Sunday, February 27, 2011

இந்தியா இமாலய ரன் குவித்தும் போட்டியை சமன் செய்தது இங்கிலாந்த்

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா- இங்கிலாந்து போட்டி சமநிலையில் முடிந்தது


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 11-வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஷேவாக்கும், சச்சினும் களம் இறங்கினர்.   இருவரும் ஆரம்பத்தில் அதிரடியாக விளையா வந்தனர். ஷேவாக் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.


8-வது ஓவரை பிரெஸ்னென் வீசினார். அந்த ஓவரில் ஷேவாக் பிரையரிடன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 26 பந்துகளை சந்தித்து 35 ரன் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும்.   அடுத்த வந்த காம்பீர் பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில சச்சின் நிதானமாக விளையாடினார். 15 ஓவர் வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்தது. நிதானமாக விளையாடி வந்த சச்சின் 50 ரன்னை தொட்டார்.

அதன் பின் சச்சின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.   26-வது ஓவரை சுவான் வீசினார். அந்த ஓவரில் சச்சின் தொடர்சியாக 2 சிக்சர்களை விளாசினார். சச்சினை தொடர்ந்து காம்பீரும் அரை சதம் அடித்தார். அரை சதம் அடித்த சிறிதுநேரத்தில் காம்பீர் 51 ரன்னில் அவுட் ஆனார்.  

பின்னர் களம் வந்த யுவராஜ் பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில் விளையாடிய சச்சின் சதம் அடித்தார். இது இவருக்கு 47-வது சதமாகும். இன்றைய ஆட்டத்தில் சச்சின் பேட்டிங்கில் அனல் பறந்தது. 39-வது ஓவரில் சச்சின் 120 எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் 10 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.    அடுத்து வந்த டோனி பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில் யுவராஜ் சிங் அரைசதம் அடித்தார்.

அதன்பின் 58 ரன்னில் அவுட் ஆனார். பின் தோனி 31 ரன்னில் அவுட் ஆனார். இதற்கிடையே இந்தியா 45.3 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது.   இதன் பின் இந்தியா விக்கெட் சரிய ஆரம்பித்தது. 49.5 ஓவரில் 338 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பதான் (14), கோலி (8), ஹர்பஜன் சிங் (0), ஜாகீர்கான் (4), சாவ்லா (2) ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னென் 5 விக்கெட் வீழ்த்தினார். 

இதன் பின்னர் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.


சினிசேவா விருது பெற்ற 'நர்த்தகி'


தமிழ் சமூகத்தின் மேல் அக்கறையுடன் செயல்பட்டுவரும் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் திரைப்படத் துறையில் சமூகத்தின் மேல் அக்கறைகொண்டு செயல்பட்டு வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர். நடிகை மனோரமா, நடிகர் கமல்ஹாசன் போன்றோர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ்விருது, 'நர்த்தகி' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

புன்னகை பூ கீதா, தயாரித்திருக்கும் இப்படத்தை ஜி.விஜயபத்மா இயக்கியிருக்கிறார். எக்ஸ்னோரா மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 'நர்த்தகி' திரைபப்டத்தை வியாபார நோக்கில்லாமல் தயாரிக்க முன்வந்ததற்காக தயாரிப்பாளர் புன்னகை பூ கீதாவிற்கும், திருநங்கைகள் பற்றி துணிச்சலான கருத்துக்களை முன்வைத்ததற்காகவும், உலகிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கையை கதாநாயகியாக நடிக்க வைத்ததற்காகவும், இயக்குநர் ஜி.விஜயபத்மாவிற்கும், வியாபார நோக்கில்லாமல் ஒரு சமூகத்திற்கு செய்யவேண்டும் என்ற நோக்கில் திருநங்கை சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களுக்காவும், முழுக்க முழுக்க இந்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி முழு திரைப்படத்தின் இசையமைப்பையும் வடிவமைத்தற்காக ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், திருநங்கைகள் பற்றிய உருக்கமான பாடல்களுக்காக நா.முத்துக்குமாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.


முதல் இடம்


ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் `முதல் இடம்' படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக நாயகன் விதார்த்- கீர்த்திசாவ்லா ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தோடு ஆடிப்பாடும் "ஊரு ஊரு தஞ்சாவூரு இது ராஜராஜன் ஆண்ட ஊரு'' என்ற பாடல் காட்சியை தஞ்சை பெரியகோயில், அரண்மனை, தஞ்சை முக்கிய வீதிகளிலும் படமாக்கினார்கள்.

விதார்த்- கதாநாயகி கவிதா நாயர் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும், விதார்த்- மயில்சாமி, அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளும், விதார்த்- பொன்னம்பலம் குழுவினர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வரும் 175-வது படமான `முதல் இடம்' படத்தில் கவிதா நாயர், இளவரசு, மயில்சாமி, `பொல்லாதவன்' கிஷோர், `களவாணி' திருமுருகன், கலைராணி, பொன்னம்பலம், `வெண்ணிலா கபடி குழு அப்புக்குட்டி, மனோபாலா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இசை: டி. இமான், ஒளிப் பதிவு: பி. செல்லத்துரை, எடிட்டிங்: வி.டி. விஜயன், சண்டை: திலீப் சுப்பராயன், நடனம்: தினேஷ், பாடல்கள்: அறிவுமதி, கபிலன், யுகபாரதி, தயாரிப்பு நிர்வாகம்: தஞ்சை கே. மோகன், பி. சுரேந்தர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆர். குமரன். தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ். குகன்.


