இளவரசனை மதமாற்றமடைய வைத்து அதன் காரணமாக இளவரசன் தான் செய்திருந்த பலதாரமண வாழ்விலிருந்து விலகியபோது சேதுபதி மன்னரின் உறவினர் ஒருத்தியும் இளவரசனால் கைவிடப்பட்டதால் ஆத்திரமுற்ற சேதுபதி மன்னனால் சிரச் சேதம் செய்யப்பட்டவர் அருளானந்தர் எனத் தமிழ்ப்பெயர் பூண்ட யோன் பிரிட்டோ (1647 – 1693). இவரது காலத்திலும் வேளாங்கண்ணி குறித்த தகவல்களை இவரது எழுத்துகளில் பெறமுடியவில்லை.
தமிழ்நாட்டில் கிறிஸ்துவுக்காக முதற் பலியான புனித அருளானந்தர் பின்னர் தைரியநாதர்; எனத் தமிழ்ப் பெயர் தாங்கி இன்று வீரமாமுனிவரெனப்படும் யோசப் பெஸ்கி (1680-1747) பூண்டிமாதா ஆலயத்தினை நிறுவி அங்கிருந்து திருக்காவலூர் கலம்பகம் தேம்பாவணி போன்ற அற்புதமான மரியன்னை புகழ்பாடு இலக்கியங்களைப் பாடிய பொழுதிலும் வேளாங்கண்ணி அன்னை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
வீரமாமுனிவர்
வீரமாமுனிவரெனப்பட்ட யோசப் பெஸ்கி இறந்து 60 வருடத்தின் பின்னரே வேளாங்கண்ணி நாகைபட்டினப் பங்கிலிருந்து தனிப்பங்காகியது. இந்த வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் ஆராயும் பொழுது தமிழகத்தின் வேளாங்கண்ணி இலங்கையின் மடுத்திருப்பதி போன்றன போர்த்துக்கேயரின் தமிழ் மண்ணிற்கான வருகையுடன் வளர்ந்த மரியன்னை ஆலயங்களாக அமைகின்றன. இவ்வாலயங்கள் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட முன்னரே தமிழர்களிடை வழக்கிலிருந்த தாய்த்தெய்வ வழிபாட்டின் புதிய பரிமாணங்களாக அம்மன் வழிபாட்டு முறையின் கிறிஸ்தவப்படுத்தலாக அமைந்தன என்கிற ஆய்வாளர்களின் கருத்துக்கள் சிந்தனைக்குரியனவாகின்றன.
வேளாங்கண்ணி 400 வருடங்களுக்கு முன்னரான அருட்தன்மை கொண்டதாகத் தமிழ் மக்களிடை நம்பிக்கை நிலவுகிறது.
இறையருள் பெருக்கின் அறிகுறியாகப் பால் பெருக்கு
வேளாங்கண்ணியில் அன்னாப்பிள்ளைத் தெருவில் உள்ள குளக்கரையில் பால் சுமந்தவண்ணம் தன் முதலாளியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனிடம் கையில் குழந்தையுடன் தோன்றிய அழகிய பெண் ஒருவர் கையிலுள்ள தன் குழந்தைக்குப் பால் கேட்டாள். பாலைக் கொடுத்தால் பால் குறைந்து முதலாளிக்குப் பதில் சொல்ல வேண்டி வருமெனக் கலங்கினான் அச்சிறுவன். ஆனாலும் அந்தத் தாய்மையின் குரலுக்கு அடிபணிந்து பாலைக் கொடுத்து விட்டு தன் முதலாளி இல்லத்திற்குச் சென்றான் அச்சிறுவன். முதலாளி இடத்தில் தான் பால் கொடுத்ததைச் சொல்லி பால் குறைந்துள்ளதெனவும் கூறினான். முதலாளி பால் அண்டாவினைத் திறந்து பார்த்ததுமே பால் தானாகவே பெருகி வழிந்தோடத் தொடங்கியது. இதனால் அதிசயமுற்ற முதலாளியும் ஊராரும் அந்தப் பெண் பால் கேட்ட மரத்தடியில் அந்தப் பெண் அன்னை மரியாள் போல் இருந்ததினால் அன்னை மரியாளுக்கான வழிபாட்டை ஊரவர் தொடங்கியதாக ஒரு மரபு.
