Saturday, September 29, 2012

தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.


சித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்தியே மறுத்ததால் விடுதலை!

அபுதாபியில் தனது சித்தியை மிரட்டி 2 வருடங்கள் அவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக சிறுவன் ஒருவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் புகார் கொடுத்த தந்தையும், சித்தியும் தங்களது புகாரை பின்னர் கோர்ட்டில் மறுத்து விட்டதால் சிறுவனை கோர்ட் விடுதலை செய்து வி்டது.


அபுதாபியைச் சேர்ந்த அந்த, சிறுவனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவன் மீதான புகார் என்னவென்றால், தனது தந்தையின் 2வது மனைவியை கடந்த 2 வருடங்களாக அவன் பல்வேறு விதங்களில் உறவு வைத்துக் கொண்டான். அந்தப் பெண்மணியை விட 9 வயது இளையவன் இந்த சிறுவன்.


ஒருமுறை இருவரும் படுக்கை அறையில் இருந்ததை சித்தியின் சகோதரி பார்த்து விட்டார். பின்னர் அதை சிறுவனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து தந்தை மகனைக் கூப்பிட்டு விசாரித்தார். அவன் ஆமாம் என்று சொல்லவே சரமாரியாக அடித்தார். இதையடுத்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.


ஆனால் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று தந்தையும், அவரது மனைவியும் வந்து கூறி விட்டார்கள். இதையடுத்து வழக்கை டிஸ்மிஸ் செய்த கோர்ட், சிறுவனை விடுவித்து விட்டது.



'மாற்றான்' ரிலீஸ் தேதி!

மாற்றான்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.

கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு சில மாற்றங்களை கே.வி.ஆனந்த் தெரிவித்து இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் தேதி அல்லது அக்டோபர் 1ம் தேதி அனுப்ப இருக்கிறார்கள். திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் அக்டோபர் 12ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வர இருக்கிறதாம் 'மாற்றான்'.

'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டார் சூர்யா. தற்போது 'சிங்கம் 2' படத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய ஏரியாக்களின் உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் விற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.



'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா?

அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது.

அஜீத்தின்அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் அல்ல. அந்த படத்தின் தலைப்பை இன்னும் ரகசியமாகத் தான் வைத்துள்ளனர். நாம் சொல்வது அஜீத்தின் 53வது படத்தின் தலைப்பு. அதாவது விஷ்ணுவர்தன் படத்தை முடித்துவிட்டு அவர் சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும். அதன் தலைப்பு தான் கசிந்துள்ளது. 'வெற்றி கொண்டான்', தலைப்பு எப்படி இருக்கு? இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் சொல்கிறோம். வெற்றி கொண்டான் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

அதென்ன வெற்றி கொண்டான் என்று நம்மிடம் தலைப்பைத் தெரிவித்தவர்களிடம் கேட்டதற்கு, அஜீத்தின் இமேஜிற்கு இந்த தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை தேர்வு செய்துள்ளனர் என்றனர்.



பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்குமுகமாக உள்ளது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைகிறது. இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனாவுக்கும் காதலா??

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் மற்றும் அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் காதல் என்று வங்கதேச பத்திரிக்கை வெளியிட்ட செய்தியால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஹீனா ரப்பானி கர். இவருக்கு வயது 34 ஆகிறது. கல்யாணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி- பெனாசிர் பூட்டோ தம்பதியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவால் பூட்டோ. இவருக்கு 24 வயதாகிறது.


இந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாக வங்கதேச பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திதான் இப்போது பாகிஸ்தானை கலங்கடித்து வருகிறதாம்.


ஹீனா பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரோஸ் குல்சார் என்ற பெரும் பணக்கார தொழில் அதிபரை மணந்து அன்னயா மற்றும் தினா ஆகிய 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


இந்நிலையில் தன்னைவிட கிட்டத்தட்ட 11 வயது குறைவான(நவம்பரில் அவருக்கு 35 வயது பிறக்கிறது) பிலாவலை அவர் காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இருவரும் பாகி்ஸ்தானை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகவும் முடிவு செய்துள்ளனராம். இது குறித்து அறிந்த சர்தாரி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ஹீனாவை மணக்கக் கூடாது என்று தனது மகனைக் கண்டித்துள்ளாராம். அதற்கு பிலாவல் மணந்தால் ஹீனாவைத் தான் மணப்பேன் என்று கூறியுள்ளாராம்.


