Sunday, July 31, 2011

ராசாத்தி அம்மாளின் கணக்குப் பிள்ளை கைது

திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் கணக்காளரான ரமேஷ் இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தி்ல ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நிர்மலா தேவி உள்ளிட்ட 31 பேர் நில அபகரிப்புப் புகார் கொடுத்தனர்.

அதில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ரமேஷ் மிரட்டிப் பறித்துக் கொண்டதாக கூறியிருந்தனர். தான் ராசாத்தி அம்மாளிடம் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும், எனவே என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வந்த போலீஸார் இன்று ரமேஷைக் கைது செய்தனர்.
நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டு வெளியேற்ற கோரிக்கை

 இந்து மதத்தையும், தர்மத்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நித்தியானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஞானசம்பந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.

நித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா.

கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தா தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்று அவர் எச்சரித்தார்.
2ஜி விவகாரத்தில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது-பிரதமர் மன்மோகன் சிங்

 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் கோர்ட் முன்பு விசாரணையில் உள்ளது. எனவே இதில் நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது. அது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதையொட்டி லோக்சபா சபாநாயகர் மீரா குமார் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள் பிரதமரை சந்தித்தனர். அப்போது பிரதமர் கூறுகையில், 2ஜி விவகாரம் கோர்ட் விசாரணையில் உள்ளது. எனவே அதுகுறித்து நாடாளுமன்றத்தில் எந்த முடிவும், தீர்ப்பும் எழுதப்படக் கூடாது. அதைத் தவிர்க்க வேண்டும். கோர்ட்தான் இதில் தீர்ப்பெழுத வேண்டும்.

லோக்பால் வரைவு மசோதா தயாராகி விட்டது. அதன் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டியது நாடாளுமன்றம்தான். ஜனநாயகத்தில், நாடாளுமன்றம் என்பது இறையாண்மை மிக்க, சுயாட்சி மிக்க ஒரு அமைப்பு. அது சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தெலுங்கானா பிரச்சினைக்கு விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றார் சிங்.
கருணாநிதியின் இலங்கை 'ஆதரவு'ப் பேச்சு!

 இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த விவரம் தெரியாமல் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டப் பேரவையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் தான் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டதாகச் சிலர் பாராட்டுகின்றனர். தொல்.திருமாவளவன் கூட ஓர் அறிக்கையில் அது உண்மையாக இருக்குமோ என்று எண்ணி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான குழு, போர்க் குற்றங்களை அடுத்து இலங்கை அரசுக்கு உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக உறுதி அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது.

2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந்துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.

இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தியச் சுற்றுப் பயணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசிடமும் விவாதிக்க மாட்டார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்று தெரியாமல் அதிமுகவின் தொண்டர்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி வருகின்றனர்.

இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஐ.நா.சபை அவருக்கு கௌரவ விருது வழங்கப் போகிறது என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் ஐ.நா.சபையின் அங்கீகாரம் பெற்ற அரசு சாரா அமைப்புகள் 2 ஆயிரத்து 531 ஆகும். இந்த அமைப்புகள் எதுவும் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.

அதற்குள் ஐ.நா.சபையின் ‘தங்கத் தாரகை விருது' என்றெல்லாம் விளம்பரப் படுத்தினார்கள். அதைப்போலவே இப்போதும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துவிட்டது என்று செய்தி பரப்புகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
'ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர், சோனியா, சிதம்பரத்தின் பதில் என்ன?'

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவின் குற்றச்சாட்டுக்கள் மிகக் கடுமையானவை. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பதிலளித்தாக வேண்டும் என்று அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக நடந்த செயற்குழுக் கூட்டம் என்பதால் அதிமுகவினர் பெரும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தி்ல பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்த விவரம்:
ஜெயலலிதாவுக்குப் பாராட்டு-வாக்காளர்களுக்கு நன்றி
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் அராஜகங்களையும், அத்துமீறல்களையும் தவிடு பொடியாக்கி, அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்து, மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மற்றும் புதுச்சேரி வாக்காளப் பெருமக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த கழக தொண்டர்களுக்கும், தோழமை கட்சியினருக்கும், நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுகள்
- சட்டமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறது.

- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல் கட்டமாக, குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி; முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகையை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு; மணப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் செய்ய உதவித் தொகையுடன் 4 கிராம் இலவச தங்கம்; மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், உதவித் தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிப்பு; பெண் அரசு ஊழியர்களுக்கு 6 மாத கால மகப்பேறு விடுமுறை என தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஜெயலலிதாவின் துணிச்சலுக்கு பாராட்டு
- சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இடம்பெறும் வகையில் மிகத் துணிச்சலாக தீர்மானத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதாவை செயற்குழு மனதார பாராட்டுகிறது.

- இதுமட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது, பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறி இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும்; அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும்; உணர்வுபூர்வமாக தனது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தினை கூர்ந்து கேட்ட ஹில்லாரி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க அரசு சிந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பிற்கு பின்னர், இலங்கை போரின் போது ஏற்பட்ட போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்று விளக்கம் அளிக்கத் தவறினால், அந்நாட்டுக்கு வழங்கப்படும் அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்க அரசு நிறுத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளி விவகாரக் குழு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை சாதுர்யத்துடனும், விவேகத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கும் வண்ணம் நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சாதனைப் படைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.

மேல்சபை ரத்துக்குப் பாராட்டு
மேல்-சபை தேவையில்லை என்று சட்டசபையில் தீர்மானம், 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த ஆணை, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டி மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ வழி செய்தது, நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்திட தனி நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றுக்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறது.

- முதல்வர் கோரிக்கையினை ஏற்று, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில், கண்காணிப்பு குழுக்களை அமைத்திடவும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

- மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்திற்கு முன்பே பாசனத்திற்கு தண்ணீரை திறந்துவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.

- இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை, கடலோரப் பாதுகாப்பினை பலப்படுத்துதல், மீனவளத் துறையை நவீனப்படுத்த சிறப்பு தொகுப்பு நிதி, மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிதியுதவி, மோனோ ரெயில் திட்டத்திற்கு நிதி உதவி, மாணவ-மாணவியருக்கான இலவச மடிக் கணினி திட்டத்திற்கு நிதி உதவி, தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு நிதி உதவி, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், திட்டக் குழு பொறுப்புரிமை ஒப்படைப்பின் கீழ் வழக்கமான மத்திய அரசின் நிதி உதவியை அதிகரித்தல், பொது விநியோகத் திட்டத்திற்கு கூடுதல் மானியம், சூரிய எரிசக்தியுடன் கூடிய பசுமை வீட்டு வசதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர், பிரதமரிடம் நேரில் அளித்தார். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

- தமிழகத்துக்கு கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தை மத்திய தொகுப்பிலிருந்து அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்க
- காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அண்மையில் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்திவிட்டது. இதன் காரணமாக, அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயர்த்தப்பட்ட டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

பிரதமர், சோனியா பதில் சொல்ல வேண்டும்
- இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையில், பிரதமர் மீதும், மத்திய உள்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய அமைச்சர் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பல நாட்களாகியும், இதுகுறித்து பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக இருப்பவரும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த இமாலய ஊழலில் உள்ள உண்மையை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து முறையான பதிலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், பிரதமர் மீதும், உள்துறை அமைச்சர் மீதும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என பிரதமரையும், மத்திய உள் துறை அமைச்சரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவரையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

கேரளாவின் திட்டத்தை தடுத்து நிறுத்துக
- முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

- வேளாண் உற்பத்தியில் உயரிய இலக்கை எய்தும் வகையில், தமிழ்நாட்டிற்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் இதர உரங்களை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசை செயற்குழு வலியுறுத்துகிறது.

- இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள சூழ்நிலையில், 1983-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை தற்போது மீண்டும் துவக்கி இருப்பது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்துள்ளது. தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

- தி.மு.க. ஆட்சியில் நிலவிய வரலாறு காணாத நூல் விலை உயர்வு காரணமாகவும், தொடர் மின் வெட்டு காரணமாகவும் ஜவுளித்தொழில் முடங்கிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு அனுமதித்தது தான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. எனவே பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மண்ணெண்ணெய் வழங்குக
- தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போதுமான அளவு மண்ணெண்ணெயை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

- மாநில சுயாட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான 2011-ம் ஆண்டு வகுப்புவாரி மற்றும் இலக்கு வன்முறை (நியாயம் மற்றும் இழப்பீடு வழங்க வழிவகை செய்தல்) தடுப்புச் சட்ட முன்வடிவை உடனடியாக கைவிட மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

சாயப் பிரச்சினையைத் தீர்த்து வைத்த ஜெ.வுக்கு நன்றி
- தி.மு.க. அரசால் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த திருப்பூர் சலவை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றத்தில் பூஜ்ய நிலையை எட்டும் வகையில் உள்ள இரண்டு தொழில்நுட்பங்களில் எந்த தொழில்நுட்பத்தை கடைபிடிக்கலாம் என்பது குறித்து இரண்டு மாதங்களில் ஆராய்ந்து முடிவு எடுப்பது என்றும்; அதற்குரிய செலவான 200 கோடி ரூபாயை வட்டியில்லா கடனாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தமிழக அரசே வழங்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையான 18 கோடியே 38 லட்சம் ரூபாயை உடனடியாக தமிழக அரசே வழங்க ஆணையிட்டுள்ளார். திருப்பூர் பகுதியில் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தி, பல ஆண்டு கால பிரச்சினையை விரைந்து தீர்த்து வைத்த முதல்வருக்கு இச்செயற்குழு தனது பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது.

- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாணவ-மாணவியருக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டத்தையும், தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்க ஆணையிட்டுள்ள பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை இச்செயற்குழு பாராட்டுவதுடன், தனது நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வீரபாண்டியாருக்கு 'ராயல் சல்யூட்'-போலீசார் அதிரடி மாற்றம்!

 போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்த போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகி பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக காவல் நிலையம் வந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு விஐபி மரியாதை தான்.

வீரபாண்டியார்தான் தங்களுக்கு அமைச்சர் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ, வீரபாண்டியாரை ராஜ மரியாதையுடன் வரவேற்றனர் போலீஸார்.

அவருக்கு வீட்டு சாப்பாடு கொடுத்து, பார்வையாளர்களை அனுமதித்து இன்னாள் அமைச்சரை விட அதிகப்படியாக கவனித்துக் கொண்டனர்.

இந்த உபச்சாரம் பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த அதிகாரிகள், அப்போது பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் நகர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாஸ்கரன், சென்னை பரங்கி மலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சத்யப்பிரியா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 29-ம் தேதி பதவியேற்றார் மறுநாளே வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

அப்போது விசாரணைக்கு வந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சல்யூட் அடித்த நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் அண்ணாதுரை, அழகாபுரம் ஆய்வாளர் கண்ணன் ஆகிய இருவரும் நேற்று (30-ம் தேதி) ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டனர்.

விசாரணையை ஒழுங்காக நடத்தாதற்காகவும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ராஜ மரியாதை கொடுத்ததற்காகவும் உதவி ஆணையாளர் பிச்சை, ஆய்வாளர்கள் சங்கமேஸ்வரன், சீனிவாசன் ஆகிய மூவரும் நேற்று வேறு இடம் ஒதுக்கப்படாமலேயே மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருக்கையில் அவருக்கு விசுவாசமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாவும், விரைவில் அவர்கள் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


'நல்ல நேரம்' பார்த்து ராஜினாமா கடிதத்தை கத்காரிக்கு அனுப்பிய எதியூரப்பா

 கர்நாடக முதல்வர் எதியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை இன்று கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜையும் அவர் சந்திக்கிறார்.

ஜோதிடர்கள் கூறிய அறிவுரையால் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்ப கால தாமதம் ஏற்பட்டதாகவும், கட்சித் தலைமைக்கு தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கத்காரிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார் எதியூரப்பா.