வேளாங்கண்ணி கிராமத்துக் கால் வலுவிழந்த சிறுவன் ஒருவனை அவன் தாயார் இந்தக் குளத்தங்கரை மரத்தடியில் இருத்தி மோரைக் கொடுத்து அவனைக் கொண்டு விற்பித்துப் பிழைப்பது ஒரு ஏழைத்தாயின் வழக்காக இருந்தது. அன்று ஒருநாள் அந்த காலிலாச் சிறுவனிடம் ஒரு அழகிய பெண் வந்து தன் கையிலிருந்த குழந்தைக்கு மோர் கேட்டாள்.
இயலாமை நீக்கிய அன்னை மரியாள்
காலிலாச் சிறுவனோ எழுந்து மோர் கொடுக்கத் தன்னால் இயலாது அருகே வந்து வாங்கிப் பருக்கும் படி சொன்னான். அப்பெண்ணோ எழுந்து தா என்றாள். வார்த்தை கொடுத்த அழுத்தத்தில் எழுந்து அடியெடுத்து நடந்து மோரைக் கொடுத்தான் அச்சிறுவன். கால் இயலாத சிறுவன் காலடி எடுத்து வைத்து நடத்தல் கண்டு அதிசயித்த அவ்வூரார் அவ்விடத்தில் மரியன்னைக்கு ஆலயம் அமைத்தனர் என்பது மற்றொரு நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறாக அந்த மரத்தடியில் தொடங்கிய மரியன்னை ஆலயம்தான் போர்த்துக்கேயர்களின் கப்பல் புயலுக்குக் கரை ஒதுங்கிய பொழுது அவர்களால் கோயிலாக்கப்பட்டுப் பரிணாம வளர்ச்சியில் இன்றைய வேளாங்கண்ணிப் பேராலயமாகத் திகழ்கிறது.
தமிழகத்தில் கிறிஸ்தவத்தின் அறிமுகம் இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமஸ் மயிலாப்பூர் சின்னமலை பறங்கிமலை பகுதிகளில் இயேசு வாழ்ந்த காலத்தில் வந்து சென்ற போதிருந்தே உள்ளது என்பது நம்பிக்கையாக உள்ளது. பறங்கி மலையில்தான் தோமஸ் இரண்டாவது வருகையின் பொழுது கொல்லப்பட்டார் என்கிற மரபும் உளது. ஆயினும் இவற்றுக்கான வரலாற்று ஆதாரங்கள் இதுவரை இல்லாததினால் தமிழர்களுக்கும் உரோமருக்கும் மற்றும் பிறநாட்டவருக்கும் இடையில் நிலவிய வணிகப் போக்குவரத்துக்கள் மூலமே கிறிஸ்து குறித்த தகவல்களும் செய்திகளும் தமிழகத்தின் இறங்கு துறைகள் உள்ள கடற்கரைப் பகுதிகளில் மக்களை வந்தடைந்தன என்பது சில ஆய்வாளர்களின் எண்ணம்.
பிறநாட்டு வணிகர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படாது ஊரெல்லைகளில் கடற்கரைகளை அடுத்த பகுதிகளில் தங்க வைக்கப்படும் வழமை தமிழர்களிடை மிக நீண்டகாலமாக இருந்துள்ளது. இதனால் இவர்களால் கொண்டு வரப்பட்ட திருச்சிலுவைகள் திருவுருவங்கள் கடற்கரைப் பகுதிகளில் இவர்கள் விட்டுச் சென்ற பின்னர் ஒன்றில் மக்களால் யாதொரு தெய்வம் கண்டீராயின் அத்தெய்வமாகி என்கிற நோக்கில் போற்றப்பட்டு வந்தன என்பது சிலரின் கருத்து.
இவ்விதமாக மேற்குலகத்தவரால் விட்டுச் செல்லப்பட்ட பல திருவுருவங்கள் தெய்வ வடிவங்கள் என்ற வகையில் தமிழ் மக்களால் தமக்குத் தெரிந்த முறையில் புனிதமானவையாகப் போற்றப்பட்டன. அதிலும் தாய்த் தெய்வ வழிபாட்டில் அம்மன் சக்தி வழிபாடுகளில் பழக்கப்பட்ட திராவிட இனத்தவர்களிடை மரியாளின் திருவுருவங்கள் மரியாயின் அருள் உருவங்களாகவே வணங்கப்பட்டன என்பாரும் உளர். இந்தப் பின்னணியில்தான் தமிழகத்தின் வேளாங்கண்ணி தமிழீழத்தின் மருதமடு ஆகிய பகுதிகளில் போர்த்துக்கேயர் வணிக நோக்கில் வருவதற்கு முன்னரே மரியன்னையின் அருஞ்செயல்கள் திருவுருவங்கள் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடற்கரை நோக்கிச் செல்லும் காட்டுப் பகுதிகளில் மக்களால் பேசப்பட்டும் போற்றப்பட்டும் வந்துள்ளன. இவ்வாறு இப்பகுதிகளில் இருந்த முன்னைய திருவுருவங்கள் புயலுக்கு கரை ஒதுங்கியும் புது வணிகம் தேடியும் வந்த போர்த்துக்யேரால் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது முதற்கட்ட வரலாறு.
