Monday, January 30, 2012

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ரோஷன்!


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி ரொம்ப ஹாட் என்று நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவி்ததுள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் சிக்கென்று இருக்கிறார். அப்படி கட்டுக்கோப்பாக உடம்பை வைத்திருக்கும்போதே ஷாருக் பிரியங்கா சோப்ரா இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் கௌரி கான் ரொம்ப ஹாட் என்று நடனத்தாலும், பார்வையாலும் வசீகரிக்கும் ரித்திக் ரோஷன் சொல்லியுள்ளார்.

ரித்திக் சொல்வது உண்மை தான். நடிக்காவிட்டாலும் பாலிவுட் நடிகை போன்று உடல்வாகு உள்ளவர் கௌரி. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வோக் பத்திரிக்கையின் அட்டையில் கௌரியின் படம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கௌரியை பாலிவுட்டின் முதல் பெண்மணி என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டில் அவர் தனது கணவர் ஷாருக்குடன் சேர்ந்து இயக்குனர், பேஷன் டிசைனர் கரண் ஜோஹாரின் பேஷன் ஷோவில் கேட் வாக் செய்தார். தற்போது ஷாருக் பிரியங்கா சோப்ராவுடன் அதிக நேரம் செலவழிப்பதால் கௌரி டென்ஷனில் உள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டால் தகராறு தான் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து ஷாருக்கும் வாய்திறக்கவில்லை, பிரியங்காவும் அமைதி காத்து வருகிறார்.

இப்படி இருக்கையில் ஏன் ரித்திக் ரோஷன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை..!


காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்


பிரபல காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோருடன் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இடிச்சபுளி செல்வராஜ் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. நந்தனம் சத்தியமூர்த்தி நகரில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது. இவருக்கு செல்வம் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர். இடிச்சபுளி செல்வராஜின் தம்பிதான் நடிகர் பாண்டு.


கோட்சேவை மடக்கி பிடித்த வீரரின் குடும்பம் வறுமையில் தவிப்பு!


நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை இதே நாளில் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த ஒரு வீரரின் குடும்பம் இன்று வரை வறுமையால் தீரா சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மகாத்மா காந்தியை டெல்லி பிர்லா மாளிகையில் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றான். காந்தியை படுகொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற கோட்சேவை தீரமுடன் மடக்கிப் பிடித்த வீரரின் பெயர் தேவ் ராஜ் சிங் தாகூர்.

1952-ம் ஆண்டு நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் கையால் வீரதீர செயலுக்கான விருதைப் பெற்றவர்.

இமாசலப்பிரதேசத்தின் நகான் நகரில் தாகூரின் குடும்பம் வசித்து வருகிறது. இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த தாகூருக்கு மனநிலை பாதிக்கப்பட கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. 14 ஆண்டுகாலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் 1987-ல் தாகூர் காலமானார்.

தாகூர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் வறுமையோடு போராடி வருகிறது.

நாட்டின் தேசப்பிதாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பிடித்துக் கொடுத்த வீரர் என்ற அடிப்படையில் அரசுப் பணிக்காக இமாசலப்பிரதேச அரசிடம் அவரது குடும்பம் நீண்டகாலமா கோரிக்கை விடுத்தாலும் நிறைவேறியபாடில்லை. இதுபோன்ற அடிப்படையில் எல்லாம் அரசுப் பணி வழங்க முடியாது என்பதில் இமாசலப்பிரதேச அரசு அதிகாரிகள் பிடிவாதம் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் ஜனவரி 30-ந் தேதி மகாத்மாவை நினைவுகூறும் நமக்கு கோட்சேவின் நினைவும் வராமல் போவது இல்லை... இருவரது பெயரும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதை போல தேவ்ராஜ்சிங் தாகூரின் பெயரும் இடம்பெற வேண்டும்.


'1.5 நயன்' - டோலிவுட்டில் ஒரே புகைச்சல்!


நயன்தாரா தான் நடிக்கவிருக்கும் புதிய தெலுங்குப் படத்திற்கு வாங்கியுள்ள சம்பளத்தைக் கேட்டு டோலிவுட்டில் ஒரே புகைச்சலாய் இருக்கிறதாம்.

