Friday, December 31, 2010

2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு


ஆண்டு தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்சிகளை பற்றி நேற்றைய முதலாம் பாகத்தில் போட்டு இருந்தேன் அதன் தொடர்ச்சியாக இந்த இறுதி பாகத்தை படிக்கவும் நேற்றைய பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படிக்கவும் ...


ஜூலை
13 - அதிமுகவுக்கு புத்துயிர் அளித்த கோவை கண்டனக் கூட்டம் இன்று நடந்தது. ஜெயலலிதா கலந்து கொண்ட இக்கூட்டத்தில் லட்சக்கணக்கில் கூடிய கூட்டத்தால் கோவையே திணறியது.

14 -
பல மாநிலங்களில் மோசடியாக ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தி வந்த ஜேபிஜே குழுமத் தலைவர் தேவதாஸ் கைது செய்யப்பட்டார்.

17 -
இலங்கைக் கடற்படையைக் கண்டித்தும், எச்சரித்தும் சென்னைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் தலைவர் சீமான், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

21 -
சென்னையில் ஆதித்யா என்ற சிறுவன் அவனது தந்தை ஜெயக்குமாரின் கள்ளக்காதலியான பூவரசியால் கடத்திக் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைத்து நாகப்பட்டனம் பஸ் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செயல் தமிழகத்தை அதிர வைத்தது.

24 -
மதுரையைச் சேர்ந்த பாத்திமா என்பவரின் ஒன்றரை வயதுக் குழந்தை காதர் யூசுப்பைக் கடத்தி நரபலி கொடுத்து ரத்தத்தைக் குடித்ததாக அப்துல் கபூர் மற்றும் அவரது மனைவி ரமலா பீவி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

27 -
திரைப்படத் தயாரிப்பாளரிடம் ரூ. 25,000 லஞ்சம் வாங்கியதாக திரைப்படத் தணிக்கை அதிகாரி ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.

-
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

28 -
ஐடிஐ வினாத்தாள் வெளியானதால், தமிழகம் முழுவதும் ஐடிஐ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

-
ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

30 -
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார்.

-
தமிழகத்திலும், புதுவையிலும் மாநிலக் கட்சி அந்தஸ்தை மதிமுக இழந்தது. புதுவையில் மாநிலக் கட்சி அந்தஸ்தை பாமக இழந்தது.

-
ஆலடி அருணா கொலை வழக்கிலிருந்து எஸ்.ஆர்.ராஜாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

31 -
சென்னைக் கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட்

13 -
சேலத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

20-
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளைப் பயன்படுத்த அரசு தடை விதித்தது.

30-
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்டம்பர்

2-
ஜாதி குறித்து தவறான தகவலைக் கொடுத்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கியது.

10 -
தமிழக அரசின் சமச்சீர் க்ல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

12 -
தமிழகத்தில் 15 ஆய்வகங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யலாம் என அரசு அறிவித்தது.

-
பிரபல பின்னணிப் பாடகி சொர்ணலதா சென்னையில் மரணமடைந்தார்.

-
தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

14 -
நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டண நிர்ணயத்தை நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

-
அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி 13 கைதகிளை விடுதலை செய்ய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

-
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

-
இன்டர்நெட் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது, பதிவு மூப்பை புதுப்பிப்பது ஆகியவற்றை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

-
சென்னையில் ரூ. 165 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

19 -
சென்னையில் நடந்த டேவிஸ் கோப்பைப் போட்டியில், பிரேசிலை 3-2 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று உலகச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

22 -
தஞ்சாவூர் பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் கோலாகலமாக தொடங்கியது. 

28 -
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது.

-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்டோபர்

7 -
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

8 -
டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. புதிய டிஜிபியை தேர்வு செய்யவும் அது உத்தரவிட்டது.

9 -
முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்தவருமான திருநாவுக்கரசர் சோனியா காந்தி முன்னிலையில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸில் முறைப்படி இணைந்தார்.

