Tuesday, November 30, 2010

நீரா ராடியா யார் இவர் ? இவர் பின்னணி பற்றிய ஒரு அலசல்இன்று இந்திய மக்கள் இடையேயும் இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பரப்பரப்பாக பேசப்படும் விஷயம் ÍÙTeyW• ˜Û\ÚL| விவகாரம் தான். கேட்டாலே தலை சுத்தும் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் உள்ளா வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா கொடுக்கலாமாம் ÍÙTeyW• ˜Û\ÚL| மூலம் கிடைத்த பணத்தில். (அப்படியாவது கொடுங்கப்பா எங்க குடும்பத்தில் பத்து ஓட்டு இருக்கு எப்படியும் கிடைக்கும் என்று நினைகீங்க தானே ). இத்தகைய மலைக்கவைக்கும் ஊழலுக்கு சூத்திரக்காரியாக இருந்தவர் தான் நீரா ராடியா . இன்று நாடு முழுவதும் இவரை பற்றி தான் பேச்சு ஒரு சாதாரண பெண் எப்படி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் இந்த அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும்
இவர் அண்மையில் அரசியல் முக்கியஸ்தர்களுடன் (ஸ்பெக்ட்ரம் ராஜா, கனிமொழி போன்றவர்கள் உட்பட ) பேசிய பேச்சின் ஒலிநாடா வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. 
இப்படி இவை அனைத்துக்கும் சூத்திரக்காரியாக செயல்ப்பட்ட இந்த நீரா ராடியா யார் என்பது தான் எல்லோராலும் கேட்க்கப்படும் கேள்வி? யார் இவர், இவர் பின்னணி என்ன ? எப்படி இந்த நிலைமைக்கு வந்தார் என்பதை பாப்போம்.


 இந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995
ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000
மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார். 

2001
ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005
ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது. 

50
வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா. 

2003
ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

ஆனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தனியாக ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்க கடுமையாக முயற்சித்தார் நீரா. ஆனால் அவருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனந்த்குமாருடன் நெருக்கமாக இருந்தபோதும் அது முடியாமல் போனது. இதேசமயத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க கடுமையாக முயன்றார் ரத்தன் டாடா. அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு காரணம் ஒரு தனி நபர்தான் என்று சமீபத்தில் ரத்தன் குற்றம் சாட்டியிருந்தார். அது வேறு யாரும் அல்ல ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல்தான். டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம் அனுமதி பெறாமல் நரேஷ் கோயல் தடுத்ததாக அப்போதே பலத்த குற்றச்சாட்டு இருந்தது. நரேஷ் கோயலின் வேலையால் நீராவும் பாதிக்கப்பட்டார். 

அதன் பின்னர்தான் டாடாவுடன் நெருங்கினார் நீரா. டாடா குழும மக்கள் தொடர்புப் பணிகள் நீராவிடம் சென்றன. நுஸ்லி வாடியாவின் சிபாரிசின் பேரிலேயே டாடாவிடம் நீரா இணைந்ததாக கூறப்படுகிறது. தனது குழுமத்தின் 90 கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை நீராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷனிடம் ஒப்படைத்தார் டாடா. 

2001
ல் டாடா குழுமம் பெரும் நிதி சிக்கலை சந்தித்தது. அதை சரி செய்து கொடுத்தவர் நீரா என்கிறார்கள். இதனால் டாடாவிடம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் கூடி வந்தன. இதையடுத்து அரசியல்வாதிகளுடன் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டார் நீரா. இந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும்,டாடா குழுமத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நீரா தலையிட்டார். டாடா குழுமத்தை யாராவது புறக்கணித்தால் அது டாடாவைப் பாதிக்காது, மாறாக, புறக்கணிப்பவர்களுக்கே அது பாதகமாக முடியும் என மீடியா நிறுவனங்களை எச்சரித்தார்.

