Monday, January 31, 2011

ஸ்ருதிக்கு குவியும் பட வாய்ப்புகள் பொறாமையில் முன்னணி நடிகைகள்


கமல் மகள் ஸ்ருதி முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் 7ஆம் அறிவு. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. தெலுங்கில் சித்தார்த்துடன் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.

 இப்படத்துக்கு த பி சினஸ் மேன் என பெயரிட் டுள்ளனர். பூரி ஜெகன்னாத் இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்க ஸ்ருதியை அணுகி கேட்ட போது உடனே சம்மதித்தார்.

கதை அவருக்கு பிடித் துள்ளதாம். ஸ்ருதிக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிகின்றன. அவர் வளர்ச்சி முன்னணி கதாநாயகிகளை பொறாமை படவைத்துள்ளது

திருச்சூரில் நவ்யா நாயர் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது

அழகிய தீயே படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நவ்யா நாயருக்கும் மும்பை தொழில் அதிபர் சந்தோஷ் மேனனுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. சமீபத்தில் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழா திருச்சூரில் உள்ள நவ்யாநாயர் இல்லத்தில் நடந்தது.

இரு வீட்டு உறவினர்களும் கலந்து கொண்டனர். கிருஷ்ணரின் தீவிர பக்தை நவ்யா நாயர். எனவே குழந்தைக்கு சாய் கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டது.

ஆர்யா, விஷால் கண்ணாமூச்சு காத்திருக்கும் இயக்குனர்கள்!


'அவன் இவன்' படப்பிடிப்பில் இருக்கிறார்கள் ஆர்யாவும், விஷாலும். கொடுத்த தேதிகளின்படி பார்த்தால் எப்பவோ படப்பிடிப்பு முடிந்து இருவரும் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எடுப்பது பாலாவாச்சே? ஆரம்பிக்கிற தேதி மட்டும்தான் இவர் கையில். முடிவு எப்போது என்பதை கணிக்க தமிழ்சினிமாவில் இன்னும் யாரும் பிறக்கவே இல்லை என்பதுதான் சகிக்க முடியாத நிஜம்.

இந்த நேரத்தில் விஷாலை வைத்து அடுத்த படத்தை எடுக்க தயாராக இருந்த பிரபுதேவா இரண்டு முறை படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டார். இப்போது அந்த படத்தை இயக்குகிற எண்ணத்தையே கிடப்பில் போட்டுவிட்டதாக தகவல். விஷால் வரும்போது எனது தேதிகள் ஒத்து வந்தால் இயக்குவேன். இல்லையென்றால் இந்த படமே வேண்டாம் என்கிறாராம் கோபம் கோபமாக!

இதில் லிங்குசாமி மட்டும் கொஞ்சம் வித்தியாசம். இவர் இயக்கவிருந்த வேட்டை படப்பிடிப்பும் ஆர்யாவுக்காக வெயிட்டிங். ஆனால் பாலாவுக்கே போன் செய்த லிங்குசாமி, எனக்காக அவசரம் அவசரமா படத்தை முடிக்க வேண்டாம். நிதானமா அனுப்பி வைங்க. அதுவரைக்கும் நான் காத்திருக்கேன் என்றாராம். பாலா படத்தின் ஹீரோ யாராக இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் பெரிய ஹிட் அடிப்பார்கள் என்பது சென்ட்மென்ட். அந்த சென்ட்டிமென்ட்டுக்காகதான் இப்படி விட்டுக் கொடுக்கிறார் லிங்கு என்பவர்களும் இருக்கிறார்கள். டைரக்டர்கள் இருவரும் இப்படி கால்குலேஷன்களில் கிடந்து தவியாய் தவித்துக் கொண்டிருக்க, நடப்பது நடக்கட்டும் என்ற அலட்சிய மூடுக்கு வந்திருக்கிறார்கள் ஆர்யாவும் விஷாலும்.

என்ன செய்வது? ஹீரோக்களின் 'பரமபத' விளையாட்டுக்கு தாயம் உருட்டுறதே இந்த மாதிரி இயக்குனர்கள்தானே!


அசர வைக்கும் அ.தி.மு.க., தேர்தல் வியூகம்: திசை மாறும் தேர்தல் களம்


சட்டசபைத் தேர்தலுக்கான இட பங்கீட்டு தொடர்பான தேர்தல் வியூகத்தை மற்ற அரசியல் கட்சிகளை அசர வைக்கும் நிலையில் அ.தி.மு.க., வகுத்துள்ளது. இதனால், கூட்டணி அமைவதற்கான இறுதி கட்டத்தில், தேர்தல் களம் திசை மாறும் என கருதப்படுகிறது.


தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அனைத்து கட்சிகளும் தங்களது தகுதிக்கேற்ப பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிக்கு திட்டமிட்டு வருகின்றன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.அ.தி.மு.க., அணியில் தற்போது உள்ள கட்சிகளுடன், நடிகர் கார்த்திக்கின், "அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' இணைந்துள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.கூட்டணிக்கு தலைமையேற்கவுள்ள தி.மு.க.,- அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தங்களுக்கு தனி மெஜாரிட்டி பெற, குறைந்தது 140 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட வேண்டியிருக்கும். மீதமுள்ள 94 இடங்களையே கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப பிரித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இவ்விரு கட்சிகளும் உள்ளன. முழு மெஜாரிட்டி பெறாவிட்டால், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் தயவை நாட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படும்.


இப்போதைய தமிழக அரசு மைனாரிட்டியாக இருந்தாலும், கூட்டணி அமைச்சரவை அமைக்காமலேயே, ஐந்து ஆண்டுகளை முதல்வர் தன் தனிப்பட்ட திறமையால் முழுமையாக பூர்த்தி செய்து விட்டார். எதிர் காலத்திலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால், தேர்தல் கூட்டணி அமைக்கும் போதே எந்தெந்த கட்சிகள் தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரும் என்பதை பார்த்து பார்த்து கூட்டணி அமைக்க வேண்டிய நிலை உள்ளது.

தலைவர்களைப் பொறுத்தவரையில் முதல்வர் கருணாநிதி, இதர கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர்; விட்டுக் கொடுத்து செயல்படக் கூடியவர். அவர் தன்னுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும், அந்த கட்சித் தலைவர்களை எளிதில் வசமாக்கி விடுவார். அதனால், அவர் எத்தகைய கூட்டணிக்கும் தயாராக உள்ளார்.அந்த கட்சி கூட்டணியில் சேர பா.ம.க.,வைத் தவிர புதிய கட்சிகள் ஏதும் தயராக இல்லை. பா.ம.க., கூட அவ்வப்போது அ.தி.மு.க.,வில் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டா என்ற நப்பாசையுடன் தி.மு.க., கூட்டணிக்கு முழுமையாக சம்மதம் தெரிவிக்காமல் உள்ளது.


