Saturday, October 27, 2012

தேமுதிக(ஜெ. அணி)யில் நாளை மேலும் 3 தேமுதிக எம்.எல்.ஏக்கள்


தேமுதிகவின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எதிர்முகாமிற்கு சென்று வரும் நிலையில் விருதுநகர் எம்.எல். மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நாளை மேலும் 3 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுந்தர்ராஜன், தமிழழகன் ஆகியோர் வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அதிமுகவின் ஆட்சியைப் பற்றி பாராட்டிய அவர்கள் தொகுதியின் வளர்ச்சிக்காக சந்திப்பு நடத்தியதாக கூறினர். இதற்கே தேமுதிகவில் லேசான நிலநடுக்கம் உருவானது.

இதனிடையே இன்று காலையில் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இரண்டு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால் கட்சித்தலைவர் விஜயகாந்த் கொதிநிலைக்கே போய் பத்திரிக்கையாளர்களை கடித்து குதறிவிட்டார்.

தனது எதிர்கட்சித்தலைவர் பதவியை காப்பாற்ற விஜயகாந்த் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் விருதுநகர் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்.எல். மாஃபா. பாண்டியராஜனுக்கு நாளை போயஸ் கார்டனில் அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளதாம். அவருடன் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் அதிமுக தலைமையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 4பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ள நிலையில் மேலும் 3 விக்கெட்டுகள் விழும் பட்சத்தில் விஜயகாந்த் நாளை முதல் எதிர்கட்சித்தலைவராக நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ii


துப்பாக்கி புதிய ட்ரைலர்


மைக்கேல் ராயப்பன் வீட்டை அடித்து நொறுக்கிய தேமுதிகவினர்!


முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்த தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பனின் நந்தன்குளம் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.

ராதாபரம் தொகுதியைச் சேர்ந்த தேமுதிக எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன் இன்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு எதிராக பேட்டிகளும் கொடுத்து வருகிறார். இனி புதிய தலைமையில் செயல்படப் போவதாக அவரும் அருண்பாண்டியனும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் சிலர், திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட நந்தன்குளத்தில் உள்ள மைக்கேல் ராயப்பனின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்தனர். அதற்குள் வீட்டை முடிந்தவரை சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டனர் தேமுதிகவினர்.


பட முன்னோட்டம் : துப்பாக்கி


விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'துப்பாக்கி'. .ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருக்கிறார்.

மும்பையில் வாழும் ஒரு தமிழ் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறார் விஜய். 'துப்பாக்கி' படத்தினைப் பற்றி வேறு எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

இந்தியில் 'கஜினி' ரீமேக் செய்து முடித்தவுடன் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்கலாம் என்று .ஆர்.முருகதாஸ் திட்டமிட்டு தயார் செய்த கதைதான் 'துப்பாக்கி'. ஆனால் 'ஏழாம் அறிவு' படத்தினை முடித்த பின் அப்படத்தை இயக்கலாம் என தள்ளிப் போட்டார். 'ஏழாம் அறிவு' இயக்கி முடித்தவுடன், விஜய் தேதிகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அக்ஷய்குமார் நடிக்க இருந்த கதையினை தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டு முதலில் தமிழில் விஜய்யை வைத்து இயக்கிவிட்டு பின்பு அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்குகிறேன் என்று கூறிவிட்டு, விஜய்யை வைத்து 'துப்பாக்கி' தயார் செய்து இருக்கிறார் .ஆர்.முருகதாஸ்.

விஜய் மாஸ், .ஆர்.முருகதாஸ் இயக்கம், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் துள்ளலான இசை என ஒரே படத்தில் அத்தனை பிரம்மாண்டங்களும் இணைந்து இருப்பது 'துப்பாக்கி' படத்திற்கு மிகப்பெரிய பலம்.

படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியான போது ஏகப்பட்ட சர்ச்சைகள், பின்பு தலைப்பு பிரச்னை என ஏகப்பட்ட பிரச்னைகள் சந்தித்து அதில் வெற்றி பெற்று இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று வெளியான TEASERல் விஜய்யின் ' I AM WAITING ' என்று பேசிய வசனம் பிரபலமாகியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் அனைவருமே இணையத்தில் ' துப்பாக்கி  - WE ARE WAITING' என்று எழுதி வருகிறார்கள்.

" விஜய்யை பிடிக்காதவர்களும் இப்படத்தினை பார்த்தார்கள் என்றால் விஜய்யை பிடிக்கும் " என்று .ஆர். முருகதாஸ் சொல்லவிஜய் ". ஆர்.முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம்" என்று பரஸ்பரம் பாராட்டியிருக்கிறார்கள்.

