விழியே பேசு... வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த குறுகிய காலத்திற்குள் 200௦௦-வது பதிவு போடும் அளவுக்கு நமது வலைத்தளத்திற்கு வருகை தந்து என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு உங்கள் ஆதரவை தொடர்ந்து நமது வலைத்தளத்திற்கு அளிக்கும்படியும் கேட்டு கொள்கிறேன்.
எனது 200௦-வது பதிவாக முகவரியே இல்லாத இமெயில் பற்றி பதிவாக போடுகிறேன்.
நாம் ஒருவருக்கு கடிதம் அனுப்புவதாகவோ, இ மெயில் அனுப்புவதாக இருந்தாலும், நமக்கு ஒருவர் இ மெயில் அனுப்புவதாக இருந்தாலும் அதில் பெறுனர் முகவரி அவசியம். தங்களது வலைத்தளத்திலும், இணையத்தளங்களிலும் தொடர்புக்கு இ மெயில் முகவரியை அழிப்பது பொதுவாக நடக்கும் விஷயம். இப்படி பொதுவில் அனைவருக்கும் தெரியுமாறு இமெயில் முகவரியை அளிப்பதால் தேவையற்ற ஸ்பாம் மெயில்கள் வந்து சேரும்.
பொதுவில் நமது இ மெயில் முகவரியையும் அளிக்க கூடாது. அதேசமயம் நமக்கு தகவல்களும் வந்து சேரும் வகையான புதிய வசதியை ஒரு இணையத்தளம் வழங்குகிறது.
அதற்கு, நீங்க இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது இ மெயில் முகவரியை அளித்து பதிவு செய்தால் நமக்கென ஒரு 'லிங்க்' எண்ணை அளிப்பார்கள். உதாரணமாக 167 என்ற லிங்க் எண் அளித்தால், http://contactify.com/167 என்ற இணையத்தள பக்கத்திற்கான 'லிங்க்' உருவாக்கப்படும். இந்த லிங்கை வலைபதிவு, குழு இணையத்தளங்கள் போன்றவற்றில் அளித்தால் போதும். தகவல் அனுப்ப விரும்புபவர்கள் அந்த லிங்கை க்ளிக் செய்து திறக்கப்படும் இணையப்பக்கத்தில், தகவல்களை டைப் செய்து அனுப்பினால் போதும்.
அது நமது இ மெயில் முகவரிக்கு வந்து சேரும். இதனால் நமக்கு இ மெயில் அனுப்ப விரும்புபவர்களுக்கு நமது முகவரி தேவைப்படாது. அதே சமயம் நமக்கு தகவல் வந்து சேரும். லிங்க் எண்ணுக்கு பதிலாக நமது பெயரை கூட பயன்படுத்தும் வசதி உள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தினால் ஸ்பாம் மெயில்களை குறைக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .
Hi, just wanted to say, I enjoyed this post.
ReplyDeleteIt was funny. Keep on posting!
Also visit my site ... Arthur Falcone
Every weekend i used to pay a quick visit this website, because i
ReplyDeletewant enjoyment, as this this website conations really fastidious funny stuff too.
Here is my website - Dr. Rashmi Patel