இந்த வகையில் ஒரு முறை போர்த்துக்கேயரின் கப்பல் ஒன்று புயலுள் சிக்கி மாலுமிகள் மரணத்துடன் போராடிய நிலையில் செபமாலை சொல்லித் தம்மைக் காக்கும்படி வேண்டினார்கள். அக்கப்பல் வேளாங்கண்ணிக் கடற்கரையில் கரையொதுங்கியது. அந்நேரம் அவர்கள்; மகிழ்ந்து தமக்குதவிய மரியன்னைக்கு வெண்மணற்பரப்பில் நின்று நன்றி சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். அந்நேரம் அங்கு வந்த ஊர்மக்கள் அண்ணாப்பிள்ளைத் தெருக் குளக்கரையில் தாம் கும்பிட்டு வந்த மரியாளின் திருவுருவை அவர்களுக்குக் காட்ட அவர்கள் அவ்விடத்தில் முறைப்படியான ஆலயம் ஒன்றை அமைத்துத் தாம் தம்முடன் கொண்டு வந்திருந்த மரச்சிலுவை ஒன்றையும் அங்கு நிறுவினர். இவர்கள் தாம் நிறுவிய மரியாளின் இவ்வாயலயத்தில் தம்முடன் வந்திருந்த பிரான்சிஸ்கன் சபைக் குருவின் மூலம் மரியாளின் பிறந்த நாளைச் செப்டெம்பர் 8ம் நாளில் திருப்பலியுடன் பெருவிழாவாக் கொண்டாடினர். இதுவே வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழாவாகப் பெருவிழாவாக இன்று வரை தொடர்கிறது.
போர்த்துக்கேயக் கப்பல்கள் வணிகப்பாதை தேடிப்புறப்பட்ட அதே நேரத்தில் அவர்கள் செல்லும் கடல் வழிப்பயணம் ஆபத்துக்கள் நிறைந்தன என்பதாலும் பல கப்பல்கள் கடலிலேயே சங்கமமாயினதாலும் மிக நீண்டநாள் பயணமாக இருந்ததாலும் கப்பலில் வழிபாடுகள் நிகழ்த்துவதற்கு அவர்களுடன் கத்தோலிக்கக் குரு ஒருவரையும் கப்பலில் அனுப்புதல் வழமையாயிற்று. அதே வேளை மன்னன் ஸ்பெயினை மேற்குலகில் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கான பொறுப்புள்ள நாடாகவும் போர்த்துக்கல்லின் லிஸ்பென் நகரத்தை உலகெங்கும் கத்தோலிக்கத்தைப் பரப்புவதற்கான தலைமைப் பங்காகவும் அறிவித்து அதற்கான எல்லா உதவிகளையும் அளித்து வந்தான். இந்தப் பின்னணியில்தான் போர்த்துக்கேயர்கள் தாம் சென்ற நாடுகளில் கத்தோலிக்க ஆலயங்களை அமைத்தனர்.
மேலும் அராபியர்கள் தமிழர்களின் முத்துக்குளிப்புக்கு மன்னார் மற்றும் இராமநாதபுரக் கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களிலிருந்து விடுபடுவதற்கு தமிழ்க் கப்பலோட்டிகள் போர்த்துக்கேயருடன் மேற்கொண்ட தொடர்புகளே வாஸ்கொடிகாமாவுக்கும் அவரது வழிவந்த போர்த்துக்கேயக் கடல்வழி கண்டுபிடிப்பாளர்களுக்கும் தமிழகத்தில் மற்றும் மன்னாரில் மக்கள் வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தனர் என்கிற கருத்தையும் கவனத்தில் கொண்டாலே தமிழகத்தில் கிறிஸ்தவம் பெற்ற வரவேற்புக்கான காரணம் தெளிவாகும்.