பெரும் சஸ்பென்ஸ் மற்றும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது ராஜினாமா கடிதத்தை இன்று கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அனுப்பி வைத்தார் எதியூர்பபா. கட்சித் தலைமைக்கு தான் முழு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருப்பதாகவும் அவர் கத்காரியைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இதையடுத்து ஆளுநர் பரத்வாஜையும் சந்தித்து தனது ராஜினாமா முடிவை எதியூரப்பா தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்க ஊழலில் சிக்கிய எதியூரப்பாவை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டது. இதற்கு ஒத்துக் கொண்ட போதிலும் தான் ஜூலை 31ம் தேதிதான் பதவி விலகுவேன் என்று கூறி விட்டார் எதியூரப்பா. மேலும், சதானந்த கெளடாவை முதல்வராக்க வேண்டும், தன்னை மாநில பாஜக தலைவராக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.

இந்த நிலையில் திடீரென பெருமளவிலான எம்.எல்.ஏக்கள் எதியூரப்பாவுக்கு ஆதரவாக கிளம்பியதால் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது பாஜக மேலிடம். இதனால் இதுவரை யார் அடுத்த முதல்வர் என்பது முடிவாகாமலேயே உள்ளது.

இந்த நிலையில் எதியூரப்பாவின் சில நிபந்தனைகளை ஏற்க பாஜக மேலிடம் முன்வந்ததாக தெரிகிறது. அதாவது அவர் கூறிய நபரை முதல்வராக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சதானந்த கெளடா முதல்வராகக் கூடும் என்று தெரிகிறது. அதேசமயம், எதியூரப்பாவுக்கு மாநில தலைவர் பதவி தர பாஜக மேலிடம் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரும் இழுபறியைக் கொடுத்து வந்து எதியூரப்பா இன்று தனது ராஜினாமா கடிதத்தை கத்காரிக்கு அனுப்பி வைத்தார். ஆளுநரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
தமிழ் இனத்தை அழித்த பழியை சுமக்கும் இந்தியா-இலங்கை எம்.பி.

ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும். இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்று ஈழத் தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சென்னையில் சிறப்பு மாநாடு நடந்தது. அதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. தற்போது தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றோ, சம உரிமை வழங்க வேண்டும் என்றோ இலங்கை அரசுக்கு நினைப்பே இல்லை. 

அன்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி நினைத்தது. ஆனால் அதன் நினைப்பு பொய்யாகிவிட்டது. தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அமோக வெற்றி பெற்றுத் தந்தனர்.

இலங்கை அரசு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் தான் செயல்படுகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயமாக்குவது, இரண்டாவதாக புத்தமயமாக்குவது, இறுதியாக சிங்களமயமாக்குவது தான் அதன் திட்டம். 

தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கவோ, சம உரிமை வழங்கவோ, சுமூகமான அரசியல் தீர்வு காணவோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.

இந்நிலையில் இலங்கை அரசு எந்த நாடு சொல்வதையும் கேட்கத் தயாராக இல்லை. ஆனால் இந்தியா சொல்வதை அதனால் மறுக்க முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கு வாங்கிக் கொடுக்க இந்தியாவால் மட்டுமே முடியும். 

ஈழத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இந்திய அரசால் மட்டுமே தீர்வு காண முடியும்.

இதைச் செய்ய இந்தியா இப்போது கூட முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தை அழித்த குற்றத்திற்கு இந்தியர்கள் துணை போனார்கள் என்று எதிர்கால வரலாறு கூறும் என்றார்.
கேரள மாணவி பாலியல் பலாத்கார வழக்கு-மேலும் 7 பேர் கைது

 கேரள மாநிலம் பரவூரை சேர்ந்த மாணவி கற்பழிப்பு வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் புரோக்கர் ஒருவர் கொடுத்த தகவலின் படி கொச்சியை சேர்ந்த ஜிஜோ ஆன்டனி, அனீஷ், சிஜோ ஆன்டனி, பாகினி், நிசாத், முகமது நியாஸ் மற்றும் தொடுபுழா பகுதியை சேர்ந்த பென்னி ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் மொத்தம் 130 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்-ஸ்டாலின்

எந்தக் காரணமும் இல்லாமல், சாதாரண திமுக தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். உச்சநீதிமன்றம் வரை சென்று நீதி கேட்போம், நியாயம் பெறுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மன்னார்குடியில், திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில்,

திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்வது போல் நாடகமாடி நிகழ்ச்சிகளை திசை திருப்ப அதிமுக முயற்சி செய்துள்ளது.

காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அச்சுறுத்தல், சர்வாதிகாரத்தால் திமுகவை அழித்து விட முடியும் என்று ஒருபோதும் கனவு காண வேண்டாம்.

நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கழகத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, கழகம் அழிந்ததாக வரலாறு கிடையாது. திமுக பல்வேறு வெற்றிகளையும், தோல்விகளையும் கண்ட இயக்கம். இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடியதுதான் திமுக.

சமச்சீர்க் கல்வியை அவசர அவசரமாக கொண்டு வரவில்லை. தலை சிறந்த நிபுணர்கள் மற்றும் பலதரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொண்ட பின்னரே கொண்டுவரப்பட்டது.