பாடல்களில் அனைத்துமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். படத்தில் மதன் கார்க்கி எழுதிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் ஹைலைட். இதை விஜய், ஆண்ட்ரியா இணைந்து பாடி இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து விஜய் இப்படத்தில் பாடி இருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரித்த இப்படத்தினை ஜெமினி நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

'நண்பன்' படம் திரையிட்ட அன்று விஜய் டிவி தான் TRPல் நம்பர் ஒன். இதனால் கடும் போட்டிக்கு இடையே 'துப்பாக்கி' படத்தின் டிவி உரிமையையும் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது விஜய் டிவி.

விரைவில் சென்சார் முடித்து படத்தினை நவம்பர் 9ம் தேதி படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தேமுதிக கப்பலில் ஓட்டை.... எப்படி சரி செய்வார் 'நாய்' கேப்டன்?


தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தினசரி இரண்டு பேராக எதிர்கூடாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதுவரை தேமுதிக நிர்வாகிகள் பலர்தான் அதிமுக, திமுகவில் இணைந்தனர். ஆனால் இப்பொழுது கட்சி எம்.எல்.ஏக்கள் நால்வர் ஆளுங்கட்சியை நாடிச்சென்றிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. 'நாய் ஸ்பெஷலிஸ்ட்' கேப்டன் கப்பலில் ஓட்டை விழ என்ன காரணம் என்று பட்டியலிட்டுள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.

29 எம்.எல்.ஏக்கள் உற்சாக தேமுதிக

2011 சட்டமன்றத் தேர்தலில் பல பிரச்சினைகளுக்கு இடையே அதிமுக உடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது தேமுதிக. அந்த சந்தோசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

கை காசை போட்டு செலவழித்த தேமுதிகவினர், எதிர்கட்சி அந்தஸ்தும் கிடைக்கவே விட்டதை பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர். ஆனால் பட்டென்று கூட்டணியை முறித்து நினைப்பில் மண்ணைப் போட்டார் விஜயகாந்த்.


தேமுதிகவின் இலக்கு என்ன என்பதே பலருக்கு இன்னும் புரியாமல் உள்ளதாம். எதற்காக அதிமுகவைப் பகைத்தோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் விழிக்கும் பலர் கட்சியை விட்டு அடுத்தடுத்து இடத்தை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.

முதலில் விழுந்த இரண்டு விக்கெட்

தேமுதிக கூடாரத்தில் இருந்த முக்கிய தலையான மதுரை மத்திய தொகுதி எம்.எல். சுந்தர்ராஜனும், திட்டக்குடி எம்.எல். தமிழழகனும் முதலில் விழுந்த இரண்டு விக்கெட்டுகள். சொத்துக்கள் பராமரிப்பில் தகராறு ஏற்பட்டதால் சுந்தர்ராஜனும், தன் மீதான வழக்குகள் குறித்து கட்சி தலைமை கண்டு கொள்ளாததால் தமிழழகனும்,கட்சித் தலைமை மீது, அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

சினிமாத்துறையில் ஆரம்ப காலத்தில் இருந்தே விஜயகாந்துடன் நட்பாக இருந்தவர் பேராவூரணி தொகுதி எம்.எல். அருண்பாண்டியன். அதேபோல் ராதாபுரம் தொகுதி எம்.எல். மைக்கேல் ராயப்பனும் சினிமாத்துறை நண்பர்தான். இவர்கள் இருவரும் இப்போது அதிமுக கோட்டையில் நுழைந்துள்ளனர். இதன் மர்மம் பிடிபடவில்லை.

29 ல் 10 விக்கெட் விழலாம்!

தேமுதிக எம்.எல்.ஏக்கள் 10 பேர் வரை வெளியே கிளம்ப தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர முக்கியத் தலைவர்கள் சிலரும் கூட வளைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறி போக வேண்டும், தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வேண்டும். இதுதான் ஆளுங்கட்சியின் அதிரடி அசைன்மெண்ட். இதை கருத்தில் கொண்டு 29 எம்.எல்.ஏக்களில் 4 பேரை இழுத்துள்ளனர்.

