Wednesday, November 30, 2011

எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் :நாளிதழ் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கிய அதிமுக பெண் மேயர்


ஈரோடு மாநகரத்தின் மேயராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம். இவர் அதிமுக அமைச்சர் ராமலிங்கத்தின் ஆதரவாளர். துணை மேயராக இருக்கும் கே.சி.பழனிச்சாமி அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்.

துணை மேயர் தேர்தலின்போதே மேயருக்கும், துணை மேயருக்கும் மோதல் உருவானது. அடுத்தடுத்து நடந்த கூட்டங்களில் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயரை ஒதுக்கி வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்த மோதல் சம்பவமாக தொடர்ந்து காலைக்கதிர் நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டே இருந்தது.


இதனால் ஆத்திரம் அடைந்த மேயர் மல்லிகா பரமசிவம், இன்று மதியம் 1.30 மணி அளவில் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள காலைக்கதிர் அலுவலகத்தில் புகுந்து, எனக்கு எதிரா எவன்டா செய்தி எழுதுறவன் என்று அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டெலிபோன், பேக்ஸ் மிஷனை கீழே தள்ளியுள்ளார்.


இந்த சம்பவங்களை புகைப்படம் எடுத்த காலைக்கதிர் புகைப்படக்காரர் சண்முகத்தை அடித்து கீழே தள்ளியுள்ளனர். தடுக்க வந்த செய்தியாளர் கணேசன் என்பவரும் தாக்கப்பட்டார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, காலைக்கதிர் நிர்வாகத்தினர் தங்களுடைய அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து செய்தியாளர், புகைப்படக்காரர், அலுவலக உதவியாளர்களை அடித்து பொருட்களை சூறையாடியதாக ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், அவரது உதவியாளர் விஜயா, மகளிர் அணியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளனர்.

நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி, பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடத்தையில் சந்தேகம்: நடிகைக்கு கத்திக்குத்து


பிரபல கன்னட நடிகை சவுமியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது காதலன் அனில்குமார் அவரை 13 முறை உடல் முழுக்க கத்தியால் குத்தினார். சவுமியாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஹுடுகா ஹுடுகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சவுமியா. பெங்களூரைச் சேர்ந்த அனில் குமாரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அனில்குமார் ஏற்கெனவே ரஜனி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

ரஜனியை விவாகரத்து பெற முயற்சித்து வருகிறார். இந்த விவாகரத்துக்கான வழக்குச் செலவைக்கூட சவுமியாதான் கொடுத்து வந்தாராம்.

இந்த நிலையில் சவுமியா நடத்தையில் அனில்குமாருக்கு திடீர் சந்தேகம் ஏற்பட்டது. சினிமா உலகில் வேறு சிலருடன் சவுமியா தொடர்பு வைத்து இருப்பதாக கருதினார். இதனால் அவரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து வந்தார். சவுமியா சில இளைஞர்களுடன் நெருக்கமாக சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் ஏற்பட்டது. பாய்ந்து சென்று சவுமியாவை கத்தியால் குத்தினார்.

கழுத்து, வயிறு, வலதுகை போன்ற பகுதிகளில் பலமுறை சர மாரியாகக் குத்தினார். பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சவுமியாவை யலஹங்காவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தகவல் அறிந்ததும் போலீசார் அனில்குமார் வீட்டுக்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அனில்குமார் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். ஆனால் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

சில தினங்களுக்கு முன் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மனைவியைக் குத்திக் கொல்ல முயன்றது நினைவிருக்கலாம்.


மதுரையில் அழகிரியின் எம்.பி. அலுவலகம் பறிப்பு!


மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெல்லி போயுள்ள நிலையில், மதுரையில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறி அழகிரியிடம் ஒப்படைத்தார் அப்போதைய திமுக மேயர் தேன்மொழி.

