Friday, January 30, 2015

1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), அன்னா ஹசாரேவை கொன்ற பாஜக

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பா.ஜ.க. வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் டிசம்பர் 2013-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் உதவியுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைத்ததை கிண்டல் செய்யும் வகையில் உள்ளது. அந்த விளம்பரத்தில், சுவரில் மாட்டப்பட்டுள்ள அன்னா ஹசாரேவின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் "1948 ஆம் ஆண்டு நாதுராம் கோட்சே காந்தியை கொன்ற இதே நாளில் தான் (இன்று), இந்த விளம்பரத்தில் அன்னா ஹசாரே கொல்லப்பட்டிருக்கிறார்" என்றார். இதற்காக பா.ஜ.க. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது எதிர் எதிர் அணியில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், கிரன் பேடி இருவரும் முன்பு அன்னா ஹசாரேவோடு இணைந்து பல சமூக போராட்டங்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்சே... ஜெயந்தி மீது ஈவிகேஎஸ் காட்டம்!

ஜெயந்தி நடராஜனின் தாத்தாவான தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அரிசி பதுக்கியவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார். 

முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன், காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் கட்சியில் இருந்த தனக்கு, உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், ஜெயந்தி நடராஜனின் விலகல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனடியாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசி மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். 

அதில் அவர், ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதல்வருமான பக்தவத்சலத்தை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். இளங்கோவன் கூறுகையில், ‘தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது பக்தவத்சலம் கிடங்கில் அரிசியைப் பதுக்கியவர். 

பெருந்தலைவர் காமராஜரின் நற்காரியங்கள் பக்தவத்சலத்தின் ஆட்சியால் வீணானது. 1967ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு பக்தவத்சலமே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

பக்தவத்சலத்திற்குப் பிறகு, அதாவது கடந்த 1967ம் ஆண்டிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை, காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட அழிந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெயந்தி நடராஜன் விலகியதற்கு அவரது தாத்தாவை வம்பிக்கிழுத்துள்ளார் இளங்கோவன் என்பது பரபரப்பை கூடுதலாக்கியுள்ளது. 


தனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்

ஃபெப்ரவரி 13 -ஆம் தேதி அனேகன் திரைக்கு வருகிறது. இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தனுஷ்,

அனேகன் 13 -ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளிலும், இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. என்னுடைய படங்களில் ‘அனேகன்’ தான் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆக, இப்போது தனுஷும் ஆயிரத்தில் ஒருவன்.


ரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்ட் லுக்?

ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் ஷங்கர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி - எந்திரன் 

எந்திரன் படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தார். ரூ 375 கோடியை இந்தப் படம் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

வெளிநாடுகளில் இன்று வரை அதிக வசூல் குவித்த தமிழ்ப் படம் எந்திரன்தான். இந்தப் படம் இந்தியிலும் தெலுங்கிலும் வெளியானது. தெலுங்கில் ரூ 45 கோடியைக் குவித்தது.

இரண்டாம் பாகம் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாகத் தயாராகும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர். ஆனால் ரஜினியின் உடல் நிலை காரணமாக அது தொடங்கவில்லை.

ஆமீர்கான் 

இந்த நிலையில் ஆமீர்கானை வைத்து ரோபோ இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஷங்கர் என்று கூறப்பட்டது. இதற்கான பேச்சுகளும் நடந்தன. ஆனால் இதில் ரஜினியும் நடிப்பார் என்றார்கள்.

பிப் 14-ல்? 

இந்த நிலையில் ரோபோ இரண்டாம் பாகத்தின் முழு கதையும் தயார் நிலையில் உள்ளதாகவும், ரஜினி நாயகன் என்றும் ஷங்கர் கூறியதாக செய்திகள் வெளியாகின. படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷங்கரே இதனை ஹைதராபாதில் தெரிவித்ததாக அதில் தெரிவித்திருந்தனர்.

தெரியலயே.. 

இதுகுறித்து ஷங்கர் தரப்பில் நாம் விசாரித்தபோது, தங்களுக்கு அது பற்றி எந்த ஐடியாவும் இல்லை என்றும் மீடியாவில் வந்துள்ள செய்தி குறித்து ஷங்கரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


மம்முட்டியை காதலிக்கும் நயன்தாரா

இயக்குனர் சித்திக்கின் பாடிகாட் படத்தில் நடித்த நயன்தாரா (இந்தப் படம் தமிழில் காவலன் என்ற பெயரில் விஜய் நடிப்பில் சித்திக்கால் ரீமேக் செய்யப்பட்டது) நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தையும் சித்திக் இயக்க, ஹீரோவாக நடிப்பது மம்முட்டி.

பாஸ்கர் தி ராஸ்கல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லரில் நயன்தாரா மம்முட்டியின் காதலியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆக்ஷன் த்ரில்லராக இருந்தாலும் தனது படங்களில் இருக்கும் காமெடி, சென்டிமெண்ட், ரொமான்ஸ் இதிலும் இடம்பெறும் என்று சித்திக் தெரிவித்தார்.

அஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதாஸ்

அஜீத் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குனரானவர் முருகதாஸ். மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். ஆனால், அஜீத் முருகதாஸை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

துப்பாக்கி முடிந்த உடனேயே, அஜீத்தை வைத்து படம் இயக்க ஆர்வமாக உள்ளதாக முருகதாஸ் வெளிப்படையாக அறிவித்தார். அஜீத்துக்கான கதை தயாராக இருப்பதாகவும், அவர் சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு கிளம்பிவிடலாம் என்றும் கூறினார். ஆனால், அஜீத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.

கத்தி முடிந்த பிறகு மீண்டும் அஜீத் படம் குறித்து பேச ஆரம்பித்தார் முருகதாஸ். அஜீத்தின் கட்டளைக்காக காத்திருக்கிறேன் என்று இறங்கியும் வந்துப் பார்த்தார். அஜீத் வாய் திறக்கவில்லை.

இதற்கு மேலும் காத்திருப்பதில் பலனில்லை என்ற நிலையில் முருகதாஸ் விக்ரமை வைத்து படம் செய்ய தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

முருகதாஸ் இந்தியில் மௌனகுரு படத்தை சோனாக்ஷி சின்காவை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார். சில காரணங்களால் அந்த புராஜெக்ட் தள்ளிப் போயுள்ளது.

தற்போது விக்ரம் ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸும் இணைந்து தயாரிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.



தனுஷை தவிர்த்தது ஏன்?- காஜல் பதில்

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். காஜல் அகர்வாலோ பறவை என்றாலே நடுங்குவாராம். அந்த பயத்திலிருந்து தற்போது மீண்டிருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறியது:பறவைகள் என்றால் எனக்கு பயம். குறிப்பாக மயில் என்றால் அருகில் செல்லவே பயப்படுவேன். ஆனால் தனுஷுடன் நடிக்கும் ‘மாரி‘ படத்தில் விதவிதமான பறவைகளுடன் நடிக்க வேண்டி இருந்தது. 