நயன்தாரா பிரவுதேவாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதனால் அவர் சினிமாவுக்கு குட்பை சொன்னார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்த நயன் கண்ணில் அருவி கொட்டியது. இந்நிலையில் பிரவுதேவா-நயன் இடையே லடாய் ஏற்பட்டு அவர்கள் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒன்றரை கோடி ரூபாய். நடிக்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போன நடிகையை வலியக்க அழைத்து வந்து இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கிறார்களே என்று தெலுங்கு பட உலகில் உள்ள பலருக்கும் வயிற்றெச்சலாம்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகைகளுக்குக் கூட இந்த சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது தான் பலரையும் கடுப்பாக்கியுள்ளது.

இப்பவே ஒன்றரை கோடி என்றால் இனிமேல் எவ்வளவு வாங்குவாரோ?



ரகசியமாக ! எளிமையாக நடந்த ரஜினியின் ' கோச்சடையான் ' பூஜை


ரஜினி உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து அவர் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க இருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

' கோச்சடையான் ' படத்தில் சரத்குமார், சிநேகா, ஆதி மற்றும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். படத்திற்கான இசையமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவ்வாறு அனைத்து பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் ரஜினி படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்கிறார், படத்தின் பூஜை என்று நடைபெற இருக்கிறது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.

' கோச்சடையான் ' படத்தின் பூஜை மிகவும் எளிமையாக நடைபெற்று இருக்கிறது. இது குறித்து லதா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் இணையத்தில் "   மலர்கள்..  ஆரத்தி.. ( பட ) பூஜைக்காக தேங்காய் உடைக்கப்பட்டது.. மீண்டும் என் கணவர் மேக்கப் சேரில் அமர்ந்திருக்கிறார்.. கோச்சடையான் !  இது அற்புதமாக தருணம்.  "என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினிகாந்த் தன் தந்தையுடன் கோச்சடையான் வேலைகளைத் தொடங்கியது குறித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Sunday, January 29, 2012

ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்- மனைவி லதா பேட்டி



சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மனைவி லதா அளித்த பேட்டி விவரம் வருமாறு:- 

கேள்வி:- சூப்பர் ஸ்டாரின் மனைவி என்ற வகையில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுவதுண்டு. அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பதில்:- இது சுலபமானது அல்ல. கண்ணாடி வீட்டுக்குள் வசிப்பது போன்றது. மற்றவர்கள்போல் சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுவதில்லை. பொதுமக்கள் பார்வையில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. 

கேள்வி:- உங்கள் கணவர் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏதாவது விளைவுகள் ஏற்பட்டுள்ளதா?

பதில்:- நிறைய விளைவுகளை சந்தித்து இருக்கிறேன். அதன் வாயிலாக ஏராளமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், வீட்டில் சூப்பர் ஸ்டார் என்ற உணர்வுடன் அவர் நடப்பதில்லை. ஒரு நல்ல குடும்ப தலைவராகவே நடந்து கொள்வார். 

கேள்வி:- உலகம் ரஜினியை சூப்பர் ஸ்டாராக பார்க்கிறது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக அவரை பார்க்கிறீர்கள். இந்த இரண்டு அம்சங்களையும் நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?

பதில்:- ரஜினியை உலகம் உயர்ந்த அந்தஸ்தில் வைத்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இதை எங்களுக்கு கிடைத்த ஆசியாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு இரண்டு பக்கங்கள் கிடையாது. எப்போதும் நல்லவராக, முக்கியமானவராகவே இருந்து வருகிறார். 

கேள்வி:- எப்போதும் பிஸியாக இருக்கும் ரஜினியால் எப்படி இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள முடிந்தது?

பதில்:- குழந்தைகளுக்கு எப்போதுமே அவர் ஒரு நல்ல தந்தையாக இருந்து வந்திருக்கிறார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குடும்பத்துடன், குழந்தைகளுடன் நல்ல முறையில் பொழுதை கழித்து வந்துள்ளார். விடுமுறை காலங்களில் எங்களை வெளியில் அல்லது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வார். 

கேள்வி:- உங்கள் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா இருவரும் சினிமா துறையில் ஈடுபட்டுள்ளனரே? உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவர்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். இதைதான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இருவரும் இயல்பாகவே மிகவும் திறமையானவர்கள். ஐஸ்வர்யா நல்ல எழுத்தாளர், பேச்சாளர், பாடகர் மற்றும் நடனம் ஆடக்கூடியவர். சவுந்தர்யா ஒரு நல்ல ஓவியர். சினிமாவில் அவர்களுக்கு பிடித்த துறையை அவர்களாகவே தேர்வு செய்துள்ளனர். 

