Tuesday, May 31, 2011

காட்டுப்புலி ஷூட்டிங்கில் திகில் அனுபவம்: அர்ஜுன்


கபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் படம், ‘காட்டுப்புலி’. ஒளிப்பதிவு, ராஜேந்திர பிரசாத். இசை, விஜய் வர்மா. ஸ்டண்ட் மற்றும் இயக்கம், டினு வர்மா. படத்தின் ஹீரோ அர்ஜுன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தி ஸ்டண்ட் மாஸ்டர் டினு வர்மா என் நண்பர். அவரது இயக்கத்தில், இந்தப் படம் உருவாகியுள்ளது. ரஜனீஷ்சாயாலி பகத், அமீத்ஹனாயா, ஜஹான்ஜெனிபர் ஜோடிகள் காட்டில் பயணிக்கின்றனர். திடீரென்று ஒரு நெருக்கடியில் சிக்குகின்றனர். காட்டிலிருக்கும் அவர்களை எப்படி காப்பாற்றுகிறேன் என்பது கிளைமாக்ஸ். தலக்கோணம் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. ராட்சத பல்லி, அட்டை, விஷப்பாம்பு போன்ற மிருகங்களுக்கு மத்தியில் காட்டில் தங்கி நடித்தது திகில் அனுபவம். எனது ஆக்ஷன் வேட்டைக்கு இந்தப்படம் அதிரடி தீனியாக அமைந்தது. அண்டர் வாட்டர் ஃபயர், குதிரை மற்றும் கார் துரத்தல் காட்சிகளில் சாகஸங்கள் செய்துள்ளேன். ஆக்ஷன் பிரியர்களுக்கு இது ரசனையாக இருக்கும்.  இவ்வாறு அர்ஜுன் கூறினார். பேட்டியின்போது கலைப்புலி எஸ்.தாணு, டினு வர்மா, தமிழ்ப் பகுதி இயக்குனர் ஜெயராம் உடனிருந்தனர்.
ஹன்சிகா புது முடிவு!


'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.  ஆனால் 'மாப்பிள்ளை' படத்தில் இவருடைய டப்பிங் சரியில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் காதல்' படம் வெளிவந்தது. அப்படத்தில் இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது. தற்போது விஜய்யுடன் இணைந்து 'வேலாயுதம்' படத்தில் நடித்து வருகிறார்.

தனது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறார் ஹன்சிகா. இனிமேல் எந்த படத்திலையும் இரண்டாவது நாயகியாக நடிக்க மாட்டாராம். முதல் நாயகியாக, அதுவும் நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இவரது இந்த முடிவை பார்க்கும் போது 'காதல்' படத்தில் வரும் " நடிச்சா ஹீரோ சார்...இல்லாட்டி நான் வெயிட் பண்றேன் சார்" என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது


தெய்வ திருமகன் - புத்தம் புதிய டிரெய்லர்

ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி : சிறுநீரகத்தை தானமாக வழங்க விருப்பம்


கோவை குறிச்சி சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரஜினிராஜா என்கிற ஆரோக்கியசாமி(40). தற்போது தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு கடன் தொகையை வசூலிக்கும் ஏஜென்ட்டாக பணிபுரிகிறார்.

தீவிர ரஜினி ரசிகர். ரஜினி அரசியல் கட்சி துவங்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும், ரஜினி கட்சிக்கு கொடியை உருவாக்கியும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இவரது மனைவி ஷோபிகா, ஒரு மகள் வெளியூர் சென்றிருந்தனர்.நேற்று இவர் வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரது உறவினர்கள் சகாயம், அந்தோணி ஆகியோர் ஆரோக்கியசாமியை சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் தூக்கமாத்திரைகள் சாப்பிட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சுய நினைவுக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் கூறுகையில், ‘ரஜினி காந்த் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருவதை அறிந்து வேதனை அடைந்தேன்.

மனமுடைந்து தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து வரும் ரஜினிக்கு எனது சிறுநீரகத்தை பொருத்தி குணப்படுத்த வேண்டும். எனது சிறுநீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்என்றார்.


முதலில் நீங்கள் குணமாகுங்கள், மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்என்று மருத்துவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ராம்சரண் தேஜாவுக்கு மாமியாரா...? மீனா மறுப்பு!


தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பையனும், முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜாவுக்கு, நடிகை மீனா மாமியாராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை மீனா மறுத்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிபடங்களில் ‌கொடிகட்டி பறந்தவர் நடிகை மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த மீனா அக்கா, அண்ணி போன்ற குணச்சத்திர கேரக்டரிலும், டி.வி., தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நைனிகா என்று இந்த குழந்தைக்கு பெயரிட்டுள்ளார். குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் மீண்டும் மீனா நடிக்க இருப்பதாகவும், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு மாமியராகவும், நடிகை சமந்தாவின் அம்மாவாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மீனா மறுத்துள்ளார்.

இதுகுறித்து மீனா கூறியதாவது, மீண்டும் நான் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், தெலுங்கில் ராம்சரண் தேஜாவுக்கு மாமியராக நடிப்பதாக வந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இப்போது தான் எனக்கு, ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஐந்து மாதம் தான் ஆவதால், என் மகள் நைனிகாவை விட்டு என்னால் வர முடியாது. எனக்கென்று நிறைய பொறுப்புகள் உள்ளது. ஆகவே, இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் ஏதும் இல்லை. சினிமாவில் நான் மீண்டும் நடிப்பது எல்லாம், வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார்.


முதன் முதலாக விக்ரம்!


டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்க போகும் வேந்தன் படத்தில் விக்ரம், முதன்முதலாக அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

வெண்ணிலா கபடிக்குழு, நான்மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன், அடுத்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு வேந்தன் என்று பெயரிட்டுள்ளனர். விக்ரமிற்கு ‌ஜோடியாக தீக்ஷா செத் நடிக்கிறார். கூடவே காவலன் படத்தில் நடித்த மித்ராவும் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அப்பா, மகன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், வேந்தன் படம் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வேந்தன் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், படத்தின் சூட்டிங் ஜூன் 7ம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் இரட்டை வேடத்தில் நடிப்பது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


அஜீத்தின் மங்காத்தா ரிலீஸ் தியதி !


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் ஜூலை இரண்டாவது வாரத்தில் ரிலீசாக இருக்கிறது.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் துரை தயாநிதி தயாரிப்பில், ‌வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத், த்ரிஷா, அர்ஜூன், அஞ்சலி, லட்சுமிராய், பிரேம்ஜிஅமரன், வைபவ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் "மங்காத்தா". சூதாட்டத்தை மையமாக வைத்து இப்படத்‌தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாக "மங்காத்தா" படம் இருக்கும் என்று கூறுகின்றனர். கூடவே அஜீத்திற்கு இது 50வது படமும் கூட, இதனால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ‌ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக இப்படம் அஜீத் பிறந்தநாளில் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள், படம் தள்ளிபோனதால் ஏமாற்றம் அடைந்தனர். படத்தை தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை, பாட்டையாவது அஜீத் பிறந்தநாளில் ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணயிருந்த மங்காத்தா டீமிற்கு அதிலும் ஏமாற்றம் தான். கடைசியில் ஒரே ஒரு பாடலை மட்டும் புரோமசனல் சாங்காக அஜீத் பிறந்தநாளுக்கு முதல்நாளில் இண்டர்நெட்டில் வெளியிட்டனர். "விளையாடு மங்காத்தா..." என்று ஆரம்பக்கும் அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்‌பை பெற்றதால், அந்த ஒருபாடலை மட்டும் முழுமையாக சிலதினங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இதனிடையே மங்காத்தா படம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. தற்போது மங்காத்தா டீம், ஐதராபாத்தில் இறுதிகட்ட சூட்டிங்கை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் சூட்டிங் முடிகிறது. இதன்பின்னர் படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த வேலைகள் ஜூன் மாதம் முழுவதும் நடைபெற இருப்பதால், ஜூலை இரண்டாவது வாரத்தில் மங்காத்தா படத்தை திரையிட திட்டமிட்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். கூடவே படத்தின் ஆடியோவை ஜூன் மாதம் ரிலீஸ் செய்கின்றனர்.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : தயாநிதி மாறன் மீது பாரதீய ஜனதா குற்றசாட்டு2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 2-ந்தேதி சி.பி.ஐ. தன் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ஆ.ராசா, சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ஷாகித் பல்வா ஆகிய நால்வரும் கூட்டுச் சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 