யூனிட்டில் இருந்தவர்கள் எனக்கு தைரியம் கொடுத்தனர். அந்த தைரியத்தில் மயிலை என் கையில் பிடித்தபடி நடித்தேன். தனுஷுடன் சில படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை, தவிர்த்தது ஏன் என கேட்கிறார்கள். 

‘பொல்லாதவன்‘ படத்திலேயே நடிக்க இருந்தேன். அதற்கான போட்டோ ஷூட்டும் நடந்தது. அதேநேரம் தெலுங்கில் ‘சந்தமாமா‘ படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. 

கால்ஷீட்டை பொறுத்து எதில் நடிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் ‘சந்தமாமா‘ படத்தை தேர்வு செய்தேன். அதன்பிறகும் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதற்கான சூழல் அமையவில்லை. 

‘மாரி‘ படத்தில் அவருடன் இணைந்து நடிப்பது சந்தோஷம்.இவ்வாறு காஜல் அகர் வால் கூறினார்.


மோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி நடராஜன் பரபரப்பு புகார்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியாகியுள்ளது. 

முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன். இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதம் ஒன்று தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. 

அக்கடிதத்தில் அவர்,

 ‘பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தன்னை செயல்பட சொன்னதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார் ஜெயந்தி. 

மேலும், சுற்றுச்சூழல் துறையில் இருந்து எதற்காக என்னை நீக்கினார்கள் என்றே தெரியவில்லை எனக் கூறியுள்ள ஜெயந்தி, மோடியின் நண்பர் அதானியின் நிறுவனத்துக்கு உதவ நிர்பந்திக்கப்பட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதேபோல், அதானி நிறுவனம் தொடர்பான பைல் திடீரென காணாமல் போய், டாய்லெட்டில் கிடந்ததாகவும், மனைவியை உளவு பார்த்த விவகாரத்தில் மோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டதாகவும் ஜெயந்தி தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, கடந்த 2013ம் ஆண்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஜெயந்தி நடராஜன், பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள இந்தக் கடிதம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தேதியிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில் துறையினருக்கு சாதகமாக நடக்க ராகுல் நிர்பந்தித்ததாக தனது கடிதத்தில் ஜெயந்தி நடராஜன் பரபரப்பு புகார் தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி

இந்திய சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை தட்டிச் சென்ற பிகேயை தமிழில் ரீமேக் செய்ய பலரும் முயற்சி எடுத்து வருகின்றனர். அதில் விஜய்யின் பெயரும் அடிபடுகிறது.

அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தை ஷங்கர் தமிழில் நண்பன் என்ற பெயரில் இயக்க, அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடித்தார். படமும் வெற்றி பெற்றது.

பிகே, கடவுள் என்ற கருத்தாக்கத்தையும் மக்களின் மூடத்தனத்தையும் கேள்விக்குள்ளாக்கும் படம். விவசாயப் பிரச்சனையை கையில் எடுத்ததால்தான் கத்தி வெற்றி பெற்றது. அதேபோல் கடவுள் பிரச்சனையும் கல்லா கட்டும் என்று நம்பிக்கை.

இன்னும் சில தினங்களில் பிகே ரீமேக் உரிமையை யார் வாங்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.



கத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே விக்ரம்!

முதல் மூன்று தினங்கள் வந்த கலவையான விமர்சனங்களைத் தாண்டி ஐ பிக்கப்பாகியுள்ளது. முக்கியமாக கத்தி படத்தின் வசூலை ஐ பின்னுக்கு தள்ளியதாக திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக மாஸ் நடிகர்களின் எந்தப் படமும் முதல் மூன்று முதல் ஐந்து தினங்கள் நல்ல வசூலை பெறும். ஐந்து தினங்களுக்குப் பிறகும் தாக்குப் பிடிக்கும் படங்கள் மட்டுமே அதிகம் வசூலிக்கின்றன. பார்வையாளர்களின் விருப்பத்தை சம்பாதித்தப் படங்கள் என அவற்றை மட்டுமே கூற முடியும்.

கத்தி இரண்டு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியது. லிங்கா நான்காவது நாளே வீழ்ச்சி கண்டது. ஐ படத்தின் முதல் மூன்று நாள் கலவையான விமர்சனங்கள் படம் தப்பிக்குமா என்று பலரையும் எண்ண வைத்தது. மாறாக ரசிகர்கள் ஐ படத்தை விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதால் வசூல் எதிர்பார்த்தைவிட அதிகம் கிடைத்துள்ளது.

வெள்ளிக்கிழமை பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னை அறிந்தால் அடுத்த வாரமே வெளியாகிறது. அதனால் ஐ மேலும் ஒருவாரம் ஆளில்லா கிரவுண்டில் பவுண்ட்ரி மழை பொழியும் என்பதால் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்களில் சிலை : இந்து மகாசபை

 மகாத்மா காந்தியின் நினவு தினமான இன்று அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை கோவில்களில் நிறுவப்படும் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை நிறுவப்படும் என்று அகில இந்திய இந்து மகாசபை ஏற்கனவே அறிவித்திருந்தது. 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தாப்பூர் மாவட்டத்தில் கோட்சேவுக்கு கோயில் அமைக்கவும், மீரட்டில் சிலை நிறுவவும், இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில் பங்கே ற்ற இந்துமகாசபை நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீ-ழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட கூடும் என்பதால் அந்த இடங்களுக்கு சீல் வைத்த உத்திரபிரதேச  அரசு இருபகுதிகளிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நாதுராம் கோட்சேவின் சிலையை கோவில்களில் நிறுவ இந்து மகாசபை முடிவு செய்துள்ளது. இதற்காக ஜெய்ப்பூரில் 500 சிலைகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரகசியமாக நடைபெற உள்ள இந்த பணிக்கு கோயில் நிர்வாகிகளும், சாதுக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் கோட்சேவின் சிலை மற்ற இந்து கடவுளுக்கு நிகராக அமைக்கப்படாது என்று இந்து மகாசபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்து மகாசபையின் இந்த செயல்பாடு காந்தியாவாதிகள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக்காது-ராம்கோபால் வர்மா தடாலடி

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், டைம் பாசுக்காக அணியை குறை கூறிக்கொண்டும் வீரர்களை சாடிக்கொண்டும் இருப்பார்கள். யாரும் ஏற்காவிட்டாலும் தங்களது ஆலோசனைகளையும் சொல்வார்கள். 

அதுபோல் சினிமாவில் யாரும் இல்லை. அந்த குறையை போக்கி வருகிறார் ராம்கோபால் வர்மா. அவரது சர்ச்சை கருத்தில் லேட்டஸ்ட்டாக சிக்கி இருப்பவர் சிரஞ்சீவி. 