2004
ல் பாஜக ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ராடியா புதிய நண்பர்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஏ.ராஜாவுடன் அவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான மேலும் சிலருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரத்தன் டாடாமூலமாகத்தான் நீராவின் தொடர்பு ராஜாவுக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது. 2007ம் ஆண்டு ராஜாவை வெகுவாகப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னரே ராஜாவுடன் நீரா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கூர் போராட்டத்தின்போது முகேஷ் அம்பானி டாடா குழுமத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்தார். இதற்குப் பின்னணியில் நீரா இருந்ததாக கூறப்படுகிறது. நீராவின் முயற்சிகளைத் தொடர்ந்தே, டாடாவுக்கு ஆதரவாக முகேஷ் வாய் திறந்தார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது. 

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமான நட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரிசை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே நீரா ராடியாவுக்கு மிகப் பெரிய மிக நீண்ட சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

  ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

தமிழ் தலைவன் பிரபாகரன் பற்றிய கேள்விகளுக்கு விடை சொல்ல போகும் 'விக்கிலீக்' இணையத்தளம்உலகையே தமிழன் பக்கம் திரும்பி பார்க்கவைத்த ஒரு தலைவன் உண்டு என்றால் அது தமிழ் தலைவன், தமிழுக்கே தலைவனான பிரபாகரன் தான் என்றால் அது மிகையல்ல. உலகிலேயே மிக மிக குறைவான மக்களால் பேசப்படும் ஒரு மொழியை பேசும் மக்களில் இருந்து ஒரு தலைவன் உலக நாடுகளுக்கே சிம்மசொப்பனமாக விளங்கியதால் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து செய்த தந்திரம் இல்லை இல்லை சதியால் நம் தலைவனின் வீரம் மற்றும் விவேகத்தின் மீது கொண்ட அச்சத்தால் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து தமிழனின் உணர்வு போராட்டமான விடுதலை போராட்டத்தை தற்காலிகமாக வென்று இருக்கிறது. (வென்றிருக்கிறார்கள அல்லது விடுதலை புலிகள் மற்றும் தலைவரின் இந்த அமைதி கூட ராஜத்தந்திரமாக இருக்கலாம்). 

பல லட்சம் மக்களை ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் கொண்டு வந்து. அதன் மூலம் விடுதலை புலிகளுக்கும் நமது தலைவனுக்கும் நெருக்கடியை கொடுத்து அதாவது இத்தனை தமிழ் மக்களின் உயிரா அல்லது லட்சியமா ? என்று தலைவனை யோசிக்க வைத்து' மக்களில்லாமல் மண்ணை வென்று யார் வாழ? போராட்டமே எம் தமிழ் மக்கள் வாழ வேண்டி சுதந்திர பூமிக்காக தானே? அப்படி இருக்க மக்களை இழந்து மண்ணை வென்று என்ன பலன் எமக்கு எம் மக்கள் உயிர் தான் முக்கியம் " என்று முடிவெடுத்து. அதன் மூலம் மக்களின் உயிரை காக்க வெள்ளை கொடியேந்தி வந்த வீரர்களை கோழைத்தனமாக சுட்டு கொன்று. எப்படி எல்லாமோ கோல்மால் செய்து வென்று விட்டதாக கொக்கரித்து , தலைவனை கொன்று விட்டதாக நாடகம் ஆடி உலக நாடுகளையே தற்காலிகமாக நம்ப வைத்து (உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அரங்கேற்றிய நாடகம் தான் தலைவன் இறப்பு பற்றிய செய்தி ) கொட்டமடிக்கும் நயவஞ்சக நாய்களின் முகத்திரை கிழிய போகிறது. உண்மையின் முகம் உலகிற்கு வெளிப்பட போகிறது, உலகின் அனைத்து மக்களும் ஆச்சரியத்தின் விழும்பிற்கே போக போகிறார்கள், நம் தமிழ் தலைவன் வெளிப்பட போகிறான்....(தலைவன் இறப்பு பற்றிய செய்தி பொய் என நிரூபணமானால் தலைவன் வெளியுலகிற்கு வந்து தானே ஆக வேண்டும் ). உலக தலைவர்கள் அனைவரும் வெட்கத்தால் அவமானம் தாங்காமல் தமிழன் முன்னால் தலைகுனிய போகிறார்கள். ஆம் இன்று உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உலகை அதிர வைக்கும் இணையத்தளம் விக்கிலீக் இலங்கையின் இறுதி கட்ட போர், மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் மற்றும் முன்னணி தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றிய செய்தியை விரைவில் வெளியிட போவதாக அறிவித்துள்ளார்கள். 

ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்தது என்னவென்ற மர்மத்துக்கு விக்கிலீக் ஆவணங்களில் விடை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ரகசிய தகவல் தொடர்புகள் குறித்த ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் ராஜரீக உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.

அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப் பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜாங்கத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. வரும் நாட்களில் இவை விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டது மற்றும் புலிகளின் முதல்கட்ட தலைவர்கள் என்ன ஆனார்கள் போன்றவற்றுக்கான பதில்கள் இந்த ஆவணங்களில் இருக்கும் எனத் தெரிகிறது.
எப்போதும் மீடியாக்களை பொறுத்த வரையில் அதிர்ச்சியான, நம்பமுடியாத உண்மைகளை, வரலாற்றையே புரட்டி போடும் நிகழ்வுகளை மக்களை காக்கக வைத்து தலைவர்களை நடுங்க வைத்து இறுதியில் வெளியிடுவது தான் வழக்கம். இதுவரையில் இது தான் நடந்து இருக்கிறது. அப்படி பார்க்கும் பொது இப்போ 'விக்கிலீக்' வெளியிட்டு இருக்கும் ரகசியங்கள் சும்மா டிரைலர் தான், மெயின் பிச்சர்(தமிழ் தலைவன் பற்றியது) இன்னும் தான் போல தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் நம் தலைவன் இருக்கிறான் என்ற நல்ல செய்தியை அவர்கள் ஆதார பூர்வமாக வெளியிட்டு குலைத்து கொண்டு இருக்கும் தெருநாய்களின் ஆணவத்துக்கு முற்று புள்ளி வைப்பார்கள் என நம்புவோம்! கடவுளிடம் வேண்டுவோம் நல்ல செய்தி நம்மை வந்து தழுவுவதற்கு ...

ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ... 

செக்ஸ் ரோபோ 'ராக்சி ' -யின் வீடியோ காட்சிசிறிது நாட்களுக்கு முன்பு நமது வலைத்தளத்தில் 'செக்ஸ் ரோபோ' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி  பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தது .அதை படிக்க இங்கு செல்லவும் அந்த செய்திக்கு கமெண்ட்ஸ் எழுதி இருந்த மதுரை சரவணன் என்ற நண்பர் 'நம்பமுடியவில்லை... கலி முத்திப்போச்சு' என்று எழுதி இருந்தார்.நண்பரே நீங்கள் எழுதியது உண்மையே !. ஆம், இது நம்புவதற்கு முடிய வில்லை தான் என்று எனக்கும் தோன்றியது என்பதும் உண்மையே. இதை போன்று பல வாசகர்களுக்கு தோன்றி இருக்கலாம். புதிதாக ஆரம்பிக்கப்பட வலைத்தளம் ஆகையால் பரப்பரப்புக்காக இப்படி ஒரு செய்தி போட்டு இருக்கலாம் என்று கூட  எண்ண தோன்றலாம். எனவே, நமது வலைத்தளம் மீது வாசகர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையை நிரூபிக்கும் விதத்தில். 'செக்ஸ் ரோபோ' வின் வீடியோ காட்சியை இணைத்துள்ளேன். சிறிது காலம் இந்த வீடியோ காட்சி நமது வலைத்தளத்தில் இருக்கும் அதன் பிறகு நம் வலைத்தளத்திற்கு வருகைத்தரும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலன் கருதி இந்த வீடியோ கட்சி அகற்றப்படும்  என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்.


செக்ஸ் ரோபோ 'WÖep' -யின் வீடியோ காட்சி 


ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ... 