திமுக கொண்டுவந்த மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி வரும் ஜெயலலிதா, அதில் ஒன்றான புதிய தலைமைச் செயலகம் சாதாரண மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு கட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

2006 முதல் 2011 வரையிலான நிலஅபகரிப்பு புகார்களை பெறும் ஜெயலலிதா, 2001 முதல் அவரது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நிலம் அபகரிக்கப்பட்ட புகார்களை வாங்க மறுத்தது ஏன். திமுகவினர் மீது போடும் புகார்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதேசமயம் பொய் வழக்கு போடுபவர்களையும், தூண்டுபவர்களையும் உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று நியாயம் பெறுவோம்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 70 கொலைகள், 220 வழிப்பறி கொள்ளைகள் நடந்துள்ளன. திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ள ஜெயலலிதா, இவற்றையெல்லாம் யாருடைய ஆதரவாளர்கள் செய்தது என்று கூறவேண்டாமா என்றார் ஸ்டாலின்.
சென்னை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்பட 12 பேர் மீது நில மோசடிப் புகார்

 சென்னை ஆர்ச்பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்ளிட்ட 12 பேர் மீ்து ஏழைகளுக்காக வழங்கப்பட்ட 257 கிரவுண்ட் நிலத்தை மோசடி செய்து விட்டதாக பெரும் புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகாரை கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறையில் அது புகார் கொடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் டி மாண்டி. இவர் ஏழை, எளிய மக்களுக்காக தனக்குச் சொந்தமான 257 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இந்த இடம் உள்ளது. இந்த இடத்தை கத்தோலிக்க திருச்சபை தன் வசம் வைத்துள்ளது. இந்த இடத்தை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார், எம்.ஜி.எம். மாறன் உள்ளிட்ட 12 பேர் முறைகேடாக அபகரித்துள்ளதாக கத்தோலிக்க விசுவாசிகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக போலீஸில் அது புகார் கொடுத்துள்ளது.

இந்தப் புகார் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நில அபகரிப்புப் புகார்கள் பெருமளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சியினர் மீதுதான் நில அபகரிப்புப் புகார்கள் குவிகிறது என்றால் தற்போது சென்னை பிஷப் மீதும் நில அபகரிப்புப் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா-ஜெ. கடும் எதிர்ப்பு

தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு மசோதாவை திருத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
நீர்வளத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா-2010-ல் அடங்கியுள்ள சில ஷரத்துகளைப் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். அவை தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு விளைவிப்பவையாகும்.

அந்த மசோதாவின் 26(1)-ம் பிரிவில், `குறிப்பிட்ட அனைத்து அணைகளும், எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்தந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது மாநில அணை பாதுகாப்புப் பிரிவின் அதிகார எல்லைக்கு அவை உட்பட்டவை. அணைகள் சம்பந்தப்பட்ட அம்சங்களான, பாதுகாப்பு நிலை மற்றும் பழுது பார்த்து மேம்படுத்துவது, ஆய்வுகள், ஆய்வுத் தகவல்கள், அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவையும் இந்த அதிகாரத்துக்குள் வருகின்றன. எனவே அந்த அணையின் உரிமையாளரோ, வேறு மாநிலமோ, இந்த அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் கூறப்பட்டுள்ள `அணை அமைந்துள்ள மாநிலம்' என்ற வார்த்தை, எந்த ஒரு அணையும், அது அமைந்துள்ள அடுத்த மாநிலத்தின் அணை பாதுகாப்பு அமைப்பின் அதிகார எல்லைக்குள் (எஸ்.டி.எஸ்.ஓ.) வந்துவிடும் என்பதை தெளிவாக்குகிறது.

மாநில அரசுக்குச் சொந்தமான அணையின் ஒரு பகுதி மற்ற மாநிலத்தின் எல்லையில் அமைந்திருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளரான மாநிலம் மேற்கொள்ளும் அணை பாதுகாப்பு, செயல்பாடு, பராமரிப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவதுபோல் அமைந்துள்ளது.

முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் அணை, துனகடவு அணை, பெருவாரிபள்ளம் அணை ஆகிய 4 அணைகளும் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன. அவை தமிழக அரசுக்கு சொந்தமானவை. அவற்றை தமிழக அரசு இயக்கி, பராமரித்து வருகிறது.

ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த அணை பாதுகாப்பு மசோதா-2010 நிறைவேற்றப்பட்டால், தமிழகத்துக்கு மிகப் பெரிய இடையூறை அது ஏற்படுத்திவிடும். ஏனென்றால், தமிழ்நாட்டுக்கு சொந்தமானவை என்றாலும், இந்த மசோதா மூலம் அந்த 4 அணைகளும் கேரளா அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதனால் அந்த அணையின் பாதுகாப்பு, இயக்கம், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை உருவாக்கிவிடும்.

எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மசோதாவில், சில திருத்தங்களையும், இணைப்புகளையும் கொண்டு வருவது அவசியம். அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருப்பதற்கான வாசகங்களை அதில் சேர்க்க வேண்டும். அதுபோல் 26(2)-ம் பிரிவையும், `மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது அணை பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, முதலாம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அணைகளை சோதனையிடவோ, தேவையான விசாரணை நடத்தவோ, அந்த அணையின் எந்தப் பகுதிக்கும், அணை அமைந்துள்ள எந்த இடத்துக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் செல்லலாம்' என்று மாற்றி அமைக்க வேண்டும்.

அதுபோலவே 26(3), 26(4)-ம் பிரிவுகளிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அணையின் பராமரிப்புப் பணியில் எந்தவொரு தலையீடும் இருக்கக் கூடாது என்பதற்காக 26(6) என்ற புதிய பிரிவை மசோதாவில் இணைக்க வேண்டும். `அணை பராமரிப்பு அதிகாரிகள், ஊழியர்கள் யாரும், வனம், வனச் சரணாலயம் ஆகிய பகுதிகளுக்கு அணை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுபுணரமைப்பு பணிகளுக்காக செல்வதற்கு உரிமை உண்டு' என்ற அந்த ஷரத்தை இணைக்க வேண்டும்.

எனவே, இந்த கருத்துகளை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் சொல்லி அணை பாதுகாப்பு மசோதாவில் தேவையான திருத்தங்கள், இணைப்புகளை செய்ய உத்தரவிட்டு, தமிழகத்தின் நலனை பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
இதற்கிடையே, படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இனத்தவரை எஸ்.டி. இனத்தவர் (பழங்குடியினர்) என்ற பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை, நிலுவையில் இருக்கிறது.

1931-ம் ஆண்டில் படுகர் இனத்தவர், பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். அவர்களின் வாழ்க்கைத் தரம், சிறப்புத் தன்மைகள், வேற்றுமையான கலாசாரம், கூச்சத்தினால் மற்ற சமுதாயத்திடம் இருந்து விலகியிருக்கும் தொடர்பற்ற தன்மை, தனிப்பட்ட வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, எனது முந்தைய ஆட்சி காலத்தில் 5.9.03 அன்று மத்திய மலைவாழ் பழங்குடியினர் விவகாரத் துறைக்கு கடிதம் எழுதினேன்.

