Thursday, March 31, 2011

சினிமாவில் கசப்பான அனுபவம் : தமன்னா பேட்டிஇளகிய மனசு, தாராள குணம் கொண்டவர்தான் எனக்கு கணவராக வர வேண்டும் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழ் சினிமாக்களை தவிர்த்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கியிருக்கும் தங்க மங்கை தமன்னா, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருமணம் பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமன்னா, இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. நான் சின்னப் பொண்ணு. 21 வயசுதான் ஆகிறது.  ஆனால் எனக்கு கணவராக வருபவர் எப்படி இருக்கணும் என்று ஒரு கனவு இருக்கிறது. அவர் இளகிய மனம் படைத்தவராக இருக்க வேண்டும். தாராள குணம் கொண்டவராக இருக்கணும். என் ஆசைகளை, விருப்பங்களைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பாவியாக இருந்தேன். இப்போது நிறைய படங்களில் நடித்து முடித்து சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டு. ஏண்டா சினிமாவுக்கு வந்தோம் திரையுலகை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு விரக்தியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கடினமாக உழைத்தால் எதையும் பெற முடியும்.  நடிகையான பிறகு இயக்குனர் சொல்வதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தையும் புதிதாக செய்வது போல் உணர்கிறேன்.  எனக்கு இரவு நேரப் பார்ட்டிகள் அறவே பிடிக்காது. தமிழில் இயக்குனர்கள் கவுதம், ராதாமோகன், சசிகுமார் படங்களில் நடிக்க ஆசை. நவீன உடைகளைவிட, புடவைதான் எனக்குப் பிடித்த உடை. இந்தியப் பெண்களுக்கு அதுதான் அழகு, என்று கூறினார்.


இன்றைய பதிவுகள்...ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணியை வைகோ ஆதரிக்க வேண்டும்-ராமதாஸ்


ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட திமுக கூட்டணிக்கு வைகோ
ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வேதாரண்யம் ராஜாளி பூங்காவில் நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
வேதாரண்யம் தொகுதியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் எங்களுக்கு கிடைத்தது.

தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டால் நாங்கள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம். ஐந்து ஆண்டு காலம் எங்கள் ஆதரவு தொடரும்.

நமக்கு எதிராக செயல்படுவது அதிமுக கட்சி மட்டும் அல்ல, தேர்தல் கமிஷனும் தான். எனக்கு கிடைத்த தகவல்படி அதிமுக ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி செலவு செய்ய பணம்  இறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் திமுக வெற்றி பெறும்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள்  , பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளதால் தமிழகத்தின் வடக்கு பகுதியில் நூற்று பத்து தொகுதியில் வெற்றி பெற்று விட்டது. இன்னும் ஆட்சி அமைக்க எட்டு இடங்கள்தான் தேவை, அவற்றையும் வெல்வோம் என்றார்.

பின்னர் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட மதிமுகவையும், வைகோவையும் திமுக கூட்டணிக்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

தோல்வி பயத்தால் ஜெயலலிதா தரம் தாழ்ந்து தனி நபர் விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலில் யாரும் ஈடுபடவில்லை. தன் கையில் அடிவாங்கியவர் மகாராஜா ஆவார் என்று விஜயகாந்த் கூறியிருப்பது உளறலின் உச்சக்கட்டம் என்றார்.

ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லாது:

பின்னர் திருக்கோவிலூரில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,

நம்மை எதிர்ப்பதற்கு எதிரணியில் ஒருவரும் கிடையாது. குறிப்பாக 41 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட பெற்றி பெறவே முடியாது.

திருவாரூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கலைஞர் தலைமையில் நான், திருமாவளவன்  , தங்கபாலு ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் பேசினோம். இனி விழுப்புரம், திண்டிவனத்தில் பேசவிருக்கிறோம். ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த்
போன்றவர்கள் ஒரே மேடையில் பேசுவார்களா, பேச முடியுமா, முடியவே முடியாது.

