சென்னையில் தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை ஷோபனா மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
சென்னை, கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெயராமன் - "வைரம் ராணி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஷோபனா (32); துணை நடிகை. நடிகர் வடிவேலுவுடன் "ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். இது தவிர, நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன், காமெடி சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். நேற்று முன்தினம் பிற்பகல், வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பிய ஷோபனாவின் தாய் ராணி, வீட்டை திறந்து பார்த்த போது, அங்கு தூக்கில் பிணமாக ஷோபனா தொங்கிக் கொண்டிருந்தார்.
கோட்டூர்புரம் போலீசார், ஷோபனாவின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, நேற்று மாலை ஷோபனாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோலில் நடித்து, ரசிகர்களிடம் பிரபலமான ஷோபனாவின் இந்த தற்கொலை முடிவில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு படங்களில் நடித்து வந்த ஷோபனா, படங்களில் உடன் பணியாற்றிய நபர் ஒருவரின் காதல்வலையில் சிக்கியுள்ளார். முதலில் திருமணம் செய்து கொள்வதாக கூறிய அவர், இறுதியில் மறுத்து வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்த விரக்தியில், திருமணமே வேண்டாம் என்ற முடிவில் ஷோபனா உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் நடித்த படங்களில் கிடைத்த குறைவான சம்பளம், அவரை மிகுந்த கஷ்டத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதற்கிடையில், அடிக்கடி ஆஸ்துமா தொல்லை ஏற்பட்டதாலும், உடன் மஞ்சள் காமாலை, சிக்குன்-குனியா போன்றவற்றின் தாக்குதலாலும், தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். உடலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு செலவு செய்ய முடியாதது, காதல் தோல்வி இவை இரண்டும் ஷோபனாவின் மனதை பாதித்திருந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும், தற்போது வரை ஷோபனாவின் தற்கொலைக்கான காரணத்தை போலீசாரால் சரியாக அறியமுடியவில்லை.
தற்கொலைக்கு காரணமாக சொல்லப்படும் வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகள் உண்மைதானா என்பதை அறிய, பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், ஷோபனாவின் தாயார் வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஷோபனா தூக்கிடுவதற்கு முன், யாராவது வந்து சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர, ஷோபனாவின் தோழிகள், உடன் பணியாற்றியவர்கள், முன்னாள் காதலனிடமும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இவர் இறந்த செய்தியே உங்கள் வலைத்தளத்தை பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன்
ReplyDeleteவருத்தமான செய்தி
@THOPPITHOPPI
ReplyDeleteநன்றி நண்பரே ...
இன்று பழம்பெரும் நடிகர் சிலோன் சின்னையா காலமானார். ஆனால், அந்த செய்தியை வலைத்தளத்தில் போட முடியவில்லை