ஆனால் இப்படித் திருமணம் செய்தால் உனது அரசியல் எதிர்காலம் பாழாகி விடும், கட்சியும் போண்டியாகி விடும் என்று சர்தாரி எச்சரித்தாராம். ஆனால் பிலாவல் கேட்பதாக இல்லையாம்.


இந்த காதல் விவகாரம் நீண்ட காலமாக ஓடுகிறதாம். மேலும் அதிபர் மாளிகையில் பிலாவலும், ஹீனாவும் படுக்கையில் இருந்ததை சர்தாரியே நேரில் பார்த்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ஹீனாவின் கவனத்தை திசைதிருப்ப சர்தாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிரோஸின் தொழிலுக்கு இடையூறு செய்தும் பலனில்லாமல் போனதாம். காரணம், பிரோஸை விவாகரத்து செய்ய ஹீனா ரெடியாகி விட்டதால்.


அதேசமயம், தன்னுடைய காதலியை மணக்க பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பிலாவல் மிரட்டியுள்ளாராம்.

ஹீனா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகப் போவதாக பிலாவல் தன் தந்தையிடம் கூறியுள்ளார். அதிலும் ஹீனா விவகாரத்து பெற்ற பிறகு குழந்தைகள் தனது கணவனுடன் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளாராம்.

இவ்வாறு அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


Wednesday, September 26, 2012

சூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி


மாற்றான், சாருலதா படங்களில் சூர்யாவும் பிரியாமணியும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடங்களில் நடித்துள்ளனர். இரு படங்களும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருக்கும் என பேசப்பட்டது. மாற்றானை முந்திக் கொண்டு சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது.

மாற்றான் படத்துடன் சாருலதா படத்தை ஒப்பிடவேண்டாம் என்று பிரியாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் வந்த முதல் இந்திய படம் என்ற பெருமை சாருலதாவுக்கு கிடைத்துள்ளது. இதில் நடித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். படத்துக்கு எடிட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. கதையும், கேரக்டரும் எனக்கு பிடித்து இருந்ததால் அதில் நடிக்க சம்மதித்தேன்.

சாரு மற்றும் லதா கேரக்டர்கள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தன. சூர்யாவின் மாற்றான் படத்துடன் எனது கேரக்டரை ஒப்பிட்டு பேச வேண்டாம். மாற்றான் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம். மாற்றான் படம் சாருலதா படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

ரத்த சரித்திரம் படத்துக்கு பின் எனக்கு நிறைய கேரக்டர்கள் வந்தன. அவற்றில் திருப்தி இல்லை. சாருலதா படம் அந்த குறையை போக்கி உள்ளது. எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருக்கும்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.


முகத்தில் அறுவை சிகிச்சையா?: லட்சுமி மேனன்


சசிகுமார் ஜோடியாக சுந்தர பாண்டியன் படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். கும்கி படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்கிறார். பிரபு சாலமன் இயக்குகிறார்.

லட்சுமி மேனனின் இடது கன்னத்தில் தழும்பு உள்ளது. அதனை அகற்ற முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியானது.

இதுபற்றி கேட்டபோது லட்சுமி மேனன் கூறியதாவது:-

சிறு வயதில் என் கன்னத்தில் காயம் ஏற்பட்டு தழும்பாக மாறியது. அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். தழும்பை மறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை.

அறுவை சிகிச்சை செய்யமாட்டேன். குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறேன். அதுபோன்ற கேரக்டர்களில் தொடர்ந்து நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.


தமிழில் இப்படி ஒரு படம் வருமா?


பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே போன்று தமிழிலும் படங்கள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் படம் ரிலீஸானால் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி யாரப்பா ஹீரோன்னு தான். படத்தைப் பற்றி செய்தி வெளியிடும்போதும் சரி, பேசும்போதும் சரி கமல் படம், அஜீத் படம், ரஜினி படம், விஜய் படம் என்று ஹீரோக்கள் பெயரைத் தான் சொல்கிறோம். ஒரு நாளும் இது இந்த நாயகியின் படம் என்று பேசுவதில்லை.