கேள்வி:- பிசியான வாழ்க்கையில் கல்வியாளர், சமூக சேவகர். இப்படி உங்களை எப்படி மாற்றிக் கொள்ள முடிந்தது?

பதில்:- இது ஒரு தனிமனித வாழ்க்கையின் ஒரு அங்கம் என்று கருதுகிறேன். நானும், எனது கணவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இருவருமே பக்தி மார்க்கம் கொண்டவர்கள். அவரிடம் கூடுதலாக ஞானமார்க்கமும் உண்டு. 

கேள்வி:- உங்கள் கணவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:- இதுபற்றி அவரிடம் நான் பேசவில்லை. பேசவும் முடியாது. ஆனால், அவரால் நிறைய நல்ல காரியங்களை செய்ய முடியும் என்பதை உறுதியாக கூறுவேன். அவர் எப்போதுமே தன்னால் முடிந்த தர்ம காரியங்களையும், உதவிகளையும் செய்து வருபவர். அரசியலுக்கு வருவது முழுக்க முழுக்க அவரது விருப்பத்தை பொருத்தது. ஆனால், எதை அவர் செய்தாலும், அதை நல்லவிதமாக செய்வார். 

இந்த விஷயத்தை பொருத்தவரை அவரிடம் இருந்தே விருப்பம் வெளிப்பட வேண்டும், அவரிடம் இருந்தே தகவல் வரவேண்டும் என்று விரும்புகிறேன். அரசியல் உள்ளிட்ட எந்த விஷயத்திலும் அவரை நான் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டேன். என்னைப் பொருத்தவரை, அவரது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட உணர்வுகள் முக்கியம். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லதே செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.   இந்திய அணி தான் விளையாடிய 4 டெஸ்டிலும் தோற்று மிகுந்த அவமானம் அடைந்தது. மெல்போர்ன் டெஸ்டில் 122 ரன்னிலும், சிட்னி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னிலும், பெர்த் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்னிலும், அடிலெய்ட்டு டெஸ்டில் 298 ரன்னிலும் மோசமாக தோற்றது.

இந்திய அணி 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் (0-4) செய்யப்பட்டது. தொடர்ச்சியாக இப்படி நடந்துள்ளதால் வீரர்கள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.

வெளிநாட்டில் இந்திய அணி தொடர்ந்து 8 தோல்வியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக இந்திய அணியை அதிரடியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

டோனி தற்போது 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி) கேப்டனாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக அவரது டெஸ்ட் கேப்டன் பதவி பிறக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுக்கிறது.

இந்திய டெஸ்ட் அணியின் மாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் கேப்டன் பதவியை இழக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டியில் டோனி கேப்டனாக நீடிப்பார். டெஸ்ட் தொடர் நடை பெற்றுக் கொண்டு இருக்கும் போதே 2013-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக டோனி அறிவித்திருந்த முடிவால் அவர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்துள்ளது. அந்த நேரத்தில் 2013-ம் ஆண்டை பற்றி டோனி பேச தேவையில்லை என்று கிரிக்கெட் வாரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவரது இந்த அறிவிப்பு அணிக்குள் பிளவு இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மோசமான தோல்வி, அவரழ நடவடிக்கை ஆகியவற்றின் எதிரொலியாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. 

டோனிக்கு பதிலாக டெஸ்ட் அணிக்கு ஷேவாக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஷேவாக்கை பொறுத்தவரை அவர் தனது வழியில் செயல்படுவார். டோனியின் வழியை பின்பற்ற மாட்டார் என்று தெரிகிறது. 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்யும் முறை, பீல்டிங் அமைக்கும் முறை ஆகியவை பற்றி தானே முடிவு செய்துக் கொள்வார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஷேவாக் முன்னுரிமை கொடுப்பார். சீனியர் வீரர்களான தெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு டோனியின் கேப்டன் பதவியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஷேவாக் தலைமையில் விளையாடுவதில் பிரச்சினை இருக்கலாம்.