இதற்கு சாட்சி கூறுவது போல், கடந்த சில தினங்களுக்கு முன் அறிவாலயத்தில் பேட்டியளித்த முதல்வர் கருணாநிதி, பா.ம.க.,வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது, "அவர்களும் சில சமிக்ஞைகளை அனுப்பியுள்ளனர். நாங்களும் சில சமிக்ஞைகளை கொடுத்துள்ளோம்' என்றார்.அதனால், தி.மு.க., கூட்டணியில் தான் பா.ம.க., என அனைவரும் நினைத்திருந்தனர். அதை அடுத்த சில தினங்களிலேயே பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மறுத்து விட்டார். இதில் யார் சொன்னது பொய் என்பது தெரியாத நிலை இதுவரை நீடிக்கிறது.


அ.தி.மு.க.,வின் நிலையோ வேறாக உள்ளது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க சிறிய கட்சிகள் முயன்று வருகின்றன. அதேசமயம் கருணாநிதியைப் போல், ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களுக்கு வளைந்து கொடுத்து செயல்பட மாட்டார். அதனால், அ.தி.மு.க.,வுடன் அதன் கூட்டணி கட்சிகள், தேர்தலுக்கு பின் இணைந்து செயல்பட தயங்கும். இதை மனதில் வைத்தே ஜெயலலிதா, தன் கூட்டணியில் அதிகளவில் உதிரி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவைகளை இணைத்து வருகிறார். இந்த சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தால், ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கை பற்றாக்குறை வந்தால் சரி செய்து கொள்ள முடியும் என்று அ.தி.மு.க., கருதுகிறது.


அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள், தேர்தல் முடிவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வை மிரட்ட முடியாது. அப்படியே மிரட்டினாலும், அதன் எம்.எல்.ஏ.,க்களை எளிதில் வளைத்து விடலாம். இதுவே அ.தி.மு.க.,வின் கணக்காக உள்ளது.அதற்கு ஏற்பவே அதன் கூட்டணி வியூகத்தை அ.தி.மு.க., வகுத்து வருகிறது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும் எந்த கட்சியும் 45 இடங்களுக்கு மேல் பெற வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


முரண்டு பிடித்தால் மூன்றாவது அணிதான் : தென் மாவட்டங்களில் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக, புதிய தமிழகம், சேதுராமன் தலைமையிலான மூ.மு.க., கார்த்திக் கட்சி ஆகியவற்றை தன் கூட்டணியில் ஜெயலலிதா சேர்த்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அ.தி.மு.க., பலமாக உள்ளது. இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தி.மு.க.,வுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு அ.தி.மு.க., பக்கம் வந்தால், மொத்த தொகுதிகளையும் அள்ளிவிடலாம் என அ.தி.மு.க., கணக்கு போடுகிறது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை நிலவுதால், அங்கும் அ.தி.மு.க., பலமாக உள்ளது.


டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்டுகள் துணையோடு அதிக தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்ற முடியும். இந்நிலையில், மீதமுள்ள வடமாவட்டங்களில் வெற்றி பெற பா.ம.க.,வின் துணை கிடைத்தால் போதுமானது. பா.ம.க.,விற்கு அதிக பட்சம் 35 இடங்களை ஒதுக்கினால் வெற்றி எளிதாகி விடும் என்ற யோசனையும் அ.தி.மு.க.,விடம் உள்ளது.இந்த அரசியல் சூழலை புரிந்து கொள்ளாமல், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்வதற்கு நிபந்தனைகளை விதித்து, தே.மு.தி.க., தொடர்ந்து முரண்டு பிடிக்குமானால், அது மூன்றாவது அணி உருவாக காரணமாய் அமைந்துவிடும்.


விரைவாக விளக்கம் கொடுப்பார்... -சூர்யாவின் அடுத்த திட்டம்!


திருமலை நாயகர் தூணையே தீக்குச்சியை ஆட்டுவது மாதிரி ஆட்டி வைத்துவிட்டது சூழ்நிலை. ஒரு பக்கம் ஷங்கர். இன்னொரு பக்கம் ஜெமினி லேப். இவ்விரு பிரமாண்டங்களுக்கே தங்கள் படத்தில் நடிக்க ஒரு ஆர்ட்டிஸ்டை கொண்டு வருவதில் அத்தனை சிரமம் என்றால் யாரால்தான் நம்ப முடியும்? எப்படியோ... ஷங்கர் இயக்கப் போகும் மூவர் படம் குறித்து இதுவரை நிலவி வந்த கசமுசாக்கள் ஒருவழியாக ஓவர்!

பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து கால்ஷீட் ரெடி என்று கூறிவிட்டாராம் விஜய். முதலில் இப்படத்தில் நடிப்பதற்காக ஷங்கர் அழைத்தது சூர்யாவைதான். அப்புறம்தான் விஜய்யிடம் போனார். பின்பு அங்கும் பிரச்சனை. மறுபடியும் சூர்யாவிடம் வந்தார். இப்படி பந்து போல அவர் உருட்டப்பட்டாலும் முடிவு அவ்வளவு ஈசியாக அமைந்துவிடவில்லை. தன்னை தேடி வந்த ஜெமினி லேப் முக்கியஸ்தர்களிடம் ஏதேதோ கண்டிஷன்கள் போட்டார் சூர்யா. ஆனால் ஷங்கரே நேரில் சென்றிருந்தால் சூர்யா இவ்வளவு பேசியிருக்கப் போவதில்லை என்கிறார்கள் விபரமறிந்த சில திரையுலக பிரமுகர்கள். ஆனால் ஷங்கர் தன் ஈகோவை விட்டுவிட்டு எப்படி சூர்யாவை சந்திக்க போக முடியும் என்றும் கேட்கிறார்கள் அவர்களே.

இந்த படம் கைநழுவி போனதில் கூட கவலைப்படவில்லையாம் சூர்யா. போகிற வேகத்தில் பெயரை கெடுத்துவிட்டு போய்விட்டதே என்பதுதான் அவருக்குள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இதுபற்றி மீடியாக்களிடம் விரிவாக பேசுவார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கவர்ச்சி வேஷம் கொடுங்க!-அஞ்சலி

குடும்பப் பாங்கான நடிகை என்று எழுதுவதைப் படிக்கும் போது இனித்தாலும், பைசா மேட்டர் என்று வந்தால், கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும்தான் ஏகத்துக்கும் 'மீட்டர்'!