ஆனால் பாலிவுட்டில் அப்படி அல்ல. அங்கு ஹீரோயின்கள் ஹீரோ ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். ஹீரோயினை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க தென்னிந்தியாவில் யாருக்குமே தோணாத நேரத்தில் பாலிவுட்டில் ஏக்தா கபூர் வித்யா பாலனை வைத்து தி டர்ட்டி பிக்சர் தயாரித்தார். படத்தில் நசிருத்தீன் ஷா என்ற ஜாம்பவான் இருந்தாலும் வித்யா தான் ஹீரோ. தற்போது கரீனா கபூரை வைத்து ஹீரோயின் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரியங்கா சோப்ராவை மையமாக வைத்து பேஷன் படம் வெளியானது.

இது ஏன் நம்ம தெலுங்கில் கூட அனுஷ்காவை வைத்து அருந்ததி படத்தை எடுத்தார்கள். இதே போன்று தமிழ் திரையுலகிலும் ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுக்க மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் ஹீரோயின்கள் ஹீரோவாகும் நாளும் எந்நாளோ?


ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் பர்பி இந்திப்படம் தமிழில் ரீமேக்


ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு அனுப்ப ரன்பீர் கபூர் நடித்த பர்பி படம் தேர்வாகி உள்ளது. தமிழில் இருந்து 7 ஆம் அறிவு, வழக்கு எண் 18/9 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அனைத்து இந்திய மொழிகளில் இருந்தும் 19 படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் பர்பி படம் தேர்வாகி உள்ளது.

ஏற்கனவே மதர்இந்தியா, சலாம் பாம்பே, லகான் படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு சென்று விருது கிடைக்காமல் திரும்பியுள்ளன. பர்பி படம் நிச்சயம் ஆஸ்கார் விருதை வெல்லும் என்று இந்தி திரையுலகினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் ரன்பீர்கபூர் காது கேளாதவராகவும், பிரியங்கா சோப்ரா ஆட்டிஸம் பெண்ணாகவும் நடித்திருக்கின்றனர். இலியானாவும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இடையேயான முக்கோண காதல் கதையே இப்படம்.

அனுராக் பாஸு இயக்கியுள்ளார். பர்பி படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் முன்னணி கதாநாயகன் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.


திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பிரதமர்- நிராகரித்தார் கருணாநிதி


மத்திய அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர் பதவி அல்லது சில இணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் முன்வந்ததாகவும், ஆனால் அதை திமுக தலைவர் கருணாநிதி நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சி திரினமூல் காங்கிரஸ்தான். அக்கட்சிக்கு 19 எம்.பிக்கள் உள்ளனர். அடுத்த பெரிய கட்சியாக இருப்பது திமுக, அதற்கு 18 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது திரினமூல் காங்கிரஸ் வெளியே போய் விட்டதால், திமுகவுக்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.

திரினமூ்ல் விலகியுள்ளதாலும், மேலும் பல முக்கியப் பொறுப்புகளுக்கு இன்னும் அமைச்சர்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதாலும் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையடுத்து திமுகவுக்கான திட்டத்துடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை பிரதமர் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அவரும் சென்னை வந்து சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டில் வைத்து அவரைச் சந்தித்தார். அப்போது பிரதமரின் ஆபர் குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர் பதவி அல்லது சில இணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக பிரதமர் கூறியுள்ளதை நாராயணசாமி தெரிவித்தாராம். ஆனால் இதை கருணாநிதி நிராகரித்து விட்டாராம்.

இப்போதைக்கு மத்திய அமைச்சரவையில் புதிதாக திமுக பிரதிநிதிகளை சேர்ப்பது குறித்து தான் யோசிக்கவில்லை என்று நாராயணசாமியிடம் தெரிவித்து விட்டாராம் கருணாநிதி. இதையடுத்து கருணாநிதியின் பதிலோடு டெல்லிக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் நாராயணசாமி.

இதுகுறித்து திமுக தரப்பில் ஒரு முக்கியத் தலைவர் கூறுகையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முக்கிய துறை ஒன்றைப் பெறலாம் என்று மூத்த திமுக எம்.பிக்கள் கருதி வந்தனர். ஆனால் கலைஞரின் எண்ணம் வேறாக இருக்கிறது. மத்திய ஆட்சி நிலையாக தொடர வேண்டும் என்பதே அவரது இப்போதைய ஒரே எண்ணம், அமைச்சர் பதவியை அவர் முக்கியமாக கருதவில்லை என்றார்.

