Monday, April 30, 2012

விரைவில் உருவாகிறது நவீன டைட்டானிக் கப்பல்


புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலின் வடிவமைப்புடன் நவீன வசதிகள் அடங்கிய புதிய டைட்டானிக் கப்பல் ஒன்றை உருவாக்க ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்
ஒருவரான கிளைவ் பாமர், அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இவ்வகையான கப்பலை உருவாக்குமாறு சீன அரசுக்கு சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களிடம் கிளைவ் பாமர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலை உருவாக்கும் பணி அடுத்த ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கும் என்றும் 2016ஆம் ஆண்டு இக்கப்பல் உருவாக்கப்பட்டு கடல் பயணங்களுக்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார்.

வடிவமைப்பு, கப்பலின் அளவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், இது கடந்த நூற்றாண்டின் டைட்டானிக் கப்பலை ஒத்ததாகவே உருவாக்கப்படும் ஆனால் நவீன தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் என்பதே தனது திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சி.எஸ்.சி. ஜின்லிங் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இக்கப்பலை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே ( ஏப்ரல் 15, 1912) பனிப்பாறையில் மோதி மூழ்கிய ஒரு கப்பல். இக்கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவு தினம் கடந்த ஏப்ரல்-15 ம் தேதி அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' 1st look போட்டோநார்வே திரைப்பட விருதுகள் அறிவிப்பு!


நார்வே தமிழ் திரைப்பட  விழாவில் வாகை சூட வாவுக்கு  சிறந்த  பட விருதும், ’உச்சிதனை முகர்ந்தால்க்கு நள்ளிரவுச் சூரியன் விருதும் வழங்கப்பட்டது.

2012-ம் ஆண்டிற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் 25 ம் தேதி நார்வே  தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கியது. லொரன்ஸ்கூவில் உள்ள அரங்கிலும் படங்கள்  திரையிடப்பட்டன.

கட்ந்த சனிக்கிழமை குறும்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. விழாவின்  இறுதிநாளான நேற்று பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சற்குணம், நடிகை ரிச்சா, தூங்கா நகரம் இயக்குநர்  கவுரவ், பாலை திரைப்பட நடிகர் சுனில், இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபுபுன்னகைப்பூ கீதா, தயாரிப்பாளர் கேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரபல பின்னணி பாடகிகள் சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா, விஜிதா சுரேஷ், பிரபா  பாலகிருஷ்ணன் சூப்பர் சிங்கர் புகழ் அண் சந்தியா(நோர்வே), பிரவீனா(நோர்வே)மாளவி சிவகணேஷன்(நோர்வே) ஆகியோருடன் 'Yarl stars' இசைக் குழுவினர்  இணைந்து வழங்கும் "நள்ளிரவுச் சூரியன்" இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் திரைப்படங்களுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட விருதுகள்  அறிவிக்கப்பட்டன.

விருதுகள் விவரம்:

சிறந்த படம் - வாகை சூட வா

சிறந்த இயக்குநர் - சற்குணம் (வாகை சூட வா)

சிறந்த நடிகர் - ஸ்பெஷல் ஜூரி விருது - நடிகர் விஷால் (அவன் இவன்)

சிறந்த நடிகர் - எம் சசிகுமார் (போராளி)

சிறந்த நடிகை - ரிச்சா கங்கோபாத்யாய் (மயக்கம் என்ன)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த துணை நடிகை - தேவதர்ஷினி (மகான் கணக்கு)

சிறந்த கதை - புகழேந்தி தங்கராஜ் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த திரைக்கதை- சுசீந்திரன் (அழகர்சாமியின் குதிரை)

சிறந்த ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம் நாதன் (கோ)

சிறந்த பாடலாசிரியர் - காசி ஆனந்தன் (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த தயாரிப்பு நிறுவனம் - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் (அழகர்சாமியின்  குதிரை)

சிறந்த வில்லன் - சம்பத் (வர்ணம் & ஆரண்ய காண்டம்)

சிறந்த காமெடி - கஞ்சா கருப்பு (போராளி)

சிறந்த காமெடி - சூரி (போராளி)

சிறந்த பின்னணி பாடகர் - சத்யா ('மாசமா...' எங்கேயும் எப்போதும்)

சிறந்த பின்னணி பாடகி - சின்மயி ('சர சர சாரக் காத்து...'- வாகை சூட வா)