கவர்ச்சி நடிகை மும்மைத்கானின் புதிய அவதாரம் ...!


கவர்ச்சி நடிகை சோனாவை தொடர்ந்து, மற்றொரு கவர்ச்சி நடிகை மும்மைத்கானும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட தென் இந்திய சினிமாவில் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடித்தவர் மும்மைத்கான். தமிழில் கந்தசாமி படத்தில் இவர் ஆடிய என் பேரு மீனா குமாரி... என்ற பாடல் மிகவும் பிரபலம். கவர்ச்சியால் சம்பாதித்த பணத்தை எல்லாம் தயாரிப்பில் போட முடிவெடுத்துள்ளார்.

மும்மைத்கான் புதிதாக "ஹவுஸ் சுகர் கேண்டி எண்டர்டெயிமென்ட்ஸ்" எனும் புதிய சினிமா கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார். அத்தோடு தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கவும் இருக்கிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.


வன்முறை, ஆபாசத்தைத் தூண்டும் 14 டிவி நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரிக்கை

வன்முறை, ஆபாசம், அறுவெறுப்பைத் தூண்டும் 14 டிவி தொடர்களை தடை செய்யக் கோரி மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறைக்கு புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணம் குறித்த நிகழ்ச்சியும் இதில் அடக்கம்.

பிரபல கார்ட்டூன் நிகழ்ச்சியான ஷின் சான், பிந்தாஸ் டிவியில் வெளியாகும் எமோஷனல் அத்யாச்சார், பிக் ஸ்கிரீனில் வெளியாகும் சிந்தாமணி, எம்டிவியில் வரும் ஸ்பிளிஸ்ட்ஸ்வில்லி-3, என்டிடிவியில் இடம் பெறும் செரினா வில்லியம்ஸ் தொடரில் இடம் பெறும் அவரது நிர்வாணப் படங்கள், உள்ளிட்டவை இதில் அடக்கம்.

இந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள், வன்முறை, ஆபாசம், அறுவெறுப்பைத் தூண்டும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

ஜெய்ஹிந்த் டிவியில் இடம் பெறும் லைஸ் ஸ்கெட்சஸ் நிகழ்ச்சி பெண்களை மிகவும் தரக்குறைவாகவும், இழிவாகவும் சித்தரிப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. ஹங்கமா டிவியில் ஒளிபரப்பாகும் ஷின் சான் கார்ட்டூன் தொடரில் ஆபாசமான வசனங்கள் இடம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. தேரே லியே என்ற தொடரில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குமுறல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புகார்கள் குறித்தும், இந்த நிகழ்ச்சிகளைத் தடை செய்வது குறித்தும் அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை உதவிக்கு இழுக்கும் நித்யானந்தா


பெங்களூரை அடுத்து உள்ள பிடுதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த அவரது சீடர்கள் 3 பேர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நித்யானந்தா பிடுதி ஆசிரமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,  ‘’பெங்களூர் சி.ஐ.டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கப்பா தலைமையிலான போலீசார் திடீரென்று ஆசிரமத்துக்கு வந்தனர். அவர்கள் என் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரை மறைத்து வைத்திருப்பதாக கூறி, சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்களிடம் எனது செயலாளர் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். இதுதொடர்பாக ஆசிரம சீடர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.



உடனே சி.ஐ.டி. போலீசார் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்து விட்டதாக கூறி பிடுதி போலீசில் புகார் செய்தனர்.

அதைத்தொடர்ந்து பிடுதி போலீசார் ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து 3 சீடர்களை கைது செய்தனர். அவர்களிடம் கைது வாரண்ட் எதுவும் இல்லை. சட்டத்துக்கு விரோதமாக ஆசிரம சீடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


சி.ஐ.டி மற்றும் பிடுதி போலீசார் எனக்கும், ஆசிரமத்துக்கும் தொடர்ந்து பிரச்சினை கொடுத்து வருகிறார்கள். வேண்டுமென்றே என் மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்பட 20 நாடுகளில் உள்ள எனது சீடர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.


பிடுதி ஆசிரமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட சீடர்கள் உள்ளனர். அவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் எனது சீடர்கள் பொது இடத்தில் உண்ணாவிரதம் இருப்பார்கள்.

மேலும் போலீசார் கொடுத்து வரும் தொடர் பிரச்சனை குறித்து முதல்வர் எடியூரப்பாவை ஆசிரம சீடர்கள் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். முதல்-மந்திரி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். அவர் தலையிட்டால் மட்டுமே எனக்கும், ஆசிரமத்துக்கும் போலீசார் கொடுத்து வரும் தொடர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதுவரைக்கும் ஆசிரம சீடர்கள் போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தார்.