சினேகா போல ஓரிரு நடிகைகள்தான் கடைசி வரை முழு கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் முதல் படத்தில் முத்தழகியாக வந்து, அடுத்தடுத்த படங்களில் முற்றும் துறந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமா அப்படி!

இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ளவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழில் அறிமுகமானாலும், அங்காடி தெருதான் இவருக்கு விலாசம் கொடுத்தது. இடையில் ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி காட்ட முயன்றார். படம் பப்படமாகிவிட்டது.

இப்போது வரிசையாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதிர்ப்பார்த்த 'ரேட்' கிடைத்தபாடில்லை. எனவே மீண்டும் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அஞ்சலி.

"இப்போதுதான் பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது. அழுது வடிகிற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். இதை மாற்றத்தான் கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் உடனே ஒப்புக் கொள்கிறேன்.

அடுத்து, கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அஜீத்துடன் மங்காத்தா படத்திலும் நடிக்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ், படமொன்றிலும் நடிக்கிறேன்...", என்றார்.


3 இடியட்ஸ்(நண்பன்) படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்களால் பரபரப்பு


கோவையில் நண்பன்சினிமா படப்பிடிப்பில் விஜய்- இலியானாவை பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமீர்கான் நடிப்பில் வெளியாகி இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக் கிறார். கதாநாயகியாக இலியானாவும், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். இன்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது.

 இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி வரை ஊர்வல காட்சி படமாக்கப்பட்டதற்கு அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவ- மாணவியருக்கு நண்பன்படப்பிடிப்பு பற்றிய தகவல் பரவியது.

அவர்கள் விஜய், இலியானாவை பார்க்கும் ஆவலில் ஜென்னி கிளப் முன்பு திரண்டனர். நூற்றுக்கணக்கில் மாண வர்கள் முற்றுகையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ஜென்னி கிளப் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் விஜய், இலியானாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.

அவர்கள் அங்கு இல்லாத போதும் மாணவர்கள் ஆர்வ கோளாறினால் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலையில் திருமண பாடலில் நடிகர் விஜய், இலியானா பங்கேற்று நடனமாவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. முன்ன தாக நடிகை இலியானா ரெசிடென்சி ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார்.

'சீடன் என் படமல்ல!' - தனுஷ்

விளம்பரங்களில் தனுஷ் சிறப்பான தோற்றத்தில் நடிக்கும் (சிறப்புத் தோற்றம் அல்ல!) சீடன் என்று போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாலோ என்னமோ... திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் தனுஷ்.

சீடன் என் படம் அல்ல. நான் அதில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளேன் அவ்வளவுதான் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு தனுஷ் படம் என்பது போலவே ஆரம்பத்திலிருந்து விளம்பரம் கொடுத்து வந்தார்கள்.

ஆனால் உஷாராகிவிட்ட தனுஷ் தனது அறிக்கையில், "சீடன் படத்தில் வெறும் 25 நிமிடங்கள் நான் வருகிறேன். அனன்யாவின் வேலைக்காரன் பாத்திரம். எளிமையான ரோல். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எனது பங்கு இவ்வளவுதான். படத்தின் கிளைமாக்ஸ் சிறப்பாக வந்துள்ளது. ஒவ்வொரு ரசிகருக்கும் இந்தப் படம் பிடிக்கும்..." என்று கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் ரீமேக்தான் இந்த சீடன். ஹீரோவாக கிருஷ்ணாவும், நாயகியாக அனன்யாவும் நடித்துள்ளனர்.


எந்திரன் வரவு செலவு கணக்கு அறிக்கை சன் டிவி வெளியிட்டது


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் திரைப்படத்துக்கு மொத்த செலவு ரூ 132 கோடி என்றும், இந்தப் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் ரூ 179 கோடி என்றும், சேட்டிலைட் உரிமை மூலம் ரூ 15 கோடி கிடைத்திருப்பதாகவும் சன் நெட்வொர்க் நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை மும்பை பங்கு வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது சன் நெட்வொர்க் நிறுவனம். அதன்படி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான சன் டிவியின் நிகர லாபம் 48 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சன் லாபம் ரூ 151.94 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 225.49 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 50.47 சதவீதம் உயர்ந்துள்ளது.

மூன்றாம் காலாண்டின் சன் நெட்வொர்க்கின் துணை நிறுவனம் சன் பிக்சர்ஸ் தயாரித்த ரஜினி நடித்த எந்திரன் படம் மூலம் 179 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்காக செய்யப்பட்ட மொத்த செலவு ரூ 132 கோடி என்று சன் டிவி கூறியுள்ளது.

எந்திரன் செலவு ரூ 182 கோடி என்றும், வருவாய் ரூ 400 கோடி என்றும் இதுவரை வந்த பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்தன. வெளிநாடுகளில் மட்டும் ரூ 70 கோடி வசூலித்ததாக படத்தை வெளியிட்ட ஈராஸ் - அய்ங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

கவுதம் மேனன்னின் நடுநிசி நாய்கள் படத்திற்கு ஏ சான்று


கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள "நடுநிசி நாய்கள்" படத்திற்கு "ஏ" சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு. இந்தபடம் பிப்ரவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீரா ரெட்டி, வீரா மற்றும் புதுமுகங்கள் நான்குபேர் ‌நடித்துள்ள படம் "நடுநிசி நாய்கள்". இப்படத்தை கவுதம் வாசுதேவ்மேனன் இயக்கியுள்ளார். நடுநிசி நாய்கள் படம் 1978-ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "சிகப்பு ரோஜாக்கள்" படத்திற்கு பிறகு தமிழில் உருவாகும் உளவியில் சார்ந்த திரில்லர் படமாகும். மைய பாத்திரமான வீரா மற்றும் அனைத்து பாத்திரங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பயங்கரமான இரவில் நடக்கும் சம்பவங்கள், அவன் மனதில் ஏற்படுத்தும் பாதிப்புகளை மையமாக கொண்டு கதை அமைந்துள்ளது.

நடுநிசி நாய்கள் திகில் பட வகையை சேர்ந்ததல்ல என்றாலும், பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கான படம் அல்ல. படத்தை பார்த்தவர்கள் உள்ளடக்கம் மற்றும் உருவாகிய விதத்தில் ஒரு பரிசோதனை முயற்சி என்பதை மீறி இந்தப்படம் அனைத்துத் தரப்பினரையும் கவரும் என்று பாராட்டியுள்ளனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ஏ சான்று அளித்துள்ளனர். அத்துடன் படத்தில் ஒரு காட்சியை கூட வெட்டவில்லையாம்.