18-
தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது.

-
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில், கள்ளக்காதல் விவகாரத்தில், போலீஸ்காரர் இசக்கிமுத்து என்பவர் தனது காதலி உமா மகேஸ்வரி, நண்பரின் மனைவியான கீதா ஆகியோரை வெட்டிக் கொன்று தானும் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

19 -
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரவிசங்கர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு கொள்ளையராக மாறிய கதை தெரிய வந்து தமிழகமே அதிர்ந்தது.

21 -
பெரும் சர்ச்சைக்கு மத்தியில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்யண விவரத்தை தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளியிட்டது. 

22 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

23 -
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டித் தலைவர் பொறுப்பிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் விலகினார்.

26 -
காங்கிரஸுக்குப் போவது போல போக்குக் காட்டிய நடிகர் ராதாரவி திடீரென ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

-
பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்களை வழக்கிலிருந்து நீக்கி தடா கோர்ட் உத்தரவிட்டது.

நவம்பர்

1 -
தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் கமிட்டியின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

3 -
சென்னையை உலுக்கியது கீர்த்திவாசன் கடத்தல் நாடகம். இரண்டு பொறியியல் பட்டதாரி இளைஞர்களால் கடத்தப்பட்ட கீர்த்திவாசன் பெரும் பரபரப்புக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாளே கடத்தல்காரர்களான விஜய், பிரபு ஆகியோரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

6 -
தமிழகத்தை உலுக்கிய ஜல் புயலால் பெரும் மழை பெய்து சென்னை உள்பட தமிழகமே வெள்ளக்காடாகியது.

9 -
கோவையில் முஷ்கின் (11) என்ற சிறுமியையும், அவளது தம்பி ரித்திக்கையும் கடத்திச் சென்று முஷ்கினை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தும், இருவரையும் தண்ணீரில் தள்ளிக் கொன்ற மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகிய இரு கொடூரர்களில், மோகன கிருஷ்ணன், கோவை அருகே என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.

11 -
திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று கூறி புதிய 'பிட்'டைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

12 -
தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு அரசு வேலை தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

14 -2
ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

22 -
தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் தமிழகமே ஸ்தம்பித்தது. 100 பேர் பலியானார்கள்.

23 -
நடிகர் விஜயக்குமாரை தாக்கிக் காயப்படுத்தியதாக கூறி அவரது மகள் வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

25 -
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

-
குன்னூர் அருகே மத்திய அரசின் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள்.

29 -
தஞ்சை பெரிய கோவிலின் ராஜராஜன் வாயில் கோபுரத்தில் இடி தாக்கி கலசம் உடைந்தது.

டிசம்பர்

1 - முதல்வர் கருணாநிதி தனது சொத்து விவரத்தை வெளியிட்டார். அதில் கோபாலாபுரம் வீட்டைத் தவிர தனக்கு வேறு சொத்து இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

2 -
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மண் அள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் அதிரடி தடை விதித்தது.

4-
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி. முற்றுகைப் போராட்டத்தால் திரும்பிச் சென்றார்.

8 -
முன்னாள் அமைச்சர் ராசா, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.

14 -
ஒரு ஜாமீன் வழக்கு தொடர்பாக முன்னாள் நீதிபதி ரகுபதியை மிரட்டி சாதிக்க முயன்றவர் முன்னாள் அமைச்சர் ராசா என்ற தகவலை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனும் சர்ச்சையில் மாட்டினார்.

15 -
ராசாவின் வீடுகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் மீண்டும் சிபிஐ சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

-
ஹஜ் யாத்திரை போல கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனித யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று அறிவித்தார் ஜெயலலிதா.

-
எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்தார்.

-
பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வரும்போது அவரைத் தாக்கி படுகொலை செய்ய விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு குழு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கைத் தகவலை அனுப்பியது. அதேபோல முதல்வர் கருணாநிதி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டுள்ளனராம் புலிகள் என்றும் உளவுத்துறை கூறியது.