சாட்டிங் தகவல்களை ஆன்லைனில் சேமிக்க


இன்று சாட்டிங் வசதியை பல இணையத்தளங்கள் அளிக்கின்றன. ஆனால் நாம் மற்ற நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுப்பட்டப்போது பகிர்ந்து கொண்ட தகவல்களை பெருபாலானா சாட்டிங் தளங்கள் சேமித்து வழங்குவது இல்லை, சாட்டிங் தகவல்களை சேமித்து வைத்து தேவையானபோது பார்ப்பதற்கான வசதியை ஒரு இணையத்தளம் வழங்குகிறது.
அதற்கு நீங்கள் இந்த இணையத்தளத்திற்கு சென்று இந்த இணையத்தளம் வழங்கும் இலவச மென்பொருளை டவுன்லோடு செய்ய வேண்டும்.  டவுன்லோடு முடிந்த உடன் அதில் நாம் சேமிக்க விரும்பும் சாட்டிங் தளங்களின் அக்கவுண்ட் சம்பந்தமான இ மெயில் முகவரி பாஸ்வேர்டு போன்ற தகவலை அளிக்க வேண்டும்.
உடனே நமது இமெயில் முகவரிக்கு சரிப்பார்க்கும் இ மெயில் ஒன்றை அனுப்புவார்கள். அதை 'கிளிக்' செய்தால் நமது கணக்கை ஆக்டிவேட் செய்து விடுவார்கள். அதன் பிறகு சம்பந்தப்பட்ட சாட்டின் முகவரியில் நாம் செய்யும் சாட்டிங் எல்லாம், சேமிக்கப்பட்டு விடும். தேவைப்படும்போது நமக்கு தேவையான தகவல்களை அதில் தேடி பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சாட்டிங் அக்கவுண்டுகளின் தகவல் பரிமாற்றத்தையும் சேமிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .அப்பாவையும் பார்ப்பேன், ஆத்தாவையும் பார்ப்பேன் -வனிதா ஆவேசப் பேட்டிநடிகர் விஜயகுமாருக்கும் மகள் வனிதாவுக்கும் இடையே எழுந்த மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தினமும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா, தனது 2வது கணவர் ஆனந்தராஜூடன் நேற்று சென்னை புறநகர் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதன்பிறகு வெளியே வந்த வனிதாவை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.
அப்பா மீது போலீஸ் டிஜிபியிடம் நான் கொடுத்த புகார் மனுவை, சென்னை புறநகர் கமிஷனருக்கு மாற்றியுள்ளார். அந்த மனுவை புறநகர் கமிஷனரிடம் கொடுக்க இங்கு வந்தேன். புகாரை கமிஷனரிடம் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அவர், துணை கமிஷனர் விசாரிப்பார் என உறுதி அளித்தார். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு குழந்தை, பெற்ற தாயிடம்தான் இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் தெரியும். எனது குழந்தையை என்னிடம் கொடுக்க வேண்டும். அதற்காக யாரிடமும் பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மீடியாக்களில் வதந்தி பரப்புகிறார்கள். பைத்தியம், லூசு என்கிறார்கள். நான் பைத்தியமும் இல்லை. லூசும் இல்லை. அப்பாவையும் பார்ப்பேன், ஆத்தாவையும் பார்ப்பேன்என்று ஆக்ரோஷத்துடன் கூறினார்.
அமெரிக்காவில் அருண் விஜய்:
நடிகர் அருண் விஜய் அமெரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப் படுவது குறித்து வனிதா கூறுகையில், “புறநகர் போலீஸ் கமிஷனரை சந்தித்தேன். அவர் என் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நான் யார் மீது புகார் கொடுத்தேனோ அவரை விஜயகுமார் நாடு கடத்தி விட்டார். மகனை நாடு கடத்தி விட்டு நாடகம் ஆடுகிறார் விஜயகுமார். என் பிரச்சினை அமெரிக்க தூதரகம் வரை சென்று விட்டதால் அருண் விஜய்யை சீக்கிரம் பிடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன். விஜயகுமார் எதுவும் பேசாமல் இருந்தால் பிரச்னை வராதுஎன்றார்.

  ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .