Tuesday, July 31, 2012

கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா


இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3,1 என முன்னிலை பெற்றதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியது. அபாரமாக விளையாடிய கோஹ்லி 128 ரன் விளாசினார். கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று பகல்/ இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தில்ஷன், தரங்கா கள மிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தனர். தில்ஷன் 42, தரங்கா 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திரிமன்னே , சண்டிமால் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. சண்டிமால் 28, கேப்டன் ஜெயவர்தனே 3, மேத்யூஸ் 14, ஜீவன் மெண்டிஸ் 17 ரன்எடுத்து மனோஜ் திவாரி சுழலில் வெளியேறினர்.

பெரேரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய திரிமன்னே 47 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்தது. ஹெராத் 17, மலிங்கா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 2, சேவக், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கம்பீர் டக் அவுட் ஆகி வெளியேற, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. சேவக் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் 4, திவாரி 21 ரன்னில் வெளியேறினர்.

இதை தொடர்ந்து கோஹ்லி , ரெய்னா ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. கோஹ்லி 128 ரன் (13வது சதம்), ரெய்னா 58 ரன் விளாசினர். இந்தியா 42.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து வென்றது. கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 3,1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி 4ம் தேதி நடக்கிறது.


கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூடமாக மாற்றிய மனைவி


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்டர் (60), கூலி வேலை செய்து வந்தார். கொசவன் புதூரை சேர்ந்த ராசி என்பவரை முதலாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

விக்டர் உமா (50), என்பவரை 2-வது திருமணம் செய்து பசுமாத்தூரில் வசித்து வந்தார். உமாவுக்கு சந்திரன் என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 

விக்டருக்கு உமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி முதல் விக்டர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். 

இந்தத நிலையில் விக்டரை அவரது மனைவி உமா கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் உமாவிடம் விசாரணை நடத்தினார். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. 

சம்பவத்தன்று விக்டர் உமா இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்டர் கத்தியால் உமாவை வெட்ட பாய்ந்தார். சுதாரித்து கொண்ட உமா கத்தியை அவரிடம் இருந்து பறித்து விக்டரை வெட்டி சாய்த்தார். 

ரத்த வெள்ளத்தில் விழுந்த விக்டர் துடிதுடித்து இறந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் நடந்த இந்த கோர சம்பவத்தை மூடி மறைக்க உமா திட்டமிட்டார். வீட்டின் அருகில் இரவோடு இரவாக குழிதோண்டினார். அதில் விக்டரின் பிணத்தை தூக்கி போட்டு புதைத்தார். 

காலையில் எதுவும் நடக்காததுபோல வழக்கமான வேலைகளை செய்துள்ளார். பிணம் புதைக்கப்பட்ட இடத்தை யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கட்டுக்கல் வைத்து அடுப்பு அமைத்தார். அதில் சமையல் வேலைகளை செய்து சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த தகவலை பெற்றுக்கொண்ட போலீசார் விக்டர் கொலை தொடர்பாக உமாவின் மகன் சந்திரனிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

கணவனை மனைவியே புதைத்த இடத்தில் சமையல் கூடம் அமைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான்என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். நாயகியாக ரூபா மஞ்சரி மற்றும் சித்தார்த், அனுயா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீவசங்கர் இயக்கியுள்ளார்.

நான்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் விஜய் ஆண்டனி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இதுவரை 25 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. நான்படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. நடிகனாக விரும்பியதுமே நிறைய பேர் கதையுடன் வந்தார்கள். அவை இசை சார்ந்தே இருந்தன.

தில்லானா மோகனம்பாள் அளவுக்கெல்லாம் அவை இருந்தன. ஆனால் எனக்கு அந்த கதைகளில் உடன்பாடு இல்லை. நான்படத்தின் கதை திருப்தியாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் நன்றாக வந்துள்ளது.