இன்னொரு தலைவர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலுமே திமுக, காங்கிரஸுடன் உறவை நீடித்து வருவதற்கு எதிர்ப்பு உள்ளது. காங்கிரஸிடமிருந்து திமுக விலக வேண்டும், தொடர்புகளைப் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

கருணாநிதி தற்போது ஏன் அமைச்சரவையில் சேரவில்லை என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசுக்கு எதிராக மக்கள் கடும் கொந்தளிப்பான மன நிலையில் உள்ளனர். குறிப்பாக டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு ஆகியவை மக்களை பெரும் துயரத்தில் மூழ்கடித்துள்ளது. அதிலும் கேஸ் சிலிண்டருக்கான கட்டுப்பாடால், நாடு முழுவதும் பெண்கள் அனைவருமே காங்கிரஸ் அரசுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்களைச் சேர்ப்பது சரியாக இருக்காது என்று கருதுவதால்தான் கருணாநிதி அமைதியாக இருக்க முடிவெடுத்ததாக கூறுகிறார்கள்.

மேலும் காங்கிரஸ் கட்சி மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் குவிந்து வருகின்றன. இதுவும் கூட அமைச்சரவையில் சேர கருணாநிதி தயக்கம் காட்டுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தல் வரை அமைதி காப்பது, அதன் பிறகு பாய்வது என்ற திட்டத்துடன் கருணாநிதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர் பதவியும், 4 இணை அமைச்சர் பதவிகளும் தரப்பட்டன. கேபினட் அமைச்சர்களாக மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராசா ஆகியோர் பொறுப்பேற்றனர். இணை அமைச்சர்களாக பழனிமாணிக்கம், காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன் ஆகியோர் பதவியேற்றனர்.

இதில் ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர்செல், மாக்சிஸ் விவகாரத்தில் அடிபட்டு தயாநிதி மாறனும், ராசாவும் பதவி விலகி விட்டனர். இந்த இரண்டு இடங்களுக்குத்தான் தற்போது புதிய பிரதிநிதிகளை அறிவிக்குமாறு பிரதமர் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்


பிரதமர் மன்மோகன்சிங் தற்போதைய பாகிஸ்தானில் கடந்த 1932-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி பிறந்தார். இந்தியாவுக்கு 1947 ஆகஸ்டு 15-ந் தேதி இங்கிலாந்து சுதந்திரம் அளித்தபோது, மன்மோகன்சிங்கின் குடும்பம் இந்தியாவுக்கு வந்தது. அவரது தந்தை ஒரு ஏழை வியாபாரி. 10 குழந்தைகளை பெற்றவர். ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் மன்மோகன்சிங் கல்வியால் உயர்ந்தார்.
 
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், இந்தியாவின் நிதி மந்திரி போன்ற பல உயர்ந்த பதவிகளை அலங்கரித்த மன்மோகன்சிங், கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலை தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் பிரதமராக ஆக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து மன்மோகன்சிங் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார். நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றது மன்மோகன்சிங் மட்டுமே.
 
கல்வியாலும், கடின உழைப்பாலும் உயர்ந்த பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) தனது 80-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மந்திரிகள் நேரில் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். மன்மோகன்சிங்கின் 80-வது பிறந்தநாளையட்டி ரஷிய நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் புதின் கூறி இருப்பதாவது:
 
உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் மரியாதைக்குரிய தலைவராகவும், ஆட்சி வல்லுனராகவும், பொருளாதார நிபுணராகவும் திகழ்கிறீர்கள். இந்திய பொருளாதார சீர்திருத்த சிற்பியாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்திருக்கிறது. உங்கள் தனிப்பட்ட பங்களிப்பால் இந்திய, ரஷிய உறவுகள் மிகச்சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
 
இவ்வாறு அதில் புதின் கூறியுள்ளார். 


மின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர்ம அடி!


தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டின் உச்சகட்ட விளைவு என்ன என்பதை பொன்னேரிவாசிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொன்னேரி மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.