இந்த வகையில் புனித பிரான்சிஸ் சேவியர் சவேரியார் எனத் தமிழ்ப் பெயர் பெற்றவர் இந்தியாவிலும் சீனாவிலும் யப்பானிலும் கத்தோலிக்கத் திருமறையினை மக்கள் மயப்படுத்தியவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் புனித இக்னேசியஸ் லோயலாவுடன் இணைந்து இயேசுகபையினைத் தொடங்கி உலகெங்கும் கத்தோலிக்கமும் தரமான கல்வியும் வளர உதவியவர் என்பதும் குறிப்பி;டத்தக்கது. அந்த வகையில் கத்தோலிக்கக் குருக்கள் அவர்கள் பணி செய்யும் நாட்டின் மொழியினைக் கற்று அந்த மக்களின் பண்பாட்டின் அடிப்படையில் பணிகளைத் தொடர வேண்டுமென்பது புனித சேவியரின் பணிமுறையாக அமைந்தது.
புனித இக்னேசியஸ் லோயலா புனித பிரான்சிஸ் சேவியர்
இதற்கமைய புனித சேவியர் நாகைபட்டினத்திற்கு இருதடவை விஜயம் செய்த பொழுது மணற்பாட்டில் 1542ல் தங்கியிருந்து அங்கிருந்த தமிழ்ப்பண்டிதர்களைக் கொண்டு தமிழில் நற்செய்தியில் சில பகுதிகளை மொழிபெயர்ப்பித்தாரெனவும் சில கத்தோலிக்க செபநூல்களை எழுதுவித்தாரெனவும் இவற்றை அவர் லிஸ்பெனுக்குக் கொண்டு சென்று அச்சேற்றியுள்ளாரெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மணற்பாட்டில் இவர் பாம்புக்கடியால் இறந்த ஒருவரை உயிர்ப்பித்தமைதான் புனித சவேரியார் மேல் கடற்கரையோர மக்கள் நம்பி;க்கை கொண்டு கிறிஸ்தவம் பரவ வித்திட்டது என்பதும் மரபாக உள்ளது. மணற்பாட் கோயிலில் இயேசுவை அறைந்த சிலுவை மரத்தின் சிறு துண்டு வணக்கத்துக்கு வைக்கப்பட்டதும் இவ்வாலயம் முக்கியத்துவம் பெற மற்றொரு காரணமாயிற்று.
புனித சவேரியாரின் இயேசுசபையின் குருக்களே பின்னர் வந்த தத்துவபோதக சுவாமிகள் அருளானந்தர் வீரமாமுனிவர் ஆகியோர் என்பதும் முக்கியமான விடயம். இவர்கள் காலத்தில் பெரிதுபடுத்தப்படாதிருந்த வேளாங்கண்ணி போர்த்துக்கேயர் காலத்தின் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றது. இதற்கு காரணம் அக்காலத்தில் டச்சுக்காரரினால் வெல்லப்பட இயலாது இருந்த நரசிம்ம விஜயனின் கீழேயே கன்னியாக்குமரி இராமநாத புர மாவட்டங்களில் பல பிரிவுகள் இருந்தன. இதனால் டச்சுக்காரர் கத்தோலிக்கரை அழிக்க முனைந்த வேளை நாகைபட்டினத்திலேயே பெரும்பாலான கத்தோலிக்க சபைகள் தஞ்சமடைந்தன. இதன் பின்னரே வேளாங்கண்ணி ஆலயம் முக்கியத்துவம் பெறத் தொடங்கி போர்த்துக்கேயர் காலத்தில் முறிவுற்ற சைவ கத்தோலிக்க உறவுகளும் டச்சுக்காரர் காலத்தில் பலப்பட்டதினால் வேளாங்கண்ணி அன்னை மதங்கடந்த சக்தி என்னும் உயர்நிலையுற்றார். 1662 முதல் இங்கு பங்குத்தந்தையுடன் கூடிய வழிபாடுகள் வளர்ச்சியடையத் தொடங்கி இன்று தமிழர்களின் கிறிஸ்தவ மயப்படுத்தலின் முக்கிய அடையாளமாக அனைத்து இன மொழி மத மக்களாலும் போற்றப்படும் பேராலயமாகத் திகழ்ந்து வருகிறது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....
ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள் ...
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .... | |
---|---|
இந்திரா காந்தியின் ஆரியப் புகைப்படங்கள்
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ....
Subscribe to:
Posts (Atom)