இந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நீலகிரி மாவட்ட படுகர் இனத்தவர் என்னை கேட்டுக் கொண்டனர். தோடர்கள் உள்ளிட்ட பல்வேறு மலைஜாதியினருடன் படுகர் இனத்தவர்கள், பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது, படுகர் இனத்தவர் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் மூலம் தெரிய வருகிறது.

படுகர்கள் அவர்களுக்கென்று சொந்தமான பாரம்பரியம், கலாசாரத்தைக் கொண்ட, இனம், மொழி வாரியான சிறுபான்மையினர்தான். அவர்களின் பேச்சு மொழியும், நம்பிக்கை மற்றும் இறை வழிபாட்டு நடவடிக்கைகள் போன்றவை, அவர்கள் நீலகிரியோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

பழங்குடியினர் என்ற தன்மை, தற்போது பழங்குடியினத்தவர் பட்டியலில் இருக்கும் பல இனங்களிடம் இருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்களினால் அப்படிப்பட்டவர்களின் நிலை மேம்பட்டுள்ளது. அதுபோலவே படுகர்கள் இனத்துக்கு அதுபோன்ற மேம்பாடு தேவைப்படுகிறது.

பழங்குடியினர் என்ற பட்டியலில் இடம் பெறுவதற்கு படுகர்கள் தகுதியானவர்கள்தான் என்பதில் திருப்தி நிலை நிலவுகிறது. எனவே பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


கணவருடன் செல்ல மறுத்த நடிகை: குழந்தைகளை கண்டதும் மனம் மாறினார்


நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகை. இவர் 24.4.2011 அன்று துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். இந்த மாதம் (ஜுலை) 23 ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த அவரை அழைத்து செல்ல ராஜா விமான நிலையத்தில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. இது குறித்து ராஜா விமான நிலைய போலீசில் புகார் செய்தார்.


விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது துபாயில் இருந்து வந்த கேரளாவை சேர்ந்த உடற்பயிற்சியாளர் ஒருவருடன் மீனா இருப்பது தெரிய வந்தது.


போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கேரள வாலிபருடன் தங்கியிருந்த மீனாவை கண்டு பிடித்து மீட்டனர். அப்போது மீனா, கணவருடன் செல்ல எனக்கு விருப்பமில்லை. கேரள உடற்பயிற்சியாளருடன் தான் செல்வேன்'' என்றார். பின்னர் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.


மீனா மீட்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவருடைய கணவர் ராஜா, மீனாவின் தாய் விலாசினி, மகன்கள் அஜித், ஆனந்த் ஆகியோர் விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். கணவரை கண்டதும் அவருடன் மீனா பேசவில்லை. மீனாவைக் கண்டதும் அவருடைய மகன்கள் கண்ணீர் விட்டனர். மகன்கள் அழுவதை கண்ட மீனா மனம் மாறினார். குழந்தைகளை கட்டிப்பிடித்து அழுதார். பின்னர் குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாக கூறினார்.


இதையடுத்து கணவர், தாய் மற்றும் மகன்களுடன் மீனா சென்றார். இதை கண்டதும் கேரளா வாலிபர் ரியாஸ் கண் கலங்கி விடை பெற்றார்.


ஜெயலலிதாவின் குரலுடன் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் : வைகோ


நெல்லையில் ம.தி.மு.க.,சார்பில் வரும் செப்டம்பர் 15ல் திறந்தவெளி மாநாடு நடத்தப்படுகிறது. மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது.


கட்சி பொதுச்செயலாளர்  வைகோ தலைமை வகித்தார்.
ஆலோசனைக்கு பிறகு வைகோ,    ’’மத்திய அரசு உத்தேசித்துள்ள அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டுவைக்க கூடியதாகும்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, கேரள அரசு தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளைபராமரிக்கவும், உடைக்கவும் உரிமை உள்ளது என அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

அத்தகைய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு மாறாக கேரள அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் டில்லியில் மத்திய பணியில் உள்ள கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் வஞ்சமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்கள்.


 இதனை எதிர்த்து தமிழக முதல்வர் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. இந்த பிரச்னையில் மொத்த தமிழகமும் ஒரு குரலாக எழவேண்டும்.


இத்தகைய அநீதியான சட்டத்தை நிறைவேற்ற விடக்கூடாது. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வரின் குரலுடன் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.


இதன் மூலம் தெற்கு சீமைக்கே பாதிப்பு ஏற்படும். இதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் நிலை ஏற்படும். அதற்கு வழிவைக்க கூடாது என எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்.
Saturday, July 30, 2011

அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!

அஜித்குமார் நடிக்கும் 50-வது படமான மங்காத்தாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படப் பாடலான பல்லேலக்காவின் சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

மங்காத்தா பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபுவே லீக் செய்து பரபரப்பு கிளப்பி வருகிறார்.

காரணம் என்னவோ... எல்லாம் பப்ளிசிட்டிதான்!

அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் ரஜினியின் சிவாஜி படத்தில் இடம்பெறும் 'பல்லேலக்கா' பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு கூறுகையில், "ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்," என்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்!
நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!

 ரூ.3கோடி செக்மோசடி செய்த வழக்கில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட 6 பேருக்கு கோர்ட் பிடிவாராண்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஓபராய் மல்டிமீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். நிறுவனத்தை உள் மற்றும் வெளிநாடுகளில் விரிவுப்படுத்துவதற்காக, மும்பைச் சேர்ந்த ஜவகர்லால் அகிச்சா என்ற பைனான்சியாரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.

பணத்தை திரும்ப செலுத்த கொடுக்கபட்ட செக் பணமில்லாமல் திரும்ப வந்தது. இதையடுத்து, விவேக் ஓபராய், அவரது தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட 6 பேர் மீது செக்மோசடி வழக்கு தொடுத்தார்.