கதாநாயகி ரூபாவுக்கும், எனக்கும் கெமஸ்டரி இல்லை. என்னை அவர் அண்ணன் என்றே அழைத்தார். என் மனைவி பாத்திமாவால்தான் இப்படம் உருவாகியுள்ளது. ஒருவன் நல்லவனாக வாழ்வதை சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன. அத்தகு சூழ்நிலை அமையாத ஒரு இளைஞனின் வாழ்க்கையே நான்படத்தின் கதை. இந்த படத்தில் பாடல்கள் வரவேற்பு பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ வீரர் ஒருவர் பலி


அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் இன்று இராணுவ வாகனம் ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இன்று காலை 10.25 மணிக்கு கோக்ராஜர் பகுதியிலிருந்து கொல்பார்வில் உள்ள அஜியா என்னுமிடத்திற்கு இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற அந்த வாகனத்தின் அடியில் இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் இராணுவ வாகனத்துடன் வந்த மற்றொரு டாடா சுமோ காரும் பாதிப்படைந்துள்ளது. இந்த தாக்குதல், அசாமில் இயங்கி வரும் உல்பா தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா


ஏதாவது ஒன்றை நெகடிவாக சொல்லி பப்ளிசிட்டி தேடுவதை பிரசன்னாவும் - சினேகாவும் வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இந்த முறை, எனக்கு பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறி, பின்னர் காதலியாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார் சினேகா.

சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் இருவரும் நடை போட்டனர். இதே பேஷன் ஷோவில் போன ஆண்டும் பங்கேற்றனர். ஆனால் அப்போது இருவருக்கும் காதல் என்ற விஷயம் கூட வெளியில் தெரிந்திருக்கவில்லை.

பேஷன் ஷோ முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய சினேகா கூறுகையில், "போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்," என்று ஆரம்பித்தார்.

"பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்," என்றார்.


பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வடமாநிலங்கள்


இந்தியாவில் மின்வழித்தடங்கள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு மண்டல வழித்தடங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டல வழித்தடம் தனியாக உள்ளது. இந்த 5 மின்வழித்தடங்களும் அரசின் பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் இயங்கி வருகின்றன. மொத்தம் 95 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை இந்த உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.
 
வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு மண்டல மத்திய மின்தொகுப்பிற்கு செல்லும் மின்வழித்தடம் இன்று முற்றிலும் செயலிழந்தன. கிட்டத்தட்ட 50 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின்வழித்தடங்கள் செயலற்றதால், தலைநகர் டெல்லி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கின.
 
இதனால் டெல்லி மெட்ரோ ரெயில் சேவை, ரெயில்வே சேவை, போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
 
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்கள் அலுவலக நேரம் முடியும் முன்னரே வீடுகளுக்குத் திரும்பலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராணி எலிசபெத்'(வீடியோ)லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழா அன்று காண்பிக்கப்பட்ட வீடியோவில் ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து ஒலிம்பிக் அரங்கில் குதித்தார் இங்கிலாந்து 'ராணி எலிசபெத்'.

லண்டனில் கடந்த 27ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கின. துவக்க விழா நடந்த ஒலிம்பிக் அரங்கில் ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்கிறார். அங்கு அவரை இங்கிலாந்து ராணி எலிசபெத் வரவேற்கிறார். பின்னர் கிரெய்க் ராணியை ஹெலிகாப்டருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து ஒலிம்பிக் அரங்கிற்கு வருகின்றனர்.

அரங்கத்திற்கு வந்தவுடன் ஹெலிகாப்டர் பல நூறு அடி உயரத்தில் வானில் வட்டமிடுகிறது. அப்போது அதில் இருந்து ராணியும், கிரெய்கும் பாராசூட் மூலம் அரங்கில் வந்து குதிக்கின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் இந்த வயதிலும் ராணி எப்படி துணிச்சலாக பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார் என்று ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் அரங்கில் வந்து குதித்தது கிரெய்கும் அல்ல, ராணியும் அல்ல. அவர்களைப் போன்று வேடமிட்டிருந்த வேறு இருவர். மார்க் சட்டன் (41) என்னும் ஸ்டண்ட் நடிகர் கிரெய்க் போன்று உடையணிந்தும், கேரி கானரி (43) என்னும் பாரா டைவிங் ஸ்பெஷலிஸ்ட் அச்சு அசல் ராணி எலிசபெத் போன்று உடையணிந்து, விக் வைத்து, மேக்அப் போட்டுக் கொண்டு வந்து குதித்தனர்.

அவர்கள் குதித்தவுடன் ஏற்கனவே அரங்கிற்கு அழைத்து வரப்பட்ட ராணியையும், கிரெய்கையும் அந்த இடத்தில் காண்பித்து விட்டனர்.
மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை அமைச்சராக சுசில்குமார் ஷிண்டே?


நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்து அவர் குடியரசுத் தலைவராகிவிட்ட நிலையிலும் அமைச்சரவையில் மாற்றம் இன்னமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் புதிய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் மீண்டும் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நிதி அமைச்சராக ப.சிதம்பரம் மீண்டும் நியமிக்கப்படும் நிலையில் அவர் தற்போது வகித்து வரும் உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு சுசில்குமார் ஷிண்டே நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

சிதம்பரத்தைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சகப் பொறுப்பில் அவர் சர்ச்சைகளைத்தான் அதிகம் சந்தித்திருக்கிறார். மாவோயிஸ்டுகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், வடகிழக்கும் மாவோயிஸ்டுகள் வேரூன்றியது, தேசிய அளவிலான பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க முடியாமல் போனது, அசாம் இன மோதலைத் தடுக்கத் தவறியது என பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சிதம்பரம் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.

தற்போதைய நாட்டின் பொருளாதர நிலை மோசமாக இருக்கும் சூழலில் சிதம்பரம் பொறுப்பேற்று பொருளாதார நிலைமை மீட்சியடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியுமா? என்றும் அரசிய வட்டாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதேபோல்தான் தற்போதைய மின்துறை அமைச்சரான சுசில்குமார் ஷிண்டே மீதும் கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் பல மணி நேர மின்வெட்டை வடமாநிலம் கண்டிருக்கிறது. 8 மாநிலங்கள் இந்த மின்வெட்டை சந்தித்தன. இதன் மூலம் சுமார் 2 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர். இதற்கு முழுக் காரணமும் ஷிண்டேதான் என்கினறனர். இவரால் உள்துறையை சிறப்பாக கவனித்துவிடமுடியுமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மேலும் சிதம்பரம், ஷிண்டே ஆகியோரது இலாகாக்கள் மாறும் போது ராகுல்காந்தியும் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.


ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவருகிறது!


ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள கோச்சடையான்அனிஷேன் படம் டிசம்பரில் ரிலீசாகிறது. ஸ்டூடியோக்களில் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

யாரேனும் இப்படத்தை கம்ப்யூட்டரில் இருந்து திருடி திருட்டு வி.சி.டி.யாக வெளியிடப்பட்டு விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து கோச்சடையான்படத்தக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோச்சடையான்படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகர் கூறியதாவது:-

திரைப்படத்துறையில் திருட்டு வி.சி.டி. மிகப்பெரிய சவாலாக உள்ளது. கோச்சடையான்படம் 3டிஎன்பதால் இந்த திருட்டு வி.சி.டி.யாக எடுப்பது கடினமாக இருக்கும்.

திருட்டு வி.சி.டி. பிரச்சினை நாடு முழுவதும் இருக்கிறது. கோச்சடையான்படத்தை பாதுகாக்கும் பொறுப்பை படத்தின் இயக்குனர் சவுந்தர்யா கவனிக்கிறார். படத்துக்கான பணிகள் அனைத்தையும் அவர் தனது கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளார். ஸ்டுடியோவுக்குள் யார் வருகிறார்கள், வெளியே யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியும். அனைத்து விவரங்களும் ஒரு சர்வரில் பதிவு செய்யப்படுகிறது. சாதாரணமாக யாரும் ஸ்டூடியோவுக்குள் வரமுடியாது.

கோச்சடையன்படத்தில் பணிபுரிபவர்களுக்கு விசேஷ அடையாள அட்டை தரப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கான பணிகள் நடைபெறும் கம்ப்யூட்டர்களில் தகவல்களை பெறலாம். ஆனால் எதையும் டவுன்லோட் செய்ய முடியாது. ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் சவுந்தர்யா அதற்கு ஒரு கோட் நம்பரை தரவேண்டும். அப்போதுதான் டவுன்லோட் செய்ய முடியும்.

