இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட ஐந்து இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. நேரு - இந்திராவின் அரசியல் வாரிசு என்பதை சோனியா நிரூபித்து விட்டார் எனபோர்ப்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
அவர்களின் விவரங்கள்:
1 . ஹூ ஜிண்டாவோ(சீன அதிபர்)
சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளார் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ. உலகில் சக்தி வாய்ந்த நபர்கள் வரிசையில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ முதலிடத்தில் உள்ளார். ஒபாமா இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.
2. பராக் ஒபாமாவை( அமெரிக்க அதிபர் )
சென்ற வருட பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஒபாமா இந்த வருடம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் . இது அவருடைய செல்வாக்கு மக்களிடம் குறைந்துள்ளதையே காட்டுவதாக தெரிகிறது . செவ்வாய்கிழமை அன்று நடந்த அமெரிக்க இடைதேர்தளிலும் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3. அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் (செளதி அரேபியா மன்னர்)
.
செளதி அரேபியா மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் 3வது இடத்தில் உள்ளார்.4 . விளாடிமீர் புடின் (ரஷ்ய பிரதமர் )
ரஷ்ய பிரதமர் விளாடிமீர் புடின் 4வது இடத்தில் உள்ளார்.
5 . போப் ஆண்டவர் பெனடிக்ட் (கத்தோலிக்க மத குரு)
கத்தோலிக்க மதகுருவான போப் ஆண்டவர் பெனடிக்ட் 5வது இடத்தில் உள்ளார்.
6 . ஏஞ்சலா மெர்கல் (ஜெர்மனி அதிபர் )
ஜெர்மனியின் பெண் அதிபரான ஏஞ்சலா மெர்கல் 6வது இடத்தில் உள்ளார்.7 . டேவிட் கேமரூன் (இங்கிலாந்த் பிரதமர் )
இங்கிலாந்து பிரதமர்டேவிட் கேமரூன் 7வது இடத்தில் உள்ளார்.
8.பென் பெர்னன்கே (chairman of the US Federal Reserve )
9 . சோனியா காந்தி (காங்கிரஸ் கட்சி தலைவர் )
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைவர் சோனியா காந்தி 9-வது இடத்தில் உள்ளார்.காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் உட்பட ஐந்து இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. நேரு - இந்திராவின் அரசியல் வாரிசு என்பதை சோனியா நிரூபித்து விட்டார் என, போர்ப்ஸ் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. 102 கோடி மக்கள் மனதை கவர்ந்தவராக இருக்கிறார்.
நேரு - இந்திரா ஆகியோரது உண்மை யான அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான்காவது முறையாக சோனியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது மிகப்பெரிய சாதனை என, போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தன் மகன் ராகுலையும் பிரதமராக்கும் முயற்சியில் சோனியா தீவிரம் காட்டி வருகிறார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. 10 . பில் கேட்ஷ்(மைக்ரோ சாப்ட் நிறுவனர் )
உலகின் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவரும் கணினி உலலகின் முடிசூடா மன்னனுமானா பில் கேட்ஷ் 10 - வது இடத்தை பிடித்துள்ளார்.
நேருவுக்குப் பின், சர்வதேச அளவில், சிறந்த பிரதமராக போற்றப்படுபவரும், பொருளாதார நிபுணருமான பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இப்பட்டியலில் 18வது இடம் கிடைத்துள்ளது. இவர், கடந்த முறை வெளியிடப்பட்ட சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் 36வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, டாடா நிறுவனங்களின் சேர்மென் ரத்தன் டாடா, லட்சுமி மிட்டல் என, இப் பட்டியலில் மொத்தம் ஐந்து இந்தியர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
மற்ற உலகத் தலைவர்களில், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி 19வது இடத்திலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் 20வது இடத்திலும், கூகுள் இணையதளத்தின் லாரிபேஜ் மற்றும் சர்கே பிரின் 22வது இடத்திலும் உள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நேதன்யாகு 24வது இடத்திலும், ஐ.நா., பொது செயலர் பான் கீ மூன் 41வது இடத்திலும் உள்ளனர்.
என்னைக்கு தான் இதுல நம்ம பேரும்இடம்பெருறது ....இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நேதன்யாகு 24வது இடத்திலும், ஐ.நா., பொது செயலர் பான் கீ மூன் 41வது இடத்திலும் உள்ளனர்.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
No comments:
Post a Comment