மும்பை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் பெயில் இல்லாத பிடிவாராண்ட் பிறக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக- விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி! - ராமதாஸ்

 வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அணியை ஏற்படுத்தும் பா.ம.க. அறிவிப்புக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பா.ம.க.வின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.

பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள். இந்த 2 கட்சிகளும் கட்டாய, கட்டணமில்லாத தரமான சமச்சீர் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை வலியுறுத்தி வருகின்றன. பா.ம.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேருவது குறித்து ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் பா.ம.க. பொதுக்குழுவில் விவாதிக்கப்படும்.

இதுபற்றி திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் ஆகியோரிடம் 2 முறை பேசியுள்ளேன். பா.ம.க. அணியில் சேர்ப்பதற்காக தமிழகத்தில் உள்ள பல இயக்கத்தினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க. அணியில் சேரும் வாய்ப்புள்ளது. இந்த 2 கட்சிகளும் தொண்டர்கள் அதிகமுள்ளவை. பா.ம.க.வும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒரே அணியாக உருவானால் உள்ளாட்சி தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுவோம்.

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு நேரடி வாய்ப்பு 
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மொத்தம் 7 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணியமர்த்துவது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அரசு கைவிட்டு பழைய முறையிலேயே பணியமர்த்த வேண்டும். சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த ஜூன் 20-ந் தேதி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்
2-வது முறையாக வருகிற 2-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டம், தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. அன்று திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.

பா.ம.க. சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் பாலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசு தொடர்ந்துள்ளது. இது மாதிரியான பழிவாங்கும் போக்கை கைவிட்டு மக்கள் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் தீர்க்க வேண்டும். தமிழகத்தில் இலவச திட்டங்களை செயல்படுத்துவதற்காக மதுகடைகள் மூலம் அதிக வருமானம் ஈட்ட அரசு முயற்சித்து வருகிறது.

மது அருந்த வயது வரம்பு
நியாய விலைக்கடைகள் புதிதாக திறக்கப்படாமல் பல மதுக்கடைகள் புதிதாக திறக்கப்படுகின்றன. கேரளாவில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்கப்படுவதில்லை. அதேபோல் மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லை. 25 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவும் மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மாநிலங்கள் காட்டும் வழியில் தமிழக அரசும் செயல்பட்டு முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவி, உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்ற பதவிகள் கொண்டு வரப்பட வேண்டும்," என்றார்.
மதுரை இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் பெண் புரோக்கர் கைது

மதுரையை சேர்ந்த இளம்பெண் கற்பழி்ப்பு வழக்கில், பல இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கற்பழிப்பு வழக்கில், 21 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, இதுவரை 6 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், இளம்பெண்ணை பல இடங்களுக்கு அனுப்பி, விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராமநாதபுரம், ஓம்சக்தி நகரை சேர்ந்த பிரியா(30) என்ற அவரிடம் நடத்திய விசாரணையில், ஏழ்மையில் தவிக்கும் பல பெண்களை மூளை சலவை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள பல முக்கிய பிரமுகர்களுக்கு, வெளியூர்களில் இருந்து விபசார புரோக்கர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் முக்கியஸ்தர்களிடம் விபசார பெண்களை அனுப்பி, பதவிஉயர்வு, இடமாற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை பலருக்கும் பெற்று தருவதில் பிரியா முக்கிய பங்காற்றி உள்ளார்.

ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரியா, கோர்ட் உத்தரவின்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.
அத்துமீறிப் போகிறது அதிமுக அடக்குமுறை: கருணாநிதி

அதிமுகவின் அடக்குமுறை அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்து கருணாநிதியிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, "காரணமே இல்லாமல் ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுக அரசின் பழிவாங்கும் மனப்பான்மையை காட்டுகிறது.

திமுக ஆட்சியின்போது போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நடத்தப்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது நடைபெறும் அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அத்துமீறிப் போய்க்கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக அறப்போராட்டம் அமைதி வழியில் திட்டமிட்டபடி நடைபெறும்

காவல்துறையின் அராஜகத்தை கண்டிப்பதற்காகவும், பொய் வழக்குப் போடுவதை கண்டிப்பதற்காகவும் போராட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 1ல் அறிவித்துள்ள திமுகவின் அறப்போராட்டம் திட்டமிட்டபடி அமைதி வழியில் நடைபெறும்," என்றார்.
ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர்ப்பாட்டம்...

 ஸ்டாலின் கைதான சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் தேவையற்ற இந்த செயலைக் கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்ட திருவாரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மற்றும் நாகையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் திமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எவ வேலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

புதுச்சேரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகிறது.

இன்று அதிகாலை திடீரென்று வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல், திருச்செங்கோட்டிலும் சாலை மறியல் நடந்து வருகிறது.

சென்னையில்...
தலைநகர் சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலை மற்றும் வட சென்னைப் பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடந்தன. போராட்டத்துக்கு மாநகராட்சி மேயர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என் ரசிகர்களை தாக்கவேண்டாம், என்னை தாக்குங்கள்...! -அஜீத் ஆவேசம்


தனது ரசிகர் மன்றங்களை ஏன் கலைத்தார் என்பதற்கு நேரடியாக இப்போதுதான் பதில் சொல்லியிருக்கிறார் அஜீத். குமுதம் வார இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். என்னுடைய படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று மீடியாவில் அடிக்கடி சொல்கிறீர்கள். இதை மனதில் வைத்தே என்னுடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் என்னை பற்றியோ, அல்லது என் படம் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிடுகிறார்கள்.

