Sunday, November 30, 2014

முத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு

முத்தபோட்டி நடத்துவதில் தவறு இல்லை என நடிகை  குஷ்பு பேசுவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின்  கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, விடுத்துள்ள அறிக்கை: அகமும் புறமும் கொண்டதே தமிழர்களின் வாழ்வியல்  பண்பாடு. அகம் என்பது அடுத்தவர்களுக்கு தெரியாமல்  அறைகளில் நடக்க கூடியது. புறம் என்பது எல்லாருக்கும் தெரியும் வகையில் இருக்கும். ஒருவருடைய வீரம், ஈகைப்  பண்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் கொல்வது.  


முத்தமிடுவது என்பது அக வாழ்க்கையின் ஓர் அங்கம். நடிகை குஷ்பு முத்தப் போட்டி நடத்துவதில்  என்ன தவறு என பகிரங்கமாக பேசி வருகிறார். இது  தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாகும். குடும்ப வாழ்க்கையும் கூட்டுக் குடும்ப உறவும் இந்தியாவில்  நிலைத்திருக்க வேண்டும் எனில், குஷ்பு போன்றவர்களை கண்டிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு நல்லசாமி தெரிவித்துள்ளார்.


வைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டும் தொணியில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத்சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்றும் அவர் நாவை அடக்காவிட்டால் அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா தஞ்சையில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

வைகோ எழுப்பும் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிப்பதை விட்டுவிட்டு இவ்வாறு மிரட்டல் விடுப்பது அவரது இயலாமையை மட்டுமின்றி அரசியல் நாகரீகமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது. அரசியலில் விமர்சனம் என்பதும், கேள்வி கேட்பது என்பதும் ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாகும். இதை சகித்துக் கொள்ளாமல் மிரட்டல் விடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடு ஆகும்.

மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவராக விளங்கும் ஹெச்.ராஜாவின் இத்தகைய மிரட்டல் விடுக்கும் எதேச்சதிகார பேச்சிற்கு மார்க்சிக்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பாக வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவதோடு தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற, ஜனநாயகத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இத்தகைய மிரட்டலை ஏற்றுக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து ஹெச்.ராஜா அநாகரிகமாக பேசியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய அவர், மரியாதைக்குரிய வைகோவும் சரி, பாமக நிறுவனர் பெரியவர் ராமதாசும் சரி அரசுக்கு கோரிக்கை வைக்கலாம். ஆனால் எதிர்க்கட்சி போல் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் வைகோ இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

"உணர்ச்சி கொந்தளிப்பில் கட்சி நடத்தலாம், ஆனால் உணர்ச்சி கொந்தளிப்பில் அரசு நடத்த முடியாது" என்று திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எஸ்.டி.பி. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசியல் தலைவருக்கு ஊடகங்களின் வாயிலாக விடுத்த இத்தகைய மிரட்டல் கடும் கண்டனத்திற்குரியது. நாகரீகமற்றது. இதற்காக பாஜகவின் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மத்தியில் ஆட்சி பீடம் என்ற மமதையில் இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் விடுக்கும் மிரட்டலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். பாஜகவின் வன்முறை அரசியல் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.

தமிழக நலனுக்காக குரல்கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர் ஒருவருக்கு விடுக்கப்பட்ட இதுபோன்ற அரசியல் நாகரீகமற்ற மிரட்டலுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும். சர்வாதிகார போக்குடன் திணிப்பு கொள்கைகள், தமிழர் விரோத கொள்கைகளை முன்னெடுக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.வைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கடுமையாக விமர்சிக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ நாவை அடக்க வேண்டும் இல்லையெனில் அவர் நாவை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டனுக்கு தெரியும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, மோடி மற்றும் ராஜ்நாத்சிங்கை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு தூக்கி எறியும் முன்பாக வைகோ கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று எச்சரித்திருந்தார்.

இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, வைகோ தடித்த வார்த்தைகளால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனியும் இப்படி நாவடக்கம் இல்லாமல் பேசிவிட்டு வைகோ பாதுகாப்பாக சென்றுவிட முடியாது.

வைகோ நாவை அடக்காவிட்டால் வைகோவின் நாவை அடக்குவது எப்படி என்று பாஜக தொண்டனுக்குத் தெரியும் என எச்சரிக்கிறேன் என்றார்.


லிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை!

வெளியாவதற்கு முன்பே பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது ரஜினியின் லிங்கா திரைப்படம்.

இந்தியத் திரையுலக வரலாற்றில் எந்தப் படமும் ரிலீசுக்கு முன் லிங்கா அளவுக்கு பணத்தைக் குவித்து சாதனைப் படைத்ததில்லை. ரூ 100 கோடியில் தயாரான லிங்கா, இதுவரை விநியோகம் மற்றும் இதர உரிமைகள் மூலமாக மட்டும் ரூ 200 கோடிக்கு மேல் குவித்துவிட்டது.