16 -
அரசியல்வாதிகளுடன் எங்களுக்குத் தொடர்புகள் இருப்பதால் எங்களை நியாயமே இல்லாமல் குறி வைத்துள்ளனர் என்று காட்டமாக கூறினார் சிபிஐ சோதனைக்குள்ளான தமிழ் மையம் அமைப்பின் தலைவர் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.

-
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

17 -
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வளாகத்தில் அரசு மருத்துவமனை கட்டக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

-
அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராக தனது 'உடன் பிறவா சகோதரி' சசிகலாவை அக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா நியமித்தார்.

24 -
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசாவிடம் சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியது. இது 9 மணி நேரம் நீடித்தது.

25 -
மீண்டும் ராசாவிடம் 7 மணி நேரம் சிபிஐ விசாரணை நடந்தது.

26 -
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

27 -
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணனுக்கு வந்த 3 மிரட்டல் கடிதங்களில்ல மணிப் பாதிரியார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இக்கோவில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

28 -
ரூ. 470 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டதாக கிரிக்கெட் வாரியம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியது.

29 -
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த காமச் சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டம் நடந்ததால் அவர் தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

-
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்னைத் தாக்கியும், சிறிதும் நாகரீகம் இன்றி மறைந்த என்னுடைய தந்தையாரை வம்புக்கிழுத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து எனக்கு அவர் மீது உள்ள அக்கறையால் ஐயோ! பாவம்! என்றுதான் தோன்றியது என்று கூறினார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

- 500
க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

-
சென்னை மாநகராட்சியைச் சுற்றி தாம்பரம், அம்பத்தூர், திருவொற்றியூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக 3 மாநகராட்சிகளை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

30 -
தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி ஆலோசனை நடத்தினார்.நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ரஞ்சிதா


நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை. அது ஜோடிக்கப்பட்ட பொய்யான காட்சி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில், அவரது படுக்கையறையில் நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை போலீசார் பல்வேறு ரசாயண சோதனைகளுக்கு உட்படுத்தியதில், அந்தக் காட்சி எந்த ஒட்டு வேலையும் இல்லை, உண்மையானதுதான் என்று போலீசார் கர்நாடக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை.

எனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும். 

நான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன", என்றார் ரஞ்சிதா.
இதை சொல்வதற்கு ஏங்க இவ்வளவு நாள் . உலகத்தில் எந்த மூலையில இருந்தால் என்ன தொலைபேசி மூலமாக கூட பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கலாமே, அல்லது உங்க அம்மா இங்க தானே இருக்காங்கள் அவங்க மூலமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து உங்கள் விளக்கத்தை தெரிவிக்கலாமே...அது சரி , வீடியோவில் இருப்பது நீங்கள் இல்லை என்றால் அது வேறு பொண்ணு என்று தானே அர்த்தம் அப்படி என்றால் நித்யானந்தா வேறு பொண்ணு கூட தொடர்பு வைத்து கொண்டாரா....எங்களுக்கு இப்போது தேவை உங்களை பற்றியது அல்ல உங்களை பற்றி தெரியும் நீங்கள் 'கண்ணகி'யின் மறுபக்கம் என்று.பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!நித்யானந்தா தியான பீடம் என்ற பெயரில் நித்யானந்தா சாமி ஆசிரமம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அவருக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அமெரிக்காவில் லைப் பிளசன்ட் பவுண்டேஷன்என்ற பெயரிலும் தியான பீடத்தை அவர் நடத்தி வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் நித்யானந்தாவின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

கடந்த மார்ச் மாதம் நித்யானந்தா சாமி-நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் படுக்கை அறை காட்சி டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. இருவரும் ஒன்றாக படுக்கையில் அறையில் இருந்த அந்த ஆபாச காட்சி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சேலத்தை சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் லெனின்கருப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோ கேட்டுடன் புகார் கொடுத்தார். நித்யானந்தா பீடத்திற்கு வரும் பல பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளார். ஆண்களுடனும் ஹேமோ செக்சில் ஈடுபட்டு வருகிறார். காவி உடையில் மக்களை ஏமாற்றி வருவதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.  

