Saturday, April 19, 2014

ஷங்கரோடு இணையும் அஜித், சூர்யா, தனுஷ் !

விக்ரம், எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் படம் ''. பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பிலும் இடம்பிடித்துவிட்டது.

இப்படத்தைப் பற்றிய பேட்டி ஒன்றில் வேறு ஒரு சுவாரஸ்யமான தகவலையும் கூறியிருக்கிறார் ஷங்கர். "தமிழில் திறமையான நடிகர்களையும் இயக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.



சூர்யா, தனுஷ், அஜித்குமார் ஆகியோருடனும் இணையும் விருப்பம் உள்ளது. சூர்யாவுடன் ஏற்கெனவே இணைய வேண்டியது. ஆனால், சில காரணங்களால் அது முடியவில்லை. கண்டிப்பாக அதற்கான நேரம் வரும்.

இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் அனிருத்தின் இசை என்னை மிகவும் கவர்கிறது.


பல படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்திருக்கிறேன், ஹாரிஸ் ஜெயராஜூடனும் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது இருக்கும் இசையமைப்பாளர்களில் அனிருத்துடன் இணைந்து பணிபுரிய விருப்பம் உள்ளது" என தெரிவித்திருக்கிறார் ஷங்கர்.

விஜய்யுடன் ஸ்ருதிஹாசன்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறாராம் விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி , 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் ஆகியோர்  நடிக்க இருக்கிறார்கள்.



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில்
இப்பபடத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை.

விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'கத்தி' படம் வெளியான பிறகே இப்படம் பற்றிய முழுவிவரமும் தெரியவரும்.