கலைஞர் சொன்னதை எல்லாம் ஜெயலலிதா அப்படியே சொல்கிறார்.

நான் விஜயகாந்த் பற்றி பேசியது கிடையாது. அந்த கட்சிப் பெயர் கூட எனக்கு தெரியாது. அப்படி இருக்கையில் அவர் தான் கும்மிடிப்பூண்டியில் பேசுகையில் என்னை போராட்ட மன்னன் என்று கூறியுள்ளார். அவர் சரியாகத் தான் என்னை போராட்ட மன்னன் என்று கூறியிருக்கிறார். நான் தமிழ் மக்களுக்காகவும், மொழிக்காகவும் ஏராளமான போராட்டங்கள் நடத்தியுள்ளேன்.

விருத்தாசலத்தை விட்டுவிட்டு ரிஷிவந்தியத்தில் போட்டியிடும் விஜயகாந்துக்கு அத்தொகுதி மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இந்த தொகுதி மக்கள் ஏமாறுபவர்கள் அல்ல. அதேசமயம் அவர்களை ஏமாற்றுபவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்றார்.

இன்றைய பதிவுகள்...
ஜெயலலிதாவின் தண்டனை காலம் முடிந்துவுட்டது: நடிகை விந்தியா


கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.சி. ஆறுக்குட்டியை ஆதரித்து நடிகை விந்தியா பெரிய நாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது வாக்காளர் மத்தியில் நடிகை விந்தியா பேசினார்.

அவர்,  ‘’தி.மு.க.வினர் கருணாநிதி மீண்டும் 6 முறையாக முதல்வராக வரவேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். அதற்கு குஷ்பு, பாக்கியராஜ், வடிவேல் போன்றவர்கள் ஆதரவாக உள்ளனர்.


 கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் எல்லா வகையிலும் பின் தங்கி விட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, அராஜகம் போன்ற வற்றால் தமிழ்நாடு நலிந்து போய் விட்டது. இதற்கு தீர்வு காண வேண்டுமெனில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.

ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து விட்டது. ஆகவே அனைவரும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மருதமலை சுல்தானியாபுரம் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் பொது மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.

அப்படின்னா ஜெயலலிதா ஆட்சியில் தவறு செஞ்சாங்க, அதனால தான் மக்கள் அவங்களுக்கு தண்டனை கொடுத்து வீட்டில உக்கார வச்சிட்டாங்க என்பதை ஒத்துகொள்றாங்களா ...? அது சரி விந்தியா இப்படி பேசியது ஜெயலலிதாவுக்கு தெரியுமா தெரிந்தால் பாவம் விந்தியா கதி என்ன ஆகுமோ ....!!


இன்றைய பதிவுகள்...

மொஹாலி போட்டி:நெஞ்சுவலியால் உயிரிழந்த நடிகர்


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிக்காக சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாகிஸ்தானின் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.


லியாகத் சோல்ஜர் என பரவலாக அழைக்கப்படும் 55 வயதான லியாகத் அலி அரை இறுதிப் போட்டிக்காக உள்ளூர் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார்.

திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டெய்லி டைம்ஸ் பத்திரிகைத் தகவல் தெரிவிக்கிறது.

லியாகத் அலி நடிகராக மட்டும் அல்லாமல், தொழில் அதிபராகவும் இருந்தார். ஜெனரேட்டர்கள் தொடர்பான ஒரு வணிகத்தைச் செய்துவந்தார்.


லியாகத் அலியின் மறைவுக்கு பல்வேறு தொலைக்காட்சி பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்தனர்.


பாகிஸ்தானின் சிறந்த நகைச்சுவை மேடை நாடக நடிகர்களில் லியாகத் அலியும் ஒருவர். அவரது இழப்பு பாகிஸ்தானின் நகைச்சுவைத் துறைக்கு பெரும் இழப்பு என பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.


இன்றைய பதிவுகள்...