இந்த நிலையில் இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை இன்று மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்துள்ளது. மேலும், அந்த இடத்தில் மண்டல அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அலுவலகம் பறிக்கப்பட்ட தகவல் அழகிரிக்கு போயுள்ளதாம். அவர் தற்போது டெல்லியில் உள்ளார். திஹார் சிறையிலிருந்து விடுதலையான தங்கை கனிமொழியை வரவேற்க டெல்லி போன அழகிரி, கனிமொழியை தனது வீட்டில்தான் தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் எம்.பி. அலுவலகத்தை மதுரை மாநகராட்சி பறித்துள்ளதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மதுரை திரும்பியதும் அலுவலகத்தை மீட்கும் நடவடிக்கையில் அவர் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இளையராஜா வீட்டு துக்கம் ரஜினி விசாரிக்காதது ஏன்? :ஒரு பிளாஷ்பேக்


சிங்கம் இரையை விரட்டினால் மட்டுமல்ல, ரெஸ்ட் எடுத்தால் கூட அதையும் ரசிப்பதற்கு ஆயிரம் பேர் கூடுவார்கள். நிலைமை அப்படியிருக்க, சிங்கம் வாக்கிங் போகிற காலம் இது. ஆமாம்... உடல்நிலை சரியான பின்பு திடீர் திடீரென்று முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து அந்த ஏரியாவையே இன்பத்தில் அதிர வைக்கிறார் ரஜினி. எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் யாரும் எதிர்பாராமல் கலந்து கொண்டார் ரஜினி. அதன்பின் எடிட்டர் மோகனின் 70 வது பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதையெல்லாம் கவனித்து வரும் திரையுலகம், இன்னும் அவர் இளையராஜா வீட்டுக்கு போகவில்லையே, ஏன் என்று கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமுற்றாரல்லவா? அந்த துக்கத்தில் பங்கேற்க திரையுலகமே திரண்டு வந்தது. இசைஞானியின் பரம வைரியாக கருதப்பட்ட வைரமுத்து கூட நேரில் வந்திருந்து ஆறுதல் சொன்னார். ஆனால் ரஜினி?

துக்கம் நடைபெற்று இத்தனை நாளாகியும் அவர் வரவில்லையாம். (மனைவி, மகள்கள், மருமகன் ஆகியோர் சென்றார்கள். அது தனி) இதற்கு பின்னணியாக ஒரு பழைய பிளாஷ்பேக்கை அவிழ்த்துவிடுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஒருமுறை மனைவி லதாவையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றாராம் ரஜினி. இவரை அழைத்துச் சென்றவர் இசைஞானிதானாம். மறுநாள் காலை ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்த திட்டம். திடீரென்று அன்றிரவு ரஜினியை அழைத்த இளையராஜா, நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்புங்க என்று கூறிவிட்டாராம் கண்டிப்பு நிறைந்த குரலில். இதை எதிர்பாரத ரஜினி மனவருத்தத்தோடு திரும்பியதாக ஒரு பிளாஷ்பேக்.

அன்றிலிருந்துதான் ரஜினி, ராஜாவை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.


2ஜி வழக்கு: ராசா மனதில் என்ன இருக்கிறது?


2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்த 5 கார்பரேட் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் திமுக எம்பி கனிமொழி மற்றும் 4 பேருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்றிரவு 7.30 மணிக்கு கனிமொழி திகாரில் இருந்து வெளியே வந்தார். வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னை வருகிறார்.

2ஜி ஊழல் வழக்கில் கைதானவர்களில் இதுவரை ஒரு முறை கூட ஜாமீன் கோராதவர் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தான். கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்தபோது ராசாவிடம் நீங்கள் ஜாமீன் கோரவில்லையா என்று கேட்டதற்கு, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான முடிவு தெரியட்டும்.அதன் பிறகு எனது முடிவை நான் தீர்மானிப்பேன் என்றார்.

தற்போது கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்வாரா என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு.

இருப்பினும் இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஜாமீன் தொடர்பாக என்னுடன் இதுவரை ராசா கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம். எனவே ராசாவின் மனதில் என்ன இருக்கிறது என்பது புலப்படவில்லை.


ரஜினி, அமிதாப், நீங்க ஓய்வு பெறலாமே! - நிருபர் கேள்வியும் கமலின் அதிரடி பதிலும்


ஃபிக்கியின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறையின் மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு அது. நடிகர் கமல்ஹாசன்தான் இதன் தலைவர் என்பதால், அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், இணையதளங்கள் திரைப்படத்துறைக்கு எந்த அளவு உறுதுணையாக உள்ளன என்பதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதிலளித்த கமல், எல்லா மேடைகளிலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவரும் என்னிடம் எதற்கு இந்த கேள்வி. நானே விரைவில் இணையதளப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன். நான் உங்கள் கட்சி, என்றார்.

அடுத்து ஒரு நிருபர், ரஜினி, நீங்க, பாலிவுட்ல அமிதாப் பச்சன் போன்றவர்கள் எல்லாம் ஓய்வு பெறலாமே, என்றார்.