இதையடுத்து சென்னை போலீசார் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் நித்யானந்தா ஆசிரம ஆபாச சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நடந்ததால் வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.நித்யானந்தா மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்து வருகிறார். வீடியோ படம் சித்தரிக்கப்பட்டது. உண்மையானது அல்ல என்று பெங்களூர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கு நடந்து வருகிறது.   இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு நேற்று ரஞ்சிதா பெங்களூர் கோர்ட்டுக்கு நேரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று மாலை 3 மணிக்கு பெங்களூர் ராமநகர் கோர்ட்டுக்கு அவர் தனது வக்கீல்களுடன் வந்தார். ரஞ்சிதா சார்பில் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன், ஆரத்தி ராவ், ஸ்ரீதர் ஆகிய 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச படத்தை வெளியிட்டதன் மூலம் அவமானம் ஏற்படுத்தியதாகவும் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

நடிகை ரஞ்சிதாவின் மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு மனு மீதான விசாரணை வருகிற ஜனவரி 29-ந் தேதி நடைபெறும். அன்று மனுதாரர் (ரஞ்சிதா) கோர்ட்டுக்கு நேரில் வரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதேபோல பிடுதி ஆசிரமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் சீடர் சார்பிலும், லெனின் கருப்பனுக்கு எதிராக ராமநகர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் லெனின் கருப்பன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனுவும் நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
மேலும், நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தாவுடன் வீடியோ காட்சி வெளியான பிறகு தாம் எந்த ஏட்டுக்கும் பேட்டி தரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தமது பெயரில் வெளியான பேட்டிகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும் கடந்த மார்ச் 2 ல் வீடியோ வெளியானவுடன் தாம் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் ரஞ்சிதா தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது கர்நாடகா போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். 


களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!


பெற்றோரை எதிர்த்து, தான் விரும்பிய பெண்ணையே துணிச்சலாக திருமணம் முடித்த களவாணி படப் புகழ் விமல், இப்போது பெற்றோருடன் சமாதான முயற்சியில் இறங்கியுள்ளார்.

பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விமல். களவாணி படத்திலும் நாயகனாக நடித்தார். விமலுக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த ப்ரியா என்ற பெண்ணுக்கும் திடீர் திருமணம் நடந்தது. ப்ரியா சென்னையில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

இருவரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். ஆனால் ப்ரியா பெற்றோர் காதலை ஏற்கவில்லை. சினிமாக்காரருக்கு பெண் தரமாட்டோம் என மறுத்துவிட்டனர். இதனால் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 

இதுகுறித்து விமல் கூறுகையில், "ப்ரியா என் மாமா மகள். சின்ன வயதிலிருந்து பழக்கம். நான் சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். ப்ரியாவும் டாக்டருக்கு படிக்க சென்னை வந்தார். அப்போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

எங்களுக்குள் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். ப்ரியா அப்பாவை சந்தித்து காதல் பற்றி சொல்லி பெண் கேட்டேன். அவர் சினிமா நடிகனுக்கு பெண் தர மாட்டேன் என் பெண்ணுக்கு, டாக்டர் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

எனவேதான் வேறு வழியில்லாமல் சுவாமிமலை கோவிலில் அவசரமாக திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை பதிவும் செய்து கொண்டோம். இப்போது என் வீட்டில் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். ப்ரியா வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை. அவர்களும் சமாதானமாகிவிடுவார்கள் என்று நம்புகிறேன்.

சென்னையில் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளோம்...", என்றார்.

இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு


ஓயாமல் இசையமைத்தது போதும்... வரும் 2011-ம் ஆண்டில் முழு ரெஸ்ட் எடுப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.

இந்த ஆண்டு அவர் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள கடைசி படம் ராக் ஸ்டார். அதற்குப் பிறகு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாத அவர், 2011-ம் ஆண்டு முழுக்க தனது குடும்பத்துடன் செலவிடப் போகிறாராம். 

இதுகுறித்து ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், "இந்த ஆண்டு எனது எல்லா கமிட்மெண்டுகளும் முடிந்துவிட்டன. இப்போது எனக்கு ரெஸ்ட் தேவைப்படுகிறது. குடும்பத்துடன் இந்த ஓய்வை செலவிடப் போகிறேன். கேஎம் இசைக் கல்லூரி பணிகளையும் கவனிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு தமிழில் எந்தப் படமும் ரஹ்மான் ஒப்புக் கொள்ளவில்லை. ரஜினியின் ஹரா படத்துக்கு ஏற்கெனவே இசையமைத்து முடித்துவிட்டாராம்.

1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-தமிழகத்தில் உஷார் நிலை


நாடு முழுவதும் பெரும் நாச வேலைகளை நிகழ்த்தி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராகிமின் இந்தத் திட்டத்தை அவனது கூட்டாளியான சோட்டா ஷகீல் நிறைவேற்ற திட்டமிட்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

சமீபத்தில் 2 லாரி டிரைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். அவர்கள்தான் இத்தகவலைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பாவிடம் பயிற்சி பெற்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தங்களது சதித் திட்டத்திற்காக பல லாரி டிரைவர்களை தீவிரவாதிகள் பிடித்திருப்பதாகவும், இந்த லாரிகள் ஆங்காங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

புத்தாண்டையொட்டி தீவிரவாத தாக்குதல் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்ப்பட்டுள்ளது.

ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஊடுறுவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை பிடிபடவில்லை. அதேபோல பெங்களூரிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தற்போது லாரிகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் லாரிகள் போக்குவரத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சாலைகளிலும் லாரிகளை தீவிரமாக போலீஸார் சோதனையிடுகின்றனர்.

2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!2010ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு பல சோகங்களைக் கொடுத்துச் சென்றாக முடிந்துள்ளது. அருமையான பல கலைஞர்களை மரணத்திற்குக் காவு கொடுத்து பரிதவித்து நின்றது தமிழ் சினிமா.தனது தேனினும் இனிய குரலால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை ரசிகர்களை லயிக்க வைத்த பாடகி சொர்ணலதா ஆஸ்துமா காரணமாக செப்டம்பர் 12ம் தேதி சென்னையில் மரணமடைந்தார்.

இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது இசையில் இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.பூவிலங்கு படம் மூலம் ரசிகர்களின் மனதில் புகுந்து இதயமே படம் மூலம் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் முரளி இந்த ஆண்டில்தான் மறைந்தார். செப்டம்பர் 8ம் தேதி இவர் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியானபோது யாராலுமே அதை நம்ப முடியவில்லை.சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற ரஜினிகாந்த் ரசிகர்களின் சூப்பர் ஹிட் மந்திரப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் செப்டம்பர் 30ம் தேதி உயிர் நீத்தார். நகைச்சுவைச் செல்வர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட, நகைச்சுவையில் தனி ஸ்டைலை உருவாக்கிய நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் அக்டோபர் 9ம் தேதி மரணமடைந்தார். திரை நடிகராக வலம் வந்து ரசிகர்களைக் கொள்ளை கொண்ட சந்திரன், கடைசிக்காலத்தில் அதிமுக மேடைகளை தனது அனல் பறக்கும் பேச்சால் அலங்கரித்தவர் ஆவார்.

ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!உலககோப்பை கிரிக்கெட் புயல் இன்னும் 50 நாட்களில் தொடங்க உள்ளதையடுத்து, உலககோப்பை கிரிக்கெட் 2011ன் தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணிய‌ை பாலிவுட் இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் ஆகியோர் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து உலக‌கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பிப்ரவரி மாதம் 19ம்தேதி முதல் ஏப்ரல் 2ம்தேதி வரை நடத்துகிறது. இந்த தொடருக்கான தீம் பாடலுக்கு இசையமைக்கும் பணி ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்று பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஐ.சி.சி.யோ ஆஸ்கார் நாயகனை ஓரம் கட்டிவிட்டுபாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களான சங்கர், யஹஷான், லாய் குழுவிற்கு வழங்கி இசை ரசிகர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ஐ.சி.சி.யின் இந்த முடிவு ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ள அதேநேரம், சங்கர், யஹஷான், லாய் ஆகியோரின் ரசிகர்களை உற்சாகத் துள்ளலுக்கு உட்படுத்தியிருக்கிறது.

"
தே குமா கே" என்று துவங்கும் அந்த பாடல் இந்தி, வங்காளம் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் இன்று ரசிகர்களின் செவிகளை சென்றடையும் வகையில் வானொலி, தொலைக்காட்சி, இன்டர்நெட்களில் வெளியிடப்படுகிறது. இந்த பாடலின் சர்வதேச ஒளிபரப்பு உரிமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமே (ஐசிசி) இருக்கிறது. 

ரஹ்மானுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? : "ஸ்லம்டாக் மில்லியனர்" படத்திற்கு இசையமைத்ததன் மூலம் ஆஸ்கார் விருதுகள் வென்ற இசையமைப்பாளர் ரஹ்மான், அந்த பெருமை நீங்குவதற்குள்ளாக காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கான தீம் பாடலுக்கு இசையமைத்தார். சர்ச்சைகளின் மொத்த உருவமாக திகழ்ந்த காமென்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு இடர்பாடுகள், பிரச்னைகள் வந்ததுடன், தீம் பாடலும் ரசிகர்களிடையே அதிருப்தியை சம்பாதித்தது. பாட்டும், இசையும் சரியில்லை என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்த அதே நேரத்தில், ரஹ்மான் இசையமைத்த பாடலில் பணியாற்ற முடியாது என்று முன்னணி பாடகர்கள் மற்றும் நடன கலைஞர்கள் எதிர்ப்பு ‌தெரிவித்தனர். ரசிகர்களின் அதிருப்தி மற்றும் கலைஞர்களின் எதிப்பால் முதலில் உருவான தீம் பாடலம் மாற்றப்பட்டது. இருப்பினும் அது பெரும்பாலான பொதுமக்களை போய்ச் சேரவில்லை. ரூ, 5 கோடியை சமபளமாக ‌பெற்றுக் கொண்டு ரஹ்மான் உருவாக்கிய தீம் பாடல் பிரபலம் ஆகாததாலும், ரஹ்மான் இசையமைக்கும் பாடலில் பணியாற்ற மாட்டோம் என்று சக கலைஞர்கள் போர்க்கொடு தூக்கியதாலுமே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில உலககோப்பை கிரிக்கெட் தீம் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை அணுகவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது உருவாகியிருக்கும் தீம் பாடலுக்கு இசையமைத்திருக்கும் சங்கர், யஹஷான், லாய் குழுவினர்தான் கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்திற்கு இசையமைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.
காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்சில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி தொடர்பாக பேசி வருகிறது. இன்னும் சில நாட்களில் அனைவரும் விரும்பும் கூட்டணி தொடர்பான ஒப்பந்தங்கள் உருவாகும். அதிமுகவுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் காத்துள்ளது. திமுகவை வரும்தேர்தலில் வீழ்த்த மும்முரமாக செயல்படுங்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில்நடந்தது. ஜெயலலிதா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்க ஜெயலலிதாவுக்கு அதிகாரம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

இந்த பொதுக்குழு கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு என்று கூறினார்கள். இந்த பொதுக்குழு பிற்காலத்திலும், எக்காலத்திலும் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டம்தான்.