படத்தின் அடிநாதமாக அமைந்துள்ள சமூகத்திற்கான செய்தியை அனைவரும் உணரும் வகையில், படத்திற்கான சிறப்பு காட்சிகள் போன்ற முயற்சியில் இயக்குநர் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளார். படம் பிப்ரவரி மாதம் 11ம் தேதி ரிலீசாகிறது.

ராஜபக்சேவுக்கு புற்று நோய்?:தமிழர்களை திசைதிருப்பும் சதியா ?

 இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை புற்று நோய் தாக்கியிருப்பதாக இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து எந்த மறுப்பும் உறுதிப்படுத்தலும் இல்லை.

ராஜபக்சே கடந்த சில மாதங்களாவே சுகவீனமுற்றிருப்பதாகவும், கல்லீரல் புற்று நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான சிகிச்சையை மஹரகமை புற்றுநோய் மருத்துவமனையின் வைத்தியர் கனிஷ்க என்பவர் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆயினும் அவரது சிகிச்சையின் பின்னும் அடிக்கடி ஜனாதிபதியின் முகத்தில் ஒரு வீக்கம் ஏற்படுவதாகவும், அவ்வாறான நிலையில் அவரைக் காண்பவர்கள் அவர் குடித்துவிட்டிருப்பதாக கருதிக் கொள்வதாகவும் விளக்கம் அளித்தார் அந்த அதிகாரி.

தன் நோய்க்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காகவே சமீபத்தில் அவர் அமெரிக்காவுக்குப் போனதாகவும் நம்பகமாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் எம் டி ஆண்டர்சன் கேன்சர் மையத்தில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போது, முன்பை விட அதிக அளவில் வைத்தியர்கள் அதிபர் மாளிக்கைக்கே வந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரம், மகிந்தவின் வெளிநாட்டுப் பயணங்களில் தமிழர் இடையூறு செய்யக் கூடாது என்பதற்காகவே இப்படியொரு செய்தி பரப்பப்படுவதாக தமிழ் இணையதளங்கள் சில சந்தேகம் எழுப்பியுள்ளன.


வெற்றிமாறனை கஷ்ட்டப்படுத்திய நடிகர்


பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் கிஷோர். படத்தில் இவருடைய
கதாபாத்திரத்தின் ஸ்டைலும், வசன உச்சரிப்பும் தனி பாராட்டைபெற்றது. தனுஷ், வெற்றிமாறன், கிஷோர் இந்த கூட்டணி மறுபடியும்
'ஆடுகளம்' படத்தின் மூலம் இணைந்திருக்கிறது.

இம்முறையும் இந்த கூட்டணி வெற்றி பெற்று மகிழ்ச்சியில் இருந்தாலும், கிஷோருக்கு மட்டும் சிறிது வருத்தமாம். காரணம் இந்த
படத்தில் இவர் டப்பிங் பேசவில்லை, இவரின் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் சமுத்திரக்கனி குரல் கொடுத்திருக்கிறார். சமுத்திரக்கனியின்
குரல், கதாபாத்திரத்திற்கு கஞ்சிதமாக பொருந்தியிருந்தாலும், தன்னால் டப்பிங் பேசமுடியாமல் போய்விட்டதே என்று கிஷோருக்கு சிறிது
வருத்தம் இருக்கிறதாம்.

இருப்பினும் இயக்குநர் வெற்றிமாறனை அவர் கஷ்ட்டப்படுத்த விரும்பவில்லையாம். 'பொல்லாதவன்' படத்தில் டப்பிங் பேசிய கிஷோர்,
இயக்குநர் உட்பட டப்பிங்கில் பங்குகொண்ட தொழில்நுட்ப கலைஞர்களையும் கலங்கடித்து விட்டாராம். அதனால்தான் இந்த முறை
யாரையும் கஷ்ட்டப்படுத்த கூடாது என்று வாடகை குரலை தேர்ந்தெடுத்தாராம்.

சூர்யாவின் பேராசையும் பெரு நஷ்டமும்!

3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.

இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.

ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட வேண்டும் என 'முக்கியமான இடத்திலிருந்து' தயாரிப்பாளருக்கு பிரஷர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பெரிதாக்காமல் அமுக்கிவிட்ட மீடியா, ஷங்கருக்கும் விஜய்க்கும் பிரச்சினை என்றும், விஜய் கெட்டப் மாற ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிளப்பிவிட்டன. இத்தனைக்கும் வேலாயுதம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே, 3 இடியட்ஸுக்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்தார் விஜய் என்பதை ஒருவரும் சொல்லவில்லை!

ஒரு கெட்ட தினத்தில், விஜய் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜெமினி. ஆனால் ஷங்கர் வழக்கம்போல மவுனம் சாதித்தார்.

அதன் பிறகு இந்தப் படம் குறித்து யோசிக்கும் நிலையில் விஜய் இல்லை. காவலன் அவரை அந்தப் பாடு படுத்தியது. அதை வெளியிட்டு முடித்து, பாக்ஸ் ஆபீஸில் படம் சூப்பர் ஹிட் என ரிசல்ட் வரும் வரை விஜய்யால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இதற்கு நடுவில் 3 இடியட்ஸில் நடந்த சமாச்சாரங்கள் ஒரு மெகா சீரியலுக்கு சமமானது.

விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்ததிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது.

பெரும் வாய்ப்பு, பெரிய இயக்குநர், பெரிய நிறுவனம் எல்லாமே தன்னை மிக எளிதாகத் தேடி வந்ததால், சூர்யா தன் பங்குக்கு பெரிதாக பிகு பண்ண ஆரம்பித்தார் என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கருக்கு எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டார். தெலுங்கிலும் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்பது அவரது முதல் கண்டிஷன். மகேஷ்பாபு அங்கே விலகிக் கொண்டதால், இருக்கட்டும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். ஷங்கர் மவுனம் காத்தார்.

அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக தமிழில் ரூ 12 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா (கிட்டத்தட்ட ரூ 10 கோடி இதன் மதிப்பு). அல்லது ஏதாவது ஒரு பதிப்பின் வெளியீட்டு உரிமையை தனது உறவினரின் நிறுவனத்துக்கு தரவேண்டும் என்றாராம். ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்!

அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்... மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது உதயநிதியின் 'ஏழாம் அறிவு', கேவி ஆனந்தின் 'மாற்றான்' படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!

ஷூட்டிங்கும் முன்பே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப ஆரம்பித்தது தயாரிப்பாளர் தரப்பு.