சிறந்த நடனம் - பாபி (போறானே... - வாகை சூட வா)

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - பீட்டர் ஹெய்ன் (கோ)

சிறந்த ஸ்டன்ட் நடிகர் - கணேஷ் பாபு (மகான் கணக்கு)

சிறந்த எடிட்டிங் - கோலா பாஸ்கர் (மயக்கம் என்ன)

சிறந்த கலை இயக்குநர் - சீனு (வாகை சூட வா)

சிறந்த பின்னணிக் குரல் - தீபா வெங்கட் (மயக்கம் என்ன)

சிறந்த புதுமுகம் - நீனிகா (உச்சிதனை முகர்ந்தால்)

சிறந்த மேக் அப் - கேபி சசிகுமார் (வாகை சூட வா)

சிறந்த உடை அலங்காரம் - நட்ராஜ் (வாகை சூட வா)


சிறப்பு விருதுகள்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வெங்காயம்

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - நர்த்தகி

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - பாலை

சிறந்த சமூக விழிப்புணர்வுப் படம் - வர்ணம்

வாழ்நாள் சாதனையாளர் விருது - ரகுநாதன்

கலைச்சிகரம் விருது - சத்யராஜ்

நள்ளிரவுச் சூரியன் விருது - உச்சிதனை முகர்ந்தால்

தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தும் படத்துக்கான சிறப்பு விருது கவுரவ் இயக்கிய தூங்கா  நகரம் படத்துக்கு வழங்கப்பட்டது.


எம்ஜியாரை இயக்கும் சுந்தர்.சி!


வெடி' படத்தினை அடுத்து விஷால் நடித்துவரும் படம் 'சமரன்'. இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.  ' தீராத விளையாட்டு பிள்ளைஇயக்கிய  திரு இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது 'சமரன்' என்ற தலைப்பினை 'சமர்' என்று மாற்றி இருக்கிறார்கள்.

இப்படத்தினை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷால்.
மூன்று வேடங்களில் விஷால் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு சுந்தர் சி. 'MGR' (Madhan, Gaja, Raja) என்று தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்கள்.

விஷால் இப்படத்தில் மதன், கஜா, ராஜா என்ற மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதால் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இத்தலைப்பினை பதிவு செய்து இருக்கிறார்களாம்

இப்படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்க இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு குத்து பாடலுக்கு, சதா நடனமாட இருக்கிறார்.

மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'கொசுறு' கபாலி :  " டைரக்டர் சார்.. உங்க வீட்ல இந்த டைட்டிலுக்கு என்ன சொன்னாங்க? "


மே 1 - துப்பாக்கி


விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK-க்கை பார்க்கத் தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. கதைக்களம் மும்பையாக இருப்பதால், அங்கே உள்ள தெருக்களில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

படத்தின் FIRST LOOK நாளை (மே 1) வெளியாக இருக்கிறது. ' போக்கிரி ' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் விஜய். ஆனால் அப்படத்தில் சில காட்சிகள் தான் போலீஸ் வேடத்தில் வருவார்.

'துப்பாக்கி' படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகபோலீஸ் வேடத்தில் நடித்து இருப்பதால் படத்தின் FIRST LOOK எப்படி இருக்கும் என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

ஒரு படத்திற்கு ஸ்டில் போட்டோகிராபர் தான் FIRST LOOK எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்.  'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் படத்தின் FIRST LOOK புகைப்படங்களை எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதி விஜய் நடிக்கும் படத்தின் FIRST LOOK வெளியாக இருக்கிறது.


அலெக்ஸ் பால் மேனனை மீட்பதில் புது சிக்கல்: மே 2-ந் தேதி இறுதிக்கெடு


தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வந்தார். அவரை மாவோயிஸ்டுகள் கடந்த 21-ந்தேதி கடத்திச் சென்று விட்டனர்.  
 
அவரை விடுவிக்க வேண்டுமானால் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், ஜெயிலில் உள்ள 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 8 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முன்னதாக 3 நிபந்தனைகளை விதித்திருந்தனர்.   
 
இந்நிலையில் இன்று கிடைத்த தகவல்களின்படி மாவோயிஸ்டுகள் அறிக்கை விடுத்துள்ளதாவது;
 
* சிறையில் இருக்கும் 76 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்.
 
* உடல்நலம் குன்றியுள்ள கலெக்டரை காட்டில் வைத்திருக்க விருப்பமில்லை.
 