இன்னும் 4 மாதத்தில் நாம் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப்போகிறோம். 2011-ம் ஆண்டு நாம் சந்திக்கப்போகிற சட்டமன்ற தேர்தல் போராட்டம், நாம் இதுவரை சந்தித்த போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டமாக இருக்கப்போகிறது. மிகப்பெரிய போராகவும் இருக்கப்போகிறது.

1967-ம் ஆண்டு அண்ணாவால் வரலாற்று திருப்பு முனை நிகழ்த்தப்பட்டது. அண்ணா முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இன்று வரை ஒரு திராவிட கட்சிதான் தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

அண்ணா உருவாக்கிய தி.மு.க. இன்று இல்லை

ஆனால் அண்ணா உருவாக்கிய தி.மு.க. இன்று இல்லை. அ.தி.மு.க. ஆட்சி எப்போது அமையும் என்று மக்கள் ஏங்கிக்கிடக்கிறார்கள். நாம் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரவேண்டும் என்றால் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது மட்டும் அல்ல, 1967-ம் ஆண்டு அண்ணா எப்படி ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தினாரோ அது போன்ற திருப்பு முனையை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு நமக்கு காத்திருக்கிறது.

நாம் அனைவரும் நமது கடமைகளை சரிவர செய்தால், நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால், உண்மையாக உழைத்தால் 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தி, எக்காலத்திலும் அ.தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கும் என்ற நிலையை நாம் உருவாக்கமுடியும்.

இது எதோ உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று சொல்வதற்காக கூறும் வெற்று வார்த்தை அல்ல. நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால் எக்காலத்திலும் தி.மு.க.வை ஒழித்துக்கட்டி, தி.மு.க. எழுந்திருக்க முடியாத நிலையை நம்மால் உருவாக்க முடியும்.

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தேர்தல் வந்தபோது கூட சிலருக்குத்தான் சட்டமன்ற உறுப்பினராக ஆகும் வாய்ப்பு கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர், வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், அந்த வருத்தம் அடங்கிய பின்னர், இது நம்முடைய தலைவர் அறிவித்த வேட்பாளர். ஆகவே அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணியாற்றினார்கள்.

நம்மை நாமே தோற்கடிக்கலாமா?

அதனால்தான் எம்.ஜி.ஆர். திரும்பத்திரும்ப 3 முறை தேர்தலில் வெற்றி பெற்று, 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்க முடிந்தது. ஆனால் அண்மை காலமாக வேறு ஒரு புதிய கலாசாரத்தை நாம் கழகத்தில் கண்டுகொண்டு இருக்கிறோம். அண்மை காலமாக நமது கழக உறுப்பினர்களே, நம்முடைய கழக வேட்பாளர்களை தோற்கடிக்கின்ற - பணியாற்றுகிற ஒரு புதிய கலாசாரத்தை நாம் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்களை விட்டுத்தந்தாக வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். ஆக ஒருசில இடங்களில்தான் அ.தி.மு.க. போட்டியிட முடியும் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கும் ஒரு மாபெரும் கட்சி இது. கட்சியில் எத்தனையோ தகுதி உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் 10-க்கும், 12-க்கும் மேற்பட்ட தகுதி உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அவர்கள் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றக்கூடியவர்கள்தான். ஆனால் ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு அளிக்கமுடியும் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் என்ன நடக்கிறது., இந்த எதார்த்த நிலையை உணராமல், புரிந்துகொள்ளாமல், அண்மை காலமாக என்ன நடந்து வருகிறது என்றால், தகுதி உள்ளவர்கள் பலர் இருந்தாலும், ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு கொடுக்க முடியும் என்பதால் அந்த ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஏமாற்றப்பட்ட அதே தொகுதியை சேர்ந்த 4, 5 பேர் ஒன்றாக சேர்ந்து, இந்த வேட்பாளரரை தோற்கடிக்க பணியாற்றுகிறார்கள்.