அதுபோல் சி.டி.க்களிலோ பென் டிரைவ்களிலோ கூட விவரங்களை எதையும் காப்பி செய்யமுடியாது. கோச்சடையான்படத்தை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட பலர் அணுகி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர்...!


அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள், சற்றும் அலட்டிக் கொள்ளாத ஒரு ரயில்வே அமைச்சர். மிக்க கொடுமையான ஒரு அமைச்சரை நமது நாட்டு மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மக்களைப் பார்த்து பரிதாபம்தான் வருகிறது.

இந்திய ரயில்வேயின் அமைச்சராக எத்தனையோ பெரிய மனிதர்கள் இருந்துள்ளனர். ஒரே ஒரு விபத்து நடந்தது என்பதற்காக தனது அமைச்சர் பதவியை தார்மீகப் பொறுப்பேற்று உதறியவர் நிதீஷ் குமார். இன்றளவும் மக்கள் மனதில் அவர் நிற்கிறார். சமீப காலத்தில் மக்களுக்குத் தெரிந்த நல்லதொரு ரயில்வே அமைச்சர் அவர்தான்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக 2வது ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் பதவியேற்றுள்ள ரயில்வே அமைச்சர்கள் மக்கள் படாபாடு படுகின்றனர். காரணம், இந்த அமைச்சர்கள் யாருமே டெல்லியில் இல்லை. கொல்கத்தாவிலிருந்துதான் செயல்படுகின்றனர். டெல்லியில் உள்ள தங்களது அமைச்சர் அலுவலகத்திற்கே வருவதில்லை. எப்போதாவதுதான் வருகின்றனர்.

முதலில் மமதா பானர்ஜி ரயில்வே அமைச்சரானார். இவர் அமைச்சர் பதவியை ஏற்றது முதல் பதவியிலிருந்து போகும் வரை டெல்லி துறை அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்த்ததில்லை. ரயில்வே பட்ஜெட்டைக் கூட கொல்கத்தாவில் உட்கார்ந்துதான் போட்டார். இவர் டெல்லி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அடுத்து இவர் போய் வந்த ரயில்வே அமைச்சரை அதே வேகத்தில் தூக்கி எறிந்தார் மமதா. தான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்பதே அதற்குக் காரணம். மமதாவைப் பகைத்துக் கொள்ள முடியாத பிரதமரும், மமதாவின் டியூனுக்கு ஆட நேரிட்டது.

அடுத்து வந்தவர்தான் முகுல் ராய். இவரும், தனது தலைவி வழியிலேயே செயல்பட்டு வருகிறார். டெல்லி பக்கமே இவரைப் பார்க்க முடிவதில்லை. எப்போதும் கொல்கத்தாவில்தான் அடை காத்தபடி கிடக்கிறார். ரொம்ப ரொம்ப அரிதாகத்தான் இவர் டெல்லிக்கே வருகிறார்.

முகுல் ராய் பதவியேற்றது முதல் அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள். எது குறித்தும் அவர் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, ஊழியர்களின் கவனக்குறைவு என பல காரணங்கள் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு சாதனங்களை பொருத்துவதிலும் மகா அலட்சியமாக செயல்படுகிறது ரயில்வே துறை.

பாதுகாப்புக் குறைபாடு, ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக 2009-10ல் 69 சதவீத விபத்துக்களை இந்திய ரயில்கள் சந்தித்துள்ளன. இது 2010-11ல் 61 சதவீதமாகவும், 2011-12ல் 64 சதவீதமாகவும் இருந்துள்ளது.