ஆனால் ஷங்கர் மிகத் தெளிவாக இருந்தார். 'மெயின் ஹீரோ யார் என்பதில் ஒரு முடிவுக்கு வாருங்கள், அதுவரை சும்மா இருக்க முடியாது' என்று கூறிவிட்டு இரண்டாவது ஹீரோ ஜீவா, மூன்றாவது ஹீரோ ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜூடன் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங்கையே தொடங்கிவிட்டார் கடந்த ஜனவரி 25-ம் தேதி.

சூர்யா வேண்டாம் என்று முடிவு செய்த ஜெமினி, மீண்டும் விஜய்யுடம் பேச முடியுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்க, அதற்காகவே காத்திருந்த மாதிரி சட்டென்று விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.

காவலன் வெற்றி என்ற திருப்தியிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்த விஜய், எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஒருவழியாக 3 இடியட்ஸ் குழப்பத்துக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸ் கிடைத்துவிட்டதாக கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!

படத்துக்கு இப்போதைய பெயர் மூவர். விரைவில் இந்தப் பெயர் மாறக்கூடும்!


த்ரீ இடியட்ஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!


அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னாவாகியிருக்கும் த்ரீ இடியட்ஸ் பற்றி நாளுக்கொரு புது செய்தி வந்து கொண்டிருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் முதலில் விஜய், அஜித், சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது. அஜித் முதலி‌லேயே வாய்ப்பை மறுத்து விட்டார். பின்னர் சிம்புவும் தனக்கு முக்கியமான கேரக்டர் இல்லை என்று கூறி படத்தில் இருந்து விலகினார். விஜய்யும் படத்தில் இருந்து விலகி விட்டார். ‌இதையடுத்து படத்தில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரை வைத்து படப்பிடிப்பை தொடங்கி விட்டார் ஷங்கர். மூன்றாவதாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட சூர்ய நடிகர், முதலில் இழுஇழுவென இழுத்தடித்தார். இப்போது தமிழ் த்ரீ இடியட்ஸில் நடிக்க ரூ.8 கோடி சம்பளம் கேட்பதுடன், தெலுங்கில் நடிக்க விநியோகத்தில் பாதி பங்கு என்று பேசத் தொடங்கி விட்டாராம். கிட்டத்தட்ட இந்த படத்தில் நடிக்க மட்டும் அந்த நடிகர் கேட்கும் தொகை ரூ.18 கோடியை எட்டுகிறது என்பதால் கலக்கத்தில் இருக்கிறது படத்தை தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட்.

இதுஒருபுறம் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாமல் மீண்டும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் த்ரீ இடியட்ஸ் குழுவினர் இன்னொர் சூர்யாவுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்களாம். குஷி உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய டைரக்டர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யாதான் அவர். தனது இரட்டை அர்த்த வசனங்களால் இளைஞர்களை கவர்ந்து வந்த எஸ்.ஜே.சூர்யா, சமீப காலமாக திரையுலகில் காணாமல் போயிருந்தார். அவரை அழைத்த த்ரீஇடியட்ஸ் குழு, படத்தில் அவரது ஒரிஜினல் கேரக்டருக்கு ஏற்றபடியே ஒரு கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்களாம்.

மனைவிக்கு துணை முதல்வர் பதவி :அதிமுகவுடன் கூட்டணிக்கு விஜய்காந்த் நிபந்தனை

தனது கூட்டணிக்குள் விஜய்காந்தை இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தேமுதிக தரப்பிலிருந்து தொடர்ந்து பல நிபந்தனைகள் போடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

60 சீட்டுகள், துணை முதல்வர் பதவியை தேமுதிக எதிர்பார்ப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுகவுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு 30 சீட்டுகள் வரை தருவதாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு அதை 45 வரை கூட உயர்த்தத் தயாராகிவிட்டதாகவும் அதே நேரத்தில் துணை முதல்வர் பதவியை தருவது சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வேண்டுமானால் கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளத் தயார் என்ற புதிய பார்முலாவை அதிமுக முன் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தங்களையும் சேர்த்துப் பேச வேண்டாம் என்றும், தங்களுக்கு துணை முதல்வர் பதவி மற்றும் சில அமைச்சர் பதவிகளைத் தர வேண்டும் என்றும் தேமுதிக கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதை அதிமுக ஏற்க மறுப்பதால் தான் இந்தக் கூட்டணி் உருவாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தன்னிடம் உள்ள மதிமுக, இடதுசாரிகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை வைத்துக் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமே இல்லை என்று ஜெயலலிதா நினைப்பதால் எப்படியாவது விஜய்காந்தை கூட்டணிக்குள் இழுக்க தீவிரமாக முயன்று வருகிறார்.

இதனால் தான் தொடர்ந்து பல நிபந்தனைப் போட்டாலும் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையை அதிமுக தொடர்ந்து கொண்டுள்ளது.

இந் நிலையில் தனது மனைவி பிரேமலதாவுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் அல்லது தேமுதிகவுக்கு 60 சீட்டுகள் தர வேண்டு்ம் என்று அதிமுகவிடம் விஜய்காந்த் கோரியுள்ளதாக வார இதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இதில் துணை முதல்வர் பதவி தருவது எல்லாம் சாத்தியமி்ல்லை, அதே நேரத்தில் இடங்களின் எண்ணிக்கையை வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் உயர்த்தித் தரத் தயார் என்று அதிமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாககத் தெரிகிறது.

விஜய்காந்த் தரப்பில் பிடிவாதம் தொடர்வதால் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியோருடன் தொகுதி்ப் பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது. முதலில் விஜய்காந்துக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு பின்னரே இடதுசாரிகளுடன் பேச்சு நடத்த ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால், காலம் கடந்து கொண்டே போவதால் வேறு வழியில்லாமல் இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை அவர் துவக்கிவிட்டதாகத் தெரிகிறது.

விஜய்காந்த் வராமல் போய்விட்டால் நிலைமையை சமாளிக்க தோதாக பாமகவை கூட்டணிக்குள் இழுக்கவும் அதிமுக தரப்பு முயன்று வருவதாகத் தெரிகிறது. கடந்த முறையை விட கூடுதலாக சில சீட்டுகள் தருவதாகவும் அதிமுக தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பாமக தரப்பிலிருந்து இதுவரை அதிமுகவுக்கு சாதகமான பதில் வரவில்லை என்கிறார்கள்.

வாரிசு அரடியலை மேடைக்கு மேடை சாடும் இவர் சென்ற தேர்தலில் பெற்ற ஓட்டு மொத்தம் எட்டு சதவீதம். இதற்கே மனைவிக்கு துணை முதல்வர் பதவி கேட்க்கும் இவரு கட்சியில் இருக்கும் மூத்த தலைவரும் இவருக்கு பேசுறதுக்கு எழுதி எழுதி கொடுத்து விரல் தேஞ்சு போகி உக்காந்து இருப்பவருமான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கொடுக்கலாமே ஏன மனைவிக்கு கொடுக்கணும்....இது பேரு வாரிசு அரசியல் இல்லையா எட்டு சதவீதத்துக்கே இந்த போடா ......