* கலெக்டரை மீட்பதில் மாநில அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை.
 
* மே-2 ற்குள் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால்  மக்கள் மன்றத்தின் முன்பு கலெக்டர் நிறுத்தப்படுவார்.
 
*மக்கள் மன்றம் எடுக்கும் முடிவுக்கு மாநில அரசு கட்டுப்பட வேண்டும்
 
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். 
 
கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், சத்தீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில், ஆயுதம் தாங்கிய 400 மாவோயிஸ்டுகளின் கண்காணிப்பில் பிணைக் கைதியாக இருக்கிறார். அவருடன் அம்மாவட்டத்திலுள்ள இளம் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் மீட்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்திருக்கிறது. இதனால் சத்தீஸ்கர் அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அரசு சார்பில் மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தூதுக் குழுவினர், இருதரப்பினரின் பிடிவாதத்தினால் கவலை அடைந்துள்ளதாகவும், இதனால் கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம்: சுஷ்மா சுவராஜ்


ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 25-ந்தேதியுடன் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.   

முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவுக்கு ஜனாதிபதியை தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடிய அளவுக்கு வாக்குகள் இல்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மூன்று பேரின் பெயர்களை முன்நிறுத்தி ஆதரவு திரட்டுவதில் தீவிரமாகியுள்ளது. 

தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சபாநாயகர் மீராகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை ஜனாதிபதி ஆக்கலாம் என்பது காங்கிரசின் விருப்பமாக உள்ளது. ஆனால் பிரணாப் முகர்ஜி உள்பட, காங்கிரசால் அறிவிக்கப்படும் எந்த வேட்பாளரையும் பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ளாது என பா.ஜ தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். 

மேலும் ஹமீத் அன்சாரிக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசை ஆதரித்துவிட்டு, அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசின் ஆதரவைப் பெறும் திட்டம் எதுவும் பா.ஜ.வுக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளால் அப்துல் கலாம் போன்ற பொதுவான வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் அவரை ஆதரிப்போம் எனவும், அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சிகளின் ஆதரவைப் பெறுவோம் எனவும் சுஷ்மா கூறியுள்ளார்.நீதிமன்றத்தால் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது: பாகிஸ்தான் பிரதமர் கிலானி


பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, நீதிமன்றம் தன்னை பதவியில் இருந்து நீக்க எந்த சட்டமும் இல்லை என தெரிவித்தார். முன்னதாக, பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்துமாறும், சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதி அவரது வங்கி கணக்குகளை பெறுமாறும் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 

அதை கிலானி ஏற்கவில்லை. மேலும், அதிபர் மீது விசாரணை நடத்த தனக்கு அரசியல் சட்டத்தில் அதிகாரம் இல்லை என கூறிவிட்டார். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை நசீர்- உல் முக் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத பிரதமர் கிலானி குற்றவாளி என கடந்த வாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதனால் கிலானியின் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. பாகிஸ்தான் அரசியல் சட்டத்தின் 63-வது பிரிவின்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவி வகிக்க முடியாது. 

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கிலானி பிரதமர் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் கிலானி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

ஷகித் நசீம், ராணா இலாமுதீன் ஆகிய இருவர் கிலானி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். எந்த சட்டத்தின் அடிப்படையில், நாட்டுக்கு வழிகாட்டும் பிரதமர் பதவியில் நீடிக்கிறார் என கிலானி விளக்கம் அளிக்க வேண்டும் என அவ்வழக்கில் கோரப்பட்டுள்ளது. 

மேலும் பிரதமர் அலுவலகத்தை கிலானி தக்க வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், பிரதமர் அலுவலகத்தையும், அங்குள்ள வசதிகளையும் கிலானி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்திருந்தனர். 

இக்கருத்தை மறுத்த பிரதமர் கிலானி, பாராளுமன்றமே இது குறித்து முடிவெடுக்கவேண்டும் எனவும் 180௦ மில்லியன் பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவே இது குறித்து தீர்மானிக்க இயலும் என தெரிவித்திருந்தார்.   

மேலும் சட்டப்பிரிவு 248 (1) ன் படி தன்னிச்சையாக பிரதமர் செயல்பட முடியும் எனவும் தன் கடமைகளை ஆற்றுவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது என மேலும் தெரிவித்தார். நீதித்துறையும், முக்கிய எதிர்கட்சியுமான பி.எம்.என்.எல் கட்சியும் ஏன் தன்னுடைய பதவியை பறிப்பதற்கு இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள் என்றும் கிலானி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்!


பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.நித்தியானந்தாவை மதுரையை விட்டு வெளியேற்றுக... மதுரை கலெக்டரிடம் மனு


மதுரை ஆதீன மடத்திலிருந்து உடனடியாக நித்தியானந்தாவை வெளியேற்ற வேண்டும். அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர், மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பூசைதுரை என்பவர் மதுரை கலெக்டர் சகாயத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், மதுரை ஆதினமாக நித்தியானந்தாவை பதவியேற்க செய்ததை உடனே ரத்து செய்து, அவரை மதுரையை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர் மீது உள்ள கிரிமினல் நடவடிக்கைகள் இருக்கும்போது ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய வேண்டும்.

நித்தியானந்தா ஆதினமாகப் போவதை உடனே தடுத்து நிறுத்தி, ஆதின மடத்தை மீட்டு தமிழக அரசு வசம் ஒப்படைக்க வேண்டும். குறுக்கு வழியில் பதவியேற்ற ஆதினப் பதவியை ரத்து செய்ய வேண்டும்.

குற்ற நடவடிக்கையில் இருக்கும் ஒருவரை எப்படி ஆதினமாக, மதுரை ஆதினம் ஏற்றுக்கொண்டார் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளா


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? : கருணாநிதி பேட்டி


சென்னையில் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அதன் விவரம் வருமாறு:-
 
கேள்வி:- நீங்கள் ஆட்சியில் இல்லாத போதுதான் இலங்கை பிரச்சினையை தீவிரமாக கையில் எடுப்பதாக சிலர் கூறுகிறார்களே?
 
பதில்:- ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் இலங்கை தமிழர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வாதாடி இருக்கிறோம். போராடி இருக்கிறோம். அமைதிப்படை என்ற பெயரால் இலங்கையில் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். அந்த அமைதிப்படை இந்தியா வந்தபோது அன்று முதல்- அமைச்சராக இருந்த நான் வரவேற்க செல்லவில்லை. அதனால் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவர்கள் நாங்கள்.
 
கே:- இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது அதை நீங்கள் தடுக்க தவறியதாகவும், இப்போது 'டெசோ' அமைப்பை கையில் எடுத்திருப்பதாகவும் விமர்சிக்கிறார்களே?
 
ப:- விமர்சிப்பவர்களைப் பற்றி கவலை இல்லை. என்னையோ, டெசோ அமைப்பையோ விமர்சிப்பது அவர்களாகவே இந்த அமைப்புக்கு தரும் விளம்பரமாகவே கருதுகிறேன். ஆட்சியை இழந்ததால் இதை உருவாக்கவில்லை.
 
கே:- போர் முடிந்த பிறகு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பால் ஈழ தமிழர்களுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும்.
 
ப:- முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அறவழியில் அனைத்து நாட்டு ஆதரவையும் திரட்ட இருக்கிறோம். இதற்கு அனைவரும் ஆக்கமும் ஊக்கமும் தர வேண்டும்.
 
கே:- பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?
 
ப:- போராளிகளுக்கு எப்போதும் சாவு இல்லை.
 
கே:- மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகுவீர்களா?
 
ப:- உதவி பெற முயற்சிக்கிறேன். முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது தி.மு.க.வால் என்பதை மறந்து விடக்கூடாது.
 
கே:- புலிகள் மீண்டும் போராடினால் 'டெசோ' ஆதரிக்குமா?
 
ப:- ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம்.
 
கே:- இந்த அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
 
ப:- இந்த அமைப்பை தமிழ்நாடு முழுவதும் பரப்புவது. மக்களிடையே ஆதரவை திரட்டுவது. தமிழ் ஈழம் பெற ஜனநாயக வழிமுறைகளை கடைபிடிப்பது. அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வலியுறுத்துவது.
 
கே:- ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று மத்திய மந்திரி அந்தோணி சொன்னாரா?
 
ப:- என்னிடம் சொன்னார். ஆனால் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
 
கே:- நீங்கள் யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
 
ப:- நல்ல ஜனாதிபதி வர வேண்டும்.
 
இவ்வாறு கருணாநிதி கூறினார்.