முரசு சின்னம் முடங்குமா

லோக்சபா தேர்தல் சமயமாக பார்த்து கட்சியை உடைத்து, அக்கட்சியின் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். அப்படி நடந்தால் மறுபடியும் தனித் தனி சின்னத்தில் தேமுதிக நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அது தனக்கு பெரும் சாதகமாக அமையும் என அந்தக் கட்சி நினைக்கிறதாம்.
தேமுதிகவைப் பொறுத்தவதரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதாவைத் தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால் பல முக்கியத் தலைவர்கள் கூட புகைச்சலில் உள்ளனராம்.

ஓட்டை எப்போ விழுந்துச்சு?

விஜயகாந்த்தால் வெகுவாக பாராட்டப்பட்ட ரெஜீனா பாப்பா முதலில் தனது மாநில மகளிர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அடுத்து திண்டுக்கல் முத்துவேல்ராஜா, சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்ட வேல்முருகன் என அடுத்தடுத்து வெளியே கிளம்பினர்.

மதுரையில் முதன் முதலாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த முத்து என்பவர் போனபோதுதான் விஜயகாந்த்துக்கே சற்று அதிர்ச்சியானது. திமுகாவில் இருந்து தேமுதிகவிற்கு வந்த கடலூர் .ஜி சம்பத் விஜயகாந்த் கட்சியை நடத்துவதைப் பார்த்து கடுப்பாகி மீண்டும் திமுகவிலேயே ஐக்கியமானார்.

தப்பான தலைமை... தகராறு நிலைமை

ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் தேமுதிக வைத்திருந்துபோது கூட கட்சி படு கட்டுக்கோப்புடன் இருந்தது. அடுத்தடுத்து வாக்கு வங்கியை கூட்டிக் கொண்டே போனது. ஆனால் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் கையில் இருந்தும் கூட கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாமல் அக்கட்சித் தலைமை கடுமையாக தடுமாறி வருகிறது என்பதே உண்மை.
தேமுதிக என்னும் கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது. எம்.எல்.ஏக்கள் வெளியேறி வருகின்றனர். ஓட்டையை அடைத்து கரைசேர்வாரா? அல்லது கடலில் மூழ்கிப்போவாரா விஜயகாந்த்து என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.அரசு மானியத்துடன் கடன் உதவி: வீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கலாம்

தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சூரிய சக்தி கொள்கையை அரசு வெளியிட்டு இருப்பது பொது மக்களிடமும், நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சூரிய சக்தி மின் உற்பத்திக்கான செலவு அதிகம். பராமரிப்பதும் கஷ்டம் என்ற எண்ணத்தில் பொது மக்கள் சூரிய சக்தி மின்சார தயாரிப்புக்கு தயக்கம் காட்டினார்கள். இப்போது அரசு அறிவிப்புக்கு பிறகு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. தினமும் பலர் எரிசக்தி மேம்பாட்டு முகாமை அலுவலகத்தை அணுகி ஆலோசனை பெற்று செல்கிறார்கள்.

வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு அதிக பட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்ட செலவில் 30 சதவீதம் என்ற அளவில் அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் அளவுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். இதற்கு ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் செலவாகும். நிறுவனங்களை பொறுத்தவரை 100 கிலோ வாட் நிறுவ திறனுக்கு மானியம் கிடைக்கும் இதற்கு வங்கி கடனும் கிடைக்கும்.

ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி செய்யும் வீடுகளில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டி.வி. அல்லது கம்ப்பியூட்டரை இயக்க முடியும்இத்திட்டத்தை நிறுவிய நாளில் இருந்து முதல் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 ஊக்கத்தொகை வழங்கப்படும். அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1-ம், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசாவும் வழங்கப்படும். அடுத்த ஆண்டு (2014) மார்ச் 31-ந்தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத் தொகையை பெற முடியும்.

இத்திட்டத்தை நிறுவி தருவதற்கு ஏராளமான முகவர்கள் இருக்கிறார்கள். எரிசக்தி முகமையில் மட்டும் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூலம் நிறுவினால் மட்டுமே அரசின் மானியம் கிடைக்கும்.

ஒரு முறை நிறுவி விட்டால் 15 ஆண்டுகளுக்கு பிரச்சிணை இருக்காது. பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். அவ்வப்போது சூரிய தகடுகள் மீது தூசு படியாமல் துடைக்க வேண்டும். தூசு படிந்தால் உற்பத்தி திறன் குறையும்.

வீடுகளில் 1 கிலோ வாட் சூரிய சக்தி திட்டத்தை நிறுவ ரூ. 2 முதல் 2 1/2 லட்சம் செலவாகும். இதில் மானியத்தை கழித்து விட்டு மீதி தொகையை முகவரிடம் செலுத்தினால் போதும் உடனடியாக நிறுவி தருவார்கள்.