ஷாரூக், கஜோலுக்கு பிலிம்பேர் விருதுகள்!

மை நேம் ஈஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது ஷாரூக்கானுக்கும், சிறந்த நடிகைக்கான விருது கஜோலுக்கும் வழங்கப்பட்டது.

மும்பையில் நேற்று நடந்த பிரமாண்ட விழாவில் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன.

முக்கியமான மூன்று விருதுகள் மை நேம் ஈஸ் கான் படத்துக்கு வழங்கப்பட்டன. சிறந்த நடிகராக ஷாரூக்கானுக்கும், சிறந்த நடிகையாக கஜோலுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது இந்தப் படத்தை உருவாக்கிய கரண் ஜோஹருக்கும் வழங்கப்பட்டன. ஷாரூக்குக்கு நடிகை ரேகா விருதை வழங்கினார்.

'உதான்' படத்துக்கு சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த கதை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த பிண்ணனி இசை, சிறந்த இசை வடிவமைப்பு என ஏழு விருதுகள் வழங்கப்பட்டன.

சல்மான்கான் நடித்த தபாங் படத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டன.

கரீனா கபூருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது (வி ஆர் பேமிலி).

பாலிவுட்டில் 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் அமிதாப் பச்சனுக்கு சிறப்பு விருதை வழங்கினர் யாஷ் சோப்ராவும் ஷாரூக்கானும். அதேபோல, பாலிவுட்டில் 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த மாதுரி தீக்ஷித்துக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர் ஐஸ்வர்யா ராய்.

மூத்த பின்னணிப் பாடகர் மன்னா டேக்கும் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் 90 வயதான அவரால் விழாவுக்கு வந்து விருதினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே நடிகை வித்யா பாலன் அவர் வீட்டுக்கே சென்று விருதினை வழங்கினார்.

தபாங் படத்துக்காக சஜித் வஜித் சிறந்த இசையமைப்பாளர் விருதினைப் பெற்றார்.

இதே படத்துக்காக சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநராக விஜயனுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக மாதுரி தீக்ஷித்துடன் இணைந்து மேடையில் அட்டகாசமாக நடனம் ஆடி அசத்தினார் ஷாரூக்கான்.


Sunday, January 30, 2011

ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்


காஞ்சிபுரம் அருகே, படிப்பறிவு இல்லாத ஊராட்சி தலைவர் பதவிக் காலம் முடிய உள்ளதால், ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது வளத்தோட்டம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வளத்தோட்டம், கமூகம்பள்ளம், வளத்தோட்டம் காலனி, திருவள்ளுவர் குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த ஊராட்சியின் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பழங்குடியின வகுப்பை (எஸ்.டி., பிரிவு) சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.இருளர் சமூகத்தைச் சேர்ந்த 16 குடும்பத்தினரில் வாசு (33) என்பவர் தேர்தலில் நின்றார். அவருக்கு ஊராட்சியில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்ததால், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்பறிவு இல்லாத வாசுவிற்கு, கையெழுத்து மட்டுமே போடத் தெரியும்.அவரை தேர்தலில் நிறுத்தியவர் வாசுவின் அறியாமையைப் பயன்படுத்தி தலைவர் போல் செயல்படத் துவங்கினார்.ஊராட்சியில் முறைகேடுகள் நடக்க துவங்கியதை அடுத்து, வாசு தன்னை தேர்தலில் நிறுத்தியவர் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார்.அதன்பின், ஊராட்சிப் பணிகளை கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் ஊராட்சி உதவியாளர் லோகநாதன் மேற்கொண்டார். அவர் காட்டிய இடங்களில் வாசு கையெழுத்திட்டார். ஊராட்சியில் எந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூடத் தெரியாமல் இருந்தார்.

ஊராட்சித் தலைவ ராவதற்கு முன்பாக வாசு நெசவுத் தொழில் செய்து வந்தார். முதலாளி ஒருவரிடம் கூலிக்கு நெசவு செய்தார். அதன்பின் தொழில் நசிவு காரணமாக வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு பயணப் படியாக ஊராட்சி சார்பில் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது.அவரது மனைவி பச்சையம்மாள். கூலி வேலை செய்து வந்தார். இவர்களின் மகன் கார்த்திக் ஒன்பதாம் வகுப்பு, மகள் நந்தினி ஆறாம் வகுப்பு, ராஜேஸ்வரி முதல் வகுப்பு படிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன் நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.கூலி வேலை செய்து வந்த பச்சையம்மாள், நான்காவது குழந்தை பிறந்த பின் வேலைக்குச் செல்லவில்லை. இதனால், வீட்டில் சாப்பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் ஊராட்சித் தலைவரான வாசு, காஞ்சி புரம் காந்தி ரோட்டில், ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சாப்பிட்டவர்களின் தட்டுகளை எடுப்பது, டேபிளை சுத்தம் செய்வது போன்ற பணியை செய்து வருகிறார்.கமூகம் பள்ளத்தில் ஓலைக் குடிசையில் வசித்து வருகிறார். அவரது குடிசைக்கு பின்னால் கான்கிரீட் வீடு முழுமை பெறாமல் உள்ளது. வீடு குறித்து கேட்ட போது, வாசுவின் மனைவி பச்சையம்மாள், ஊராட்சி கிளார்க் எங்களுக்காககட்டுகிறார் என்றார்.

ஊராட்சி உதவியாளரான லோகநாதன் கூறியதாவது:ஊராட்சித் தலைவருக்கு மாதம் 500 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. ஊராட்சியில் 2006-07ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.அரசு வழங்கிய 20 லட்ச ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் ஊராட்சித் தலைவர் வேலை செய்ய முடியாது. தொகுப்பு வீடு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் ஊராட்சித் தலைவர் பயனாளியாக முடியாது. எனவே, அவருக்கு வீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை.அவர் சொந்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து வீடு கட்டுகிறார். பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்றார். அவருடனிருந்த வாசு அவர் கூறியதை வழிமொழிந்தார்..அனைத்து தரப்பு மக்களும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து ராஜ் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், விவரம் தெரியாதவர்கள் தலைவராகும் போது, சிலர் அவர்களை கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தலைவராக செயல்படுகின்றனர். ஊராட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூட அறியாமல் தலைவர் பதவிக் காலத்தை முடிக்க உள்ளார் வாசு.

மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு.எஸ்.சுக்கு இந்தியா அதிருப்தி


கலிபோர்னியாவின் டிரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு காலில் கண்காணிப்பு டேக் மாட்டி விட்டிருக்கும் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் குடியேற்ற விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குடியேற்றத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்கள்தான். கிட்டத்தட்ட 1555 மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். அவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாணவர்களின் பாஸ்போர்டுகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல மாணவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்த அமெரிக்க அரசு, தற்போது அவர்களைக் கண்காணிக்கும் வகையில், காலில் ரேடியோ டேக்குகளைக் கட்டி விட்டுள்ளனர்.

இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. உடனடியாக ரேடியோ டேக்குகளை அகற்ற வேண்டும். மாணவர்களை அதிகாரிகள் நடத்தியுள்ள முறை சற்றும் ஏற்புக்குரியதல்ல. இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. இது ஏற்கனவே ஏமாற்றப்பட்டு காயத்துக்குள்ளாகியிருக்கும் மாணவர்களை மேலும் புண்படுத்துவதாக அமையும்.

உயர் கல்வித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அமெரிக்க அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும், மனதில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் கிருஷ்ணா.

டிரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்களை மோசடியான முறையில் அங்கு சேர்த்துள்ளனர். இதை கண்டுபிடித்த அமெரிக்க குடியேற்றத்துறை தற்போது அப்பாவி மாணவர்களைக் குறி வைத்திருப்பது இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தத் தவறும் செய்யாத மாணவர்களின் காலில் கண்காணிப்பு டேக்குளைக் கட்டிய செயலும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி மாணவர்களின் காலில் டேக்குகளை மாட்டியிருப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. 

வாய் கிழிய மனித உரிமை, மனிதாபிமானம், அமைதி என்று நியாயம் பேசும் அமெரிக்கா உள்ளூர் கொடூர மனப்பான்மையுன் நடந்து கொண்டுள்ள செயல் இந்தியர்களை அமெரிக்கா எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கண்டனம் தெரிவித்ததோடு நிற்காத இந்திய அரசு, அமெரிக்க துணைத் தூதர் டொனால்டு லூவை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து இந்தியாவின் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களை கண்ணியத்துடன் நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின் காலில் ரேடியோ டேக் பொருத்தி, விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க சட்டப்படி இது செய்யப்பட்டிருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட மாணவர்களின் கால்களில் உள்ள டேக்குகளை அகற்ற வேண்டும்.

தங்களது நிலைமை பற்றி எடுத்துச் சொல்ல மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களில் இந்தியாவுக்கு வர விரும்புபவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழு இந்திய துணைத் தூதர் சுஷ்மிதா கங்குலி தாமஸை நேரில் சந்தித்தனர்.

இது குறித்து வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது,

பல்கலைக்கழகம் தான் குற்றம் செய்துள்ளது. மாணவர்கள் குற்றமற்றவர்கள். எனவே, அவர்களை தண்டிக்காமல் இருக்க நாங்கள் அம்மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அங்குள்ள இந்திய துணைத் தூதர் அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து தொடர்பு கொண்டு தான் இருக்கிறார். அறிக்கை வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். அறிக்கை வந்த பிறகே மாணவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று தெரியும் என்றார்.

இக்குற்றச்சாட்டுக்களை பல்கலைக்கழக நிறுவனர் சூசன் சூ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நீங்கள் எங்கள் வருமானத்தைப் பற்றி பேசுகிறீர்கள். இப்படித் தான் நாங்கள் வழக்கமாக கட்டணம் வசூலிப்போம். ஏற்கனவே நிறைய மாணவர்கள் படிக்கையில் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர வைக்கவில்லை என்று சூசன் தெரிவித்தார்.


திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி அறிவிப்பு


தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் பங்கு பெறும் என டெல்லியில் கருணாநிதி அறிவித்தார். தேசிய பாதுகாப்பு குறித்து முதல்- அமைச்சர்கள்  மாநாடு டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.  இதில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று மதியம் டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்றடைந்த கருணாநிதி, நிருபர்களுக்கு கூட்டணி பற்றி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியுடன் பா.ம.க., முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள்,புரட்சி பாரதம் ஆகியவை இணையும். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்  ஒதுக்கப்படும் என்று நாளை சோனியா காந்தியுடனும், மன்மோகன்சிங்குடனும் கலந்தாலோசிக்கப்படும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்று நாளையே முடிவு செய்யப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது, ஆனால் விரைவில் தெரிவிக்கப்படும்  என கருணாநிதி கூறினார்.

திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்

அதிரடித் திரைப்படமாக இருந்தாலும் திருத்தணியில், பரத் சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகளை தித்திக்கும் வகையிலும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் எடுத்து வருகிறாராம் இயக்குநர் பேரரசு.

ஊர்ப் பெயர்களில் படம் எடுப்பது பேரரசுவின் ஸ்டைல். அதிலும், பன்ச் டயலாக்குகளை படம் பூராவும் பரவ விட்டு, அதிரடி வசனங்கள், ஆக்ஷன் அதகளங்கள் என்று கலக்குபவர் பேரரசு. டி.ராஜேந்தர் பாணியில் ஏகப்பட்ட வேலைகளை கையில் எடுத்துக் கொண்டு அசத்தும் பேரரசு தற்போது தனது பாணியில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திருத்தணி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

பழனி படத்தில் பரதத்தை ஆக்ஷன் ஹீரோவாக அதகளப்படுத்திய அவர், இப்படத்திலும் பரத்தை பட்டையைக் கிளப்ப விட்டுள்ளாராம். கூடவே ஜோடியாக சுனைனா.

அதிரடிப் படமாக இருந்தாலும், பரத், சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலிர்க்கும் வகையிலும், ஜில்லிடும் தரத்திலும் இருக்குமாம். இருவரும் காதல் கட்சிகளில் அப்படி ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்களாம். அதிரடியைப் போலவே இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் பேசப்படுமாம்.

வழக்கமான பொறுப்புகளோடு கூடுதலாக இப்படத்திற்கான இசையமைக்கும் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டு களம் இறங்கியுள்ளாராம் பேரரசு.


காதலர் தினத்திற்கு 2 படம்

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது.

தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு சிவா மனசுக்குள் சக்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று ஆனந்த்தின் கோ. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள எங்கேயும் காதல்.

இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. எங்கேயும் காதல் படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த இரு படங்களில் யார் காதலர்களுடைய பெருவாரியான ஆதரவுகளைப் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!