2006-ம் ஆண்டு தேர்தலில் இதுதான் நடந்தது. நம்மை தி.மு.க. தோற்கடிக்கவில்லை. நம்மை நாமே தோற்கடித்துக்கொண்டோம்.

இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால், 2006-ம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ அது, 2011-ம் ஆண்டும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லுகிறேன். உண்மையாகவே ஒரு தொகுதியில் யாரை வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எனக்கே கடினமான காரியம். தகுதி உள்ளவர்கள் பலபேர் இருந்தாலும் யாராவது ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பை அளிக்கமுடியும்.

இந்த முறை நான் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அம்மா அறிவித்த வேட்பாளர் என்று அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதை உறுதி படுத்துவதே நமது கடமை என்ற உணர்வோடு நாம் அனைவரும் செயல்படவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

செல்போன், சாதாரண போன்களை கட்டித் தொங்க விடுங்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அ.தி.மு.க. பேச்சாளர்கள் கிராமம், கிராமாக பிரசாரம் செய்யவேண்டும். கிராமங்களில், செல்போன், சாதாரண போன்களை கட்டித் தொங்கவிட்டாலே மக்கள் புரிந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டு அண்ணா ஏற்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்போல, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் ஏற்படும். வரும் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இந்த மாற்றத்தை கொண்டுவர அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

அண்ணா உருவாக்கிய திமுக இன்று இல்லை. கருணாநிதி தலைமையில் ஊழலில் ஊற்றுக் கண்ணாக திமுக விளங்குகிறது. திமுக ஆட்சி எப்போது வீழும் என்றும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என்றும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் 

விரும்பும் கூட்டணி அமையும்

சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கப் போகிறோம், கூட்டணிபற்றி அம்மா ஒருவார்த்தை கூட சொல்லவில்லையே என்று நீங்கள் அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எப்படிப்பட்ட கூட்டணியை நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்பது எனக்கு தெரியும். எந்த கட்சிகளுடன் கூட்டணி அமையவேண்டும் என்று விரும்புவீர்கள் என்பதும் எனக்கு தெரியும்.

கவலைப்படாதீர்கள் நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். வெளிப்படையாக தெரியாவிட்டாலும், நான் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், அந்த பேச்சுவார்த்தை முடிவுகள் இன்னும் வரவில்லை. கூட்டணி குறித்து இறுதி முடிவு ஆவதற்கு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும். எனவே, தற்சமயம் நான் அதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும்போது, கூட்டணி குறித்து உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தியை சொல்லலாம் என்றுதான் நான் விரும்பினேன். ஆனால், கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் இந்த பொதுக்குழுவை கூட்டி ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டது.

இந்த நாளுக்குள் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை, ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை. ஆனால், நான் ஏற்கனவே சொன்னதுபோல், இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிடும். நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும் என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மிக ஒளிமயமான பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.

எனவே, பீடுநடைபோடுங்கள், வீறு நடைபோடுங்கள். புதிய வரலாறுபடைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படுங்கள். வெற்றிக்கனியை பறிக்கத் தயாராகுங்கள் என்றார் ஜெயலலிதா.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஜேபிசி கோரிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து தற்போது நான் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில், விசாரணையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றி சிபிஐ எதுவும் தெரிவிக்கவில்லை. எத்தகைய நடவடிக்கையை சிபிஐ எடுக்கப் போகிறது என்றும் தெரியவில்லை.

அதேசமயம், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் சுயேட்சையான விசாரணைக்கு உத்தரவிட்டால் அதனையும் நாங்கள் வரவேற்கிறோம். சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து நியாயமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இதுவரை அது மிகுந்த சந்தேகத்திற்கு இடமானதாகவே உள்ளது என்றார் ஜெயலலிதா.