தனது 150வது படத்தில் நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திட்டமிட்டிருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 

ஷங்கர் மற்றும் வேறுசில பிரபல இயக்குனர்களிடம் இது பற்றி பேசி வருகிறார் சிரஞ்சீவி. இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை எந்த இயக்குனர் இயக்கினாலும் நன்றாக இருக்காது என தாக்குதல் தொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது:

சிரஞ்சீவி தனது 150வது படத்தை எந்த இயக்குனரிடம் ஒப்படைப்பது என்று யோசித்து வருகிறார். அவர் படத்தை எந்த இயக்குனர் இயக்கினாலும் அது சாதாரண படமாகவே இருக்கும். 

அதில் எந்த சிறப்பும் இருக்காது. இப்படத்தை சிரஞ்சீவியே இயக்குவதுதான் பொருத்தமாக இருக்கும். இது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். இந்த முடிவை எடுக்காமல் வேறு யாரிடமாவது படத்தின் இயக்குனர் பொறுப்பை ஒப்படைத்தால் அது மிகப்பெரிய தவறாகிவிடும். 

பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கியதைவிட அது பெரிய தவறாக இருக்கும்.இவ்வாறு வர்மா கூறியிருப்பது தெலுங்கு படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி சிரஞ்சீவி கருத்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். 


விஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இசை’. இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படம் சூப்பர் ஹிட்டானது. வணிக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 

விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து அவர் கூறும்போது, ‘நானும் விஜய்யும் இணைந்து பணியாற்றி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் விஜய் என்னுடைய படத்தின் பாடல்களை வெளியிட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் மீண்டும் அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய விரும்புகிறேன்’ என்றார். 

எஸ்.ஜே.சூர்யா- விஜய் கூட்டணியில் குஷி படம் போல் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என நம்பலாம்.



Thursday, January 29, 2015

உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவிப்பு

2016 ஆம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 

2019 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆண்டிற்கான டி.20 போட்டிகள் மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெறும் என தெரிவித்துள்ள ஐ.சி.சி., இவ்வாண்டு நடைபெறும் உலக கோப்பை ஒரு நாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டை ஏற்படுமானால் சூப்பர் ஓவரை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. 

முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி.20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


தனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ்க்கை கதையா?: புதிய தகவல்

இந்தியில் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஷமிதாப்’ படம் ரஜினியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கியுள்ளார். 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய கேரக்டரில் வருகிறார். நாயகியாக கமலின் 2–வது மகள் அக்ஷராஹாசன் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து வருகிற பிப்ரவரி 6-ந் தேதி ரிலீசாகவிருக்கிறது. 

இந்த நிலையில் ‘ஷமிதாப்’ படத்தின் கதை கசிந்துள்ளது. ரஜினியின் வாழ்க்கை சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது என்கின்றனர். 

கதாநாயகனின் தாய் பஸ் நிலையத்தில் நொறுக்குத் தீனிகள் விற்கிறார். அவருக்கு நாயகன் உதவிகள் செய்கிறான். ஒரு கட்டத்தில் நாயகன் பஸ் கண்டக்டராகிறார். அவனுக்கும் ஒரு முதியவருக்கும் நட்பு ஏற்படுகிறது. அதன் பிறகு தனுஷ் படிப்படியாக முன்னேறி உயர்ந்த நிலைக்கு வருகிறார். 

சாதாரண பஸ் கண்டக்டர் ரஜினியை போல் எப்படி சூப்பர் ஸ்டார் மாதிரியான அந்தஸ்துக்கு உயர்கிறார் என்பதே கதை. இதில் தனுஷ் பஸ் கண்டக்டர் வேடத்தில் நடிக்கிறார். ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் பெங்களூரில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமிதாப்பச்சன் குடிகாரன் கேரக்டரில் வருகிறார். எப்போதும் பாட்டிலும் கையுமாய் இருப்பதுபோல் இவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு உள்ளது. தனுஷ் உயர்வுக்கு காரணமாகவும் இருக்கிறார்.


மனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சிறப்பாக கவனிக்கப்படுவது எதனால்?

நரேந்திர மோடி மனைவியை ''கைவிட்டவர்'' என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் கமாத்திற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

மும்பையில், மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும், கிரேட்டர் மும்பை மாநகராட்சியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குருதாஸ் கமாத் பேசுகையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
குருதாஸ் கமாத் பேசுகையில், மோடி அவரது மனைவியை கடந்த 40 ஆண்டுகளாக கைவிட்டது மிகவும் வெட்கமானது. பிரதமர் மோடி திருமணம் ஆனவராகவே உள்ளார். அவர்கள் விவாகரத்து செய்யவில்லை. மோடி அவரது மனைவியை கைவிட்டுவிட்டார்.

யசோதா பென் மிகவும் நல்ல பெண்மணி. அந்த பெண், மோடிக்காக கோவில்களில் வழிபாடு செய்கிறார். பிரதமர் மோடி புதியதாக அமைச்சரவைவில் சேர்ந்துள்ள ஸ்மிரிதி இரானிக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது மற்றும் பங்களாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும், பிரதமர் மோடியின் மனைவி அரசு பேருந்திலும், ஆட்டோவிலும் பயணம் செய்கிறார். படைப்பிரிவினர் கொண்ட வாகனங்கள் அவரை பின்தொடர்கிறது. பிரதமர் மோடி பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

அவருடைய திருமண தொடர்பான காலம் இரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. முதல் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். மொத்த நாடும், தேர்தல் ஆணையமும் இதனை கண்காணித்தது. இதனால் அவர் சிக்கலை எதிர்கொண்டதால், இது நடந்தது. இதன்மூலம் அவர் நாட்டிற்கு சொல்வது என்ன?. திருமணம் செய்துக் கொள்ளுங்கள், பின்னர் கைவிட்டுவிடுங்கள் என்றா? என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் அவர் பேசுகையில், யசோதாபென், மோடி மற்றும் அவரது குடும்பத்தினரால் கவனிக்காமல் விடப்பட்டுள்ள நிலையில், ஸ்மிரிதி இரானி மட்டும் சிறப்பாக கவனிக்கப்படுவது எதனால்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பது மற்றும் வீட்டிற்கு திரும்புதல் (கார் வாப்சி) குறித்து பேசுகின்றனர். இது உங்களது வீட்டில் முதலில் தொடங்குங்கள், மோடி அவரது மனைவிக்கு முதலில் கார் வாப்சியை உறுதி செய்யுங்கள் என்று குருதாஸ் கமாத் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் மனைவி யாசோதா பென்னுடன், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவரின் இத்தகைய பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, கமாத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது.
"கமாத் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டார். சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தோல்வி அடைந்த காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் நல்லறிவை இழந்துவிட்டனர். இதன் காரணமாகவே அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பாஜக தலைவர் பாத்கால்கார் கூறியுள்ளார்.



அஜீத்துக்கு கொலை மிரட்டல்

‘என்னை அறிந்தால்’ படம் வெளியிடப்படும் நாளில் நடிகர் அஜீத் கொலை செய்யப்படுவார் என்ற மிரட்டல் கடிதம் தமிழ் திரைப்பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜீத் கதைநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. திரிஷா, அனுஷ்கா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். வரும் 5ம் தேதி திரைக்கு வரும் என தெரிகிறது. 