சற்றும் தயங்காமல் கமல் அளித்த பதில்:

ஏன்...நீங்கள் எதற்காக வருகிறீர்கள்.. வயதாகிவிட்டதே என்று நீங்களும் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே!, என்று பதிலளிக்க அத்தோடு நிருபர் அமைதியாகிவிட்டார்!


அஜீத் வந்தா கொண்டாட்டம் !


அஜீத் நடிப்பில் வெளிவந்த 50வது படம் ' மங்காத்தா' . அர்ஜுன், த்ரிஷா, லட்சுமிராய், பிரேம்ஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம். வெங்கட்பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தயாநிதி அழகிரி தயாரிக்க, சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

அஜீத்தின் வித்தியாசமான நடிப்பால் இப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

அஜீத்தைப் பொருத்தவரை அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. ' மங்காத்தா ' படத்தின் இசை வெளியீட்டு விழா கூட ஒரு எஃப்.எம் ஸ்டேஷனில் சிம்பிளாக நடைபெற்றது. பட வெளியீட்டிற்கு பிரச்னை எழுந்த போது கூட அஜீத் எந்த ஒரு அறிக்கையும் தரவில்லை.

படம் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த வேளையில் தயாரிப்பாளர் தயாநிதி 'மங்காத்தா' படத்தின் 100வது விழாவை கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்.

இது குறித்து தயாநிதி அழகிரி தனது டிவிட்டர் இணையத்தில்  " அஜீத் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. படத்தின் நாயகன் இல்லாமல்  'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவை கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

அஜீத் சார் நடித்து வெளிவந்த படங்களில் ' மங்காத்தா ' படம் தான் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. அப்படத்தினை எனது நிறுவனம் தயாரித்ததில் பெருமை கொள்கிறேன்.

தல ரசிகர்கள் அவரை 'மங்காத்தா' படத்தின் 100வது நாள் விழாவிற்கு அழைத்து வருவதாக இருந்தால், 100வது நாள் விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறோம்  " என்று தெரிவித்துள்ளார்.


' ACTION ' ஆரம்பம் ! : 'தாண்டவம்' விஜய்


விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சந்தானம், நாசர் மற்றும் பலர் நடிக்க இருக்கும் படம் 'தாண்டவம்'. 'தெய்வத்திருமகள்' படத்தினை தொடர்ந்து இயக்குனர் விஜய் - விக்ரம் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது. யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க முன்வந்துள்ளது.

இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்ப்ந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் ஜகபதி பாபு.  விக்ரமிற்கு இணையான வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பல படங்களை தயாரித்த வி.பி.பிரசாத்தின் மகன் ஜகபதி பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது தான் தனது 100வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நவம்பர் 30ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. நா.முத்துகுமார் பாடல்கள் , ஜி.வி.பிரகாஷ் இசை, நிரவ்ஷா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என இயக்குனர் விஜய்யின் டீம் மொத்தமும் இப்படத்திலும் இணைகிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் விஜய்.

கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம் ஆகிய படங்களில் சண்டைக் காட்சிகள் பெரிய அளவில் இல்லை. இந்த  'தாண்டவம்' விஜய் இயக்கத்தில் உருவாகும் முழு நீள ஆக்ஷன் படம்.


கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களை கடலில் வெட்டி வீசுவதாக போனில் மிரட்டல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி, வள்ளியூரில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு, அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தோர் என அடையாளப்படுத்திக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து முன்னணி சார்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி, வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநிலத் தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்திற்கு, போலீஸ் அனுமதி தரவில்லை. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்தின் நிறைவில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தோர் மீது, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், வள்ளியூர் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.

எதிர்ப்பாளர்களால் ஆபத்து:

இதுகுறித்து, ஜெயக்குமார் அளித்த பேட்டி:ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று (நேற்று) மாலை, பரமன்குறிச்சியில் இருந்து வந்து கொண்டிருந்தேன். கள்ளிகுளம் அருகே வந்தபோது, மாலை 4.06 மணிக்கு, என் அலைபேசிக்கு, 80159 37051 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவிலிருந்து பேசுவதாகக் கூறிய அவர், தன் பெயரை தெரிவிக்காமல், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். "அணு உலைக்கு ஆதரவாக போராடினால், கடலில் வெட்டி வீசி விடுவேன்' என, மிரட்டினார்.இதையடுத்து, 5.15 மணிக்கு, 94860 32115 என்ற எண்ணிலிருந்து, மற்றொரு அழைப்பு வந்தது. அதில் பேசியவரும், தன்னை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தவர் எனக் கூறி, "நீ கூடங்குளத்திற்கு வந்து விட்டு தான் செல்ல வேண்டும்; இல்லையென்றால்...' என, மிரட்டினார்.எனவே, அணு உலை எதிர்ப்புக் குழுவால், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கும், அமைப்பின் நிர்வாகிகளுக்கும், போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் என, வள்ளியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.வள்ளியூர் போலீசார், இதுகுறித்த விசாரணையை துவங்கியுள்ளனர்.பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாத...தனுஷை கிண்டல் செய்யும் கவிஞர்


தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ' 3 '. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் இருந்து ' WHY THIS KOLAVERI DI ' பாடல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த பாடலை மட்டும் முதலில் வெளியிட்டார்கள். அப்பாடல் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் அப்பாடல் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி கூறியிருப்பது " ஒய் திஸ் கொலைவெறி என்னும் பாடல் அதிரி புதிரியான வெற்றி என்பதாக ஊடகங்கள் பிரபலப்படுத்தியதை அடுத்து அந்தப்பாடலைக் கேட்க நேர்ந்தது. அப்பாடல் எனக்கும் பிடித்துப்போயிற்று. தமிழை மட்டுமே கொலைசெய்துவந்த திரைப்பாடலில் முதல்முறையாக ஆங்கிலம் கொலைசெய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் அப்பாடல் என்னை வசீகரித்ததற்கான முதல் காரணம்.

நம்ம ஊர் ஆங்கில அறிவை இதைவிட எள்ளலாக நையாண்டியாகச் சொல்ல முடியாது. தனுஷிற்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள். பாடலை வரிசைக்கிரமமாக எழுதத் தெரியாததால் துண்டு துக்கடாவாக அவர் ஆக்கியிருக்கும் வாக்கியயமைப்பில் ஆங்கிலம் சின்னாப்பின்னப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தை அடியோடு மண்ணைவிட்டு ஒழிக்க தனுஷ் போன்றோர் முயல்வது பாராட்டுக்குரியது. அவர் என்ன பாடுகிறார் என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்தப்பாடலை யாரும் முன்மாதிரியாகக் கொள்ள மாட்டார்கள். ஒரு எளிய மனிதனை ஆங்கிலம் பேசுவோர் கேவலமாகப் பார்த்ததுபோக ஆங்கிலம் பேசுவோர் அத்தனைபேரையும் அப்பாடல் முடிந்த அளவு கேவலப்படுத்தியிருப்பது மற்றுமொரு சந்தோசம்.

பாடல் முழுக்க பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு அழகு படுத்திவிட்டு பொருத்தமில்லாத வரிகளை இட்டு நிரப்பியிருப்பதால் கேளிக்கைக்கு உகந்த பாடலாக 'கொலைவெறி' மாறியிருக்கிறது. தவிர, ஒரு பாடலின் தேவையை வியாபார உத்தியாக மாற்றிய விதத்தில் கொலைவெறி பாடல் தனி கவனம் கொள்ள வைக்கிறது.

யூ டியூபில் இத்தனை லட்சம்பேர் கேட்டதாக பெருமையோடு அறிவித்துக்கொள்ளும் அப்பட நிறுவனம் அத்தனைபேரும் '3' படத்தை பார்க்கத் தூண்டுகிறது. தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் ஒரு இளம் கதாநாயகனுக்கு எதை கொலை செய்தாவது வெற்றிபெற வேண்டும் என்கிற வெறி வந்திருக்கிறதே அந்த வெறிக்காகவேணும் இப்பாடலை அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.

2011ஆவது வருடத்து தமிழ் இளைஞன் ஒருவன் ஆங்கிலத்தை எத்தனை சிரமத்தோடு அணுகுகிறான் என்பதே பாடலின் ஊடாக சமூகவியலாளர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டியது.இப்படியான தமிங்லீஷ் பாடல்கள் தமிழைக் காப்பாற்றும். ஆங்கிலத்தை ஏமாற்றும். வாழ்த்தி வரவேற்போம் தனுஷையும் அவருடைய சகாக்களையும். " என்று தெரிவித்துள்ளார்.