இதற்கிடையே சீனியர் வீரர்கள் யாரும் ஓய்வு பெற மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெஸ்டில் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவர்கள் என்று தெரிகிறது. சீனியர் வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ரோகித்சர்மா, ரெய்னா, புஜாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உ .பி :தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் அதற்க்கு காரணம் ராகுல்: பவார் பாய்ச்சல்


உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் ,அந்த பழி  ராகுல் காந்தியை சேரலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார் .

மேலும் ,ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியில் ஒரு முக்கிய அங்கமாக  இருக்கும் வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில்:காங்கிரஸ் முக்கிய மாநிலங்களில் நன்கு என்றாலும் உடனடியாக ராகுல் காந்தியை  பிரதமர் வேட்பாளர் என்று கணிக்க சாத்தியம் இல்லை.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முக்கிய பிரச்சாரகரார் திக்விஜய் சிங் மற்ற வேறு எந்த தலைவர்களும் இல்லை காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் எதுவும் சொல்லலாம் ஆனால் தேர்தல் பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம் அது அவர்களிடம் இல்லை

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்  நல்ல முடிவுக்கு பிறகு உடனடியாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்பது   எனக்கு தெரியாது. காங்கிரசின் அடுத்த திட்டம் கூட எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.தேசிய தலைமையில் பிரதமர் வேட்பாளர்  என்ற அடிப்படையில் எந்த மாற்றத்தையும் இன்று வரை நான் பார்க்கவில்லை என கூறினார்.


கலாமின் "புரா' திட்டம் அமலுக்கு வருகிறது


கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, அப்துல்கலாம் முன்வைத்த, "புரா' திட்டத்தை கொண்டு வருவது குறித்தும், தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்குவதும் குறித்தும், தலைமைச் செயலருடன் அணுமின் நிலைய அதிகாரிகள், பேச்சு நடத்தி உள்ளனர். இதற்கு, மாநில அரசு ஒப்புதல் அளித்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கியுடன், இந்திய அணுமின் கழக அதிகாரிகள், மின்வாரிய சேர்மன், எரிசக்தி துறை செயலர் ஆகியோர், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர்.

கூடுதல் மின்சாரம் : 

இதில், தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் குறித்து, எரிசக்திதுறை செயலர் விளக்கி இருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் உற்பத்தி துவங்கியதும், 1,000 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக, தமிழகத்திற்கு தர வேண்டும்; அதன்பின், இரண்டாவது உலையில் உற்பத்தி துவங்கியதும், கேரளா, புதுவை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு தரலாம் என, அவர் பரிந்துரைத்து உள்ளார். இதுதவிர, தமிழகத்திற்கு கல்பாக்கத்திலிருந்து, 75 சதவீத மின்சாரம் தருவது போல், கூடங்குளத்தில் இருந்தும், 75 சதவீத மின்சாரத்தை தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூடங்குளம் பகுதி மக்களுக்கு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றும், அரசின் சார்பில் பேசப்பட்டுள்ளது; தற்போது செய்த சமூக பாதுகாப்பு மக்கள் திட்டங்கள் போதாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"புரா' திட்டம் : 

இதற்கு, அணுமின் கழக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி, தப்கீர், பதில் அளிக்கையில், "அப்துல்கலாம் பரிந்துரைந்த, "புரா' திட்டப்படி, மீனவர்களுக்கு குளிர்பதன கிடங்குகள், கப்பல் இறங்குதளம், உயர்தர மருத்துவமனை, கல்வி மையங்கள், அதிக வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை செய்து தர முடியும்' என, கூறி உள்ளார்.

மாநில அரசு ஒப்புதல் :

இதை தமிழக அரசு ஏற்று, வரும் 31ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில், அணு எதிர்ப்புக் குழுவினருடன் சமரசம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும்; அணு எதிர்ப்புக் குழுவின் மூலமே, அப்பகுதி மக்களுக்கு அச்சம் தீர்க்கவும், அவர்களுக்குரிய கூடுதல் நலத்திட்டங்களை மேற்கொள்வது குறித்தும், பேச்சு நடத்தப்படும் என, தமிழக அரசு தரப்பில் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு, தமிழக அரசு மற்றும் அணுமின் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.