லிங்கா   தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் உள்ள 950 அரங்குகளில் 700 அரங்குகளுக்கு மேல் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 இன்னும் ஒரு சாதனையாக, ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள மொத்த தியேட்டர்களுமே லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் - திருப்பூர் ஏரியாவில் மட்டும் மொத்தம் 93 திரையரங்குகள் உள்ளன.

இவற்றில் 85 அரங்குகளில் லிங்காதான் ரிலீசாகப் போகிறது. இதற்கு முன் எந்த ரஜினி படத்துக்கும் இத்தனை அரங்குகள் கோவை ஏரியாவில் ஒதுக்கப்பட்டதில்லை. வேறு எந்தப் படத்துக்கும் இவ்வளவு அரங்குகள் ஒதுக்கப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

லிங்காவின் கோவை பகுதி உரிமை மட்டும் தனியாக விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்

ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படத்தை விநியோகம் வழங்கியதில் லதா ரஜினிகாந்த் ரூ.10.2 கோடி மோசடி செய்ததாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர் புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நடிகர் ரஜினி நடித்த "கோச்சடையான்' திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தத் திரைப்படத்தின் தமிழக உரிமையை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார்.

இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த உரிமத்துக்குரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன்.

இந்த ஒப்பந்ததை மீறி தமிழகத்தில் "கோச்சடையான்' திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும் அளிக்கக் கூடாது. அதைமீறி தமிழகத்தில் வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குறிப்பாக விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும் அளிக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், அந்த ஒப்பந்ததை மீறி முரளி மனோகர் வேறு ஒரு நிறுவனத்துக்கு அனைத்து உரிமைகளையும் விற்றார். இதையடுத்து நான் அவர்களிடம் எனக்குரிய நஷ்டஈட்டுத் தொகையைக் கேட்டபோது, லதா ரஜினிகாந்தும், முரளி மனோகரும் என்னிடம் படம் வெளியானதும் அந்தத் தொகையைத் தருவதாக உறுதி அளித்தனர்.

 நான் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடிப்படையில் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தேன். ஆனால் படம் வெளியாகி ஓடி பல மாதங்களுக்குப் பின்னரும், அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ. 10.2 கோடியைத் தரவில்லை. நான் எனது பணத்தை பல முறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

எனவே காவல்துறை அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
லிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்!

ரஜினியின் லிங்கா படத்துக்கு சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து இசை அமைத்துள்ளார் ஆர் ரஹ்மான். கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள லிங்கா படம் சென்சார் முடிந்து யு சான்று பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பாக ஆடியோ சிடி விற்பனை என்பதே இல்லாமல் போய்விட்ட இந்த காலகட்டத்தில், லிங்கா சிடிக்கள் விறுவிறுப்பாக விற்று வருகின்றன. டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை. இந்தப் படத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மாசிடோனியன் ரேடியோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு, சிம்பொனி இசை தந்திருக்கிறாராம் ஆர் ரஹ்மான்.

கமலின் ஹே ராமுக்காக இளையராஜா முன்பு ஹங்கேரிக்குப் போய் சிம்பொனி இசை அமைத்தார். அவருக்குப் பிறகு, ஆர் ரஹ்மான் இப்போது ரஜினி படத்துக்கு சிம்பொனி இசையை பின்னணியாகத் தருகிறார்.தமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்

காவியத் தலைவன் படத்தை குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

 .ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் காவியத்தலைவன் படத்தை இளையதளபதி விஜய் பார்த்துள்ளார். படம் குறித்து விஜய் கூறுகையில், அண்மை காலத்தில் வெளிவந்துள்ள சிறப்பான, முக்கியமான தமிழ் படம் காவியத் தலைவன்.

இது போன்ற படங்கள் வருவது அரிது. அதனால் மக்கள் குடும்பத்தோடு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய படம். அதிலும் குறிப்பாக வசந்தாபலன் சார் இது போன்ற திரைக்கதையை இது போன்ற பின்னணியில் தெரிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

படத்தில் பணியாற்றிய சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா, நீரவ் ஷா, ரஹ்மான் சார் மற்றும் டெக்னீஷியன்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்

திருமணம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றி கற்பழித்துவிட்டதாக டிவி நடிகர் அவான் குமார் மீது போலீசில் புகார் செய்துள்ளார் நடிகை ஒருவர். அந்த நடிகையின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர்தான் இந்த அவான் குமார். நிறைய டி.வி. தொடங்களில் நடித்துள்ளார். இவர் மீது சக நடிகை ஒருவர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார்.

அவான் குமார் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை கற்பழித்து விட்டார் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

 அவானால் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவான் குமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவான் நிறைய பெண்களை இதுபோல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.