அழகிரி வீட்டில் தங்கி வழக்கை எதிர்கொள்ளும் கனிமொழி


புதிய உரக் கொள்கையை ரத்து செய்துவிட்டு, பழைய உரக் கொள்கையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 இது தொடர்பாக மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

 ’’இந்தியாவின் முதன்மைத் துறையான வேளாண்மைத் துறையின் முக்கியத்துவம் கருதி, அனைத்து வகை உரங்களுக்கும் மானியம் வழங்குவதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது.

அனைத்து வகை உரங்களுக்கான அதிகபட்ச விலையையும், மத்திய அரசே நிர்ணயித்து வந்தது.


ஆனால், ஊட்டச்சத்துக்கு ஏற்ப உர மானியம் என்கிற புதிய உரக் கொள்கையால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கொள்கையின்படி, யூரியா தவிர்த்து பிற உரங்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்குவதென மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது.


 இதனால், தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 350-ஆக இருந்த ஒரு மூட்டை (50 கிலோ) காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை இப்போது ரூ. 800-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் டிஏபி உர மூட்டை ரூ. 475-லிருந்து ரூ. 975-ஆகவும், பொட்டாஷ் உர மூட்டை விலை ரூ. 225-லிருந்து ரூ. 560-ஆகவும் உயர்ந்துள்ளன.


 வழக்கமாக உரத்தின் விலை 5 முதல் 10 சதவீதம் மட்டுமே உயரும். ஆனால், இப்போது விலை 150 சதவீதம் உயர்ந்துள்ளது. உரத் தட்டுப்பாடும் நிலவுகிறது.


 இந்தியாவுக்குத் தேவையான டிஏபி உரம் 90 சதவீதமும், பொட்டாஷ் உரம் 100 சதவீதமும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், உலக சந்தையில் உர விலை மாறும்போது, அதே விலை கொடுத்து ஏழை விவசாயிகளால் வாங்குவது கடினம்.


 இந்தியாவில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து மானிய விலையில் உரம் வழங்க வேண்டியது அரசின் கடமை. இல்லையெனில் விவசாயிகள் கடனில் சிக்கி, தற்கொலை செய்துகொள்ளும் நிலைதான் ஏற்படும்.


 எனவே, புதிய உரக் கொள்கையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய உரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.


மீண்டும் வருகிறார் தமன்னா...!


தன்னுடைய நடிப்பாலும், அழகான உடல் அமைப்பாலும், இளசுகளை தன் பக்கம் கவர்ந்திழுக்க வைத்தவர் நடிகை தமன்னா.  தமிழில் கல்லூரி படம் மூலம் பிரபலமான அவர்விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, தனுஷ் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு ஜெட் வேகத்தில் வளர்ந்து வந்தார். திடீரென என்ன நடந்ததோ, தமிழ் சினிமாவே வேண்டாம் என்பது போல, தெலுங்கு பக்கம் தாவினார். கடைசியாக தனுஷ் உடன் வேங்கை படத்தில் நடித்தார் தமன்னா. அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் கமிட் ஆகமால் இருந்த தமன்னா, இப்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க நல்ல கதை கேட்டு வருகிறார்.

தமிழில் ஏன்...? இவ்வளவு இடைவெளி என்று தமன்னாவிடம் கேட்டால், தமிழில் இப்போதும் நடிக்க நான் தயாராகத்தான் உள்ளேன். ஆனால் நல்ல கதை அமையவில்லை. தற்போது தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படமும், ராம் உடன் படமும் நடித்து வருகிறேன். ராம் உடன் நடித்து வரும் படம் விரைவில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கிறது. இதுதவிர தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் வரை தெலுங்கில் கொஞ்சம் பிஸியாக இருப்பதால், அதன்பிறகு தமிழ் படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். விரைவில் தமிழ் ரசிகர்களாகிய உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.


'ராஜபாட்டை' தியேட்டர்களில் 'நண்பன்' !


சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் படம் ' ராஜபாட்டை '. திக்ஷா சேத் நாயகியாக நடிக்க,  'சங்கராபரணம்' விஸ்வநாத் விக்ரமிற்கு அப்பாவாக நடித்து இருக்கிறார்.

யுவன்சங்கராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்தினை PVP CINEMAS பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

முதலில் சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக இருந்து, பின்னர் திருப்பி கொடுத்து விட்டது. இந்நிலையில் இப்படத்தினை வெளியீட்டு உரிமையை தற்போது ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறை தினங்களை கணக்கில் கொண்டு வெளியிட இருக்கிறார்கள்.