கடந்த மார்ச் 20ம் தேதி பதவியேற்றார் முகுல் ராய். அன்றே உ.பியில் ஹத்ராஸ் அருகே நடந்த ரயில் விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மே மாதம் ஹம்பி எக்ஸ்பிரஸ் மற்றும் டூன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் விபத்தைச் சந்தித்தன. அப்போதும் முகுல் ராய் அலட்டிக் கொள்ளவில்லை. விபத்து தடுப்பு மற்றும் எச்சரிக்கை பாதுகாப்பு சாதனங்களை ரயில்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் முகுல் ராய். ஆனால் இதுவரை அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2009ம் ஆண்டு மத்தியில் ரயில்வே அமைச்சகத்தை திரினமூல் காங்கிரஸ் பெற்றது. அன்று முதல் ரயில்வேயின் அன்றாடப் பணிகள், முக்கியத் திட்டங்கள் அனைத்துமே மேற்கு வங்கத்தை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. மற்ற மாநிலங்கள் குறித்து மமதாவோ அவரது கட்சியோ சற்றும் கவலைப்படுதில்லை என்று ரயில்வே உயர் அதிகாரிகளே குமுறுகின்றனர்.

ரயில்வே அமைச்சரே படு சோம்பேறியாக, அலட்சியமாக இருப்பதால் ரயில்வே வாரியம் பல பணிகளில் அக்கறை காட்டாமல் மெத்தனமாக இருக்கிறது. ரயில்வே துறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ரயில்களில் பாதுகாப்பு சாதனங்கள் பொருத்துவது தொடர்பாக முகுல் ராய்க்கு முன்பு சில மாத காலம் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி இருந்தபோது ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்திருந்தார். அதை முகுல் ராய் பரிசீலிக்கக் கூட செய்யாமல் நிராகரித்து விட்டார். அதேபோல ரூ. 20,000 கோடி செலவில் பல்வேறு பாதுகாப்புப் பணிகள் குறித்த அனில் ககோத்கர் அறிக்கையையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் முகுல் ராய்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ற வகையில் முறைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையாம்.

நேற்று நெல்லூரில் நடந்த விபத்தும் கூட மின்கசிவு காரணமாகத்தான் என்று கூறுகிறார்கள். அதேசமயம், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கக் கூடிய, அணைக்கக் கூடிய சாதனங்கள் எதுவும் இல்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று நெல்லூரில் அதிகாலை 4.30 மணிக்கு விபத்து நடந்தது. ஆனால் ரயில்வே அமைச்சராக இருந்த முகுல் ராய் கொல்கத்தாவில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தார். அங்கிருந்து அவர் உடம்பை அசைத்து கிளம்பி நெல்லூருக்கு வந்து சேர 12 மணி நேரம் பிடித்துள்ளது. மக்கள் குறித்து எவ்வளவு அலட்சிய மனோபாவம் பாருங்கள் இந்த அமைச்சருக்கு...

தனது கட்சியினரோடும், முதல்வர் மமதாவோடும் அவர் நேற்று முழுக்க நேரத்தை செலவிட்டதாக கூறுகிறார்கள். ரயில் விபத்து நடந்து விட்டது, உடனே கிளம்ப வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு இல்லை என்கிறார்கள்.

ஏன் லேட் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு சென்னைக்கு கொல்கத்தாவிலிருந்து முதல் விமானமே மாலை 3 மணிக்குத்தான். அதைப் பிடித்துதான் நான் வர வேண்டியிருந்தது என்றார். ஒரு வேளை கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு விமானம் இல்லை என்றால் வந்திருக்கவே மாட்டாரோ என்னவோ...

முகுல் ராயின் நிர்வாகம் படு மோசமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகளே புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர் ரயில்வே அமைச்சராகவே செயல்படவில்லை, மிகவும் மெத்தனமாக இருக்கிறார். எப்போது பார்த்தாலும் கொல்கத்தாவில்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், மமதாவை கேட்டுத்தான் எதையும் செய்கிறார் என்று புலம்புகின்றனர்.

இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியவர் மன்மோகன் சிங்தான். ஆனால் தட்டிக் கேட்டால் கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக கூறி சீட்டுக்கு வேட்டு வைக்கக் கிளம்பி விடுவார் மமதா...

இப்படிப்பட்டவர்களை தட்டி எழுப்ப இன்னும் எத்தனை உயிர்களை நமது மக்கள் கொடுக்க வேண்டியிருக்கோ தெரியவில்லை...


இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது உண்மை- கிஷோர்

சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிட்டே. இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக அலகபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

தனது மனுவில், அமேதி தொகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ராகுல் காந்தி ஏமாற்றி கடத்திச் சென்று கற்பழித்தார். சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் ஐகோர்ட்டு, மனுதாரர் கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது. மேலும், இவருக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் அப்பீல் செய்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அலகாபாத் ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. 

மேலும், மனுதாரரின் புகாருக்கு உத்தரபிரதேச மாநிலம் அரசும், ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை ராகுல் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல உத்தர பிரதேச அரசும் பதில் மனுதாக்கல் செய்தது. 

இதில் மனுதார் கிஷோர், ஒரு மனநோயாளி. எனவே அவரது அப்பீல் மனுவை ஏற்க கூடாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை மறுத்து சுப்ரீம் கோர்ட்டில் கிஷோர் கூறியதாவது:- 
அமேதி தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் வெளியான உடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிரமத்துக்கு சென்று விசாரித்து, கற்பழிப்பு நடந்ததாக உறுதி செய்து கொண்டேன். ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தொடர விரும்பினேன். 

முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்தேன். அப்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால், முன்னணி தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். எனவே, டெல்லி சென்று அவர்களை சந்தித்து, விவரத்தை முழுவதுமாக விவரித்தேன். 

இதைக்கேட்ட அவர்கள், ராகுலுக்கு எதிராக பொதுநல வழக்கு போடுமாறும், தங்களுக்கு தேவையான பாதுகாப்பும், உதவியும் செய்வதாகவும் என்னை ஊக்கப்படுத்தினர். இதன்பிறகே அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்தேன். 

இன்று உத்தரபிரதேசத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காங்கிரசுடன் சமாஜ்வாடி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உத்தரபிரதேச அரசு பல்டி அடித்துள்ளது. என்னை பலிகடா ஆக்கியதுடன், எனக்கு எதிராகவும் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பதில் கூறினேன். நான் கோருவது எல்லாம், ராகுல் மீதான கற்பழிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். ராகுலுக்கு எதிராக விசாரணை நடப்பட வேண்டும் என்று கோரவில்லை. 

இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை!


சென்னை புறநகரில் உள்ளது காசி திரையரங்கம் (இது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ் வரையறை). ஒரு படம் குறித்த மக்களின் நாடித் துடிப்பைத் தெரிந்து கொள்ள சரியான இடம் இதுதான்.

இந்தத் திரையரங்கில் ஜூலை 6-ம் தேதி வெளியானது நான் ஈ. செமத்தியான கூட்டம். தொடர்ந்து நான்கு காட்சிகளும் ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டிருந்த படத்தை, அடுத்த ஆறு நாட்களில் தூக்கிவிட்டார்கள்... காரணம், அஜீத்தின் பில்லா 2.

இந்தப் படத்தா ஜூலை 13-ம் தேதி திரையிட்டார்கள். ஆனால் 12-ம் தேதி இரவுக் காட்சிகூட நான் ஈ ஹவுஸ்புல்லாக ஓடியது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு கூட்டம் குவிந்தும் நான் ஈயைத் தூக்க வேண்டியிருக்கிறதே என்ற வருத்தத்தோடுதான் பில்லாவைத் திரையிட்டார்களாம்.

பில்லா 2-ன் வசூல் நிலவரம் என்ன என்பது கோடம்பாக்கத்துக்கே தெரிந்த கதைதானே.

இப்போது காசி தியேட்டர் பக்கம் போனவர்களுக்கு ஒரு சின்ன சர்ப்ரைஸ்! பில்லாவைத் தூக்கிவிட்டு மீண்டும் நான் ஈயைத் திரையிட்டுள்ளனர். மறு திரையிடலுக்கும் ஈ-க்கு பெரிய பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். வெளியிட்ட நாளிலிருந்தே நல்ல கூட்டம்!


காசி தியேட்டர் என்றல்ல... தமிழகத்தின் பல ஊர்களிலும் பில்லாவுக்கு பதில் நான் ஈ மீண்டும் திரையிடப்பட்டிருப்பதுதான் விசேஷம்!


மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்ற டாக்டர் கைது


மதுரையை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் மேரி (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்-2 மாணவியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் மேரியை மதுரை, சொக்கலிங்கம் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக மேரிக்கு ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
 
இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சைக்கு வந்த மேரிக்கு அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் சங்கரநாராயணன் ஊசி போட்டார். இதனால் மயக்கம் ஏற்படும் என்பதால் அங்குள்ள ஒரு அறையில் சிறிது நேரம் தங்கிவிட்டு செல்லும்படி டாக்டர் கூறினாராம். அதன்படி மேரியை ஒரு அறை கட்டிலில் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு அவரது சகோதரியும், மாமாவும் பழங்கள் வாங்க வெளியே சென்றனர்.  
 
அப்போது மேரி இருந்த அறைக்கு வந்த டாக்டர் சங்கரநாராயணன் அவரை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கூச்சல் போட்ட மேரி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். கடைக்கு சென்ற அவரது சகோதரியும், மாமாவும் திரும்பி வந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து அறிந்த அவர்களும் ஆத்திரம் அடைந்து சத்தம் போட்டனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன் கூடினர். அவர்கள் தன்னை தாக்குவார்கள் என்று பயந்த டாக்டர் சங்கர நாராயணன் ஒரு அறைக்குள் சென்று கதவினை பூட்டிக் கொண்டார்.  
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, உதவி கமிஷனர் கணேசன் மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசார் உடனடியாக அங்கு வந்தனர். அறைக்குள் இருந்து வெளியே வரும்படி அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து திறந்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயலலிதா முடிவு?


தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.

அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.


யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பாக்கம்சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்றான்' படமும் தப்பவில்லை.

'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.

இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.

இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்றி என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.

இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே பிரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?

 இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன.

எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர தோல்வி என்றே விமர்சிக்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னெடுப்பில் உருவாகி, ராஜீவ் காந்தி-ஜெ ஆர் ஜெயவர்தன ஆகியோரிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதை நடைமுறைபடுத்த எத்தரப்பும் முழுமையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இன்னும் உள்ளது.

"புலிகளும் பிரேமசாசவும் ஒத்துழைக்கவில்லை"

ஒப்பந்தம் புலிகள் மீது திணிக்கப்பட்டதாக சுதுமலை கூட்டத்தில் கூறினார் பிரபாகரன்

தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் இலங்கைத் தரப்பில் அதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அதே போல தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமனதை அடுத்து தமிழகத்திலும், புதுடில்லியிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்தியத் தரப்பால், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த, இலங்கை மீது போதிய அழுத்தங்களை கொடுக்க முடியவில்லை என்று கூறுகிறார், இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வு பிரிவுக்கு தலைவராக இருந்த கர்ணல் ஹரிஹரன்.

13 ஆவது திருத்தச் சட்டம்

இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு இன்றும் இலங்கையில் எதிர்ப்பு உள்ளது
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதை தவிர பெரும்பாலும் அந்த ஒப்பந்தம் தோல்வியே அடைந்தது என்றும் ஹரிஹரன் கூறுகிறார்.

எனினும் அந்த ஒப்பந்தம் இறந்து போகவில்லை என்றும், அப்படி அது இறந்து போகவும் முடியாது என்றும் கூறும் சம்பந்தர், இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்துவது இந்தியாவின் கடமை என்றும்,அதிலிருந்து இந்தியா தவறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியா விடுதலைப் புலிகளைசுலபமாக வழிக்கு கொண்டுவந்து விடமுடியும் எனக் கருதியது என்றும், அந்தக் கணிப்பீடு தவறாகச் சென்றதும், ஒப்பந்தம் செயலிழந்து போனதற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் ஹரிஹரன் கூறுகிறார்.

இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் புதுடில்லிக்கு சரியான கணிப்பீடுகளை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியா என்ன செய்யப் போகிறது?


13 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் மட்டுமே முழுமையான அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்தை அளிக்காது என்றும், அந்தக் கருத்தில் இப்போதும் எந்த மாறுதலும் இல்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

எனினும் இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், அதற்கு மேலே சென்று அதிகாரப் பகிர்வை அளிப்பதாகக் கூறும் இலங்கை அரசு அதை மனப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஆதரவு அளிக்கும் எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.