தி.மு.க., அறிவாலயத்துக்கு சிக்கல் : 'அனாதை இல்லம்' என்ற பெயரில் ஆக்கிரமிப்பு


ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று, சென்னை மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். இதனால், அறிவாலயஇடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும் கேள்வி நேரம் நடந்தது. கவுன்சிலர் ஆறுமுகம் (எ) சின்னையன், ""அறிவாலயத்தில் திறந்த வெளி நிலங்களுக்கு சி.எம்.டி.ஏ., மூலம் தான பத்திரம் வழங்கி, பத்திரப்பதிவு செய்திருக்கின்றனரா, பொதுமக்கள் அங்குள்ள பூங்காவை பயன்படுத்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து சைதை துரைசாமி பேசியதாவது: கடந்த 1980ல் எம்.ஜி.ஆர்., ஆட்சி கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சியின் போது, தி.மு.க., அறக்கட்டளை ஒரு கோரிக்கை வைத்தது. அறிவாலய இடத்தில் பல மாடி கட்டடம் கட்ட, அரசாணை வெளியிடப்பட்டது. இதில், 10 சதவீத திறந்தவெளி நிலத்தை, அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சில சலுகைகள் கேட்டு அரசாணையில் திருத்தம் வேண்டி மேல்முறையீடு செய்தனர். அது நிலுவையிலேயே இருந்தது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், கவர்னர் ஆட்சியின் போது, "அனாதை இல்லம்' கட்டுவதாகக் கூறி, அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றனர். கடந்த 2004ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, அறக்கட்டளைக்கு அனுமதி அளித்ததை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்து தி.மு.க., ஆட்சிவந்ததும், 2007ம் ஆண்டில்,தி.மு.க., அறக்கட்டளை எழுதிய விளக்க கடிதத்தை ஏற்று, மேல் நடவடிக்கை தேவையில்லை என கோப்பு முடிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் இல்லம் கட்ட சிறப்பு அனுமதி பெற்று, இதுவரை அதை செயல்படுத்தாமல் இருப்பதால், தி.மு.க., அறக்கட்டளை திறந்தவெளி நிலத்தை பதிவு செய்யாமல் பெற்ற சிறப்பு ஆணையை ரத்து செய்யவும், நிலத்தை மாநகராட்சிக்கு வழங்க அரசு ஆணை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு பரிந்துரைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவர்களை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதனால், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. "அந்த இடத்தில் பூங்கா உள்ளது; பொது நூலகம் உள்ளது. மன்றத்தில் தவறான தகவல்களை மேயர் தருகிறார்' எனக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர்
போஸ் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் போஸ் கூறும்போது, ""தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச அனுமதிக்கப்படுவதில்லை. வீடியோகிராபர்களை உள்ளே அனுப்ப மறுக்கின்றனர். மன்றம் மன்றமாக நடக்கவில்லை. மேயர் சர்வ அதிகாரம் படைத்தவர் போல் செயல்படுகிறார். எனவே,வேறு வழியின்றி தான் வெளிநடப்பு செய்தோம்,'' என்றார். கவுன்சிலர் மீது தாக்குதல்: தி.மு.க., கவுன்சிலர் வாசு, "விரிவாக்கப் பகுதிகளில் ஏற்கனவே கட்டிய கட்டடங்களின் மேல், கட்டடம் கட்டப்படுகிறது. இதில் விதிமீறல் இருந்தால் என்ன செய்வது' என, கேள்வி எழுப்பினார். பதிலளித்த மேயர், "எவ்வித கட்டடமாக இருந்தாலும், விதிமுறைப்படி தான் கட்ட வேண்டும். புதிதாக கட்டுமானப் பணி துவங்கும்போதே, விதிமுறை மீறல் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது' என்றார். வாசு மேலும் கேள்விகள் கேட்க முயன்றபோது, "ஒரு துணை கேள்வி தான்; அதற்கு மேல் அனுமதிக்க முடியாது,'' என்று மேயர் அனுமதி மறுத்தார். அப்போது வாசு, மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். வெளியேறிய வாசுவை, பெண் கவுன்சிலர்கள், கையில் இருந்த தீர்மான நோட்டு மற்றும் கைகளைக் கொண்டு தாக்கினர். ஆத்திரமடைந்த கவுன்சிலர் சத்தம் போட்டுக் கொண்டே மேயர் இருக்கை நோக்கிச் சென்றார். அவரது சத்தம் கேட்டு, தி.மு.க., கவுன்சிலர்களும் வந்தனர். மேயர் இருக்கை அருகே சென்று தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் வெளியேறினர்.