இந்நிலையில், அசோக் நகரில் உள்ள திரையரங்கத்துக்கு ஒரு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் “ஹலோ சார் உங்க தியேட்டர்ல வெளியாகிற அஜீத் படத்துக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுகிறது. ‘என்னை அறிந்தால்’ படம் வெளியாகும்போது, அஜீத் குமாரை கொலை செய்ய இருக்கிறார்கள். 

அவர்கள் இந்த படம் வெளியாகும் 8 திரையரங்குகளில் குண்டு வைத்து தகர்க்க உள்ளார்கள். இது அஜீத் குமார் அவர்களுக்கும் தெரியும். எனவே, தங்களையும் தங்கள் திரையரங்கையும் காப்பாற்றி கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வெறி சீரியஸ் அன்ட் பி கேர்புல். இப்படிக்கு அஜீத் ரசிகன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 தர்மபுரியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுபோல் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொண்ட மிரட்டல் கடிதம் கண்டு தியேட்டர் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து குமரன் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டிற்கு இதுபோன்று மிரட்டல் கடிதம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஜீத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


லிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

 
மதுரை சின்னசொக்கிகுளத்தை சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர், ரஜினி நடித்த லிங்கா படக்கதை தன்னுடையது என்று கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிவில் வழக்கு தாக்கல் செய்யும்படி யும் அதுவரை படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், ரூ.10 கோடியை வங்கியில் டெபாசிட் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதை ஏற்று வங்கியில் பணம் டெபாசிட் செய்தபிறகு படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ரவிரத்தினம் மதுரை மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘லிங்கா படத்தின் கதை எனது முல்லைவனம் 999 படத்தின் கதை ஆகும். எனவே, லிங்கா படத்தின் கதையும், முல்லைவனம் 999 கதையும் ஒன்றுதான் என உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை லிங்கா படக்குழுவினர் அந்த படத்தின் கதையை தங்களுடையது என்று சொல்வதற்கு தடைவிதிக்க வேண்டும். என்னுடைய கதையை திருடியதற்காக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி சரண் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் மார்ச் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தனுஷின் மிகப்பெரிய வெளியீடு...!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை ‘அயன்’, ‘கோ’ ஆகிய படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தை வருகிற பிப்ரவரி 13-ந் தேதி வெளியிடவுள்ளனர். 

தனுஷ் படங்களிலேயே ‘அனேகன்’தான் அதிக திரையரங்குகளில் திரையிடவுள்ளதாக கூறப்படுகிறது. இதை தனுஷே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘அனேகன்’ பிப்ரவரி 13-ந் தேதி வெளியாகவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகளிலும், இந்தியை தவிர்த்து மற்ற மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. என்னுடைய படங்களில் ‘அனேகன்’ தான் அதிக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

தனுஷ் இந்தியில் நடித்துள்ள மற்றொரு படமான ‘ஷமிதாப்’ வருகிற பிப்ரவரி 6-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கியுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்

‘காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். இதில் அஜித் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றியடைந்ததையடுத்து இவர்கள் கூட்டணியில் ‘அமர்க்களம்’ படம் உருவானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இயக்குனர் சரணுக்கும், அஜித்துக்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்த விஷயம். சரண் எப்போதும் அஜித்தை பற்றி பேசுவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த அஜித்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

அஜித்தின் இமேஜ் ஒரு சூப்பர் ஹீரோ போன்று இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அவரது தொழிலையும் தாண்டி அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு அவர் ஏற்கனவே வளர்ந்துவிட்டார். ஒரு குடிமகன் என்ற முறையில் அவர் சமூக பொறுப்புடையவர். எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டின் அடையாளம் என்றே அஜித்தை கூறலாம். இவ்வாறு கூறினார்.

சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் வினய் கதாநாயகனாக நடித்து வருகிறார். பரத்வாஜ் இசையமைக்கிறார். இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட்டம்

நடிகை திரிஷா தயாரிப்பாளராகிறார். சினிமாவுக்கு முழுக்கு போட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரிஷாவுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. தொழில் அதிபர் வருண்மணியனை மணக்கிறார். இவர் வாயை மூடி பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களை தயாரித்து உள்ளார்.

திரிஷா – வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. மார்ச் மாதத்துக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது அவரிடம் ‘என்னை அறிந்தால்’, ‘பூலோகம்’, ‘அப்பா டக்கரு’ ஆகிய மூன்று தமிழ் படங்களும் ‘லயன்’ தெலுங்கு படமும் கைவசம் உள்ளது. இவற்றில் ‘என்னை அறிந்தால்’ படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5–ந்தேதி ரிலீசாகிறது. இதில் அஜித் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

‘பூலோகம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.

திருமணத்துக்கு பிறகு வருண்மணியனுடன் இணைந்து திரிஷா படங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கதைகள் கேட்டு வருகிறாராம். முதலாவதாக திரு இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறாராம். இவர் ஏற்கனவே விஷாலை வைத்து சமர், நான் சிகப்பு மனிதன், தீராத விளையாட்டு பிள்ளை படங்களை டைரக்டு செய்தவர்.

இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அத்துடன் திரிஷாவும் வருண்மணியனும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்குவது பற்றி யோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் இந்த அணி விற்பனைக்கு வருகிறது.

கிரண் பேடியின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்தல் கமிஷன் அதிர்ச்சி

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண் பேடி, கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால் அவருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

கிரண் பேடி, உதய் பார்க் பகுதியை குறிப்பிட்டு எண். டி.இசட்.டி 1656909 என்ற எண் தாங்கி ஒரு அடையாள அட்டையும், தால்கதோரா சந்து பகுதியை குறிப்பிட்டு எஸ்.ஜே.இ 0047969 எண்ணுடன் வேறு ஒரு அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார். இது தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, “இந்த விவகாரத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என கூறினார். தனது 2 அடையாள அட்டைகளில் ஒன்றினை ரத்து செய்ய கிரண் பேடி விண்ணப்பிக்காமல் இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகாரி சூசகமாக தெரிவித்தார்.


டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை? கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லி சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாததால், பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அலை பற்றி ‘ஏபிபி நியூஸ்- நீல்சன்’ சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதீய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 24, 25 தேதிகளில் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளனர்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம்பேர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போடப்போவதாக கூறி உள்ளனர். இது கடந்த 15 நாட்களுக்கு முன்னர், இதே அமைப்பினர் நடத்திய கருத்துக்கணிப்பை விட 4 சதவீதம் கூடுதல் ஆதரவு ஆகும்.

அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு குறைந்திருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது.

கிரண்பேடிக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கானுக்கு 8 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.



இனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர்ணனை! எப்படி...?

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையை தமிழிலும் கேட்டு ரசிக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனைகளை, இந்திய கிரிக்கெட் தொலைக்காட்சி சேனல்கள் ஆங்கிலத்தில் மட்டும் ஒலிபரப்பி வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஒலிபரப்பப்பட்டுவருகிறது. 

குறிப்பாக ஸ்டார் சேனல் ஹிந்தியில் கிரிக்கெட் ஒலிபரப்பில் பெயர் வாங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வர்ணனைகளை ஒலிபரப்ப ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன்வந்துள்ளது.

தமிழ், கன்னடம்.. 

தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் வர்ணனைகளை ஒலிபரப்ப உள்ளது. ஆனால் தெலுங்கு ஒலிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.  

எப்படி கேட்பது? 

செட்-ஆப் பாக்ஸ், டிடிஹெச் போன்றவற்றில், இப்போது பல சேனல்களுக்கு மொழிமாற்றுவதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. டிஸ்கவரி சேனல், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்கள் போன்றவற்றில் இதுபோன்ற ஆப்ஷன்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அதேபோல ஸ்டார் டிவியும் ஆப்ஷன்களை தந்து விரும்பிய மொழியை தேர்ந்தெடுக்கும் வசதியை ரசிகர்களுக்கு தர உள்ளது.  

வானொலி வர்ணனை 

பொற்காலம் முன்பெல்லாம், இந்தியாவில் கிரிக்கெட் நடைபெறும் காலங்களில் சென்னை வானொலியில் தமிழில் வர்ணனை ஒலிபரப்பாகும்,. தூய தமிழில் வர்ணனையாளர்கள் கிரிக்கெட்டை வர்ணிப்பார்கள். பவுன்சர் பந்துகளை, எகிறி பந்துகள் என்பர், ஓ.பி பந்துகளை, அளவு குறைந்த பந்து என்பர். கேட்கவே சுவாரசியமாக இருக்கும்.

டிவிகள் கிராமங்களிலும் ஊடுருவிய பிறகு ரேடியோ வர்ணனைகள் மதிப்பிழந்தன. ஆனால் இப்போது டிவியிலேயே ரேடியோ வர்ணனையையும் கேட்கும் வசதி கிடைக்கப்போகிறது. என்ன கொண்டாட்டத்துக்கு ரெடியா?

.

இயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவேசம்

டோலிவுட்டில் டாப் ஹீரோக்கள் நடிக்கும் படங்களை இயக்கி வருபவர் புரி ஜெகன்நாத். பொது இடத்தில் வைத்து அவர் கன்னத்தில் அறைவேன் என பாடகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடித்த ‘டெம்பர்‘, ரவி தேஜா, இலியானா நடித்த தேவுடு சேசின மனுஷிலு மற்றும் மகேஷ்பாபு, நாகர்ஜூனா உள்ளிட்ட பிரபல ஹீரோக்கள் நடித்த படங்களை இயக்கியவர் புரி ஜெகன்நாத். 

இவரைப்பற்றி பிரபல தெலுங்கு பட பாடகர் தேஷ்பதி ஸ்ரீனிவாஸ் கூறியது:புரி ஜெகன்நாத் தனது படங்கள் மூலம் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். 

நியாய தர்மம் சொல்லும் படங்களை எடுக்காததோடு சமுதாய பொறுப்போடுகூடிய படங்களையும் எடுப்பதில்லை. மேலும் பல்வேறு இயக்குனர்கள் தவறான கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே படங்கள் இயக்கி வருகிறார்கள். 

அதன் மூலம் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதிக்கக்கூடாது என்ற உணர்வை மாணவர்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். அப்படிபட்டவர்களும் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொது இடத்தில் வைத்து அவர்களின் கன்னத்தில் அறைவேன்.இவ்வாறு பாடகர் தேஷ்பதி ஸ்ரீனிவாஸ் கூறினார்.


என்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட்டு காட்டிய கௌதம்

இன்னும் ஒரு வாரம் போனால் என்னை அறிந்தால் படத்தை திரையில் கண்டு ரசிக்கலாம். ஆனால் அதுவரை ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் போலிருக்கிறது. படத்தின் கதையை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டுகின்றனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் அதுதான் பிரதான கேள்வியாக இருந்தது.

படத்தின் கதை என்ன?

கதையை உடனே சொல்வதற்கு கௌதம் ஒன்றும் எஸ்.ஜே.சூர்யா அல்லவே. ஆனால், கொஞ்சம் கோடிட்டு காட்டினார்.

அஜீத்தின் அம்மாவின் விருப்பம், அவர் மருத்துவராக வேண்டும் என்பது. ஆனால் காலம் அவரை வேறு திசையில் பயணிக்க வைக்கிறது. இந்தப் பயணத்தில் இரு பெண்கள் - ஒருவர் டான்சர் இன்னொருவர் ஐடி ஊழியர் - அஜீத்தின் வாழ்க்கையில் கடந்து போகிறார்கள். இதுதான் என்னை அறிந்தால் படத்தின் கதை என்றார்.

உங்களால் ஏதாவது யூகிக்க முடிகிறதா? சரி, விடுங்கள். ஃபெப்ரவரி 5 தியேட்டரில் பார்த்துக் கொள்ளலாம்.

காங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்: அன்னா ஹசாரே ஆவேசம்

கருப்பு பணத்தை மீட்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாத பா.ஜ.க. அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என காந்தியவாதியான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஹசாரே, ‘கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நூறே நாட்களில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்போம். அந்த பணத்தில் இருந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது. இதுவரை வெறும் 15 ரூபாய் கூட யார் கணக்கிலும் போடப்படவில்லை.

தாங்கள் மோசம் செய்யப்பட்டதை தற்போது உணர்ந்துள்ள மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கற்பித்தது போலவே, இந்த (பா.ஜ.க.) அரசுக்கும் பாடம் கற்பிப்பார்கள்.’ என்று தெரிவித்தார்.

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் வெல்வாரா? கிரண் பேடி வெல்வாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தில் நான் கருத்து கூற விரும்பவில்லை. வேறு எதைப் பற்றியாவது கேளுங்கள் என்றார். உங்களது அறிவுரையை மீறி அரசியலுக்குள் நுழைந்ததால் அவர்கள் மீது கோபமாக இருக்கிறீர்களா? என்றதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த அவர், இல்லையில்லை.., உங்களுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்து, அது நிறைவேறவில்லை என்றால் தான் யார் மீதாவது கோபம் வரும்.

என்னைப் பொருத்தவரை யாரிடமும் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. பிறகு எதற்கு யார் மீதும் நான் கோபப்பட வேண்டும்? என எதிர் கேள்வி கேட்கிறார், ஹசாரே.

பவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித்த மாணவர்கள் போதையில் மயக்கம்

ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 9ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் பள்ளி க்கு வந்ததும் வகுப்புக்கு செல்லாமல், விளையாட்டு மைதானத்தில் கழிப்பறைக்கு அருகே சென்று ஒளிந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து 2 பேர் மட்டும் வெளியேறி அருகில்  உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்றுள்ளனர். மது வாங்கி வந்து மைதானத்தில் அமர்ந்து குடித்துள்ளனர். 