மல்லிகா ஷெராவத் வசம் இருந்து வந்த முத்த சாதனையை அருனோதய் சிங்-அதிதி ராவ் ஜோடி முறியடித்து விட்டனர்.

க்வாயிஸ் படத்தில் மல்லிகா ஷெராவத் 17 முத்தம் கொடுத்து அசத்தியிருந்தார். அதுதான் ஒரு படத்தில் ஒரு நாயகியும், நாயகனும் அதிகபட்ச முத்தங்களைப் பரிமாறிக் கொண்ட சாதனையை வைத்துள்ளது. ஆனால் தற்போது அருணோதய் சிங் மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்துள்ள யே சாலி ஜிந்தகி படம் முறியடித்து விட்டதாம்.

இதுகுறித்து அப்பட இயக்குநர் சத்யதீப் மிஸ்ரா கூறுகையில், இப்படத்தில் டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதிகளாக நடித்துள்ளனர் சிங்கும், ராவும். இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வரும். அப்படி வரும்போதெல்லாம் இருவரும் முத்தமிட்டுக் கொள்வார்கள். இந்த முத்தத்திற்காகவே அடிக்கடி சண்டையும் போடுவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை 20 முதல் 22 முத்தங்கள் வரை இடம் பெற்றுள்ளதாக கருதுகிறோம். கூடக் கூட இருக்கலாம் என்றார்.

முத்தம் என்றால் சாதா முத்தம் இல்லையாம், லிப் டு லிப் அழுத்தமான முத்தமாம். இருந்தாலும் இதில் ஆபாசம் கலந்து விடாமல் நயத்தோடு படமாக்கியுள்ளாராம் மிஸ்ரா.

இத்தனை முத்தங்கள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும், அதுகுறித்து சிங்கும், ராவும் ஆட்சேபிக்கவில்லையாம். கதைக்குத் தேவையாக இருந்தால் எத்தனை முத்தத்திற்கும் தயார் என்று கூறி விட்டார்களாம்.

நாயகன் சிங்கும், நாயகி ராவும் சாதாரணப் பின்ணனி கொண்டவர்கள் அல்ல, பெரிய இடத்துக்காரர்கள். சிங்கின் தாத்தா பெயர் அர்ஜூன் சிங். முன்னாள் மத்திய அமைச்சர், பலம் வாய்ந்த காங்கிரஸ் காரராக ஒருகாலத்தில் இருந்தவர். ராவின் தாத்தா சர் முகம்மது சலே அக்பர் ஹயாத்ரி, அஸ்ஸாமின் ஆளுநராக இருந்தவர். இவரது கணவர்தான் சத்யதீப் மிஸ்ரா. அதாவது மனைவியை வைத்து இத்தனை முத்தக் காட்சிகளை எடுத்துள்ளார் மிஸ்ரா.

தனது மனைவியை வைத்து இத்தனை முத்தக் காட்சிகளை எடுத்தது குறித்து மிஸ்ராவுக்கு எந்த சங்கடமும் இல்லையாம். ஆனால் சென்சார் போர்டுதான் கடுப்பாக உள்ளதாம். ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு குறித்து சென்சார் போர்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. எனவே முத்தக் காட்சிகளுக்கு பெரிய ஆக்சா பிளேடு போடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மிஸ்ரா கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. முத்தமிடுவது பாவம் என்றால் நிஜ வாழ்க்கையில், நிஜத் தம்பதிகள் யாருமே முத்தமிட்டுக் கொள்ள மாட்டார்களா என்பதை சென்சார் போர்டு விளக்க வேண்டும் என்று கோருவேன் என்கிறார் சற்றே கோபத்துடன்.

வாஸ்தவமான கோபம்தான் மிஸ்ரா, விடாதீங்க!


செக்ஸ் ஜோதிடர் ஈஸ்வரன் கவர்ச்சி உடை அணிய வைத்து ஆபாச படம் எடுத்தார்; நடிகை புகார்


காதல் வலி, ஆப்பகாரி போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை லலிதா. இவர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியதாவது:-
 
நான் என்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்கு வசிய ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனிடம் யோசனை கேட்டேன். அவர் நேரில் வரும்படி கூறினார். நான் அவரை நம்பி கோவை வந்தேன். பலமுறை அவரை சந்தித்தேன். அவர் சந்திக்கும் போதெல்லாம் ஆபாசமாக பாலுணர்வை தூண்டும் விதமாக என்னிடம் பேசினார். என்னை மயக்கி அவர் தரும் மெல்லிய துணியினை கவர்ச்சி உடைகளை அணிய சொன்னார். 

இப்படி அணிந்து சென்று பள்ளியறையில் தியானம் செய்தால் காதலன் உன்னையே சுற்றி வருவார் என்றார். நான் தரும் வசிய மையை காதலனின் தொப்புளில் தடவினால் உன் காலடியில் விழுந்து கிடப்பான் என்ற ஆசை வார்த்தை கூறினார்.   நான் அவர் கூறியபடி, கவர்ச்சி உடை அணிந்து நடந்து கொண்டேன். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஆபாச படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், ரூ. 5 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஜினி மகள் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் திரும்பினார்; ரசிகர்கள் தொந்தரவால்


ரஜினி மகள் சவுந்தர்யா ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கே.கே.சி. என்ற தனியார் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தேர்வு நேற்று புத்தூரில் உள்ள அரசு கல்லூரியில் நடந்தது. சவுந்தர்யா தேர்வு எழுதுவதற்காக புத்தூர் அரசு கல்லூரிக்கு சென்றார்.

சவுந்தர்யா தேர்வு எழுத வருவதை அறிந்ததும் அங்கு ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் ரஜினி மகளை பார்க்க முண்டியடித்தனர்.பின்னர் ஒருவழியாக ரசிகர்களிடம் இருந்து தப்பித்து தேர்வுக் கூடத்துக்கு சென்றார்.

அவர் தேர்வு எழுதும் போது அந்த ஹாலில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அனைவரும் சவுந்தர்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் சவுந்தர்யா அதிருப்தி அடைந்து தேர்வு எழுத முடியாமல் தவித்தார்.

பின்னர் அவர் அந்த கல்லூரி முதல்வரிடம் தேர்வு எழுத தனக்கு தனி அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கல்லூரி முதல்வர் மறுத்தார். பிரபலங்களின் வாரிசுகளுக்கு தேர்வு எழுத ஏற்கனவே தனி அறை ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து சவுந்தர்யா அவரிடம் வாதாடினார்.

ஆனால் அதை ஏற்க கல்லூரி முதல்வர் மறுத்து விட்டார். இதனால் அதிருப்தியுடன் சவுந்தர்யா தேர்வு எழுதாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.