சுசீந்திரன் மற்றும் விக்ரம் இருவருக்குமே ஆந்திராவில் நல்ல ஒப்பனிங் இருப்பதால் இப்படத்தில் தெலுங்கில் ' VEEDINTHE ' என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

டிசம்பரில் இப்படத்தினை ரிலீஸ் செய்து விட்டு 2012 பொங்கல் சமயத்தில் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்த அனைத்து திரையரங்குகளிலும் தாங்கள் தயாரித்த ' நண்பன் ' படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறதாம் ஜெமினி நிறுவனம்.


சிம்புக்கு ஜோடி ஆ‌ண்ட்‌ரியா


தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு வைத்து 'வடசென்னை' என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனர் வெற்றிமாறன் 'ஆடுகளம்' ஹிட்டுக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால், இப்போதிருந்தே 'வடசென்னை' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ரானா நடிக்கிறார். இதற்கிடையில் சிம்புக்கு ஜோடியாக ஆ‌ண்ட்‌ரியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது உலக நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்து வரும் ஆ‌ண்ட்‌ரியா, வடசென்னை படத்திற்காக கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.


Tuesday, November 29, 2011

முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மகள் மரணம்முன்னாள் சோவியத் ரஷியாவின் சர்வாதிகாரியாக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். இவரது ஒரே மகள் ஸ்வெட்லனா அல்லி லுயேவா (85). அமெரிக்காவில் தங்கியிருந்த அவர் தனது பெயரை லானா பீட்டர்ஸ் என மாற்றிக் கொண்டார்.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் தனது மகள் ஓல்காவுடன் தங்கி இருந்தார்.  இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந்தேதி மரணம் அடைந்தார்.

இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர். லானா பீட்டர்ஸ் கடந்த 1967-ம் ஆண்டு சோவியத் யூனியனின் நல்லெண்ண தூதரக அமெரிக்கா வந்தார். 

மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்து கடந்த 1949-ம் ஆண்டு பட்டம் பெற்றார். தொடக்கத்தில் ஆசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த அவர் 4 புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் 2 புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளன

மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் படித்து கடந்த 1949-ம் ஆண்டு பட்டம் பெற்றார். தொடக்கத்தில் ஆசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும் பணிபுரிந்த அவர் 4 புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் 2 புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளன. இவருக்கு 4 முறை திருமணம் நடந்தது. அவரது 3 கணவர்கள் ரஷியாவை சேர்ந்தவர்கள்.

அமெரிக்காவுக்கு வந்த பின்னர் கட்டிட கலை நிபுணர் வில்லியம் வெஸ்லி பீட்டர்ஸ் என்பவரை 4-வதாக மணந்தார். அதன் பின்னர்தான் ஸ்வெட்லனா அல்லிலுயேவா என்ற தனது பெயரை லானா பீட்டர்ஸ் என மாற்றிக் கொண்டார்.
கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்தார் ஜெ.


முதல்வர் ஜெயலலிதா நாளை, நீலகிரி மாவட்டம் கோடநாடு செல்வதாக இருந்தார். முதல்வர் வருகையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு மண்டல ஐஜி (பொறுப்பு) அம்ரேஷ் பூஜாரி, டிஐஜி ஜெயராமன், நீலகிரி எஸ்பி நிஜாமுதீன், குன்னூர் டிஎஸ்பி மாடசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.


 கோத்தகிரி முதல் கோடநாடு வரை சாலையில் எந்தெந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டது.

உள்ளூர் போலீசார் மட்டுமில்லாமல், கோவையில் இருந்து அதிவிரைவு படை போலீசாரையும் வரவழைக்க திட்டமிடப்பட்டது.

வழக்கமாக ஜெயலலிதா கோடநாடு வரும்போது சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வது வழக்கம்.

ஆனால், நீலகிரியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மேகமூட்டம் நிலவி வருகிறது. நாளையும் இதே போல் மேகமூட்டம் நிலவினால் ஹெலிகாப்டர் தரையிறங் குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, வாகனம் மூலம் தரைமார்க்கமாக முதல்வர் கோடநாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் சில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தோழி சசிகலா ஆகியோரும் கோடநாடு செல்வதாக இருந்தனர். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதா சுமார் 3 வார காலம் தங்கி இருப்பார். டிசம்பர் கடைசியில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் சென்னை திரும்புவார் எனவும் பேசப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா, தனது கொடநாடு பயணத்தை திடீர் என ரத்து செய்துள்ளார்.