இதனால் என்னுடைய படத்திற்கான ஓப்பனிங் குறையும் என்ற எண்ணம்தான் காரணம். இது மட்டுமில்லாமல் என்னுடைய ரசிகர்களை குறிவைத்து பல புகார்களை கூறி அவர்களை கஷ்டப்படுத்துவதும் நடக்கிறது. இதனால் என் மீதும் என் ரசிகர்கள் மீதும் மக்களுக்கு ஒரு கோபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் சிலர். இதுவும் நான் என் மன்றங்களை கலைப்பதற்கு ஒரு காரணம். என் மீதான கோபத்தை என் ரசிகர்கள் மீது காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று மன்றங்களை கலைத்துவிட்டேன். இப்போது வேண்டுமானால் என்னை தாக்குங்கள். இனியும் என் ரசிகர்களை தாக்க வேண்டாம். எனக்கு எதிரிகள் அரசியலில் இல்லை. சினிமாவில்தான் ஒரு சில எதிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜீத். மங்காத்தா வெளியாகிற நேரத்தில் மீண்டும் தன் ரசிகர்களை அரவணைத்து செல்வதற்காக இவ்வாறு கூறியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது திரையுலகத்தில்.மு.க. ஸ்டாலின் கைது


தி.மு.க.  பொருளாளர் மு.க.ஸ்டாலின் மன்னார் குடியில் இன்று இரவு நடக்க இருந்த தி.மு.க. பொதுக்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சை சென்றார். அங்கிருந்து அவர் திருவாரூக்கு காரில் சென்றார். திருவாரூர் மாவட்ட எல்லையான திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னுமிடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.

மு.க.ஸ்டாலின் வந்ததும் அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். நேற்று சமச்சீர் கல்வியை எதிர்த்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்கள் பஸ்சில் திரும்பியபோது கொரடச்சேரி அருகே பஸ் கவிழ்ந்து விஜய் என்ற மாணவர் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் வந்திருந்தனர். இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன் மற்றும் விஜயன் எம்.பி. உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


திமுகவின் மாணவர் ஸ்டிரைக் பிசுபிசுத்தது

 திமுக அழைப்பு விடுத்த வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் இன்று பிசுபிசுத்தது. பெரிய அளவில் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர்.

சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரி இன்று வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு மாணவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 'மாணவச் செல்வங்கள்' வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்தார்.

இந்த போராட்டத்தில் தாங்களும் இணைவதாக சில மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி இன்று காலை மாநிலம் முழுவதும் திமுகவினர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் குழுமி போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தை முறியடிக்கும், திமுகவினர் மாணவர்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள வைப்பதைத் தடுக்கும் வகையிலும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மதுரையில் சொதப்பலான திமுக ஆர்ப்பாட்டம்:
மதுரையில் முன்னாள் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் தபால் நிலையம் அருகில் திரண்டு சமச்சீர் கல்விக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். 15 நிமிடங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர்.

இந்தப போராட்டத்தில் மதுரை மேயர், துணைமேயர், திமுக மாவட்ட செயலாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இது திமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லையில் பூங்கோதை கைது
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நெல்லை டவுன், செங்கோட்டை, சிவகிரி, வாசுதேவநல்லூர் ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாளையங்கோட்டை போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா கலந்து கொண்டார். பள்ளியை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற அவர் உள்ளிட்ட 25 பேரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கூட்டம் அதிகம் இல்லாததால் பூங்கோதை உள்ளிட்டோர் சாவகாசமாக நடந்து போலீஸார் ஏற்பாடு செய்திருந்த பஸ்சில் ஏறிச் சென்றனர்.

பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின:
இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் வகுப்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்படவில்லை. 

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. மாணவர்களும், ஆசிரியர்களும் வழக்கம்போல் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் திமுகவினர் சிலர் பள்ளிகளின் முன்பாக நின்று பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளை தடுத்து ரகளை மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.

போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி பஸ்கள் ஓடின
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. பள்ளி வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. பள்ளிகளுக்கு முன்பாக போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

பள்ளிகளின் முன்பாக சமச்சீர் கல்வியினை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திமுகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலையில் வெளியே விடப்பட்டனர்.

முன்னதாக இப்போராட்டம் சமச்சீர்க் கல்வி திட்டம் தொடர்பான பிரச்சினையை திசை திருப்புவதாக உள்ளது என்று தமிழக அரசு கண்டித்திருந்தது. மேலும், இன்று பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் பிறப்பித்த உத்தரவில்,
தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை நடைபெற வேண்டும். காலை 11 மணிக்குள் வருகைப் பதிவு நிலவரம் குறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தத் தகவல்களைச் சென்னைக்குத் தெரிவிக்க வேண்டும்.இதுகுறித்து எல்லா பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்யுமாறும், மாணவர்கள் வெளியில் இருந்தால் பள்ளிக்கூட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டால் தக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் இடையில் வெளியில் அனுமதிக்கக் கூடாது. மதிய உணவை காரணம் காட்டி மாணவர்கள் வெளியேற அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் பட்டியலை அரசு உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி நிர்வாகம் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

திமுகவைக் கண்டித்து நாளை மெட்ரிக் பள்ளிகள் போராட்டம்:
இதற்கிடையே திமுகவின் போராட்ட அறிவிப்புக்கு நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் கிறிஸ்துராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் போராட்டம் தேவையற்றது, இதில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். அனைத்துப் பள்ளிகளும் வெள்ளிக்கிழமை திறந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் திமுகவின் போராட்டத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Friday, July 29, 2011

'சதமடித்தார்' சச்சின் டெண்டுல்கர்!

 லார்ட்ஸில் சதமடிப்பார். அது முடியவில்லையா, பரவாயில்லை டிரன்ட்பிரிட்ஜில் கண்டிப்பாக சத்தாய்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சத்தம் போடாமல் சதம் போட்டுள்ளார் சச்சின். ஆமாம், டிரன்ட்பிரிட்ஜில் இன்று சச்சின் ஆடும் டெஸ்ட் போட்டி, வெளிநாடுகளில் அவர் பங்கேற்கும் 100வது போட்டியாகும்.

1989ம் ஆண்டு (ஹாவ்...) முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறார் சச்சின். இதுவரை 177 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் - சமீபத்தில் முடிவடைந்த லார்ட்ஸ் போட்டியையும் சேர்த்து. இன்று டிரன்ட் பிரிட்ஜில் தனது 100வது டெஸ்ட் போட்டியை அவர் சந்திக்கிறார். அந்த வகையில் சதம் போட்டுள்ளார் சச்சின்.