பொன்னேரில் மின்வெட்டைக் கண்டித்து இன்று காலையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இருந்த பொதுமக்கள் சிலர் அங்குள்ள மின்வாரியம் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த மேசை, நாற்காலிகளை தூக்கி எறிந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஆத்திரம் அடங்காததால் கண்ணில்பட்ட மின்வாரிய அதிகாரிகளையும் அடித்து உதைத்து தாக்கியிருக்கின்றனர்.

இதனால் அலறிப்போன மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் உயிர்தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். மின்வெட்டுக்கான எதிர்வினை என்ன என்பது பொன்னேரியில் தொடங்கியிருக்கிறது என்றே கூறப்படுகிறது.


Tuesday, September 25, 2012

மலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)


மலையாள திரைப்பட நடிகரான திலகன் இன்று அதிகாலை காலமானார்.

77 வயதாகும் திலகன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவர். கடந்த மாதம் 23-ந் தேதி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று அதிகாலை 3.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

1979-ம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தவர் திலகன். மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய மற்றும் மாஇந்ல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

2009-ம் ஆண்டு பம்தஸ்ரீ விருது திலகனுக்கு வழங்கப்பட்டது. திலகனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.


ராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம் பற்றி சி.பி.ஐ. தகவல்


சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சமரிட்டே. இவர் கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்திக்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார். ராகுல்காந்தி இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று சிறைவைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவரையும் அவருடைய பெற்றோரையும் மீட்டுத்தர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கிஷோர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது. விசாரணை முடிவில் பொதுநல வழக்கு தொடர்ந்த கிஷோருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, கிஷோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுவாதந்தர்குமார் ஆகியோர் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து சி.பி.ஐ. தரப்பு வக்கீல் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்து கூறியதாவது:-
இவ்வழக்கில் மீட்டுத்தர வேண்டி கூறப்பட்டுள்ள பெண் உள்ளிட்ட அனைவரின் விலாசமும் பெயரும் போலியானது. இது குறித்து சம்பந்தப்பட்ட நகரப் பஞ்சாயத்து அலுவலர், மாவட்ட உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் நடத்திய விசாரணயில் அப்படிப்பட்டவர்களின் பெயரோ விலாசமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ராகுல் காந்தியின் பெயர் இந்த வழக்கில் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.





Sunday, September 23, 2012

அஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா?


அஜீத் குமாரின் 53வது படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்த்தனின் பெயரிடப்படாத படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஜிம்முக்கு சென்று கடும் உடற்பயிற்சி செய்து உடலை கும்மென்று ஆக்கியுள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் அஜீத்தின் 53வது படமாகும்.

விஜய வாஹினி தயாரிக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அஜீத் குமார் தனது சொந்த பட நிறுவனத்தை துவங்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சாகக் கிடக்கிறது. உண்மை என்ன என்பது அஜீத் சொன்னால் மட்டுமே தெரியும்.


Saturday, September 22, 2012

உதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரையில் பெண்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இடிந்தகரை, பெருமணல், கூத்தங்குளி பகுதியில் மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
கூத்தங்குளியில் நடந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். இதில் புஷ்பராயன் உள்ளிட்ட போராட்டக்குழு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் மீனவகிராமங்களை சேர்ந்த ஆண்கள் ஏராளமானோர் இடிந்தகரையில் படகுகளில் கடலுக்குள் சென்று, வரிசையாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


கடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் மீனவர்கள்


கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மீனவர்கள் இன்று நடத்துகின்றனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி துறைமுகம் இன்று முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் 300க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி கடல்வழியே மீனவர்கள் பயணம் மேற்கொண்டனர். தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மீனவர்களின் கடல்வழிப் போராட்டத்தைத் தொடர்ந்து கடலோர காவல்படையின் கண்காணிப்பு விமானம் வானில் பறந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்றைய துறைமுகம் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து 25-ந் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாநிலம் தழுவிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே துறைமுக முற்றுகைப் போராட்டத்தைக் கைவிடுமாறும் இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.


கோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை

கோவை கணபதி கணேஷ் லே-அவுட் 5-வது வீதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி அஜிதா. இவர்களது மகள் அபிநயா (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அபிநயா வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர் வேணுகோபால் (21). லேத் ஒர்க்ஷாப்பில் கேஸ் வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். வேணுகோபால் ஒருதலையாக அபிநயாவை காதலித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அபிநயா பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த வேணுகோபால் யாருக்கும் தெரியாமல் அபிநயா வீட்டுக்கு சென்று அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த அபிநயா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால் தான் வைத்திருந்த கத்தியால் மாணவி அபிநயாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அபிநயாவின் தாய் அஜிதா வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. 

இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மாணவி அபிநயா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் வேணுகோபால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேணுகோபாலை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு!


நீங்கள் உயிரை மாய்ப்பதாக இருந்தால் ஒரு தனுவாக மாறுங்கள். கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக கூறியுள்ளார்.

ராஜபக்சே வருகையை எதிர்த்து சேலத்தில் தீக்குளித்து உயிர்நீத்த ஆட்டோ டிரைவர் விஜய்ராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில்,

எங்கள் பேச்சை கேட்டு தான் தம்பி விஜயராஜ் உணர்வு பெற்றதாக சொல்கிறார்கள். நம்முடைய பேசும் எழுத்தும் எதிரிகளை வீழ்த்தவில்லையே ஆற்றாமையில் தன்னை மாய்த்து கொள்கிற தோழர்களை வீழ்துகிறதே என்ற வேதனை என்னை வாட்டுகிறது.

நாம் உணர்ச்சிவசப்படுகிறோம். வலிமை உள்ளவனை எதிர்க்கும் போது அவன் எந்த தளத்தில் வலிமையாக உள்ளான் என ஆராய வேண்டும். எங்காவது பார்ப்பனர்கள் தீக்குளித்து பார்த்துள்ளீரா?! அவர்கள் யாரும் தீ குளிப்பதில்லை நாம் தான் செய்கிறோம்.

எண்ணிக்கை என்பது ஆள் வலிமை அல்ல ஒற்றுமையே வலிமை நாம் தனி தனி குழுக்களாக சிதறி உள்ளோம். இனி விஜயராஜ் போன்றவர்கள் தீக்குளித்தால் இனி வரமாட்டான் திருமாவளவன் என சொல்லலாமா என

தோன்றுகிறது. இது ஊக்கப்படுத்துவது போல் ஆகிறது உயிர் தியாகம் அளப்பரியது; மதிக்கிறோம் தலை வணங்குகிறோம்.

ஆனாலும் இது போல் தன்னையே மாயத்துகொள்வது ஏற்புடையது அல்ல. கரும்புலிகள் நூறு எதிரிகளை அழித்துவிட்டு தன்னை அழித்துகொள்வார்கள். உயிரை மாய்த்துகொள்ள நினைத்தால் தனுவாக மாறுங்கள் கரும்புலியாக மாறுங்கள்.

நம்மை அழித்துக்கொள்வது மேலும் நம் எண்ணிக்கையை குறைக்கும். ஆதரவு சக்திகள் கை கோர்க்க வேண்டும். ஆறரை கோடி தமிழர்களில் ஆறு லட்சம் தமிழர்கள் கூட ஒன்று சேர முடியவில்லையே...வேதனை.

இந்தியாவில் காங்கிரஸ் வேறு, பாஜக வேறல்ல காங்கிரஸ் -கதர் போட்ட காவியினர். காவி போட்ட கதர் பாஜக...இவர்கள் இருவருமே ஈழ விசயத்தில் எதிரானவர்கள்..

நாம் வெல்ல இரெண்டே வழி தான். ஒன்று எதிர்த்து நின்று மோதி எதிரியை வீழ்த்துவது. மற்றொன்று அவனுடன் தோழமை பாராட்டி நட்பு பாராட்டி புரிய வைத்து நம் எண்ணத்திற்கு உடன்பட வைப்பது அந்த வகையில் நாம் இந்தியாவை பகைத்துக்கொண்டு ஈழத்தை சாத்தியபடுத்த இயலாது.

எனவே தோழர்களே இனி நாம் உணர்ச்சி சார்ந்து மட்டும் இயங்காமல் அறிவு சார்ந்து இயங்கி ஒன்றுபடும் விசயத்தில் நாம் ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துவோம். இனி யாரும் தங்களை மாய்த்துகொள்ள வேண்டாம் என்று கூறினார் திருமாவளவன்.