மாணவர்களின் இந்த விபரீத செயலை, அங்கு தற்செயலாக வந்த மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை எச்சரித்துள்ளனர்.  ஆனால் அவர்களோ  பாட்டிலை உடைத்து சீனியர் மாணவர்களை மிரட்டி உள்ளனர். 

இதுகுறித்து ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆசிரியர்கள்  மைதானத்திற்கு வருவதற்குள் போதை மாணவர்கள்  புத்தகப் பைகளுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், ஒரு மாணவன் மட்டும் போதையில் மயங்கி  விழுந்தான். அவனை தூக்கிச்சென்ற ஆசிரியர்கள், மாணவரின் பெற்றோருக்கு தகவல் தந்தனர். 

பள்ளிக்கு பதற்றத்துடன் வந்த பெற்றோர் மகனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். பள்ளியில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை  அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது: இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளது. பள்ளிக்கு வந்து விட்டு, வகுப்பறைக்கு வராமல் மதுக்கடைக்கு மாணவர்கள் செல்கின்றனர். பள்ளி  சுற்றுச் சுவரின் ஒரு பகுதி உடைந்துள்ளது. இதன் வழியாக மாணவர்கள் வெளியே சென்று மது குடிக்கின்றனர் என்றனர்.

ஹன்சிகாவின் தங்க மனசு

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. கைவசம் நான்கைந்து படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஹன்சிகா. 

இவர் சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நாம் அறிந்த விஷயம். இவர்கள் தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் ஆசையாம். அது தற்போது நிறைவேறும் தருவாயில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகா மும்பை அருகே வாடா என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்.

அழகாகவும் அமைதியாகவும் ஒரு இடம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்து அந்த இடத்தை வாங்கியிருக்கிறார். கூடிய விரைவில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி தான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகளை தங்க வைக்கவுள்ளாராம். 

சால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் !

கௌதமின் என்னை அறிந்தால் படத்தில் மூன்றுவித தோற்றங்களில் நடித்துள்ளார் அஜீத். அடுத்து நடிக்கும் படத்தில் இந்த மூன்றுக்கும் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அஜீத் நடிக்க தயாராகி வருகிறார்.

என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு சிவா இயக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். ரத்னம் தயாரிப்பு. படத்தில் பங்குபெறும் நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படத்தின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.

சிவாவின் முந்தையப் படமான வீரத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் அஜீத் நடித்தார். சில காட்சிகளில் பெப்பரைவிட சால்ட் அதிகம். பாடல் காட்சிகளுக்கு இந்த கெட்டப் சரியாகப் பொருந்தவில்லை. அதனால் புதிய படத்தில் அஜீத்தின் தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளனர். முற்றிலும் வித்தியாசமான அதேநேரம் இளமையான கெட்டப்பில் அஜீத்தை நடிக்க வைக்க சிவா திட்டமிட்டுள்ளார்.

அஜித்துடன் இணைந்த சிம்பு

அஜித்தின் மீது தீவிர பற்று உடையவர் நடிகர் சிம்பு. அஜித் படம் வெளியாகும் முதல்நாளே அவருடைய படத்தை பார்க்கும் முதல் ரசிகனாக இன்றும் இருந்து வருகிறார் சிம்பு. அஜித்துடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையும் சிம்புவுக்கு உண்டு. 

இந்நிலையில், இருவரும் முதல்முறையாக இணையவிருக்கிறார்கள். இது படத்தில் அல்ல. திரையரங்குகளில். அதாவது, வருகிற பிப்ரவரி 5-ந் தேதி அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்றைய தினத்தில் இருந்து, சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசரை திரையரங்குகளில் வெளியிடவிருக்கின்றனர். 

‘இது நம்ம ஆளு’ படத்தை ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த வருடத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

ரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி

தனது ரகசிய பிரேக் அப் பற்றி தெரிவித்தார் டாப்ஸி.இது பற்றி அவர் கூறியது:எந்தவொரு படத்துக்கும் நான் ஆடிஷனில் (தேர்வுக்கான பரிசோதனை) பங்கேற்றதில்லை. அதுபோல் பங்கேற்ற படங்கள் எதுவும் எனக்கு கைகூடி வந்ததில்லை. 

அக்ஷய் குமாருடன் நடித்த பேபி இந்தி பட ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதில் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற முயற்சி எடுத்தேன். அந்த வேடம் கிடைத்தது. என் தந்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சாதாரண வேலை செய்பவர். 

இரவில் என் தோழிகள் வீட்டில்கூட என்னை தங்க அனுமதித்ததில்லை. இந்நிலையில்தான் நான் ஐதராபாத்தில் படப்பிடிப்புக்காக தனியாக தங்க வேண்டி இருந்தது. என் மீது அன்பு காட்டியவர்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துவிட்டேன். ஒருவருடன் பழக ஆரம்பித்தேன். அது தவறாகிவிட்டது. அவருடன் பிரேக் அப் ஆனது. ஆனால் அந்த வருத்தம் ஒரு வாரம்கூட நீடிக்கவில்லை.

 ஒரு நடிகருக்கும், நடிகைக்குமான உறவு என்றைக்கும் நிலைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.இவ்வாறு டாப்ஸி கூறினார். தனது பிரேக் அப் பற்றி டாப்ஸி குறிப்பிட்டாலும் நடிகருடன் மலர்ந்த காதல் பிரேக் அப் ஆனதா? பாய்பிரண்டுடன் மலர்ந்த காதல் பிரேக் அப் ஆனதா என்பதுபற்றி கூற மறுத்துவிட்டார். அதே சமயம் நடிகர்&நடிகைக்கு இடையிலான உறவு நிலைக்காது என அவர் சொல்லியிருப்பதால் நடிகரைத்தான் அவர் காதலித்திருப்பார் என்கிறது கோடம்பாக்கம் பட்சி.

பிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பிடிக்கும் அதிமுக

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சி  வந்தனர். இருப்பினும்  இடையிடையே சொந்த ஊர் மற்றும் சென்னைக்கு  சென்று வந்தனர். இனி யாரும் சென்னைக்கோ, சொந்த ஊருக்கோ போகக் கூடாது  அனைவரும் தேர்தல் பணியை மட்டுமே  கவனிக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6  வார்டுகளை கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஓட்டல்களில் தங்கிக்கொள்ளவும், மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கவும் முடிவு   செய்யப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதிகள் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமைச்சர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளன. 

20 நாட்கள் மட்டுமே விஐபிகள்  தங்கக்கூடிய இந்த வீடுகள் ஏரியாவுக்கு தகுந்தாற்போல் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகைக்கு பெறப்பட்டுள்ளன.  பிரியாணி பொட்டலத்துடன் தலைக்கு ரூ.300 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் பிரசாரத்துக்காக, அமைச்சர்கள் அவர்களின் சகாக்கள் என  தெருவுக்கு ஒரு அலுவலகம், அதைச் சுற்றி 4 ஸ்கார்பியோ மற்றும் 4  இனோவா கார்கள் என பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகின்றனர். 

 அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு செல்லும் போது உடன் வரும் தொண்டர்களுக்கும் ஒரு  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது என்பது தான்  வேடிக்கை. வேட்பாளர் வளர்மதி நேற்று ஸ்ரீரங்கம் நகரில் உத்தரவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கெ £ண்டார். ஜீப்பில் சென்ற அவருடன்  நிர்வாகிகளும், முன்புறம் தொண்டர்களும் ஊர்வலமாக சென்றனர்.

மதிய உணவுக்கு வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் காரில் ஏறி சென்றுவிட தொண்டர்கள் மற்றும் பிரசாரத்துக்காக வந்தவர்களுக்கு பண  பட்டுவாடா செய்யப்பட்டது.  பெரியவர்கள் அனைவருக்கும் பிரியாணி பொட்டலத்துடன் தலா ரூ.300, சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு தலா ரூ.100ம்  வழங்கப்பட்டது. நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு பிரசாரத்திற்கு  வரும் அனைவரும் மூலத்தோப்பு மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கென தனி  ஏஜென்டுகள் உள்ளனர் என்றார்.

வேட்டி, சேலை பரிசு

ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவருக்கு சோமரசம்பேட்டை பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே  பகுதியில் உள்ள வீட்டில்  தங்கியிருக்கும் அமைச்சர் நேற்று முன்தினம் இரவு தான் அந்த பகுதிக்கு வந்தார். முதற்கட்டமாக காரிலேயே அந்தப் பகுதியை  சுற்றிப் பார்த்த அவர்,  அனைவருக்கும் ஒரு கிப்ட் என  வீட்டுக்கு ஒரு வேஷ்டி, ஒரு சேலை கொடுத்திருக்கிறார்.

ஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1

சென்ற வருடம் இரண்டு அபாயகரமான கொலையாளிகளை ஹாலிவுட் அறிமுகப்படுத்தியது. அவர்களின் சாயலில் ஏற்கனவே பலர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், எதிரி என்று கருதுகிறவனை யோசிக்காமல் கொலை செய்யும் இவர்களை உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன்பட ரசிகர்கள் விரும்பி ரசிக்கிறார்கள்.

ஹாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர், இயக்குனர் Antoine Fuqua . ட்ரெய்னிங் டே, ஷுட்டர், கிங் ஆர்தர், த டியர்ஸ் ஆஃப் சன் போன்ற ஆக்ஷன் படங்களை இயக்கியவர். 2013 -இல் இவரது இயக்கத்தில் வெளிவந்த படம், ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன்.

இவரது சினிமா வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் டென்சல் வாஷிங்டன் நடித்த ட்ரெய்னிங் டே. இந்தப் படத்தில் வரும் சில காட்சிகளை அப்படியே ஜேஜே படத்தில் பயன்படுத்தியிருப்பார் சரண். சென்ற வருடம்  டென்சல் வாஷிங்டன் நடிப்பில் Antoine Fuqua  இயக்கத்தில் வெளியான படம், த ஈகுவலைசர்.

த ஈகுவலைசரில் டென்சலின் பெயர், ராபர்ட் மெக்கல். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை. ராக்கோழி. இரவானால் குளித்து, நீட்டாக உடையணிந்து கூட்டமில்லாத நாற்புறமும் கண்ணாடிகளாலான ரெஸ்டாரண்டுக்கு வந்துவிடுவார். ஒரு காபியை ஆர்டர் செய்து, புத்தகம் படிப்பதுதான் அவரது இரவுப்பொழுது வேலை. 

இந்த இரவு வாழ்க்கையில் டெரி என்ற இளம் பாலியல் தொழிலாளியின் அறிமுகம் டென்சிலுக்கு கிடைக்கிறது. அவள் கஸ்டமருக்காக காத்திருப்பது அந்த ரெஸ்டாரண்டில்தான்.

யாருடனும் பெரிய ஒட்டுதலில்லாத இந்த கதாபாத்திரத்தை டென்சல் ஏற்கனவே பல படங்களில் செய்திருக்கிறார். இந்தப் படத்துடன் அதிகமும் ஒத்துப் போவது டோனி ஸ்காட்டின், மென் ஆன் ஃபயர். சிஐஏ யின் ட்ரெய்ன்ட்டு கில்லராக இருந்து, காதலியை பறிகொடுத்து, வாழ்வில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் மெக்சிகோ வரும் டென்சல், பணக்கார வீட்டு சிறுமியின் பாதுகாவலராக வேலைக்கு சேர்கிறார், ஒரு மன மாறுதலுக்கு. நாள்கள் செல்கையில் அந்த சிறுமியுடன் டென்சலுக்கு ஒரு பிடிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் டென்சிலை சுட்டு அந்த சிறுமியை பணத்துக்காக கடத்திவிடுகின்றனர். 

சிஐஏயின் ட்ரெய்ன்டு கில்லரான டென்சலுடன் ஒப்பிடுகையில் குழந்தையை கடத்தியவர்கள் வெறும் பச்சா. டென்சல் ஒவ்வொருவராக போட்டுத் தள்ளுகிறார். ஒவ்வொரு கொலையும் ஒரு கலை. வசனங்கள் அமர்க்களம். காரில் வரும் எதிhpயை கொல்ல சாலைக்கு எதிரிலுள்ள மாடி வீட்டில்  துப்பாக்கியுடன் காத்திருக்கிறார் டென்சல். வீட்டிலிருப்பது ஒரு வயதான தம்பதி. கொலை செய்வது தப்பு. ஜீசஸ் அனைவரையும் மன்னிக்கும்படி சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் அந்த வயதான தம்பதிகள். மன்னிக்க நான் ஜீசஸ் கிடையாது. ஜீசஸுக்கும் அவர்களுக்கும் சந்திப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே என்னுடைய வேலை என்று எதிரியை போட்டுத் தள்ளுகிறார்.

ஏறக்குறைய இதே டென்சல்தான், த ஈகுவலைசரிலும். ஆனால், அந்தளவு மூடியில்லை. கொஞ்சம் கலகலப்பானவர். ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் நாவலைப் படித்து டெரியுடன் உரையாடுகிறார். டெரியையும் அவளைப் போன்ற இளம் பெண்களையும் வைத்து விபச்சாரம் செய்து வருவது ஒரு ரஷ்ய கும்பல். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று, முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு, முகம் கருகிய நிலையில், ஒரு இளம் பெண் அவர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறாள். அவள் தப்பிக்க நினைக்கிற மற்ற பெண்களுக்கான ஒரு பாடம்.

டெரி தன்னை வெறியுடன் காயப்படுத்தும் ஒரு கஸ்டமரை தாக்கி விடுகிறாள். அதனால், அவளை வைத்து விபச்சாரம் செய்யும் ரஷ்யர்கள் கண்மூடித்தனமாக டெரியை தாக்கி ஐசியுவுக்கு அனுப்பிவிடுகின்றனர். டென்சில் வருகிறார். டெரியின் தோழியின் மூலமாக நடந்தவைகளை கேட்டறிகிறார். பெரும் தொகையை தந்து, டெரியை விட்டுவிடும்படி ரஷ்யர்களை கேட்கிறார். டென்சிலின் வார்த்தையில் சொன்னால், அவர் ஒரு ஆஃபரை அவர்களுக்கு தருகிறார்.