மேலும் இந்திய வீரர் ஒருவர் அன்னிய மண்ணில் 100 போட்டிகளில் ஆடியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே இது சச்சினின் சாதனைகளில் மேலும் ஒன்றாக சேர்ந்துள்ளது.

அதேசமயம், லார்ட்ஸில் ஏமாற்றிய சச்சின், டிரன்ட்பிரிட்ஜில் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று கருதலாம். காரணம், லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அதிகபட்சம் 37 ரன்கள் வரை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனால் டிரன்ட்பிரிட்ஜில் ஆறு முறை ஆடி 469 ரன்களைக் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரியும் 78 ஆக உள்ளது. அதில் 1996ம் ஆண்டு 177 ரன்களைக் குவித்துள்ளார். 2002ல் 92 ரன்களையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 91 ரன்களையும் எடுத்துள்ளார். எனவே இந்த முறையும் அவர் சிறப்பான ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது என்று ஆறுதல் படலாம்.

மேலும் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் எந்த ஒரு இந்திய வீரரையும் விட சச்சின்தான் அதிக அளவில் ரன்கள் எடுத்துள்ளார். எனவே இந்திய ரசிகர்கள் பெருத்த தெம்புடன் இப்போட்டியைக் காணலாம்.

வெளிநாட்டில் 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்சின், கூடவே ஒரு சதத்தையும் போட்டு, 100வது சதத்தையும் எடுத்தால் ரசிகர்கள் பூரிப்படைவார்கள்.
தான் ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி: பேஷன் நிபுணர் நக்கல்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தான் ஆணா, பெண்ணா என்று குழப்பத்தில் இருப்பதாக பிரபல அமெரிக்க பேஷன் நிபுணர் டிம் கன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் பிரபல பேஷன் நிபுணர் டிம் கன். அவர் அன்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது,
ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் நியூயார்க் செனட்டராகவும், முன்னாள் முதல் குடிமகளாகவும் இருந்துள்ளார். பின் ஏன் இப்படி ஆடை அணிகிறாரோ?

ஹிலாரி தான் ஆணா, பெண்ணா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தொள தொளவென உள்ள ஆண்களின் ஆடைகளை அணிகிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றார்.
நிலத்தை கேட்டு அரவாணியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் கைது

 நிலத்தை எழுதித் தர மறுத்த அரவாணியை, அடித்து, உதைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

சென்னை, பள்ளிக்கரணை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அமுல்ராஜ் என்ற அமுதா (34) அரவாணியான இவர், ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 24ம் தேதி கடைக்கு சென்ற அமுதா பின்னர் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அதே பகுதியில் காயங்களுடன் கிடந்த அமுதாவை மீட்ட அவரது தாய் பிலோமினா மேடவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அமுதாவை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்துள்ள அமுதாவிற்கு, தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிந்து விசாரித்தார். அதில், அரவாணி அமுதாவை 5 பேர் கொண்ட கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, அடித்து உதைத்தது தெரிந்தது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பிலோமினா, அப்பகுதியில் வாங்கிய நிலத்தை அபகரிக்க நினைத்த 5 பேர் கொண்ட கும்பல், அமுதாவை மிரட்டி உள்ளது. அதற்கு அமுதா மறுக்கவே, அவரை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியுள்ளதாக பிலோமினா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்டீபன் (24), சுரேஷ் (21), அசோக்குமார் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
கலைஞர் டிவி சொத்துக்கள் முடக்கம்?

 கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன," என்றார்.

கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு 20 சதவீதப் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 ஜி விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ள டிபி ரியலிட்டியின் சினியுக் நிறுவனத்திலிருந்து ரூ 214 கோடி கடனாகப் பெற்ற விவகாரத்தில்தான் இப்போது கனிமொழியும் சரத்குமாரும் திகாரில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'பிட்' படம் வாங்கல்லியோ பிட் படம் : வாங்க ஆளில்லை...!


'பிட்' படமெடுப்பவர்களின் பாடு இனி திண்டாட்டம்தான் போலிருக்கிறது. செய்தித்தாளை திறந்தாலே விளம்பரங்களில் நம்மை கடித்துவிடுவது போல ஒரு பெண் காமப் பார்வையோடு நிற்பாள். இது மாதிரியான புகைப்படங்களை போட்டு, வா மாப்ளே உள்ளே என்று படிக்கிற மாணவர்களை கூட தியேட்டருக்குள் அழைக்கிற கூட்டம் பெருகிக் கொண்டே போனது கோடம்பாக்கத்தில். வேடிக்கை என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் து£ய தமிழில் பெயர் வைத்து, வரிவிலக்கும் வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

சில தினங்களுக்கு முன் அரசு அறிவித்துள்ள வரிவிலக்கு கொள்கையால் திணறிப் போயிருப்பவர்களும் இவர்கள்தான். சுமார் இருபது படங்கள் சுட சுட எடுக்கப்பட்டு பெட்டியில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ரிலீஸ் செய்ய விலை பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குதான் சரியான சூடு வைத்திருக்கிறது அரசு.

இந்த அறிவிப்பு வந்த நாளில் இருந்தே தியேட்டர்காரர்கள் யாரும் இந்த தயாரிப்பாளர்களை சீண்டுவதில்லையாம். தேவையில்லாம வரி கட்டணும். வேண்டாம்ப்பா உன் படம் என்கிறார்களாம் அவர்கள். அதுமட்டுமல்ல, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு கூட கட்டுப்பாடு விதித்திருக்கிறது போலீஸ். இவ்வளவு கெடுபிடிகளை தாண்டி படத்தை வெளியிட்டால் வருகிற வருமானத்தை வரியே சுரண்டிக் கொள்ளுமே என்ற அச்சமும் தலைவிரித்தாடுகிறது தியேட்டர்காரர்கள் முகத்தில்.

எப்படியோ, இதுபோன்ற படங்கள் ஓழிந்தால் சரி...