யாருய்யா இந்த கோட்டிக்கார ஆள் என்று ரஷ்யர்கள் சிரித்து டென்சிலை அனுப்புகின்றனர். அதன் பிறகு நடப்பது கண்ணில் பூச்சி பறக்கும் ஆக்ஷன் அடிதடி. ஐந்து பேர் க்ளோஸ். ஏன், எதற்கு என்பதை ஆராய ரஷ்யாவில் இருக்கும் கொலையுண்டவர்களின் பாஸ் தனது வலக்கையை (Marton Csokas) அனுப்பி வைக்கிறார். இந்த வலக்கைதான் படத்தின் நம்பிக்கை தும்பிக்கை எல்லாம். 

Marton Csokas  -இன் அமைதியான இறுக்கமான நடிப்பு டென்சலுக்கு கடும் சவால் விடுகிறது. ரஷ்யாவிலிருந்து வரும் இவர், ஒருவனை அடித்தே கொன்று விடுகிறார். உடன் வரும் போலீஸ்காரர் என்ன இப்படி பண்ணிட்ட, இது என்னாகும்னு தெரியுமா என்று பதட்டப்பட, மனிதர் செம கூலாக, முஷ்டியில் ஒட்டியிருக்கும் துணுக்கை எடுத்தபடி, இதுவொரு மெசேஸ். நான் இங்க வந்திருக்கேன்னு சொல்ற மெசேஜ் என்கிறார். 

இவரும் டென்சலும் சந்திக்கிற இரு காட்சிகள் வருகின்றன. இரண்டுமே செமத்தியாக படமாக்கப்பட்டுள்ளன. ஓடுகிற நாய்க்கு ஒருமுழம் முன்னால் கல்லெறிய வேண்டும் என்பது போல், வில்லனின் நகர்வுக்கு ஓரடி முன்னால் எப்போதுமே செயல்படும் டென்சலின் கதாபாத்திரம் யாருக்காவது பிடிக்காமல் போனால்தான் ஆச்சரியம்.

டென்சலின் கதாபத்திரத்தைப் பற்றி சொல்வதானால், அதுவொரு ரயில். அதுபாட்டுக்கு தனது ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவாக ட்ராக்கைவிட்டு இறங்காது. ஆனால், அதற்கு குறுக்கே எது வந்தாலும், தூக்கி எறிந்துவிட்டு போய்க் கொண்டேயிருக்கும். 

த ஈகுவலைசர் கொலையாளி டெரி என்ற மானுடப் பெண்ணுக்காகவும், அவளைப் போன்ற பிற பெண்களுக்காகவும் கொலைகள் செய்தார். ஆனால், இன்னொரு கொலையாளி கொன்று குவித்தது ஒரு சின்ன நாய்க்காகவும் 69 -ஆம் ஆண்டு மாடல் காருக்காகவும். அவரது எதிரிகள் நடுங்குவதற்கு அந்த கொலையாளி ஆயுதம் தூக்க வேண்டியதில்லை. அவரது பெயரைச் சொன்னாலே போதும். எதிரிகளின் பேண்டை நனைய வைக்கும் அந்த கொலையாளியின் பெயர்.... அடுத்த பாகத்தில் பார்ப்போம்

அஜீத் வழியில் அனுஷ்கா

அஜீத் தனது வீட்டில் பணிபுரிகிறவர்களுக்கு வீடு கட்டி தந்தார். அதேபோல் நடிகை அனுஷ்காவும் தனது வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருகிறார்.

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் அவர் தன்னிடம் பணிபுரிகிறவர்களுக்காக வீடுகட்டி வருவதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 

யோகா டீச்சராக இருந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுஷ்கா. தனது வளர்ச்சிக்கு தான் மட்டுமே காரணமில்லை, தனக்காக உழைப்பவர்களும்தான் என்று அவர் கருதுவதால்தான் இந்த வீடு கட்டும் திட்டத்தில் இறங்கியுள்ளாராம்.

வாழ்த்த வேண்டிய விஷயம்தான்.


1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டம்?

நாடு முழுவதும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ள 1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் மானிய சுமையை குறைப்பதற்காக நிதியமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மானியம் பெறுவோருக்கு கட்டுபாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. 

குறிப்பாக 30 சதவிகிதம் வருமான வரி செலுத்துவோருக்கு மானியத்தை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை உள்ள ஒரு குடும்பம் மாதம் ரூ.5 ஆயிரம் வரை உணவுக்காக செலவு செய்தால் அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமா என்று பரிசீலிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சமையல் எரிவாயு மானியம் யாருக்கு எல்லாம் அவசிய தேவை, யாருக்கெல்லாம் தேவையில்லை என்பதை கண்டறிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கையின்  மூலம் மானியம் பெறுவோர் பட்டியலில் இருந்து சுமார் 1 கோடி பேர் நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

இதன் மூலம் அரசின் மானியச்சுமை கணிசமாக குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு திட்டத்தால் உயர்தட்டு மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினருக்கும் மானியம் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


Wednesday, January 28, 2015

காற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடியோ பதிவு (வீடியோ)

முதல் முறையாக லேசர் வேகமாக கடந்து செல்லும் பாதையின் காட்சிகளை விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். வெளிச்சத்தின் ஒற்றை துகள்கள் கண்டறியும் திறன் வாய்ந்த அல்ட்ரா ஹய் ஸ்பீடு கேமராவை பயன்படுத்தி இந்த வியக்கத்தக்க வீடியோவை எடுத்துள்ளனர். 

படப்பிடிப்பின் போது, ஃபோட்டான்கள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட துகள்கள் காற்றுடன் மோதிய சுமார் 10 நிமிடங்களில் இரண்டு மில்லியன் லேசர் பல்சஸ் வகைகளை ஸ்காட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள், பதிவு செய்துள்ளனர். 

நாம் ஒளி கடந்து செல்வதை பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும் என்று ஹீராய்ட் வாட் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான Genevieve Gariepy தெரிவித்துள்ளார்.

ஃபோடான்கள் ஃபோகஸ்ட் பீம்மில் கடந்து செல்வதை பார்ப்பது எவ்வளவு கடினமோ, அதேபோல் லேசர் லைட்களை பார்ப்பதும் கடினம். சிறிய அளவிலான டிஜிட்டல் கேமராவில் 1024 பிக்சல்கள் தீர்மானத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 by 32 கிரட் டிடெக்டர்ஸ் கொண்டு ஃபோடான்கள் கடந்து செல்லும் வேகத்தை ஒரு நொடியில் 20 பில்லியன் பிரேம்கள் என்ற விகிதத்தில் பதிவு செய்துள்ளனர்.