கடந்த மாதம் 25-ந்தேதி சி.பி.ஐ. தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், மும்பை சினி யுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி, குசேகான் ரியாலிட்டி நிறுவனத்தின் ராஜீவ் அகர்வால், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசீப் பல்வா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இதனைதொடர்ந்து அவர்களுக்கு சம்மன்அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களது முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சி.பி.ஐ. தரப்பில் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அனேகமாக அடுத்த வாரம் 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளது. அவர்கள் அனைவரும் சி.பி.ஐ. வலையில் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் இன்று பா.ஜ.க. தெரிவித்துள்ள செய்தியில் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 2006-ல் குறிப்பிட்ட (தொலைக்காட்சி, தொலைபேசி )நிறுவனங்களுக்கு  தொலைத்தொடர்பு உரிமம் பெற தயாநிதி மாறன் உதவியதாகவும், பின்னர்  இந்த விவகாரத்தில் தயாநிதிமாறன் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் தொலைத்தொடர்பு உரிமம் குறித்து தயாநிதி மாறனுக்கு சில கேள்விகளை பாஜக எழுப்பி உள்ளது.

இதையடுத்து  2006-ல் குறிப்பிட்ட  சில நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமம் பெற ஆதரவாக இருந்ததாக தயாநிதி மாறன் மீது தெஹல்கா பத்திரிகை குற்றம் சாட்டியது. இதற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அப்பத்திரிக்கைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் தெஹல்கா இதழின் கட்டுரையில் தயாநிதி மாறனுக்கு தவறான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தயாநிதி மாறனிடமிருந்து இதுவரை தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை என தெஹல்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருங்கி, நெருங்கி...ஏமாந்த திரிஷா!


உதடு வரை வந்த அஜீத் முத்தமிடாமல் விலகிச் சென்றதால் பெரும் ஏமாற்றமடைந்தாராம் திரிஷா.

இது நிஜத்தில் அல்ல, சினிமாவுக்கா. அஜீத்தும், திரிஷாவும் இணைந்து நடிக்கும் படம் மங்காத்தா. இது திரிஷாவுக்கு 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஒரே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ள வைத்து வருகிறது. அதேசமயம், படத்தில் இடம் பெறும் ஒரு ரொமான்ஸ் காட்சியும் ரசிகர்களை துடிக்க வைக்குமாம்.

காட்சிப்படி ஒரு சீனில் அஜீத்தும், திரிஷாவும் சற்றே நெருக்கமான முறையில் நடித்துள்ளனர். இதில் அஜீத், திரிஷாவுக்கு உதட்டில் பச்சக்கென ஒரு இச் தருவதாக முதலில் திட்டமிட்டிருந்தனர். இந்தக் காட்சிக்கு திரிஷாவும் ஓ.கே சொல்லியிருந்தார். அஜீத்தும் தயக்கத்திற்குப் பின்னர் சரி என்று கூறியிருந்தார்.

இதையடுத்து காட்சிக்குப் போனார்கள். அஜீத்தும் திட்டமிட்டபடி திரிஷாவின் உதடு வரை வந்தாராம். வந்தவர் உதட்டை டச் பண்ணாமல் அப்படி ஒரு யூ டர்ன் போட்டு விட்டு வந்த வழியே திரும்ப போய் விட்டாராம்.

இதை இயக்குநர், திரிஷா உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் காட்சிக்குத் தேவையான எபக்ட் கிடைத்து விட்டதாம். லிப் டூ லிப் கொடுப்பதில் அஜீத்துக்கு நிறைய தயக்கம் இருந்ததால்தான் இந்த அளவோடு நிறுத்திக் கொண்டு விட்டாராம் தல.

உதடு கிடைத்தால் குண்டக்க மண்டக்க விளையாட எத்தனையோ ஹீரோக்கள் காத்திருக்கும் நிலையில் படு டீசன்ட்டாக நடந்து கொண்ட அஜீத்தை பாராட்டலாம்தானே.

ஆனால் திரிஷாவுக்குத்தான் நிறைய ஏமாற்றமாம். அடடா, தலைக்கு வந்தது இப்படி தலைப்பாகையோடு போய் விட்டதே என்று லைட்டாக அப்செட் ஆகி விட்டாராம்.

விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவின் உதடுடன் முத்த மோதல் பூண்ட திரிஷாவுக்கு ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும்!


வைரமுத்து தூக்கி நிறுத்தும் 'சேவற்கொடி'


கவிப்பேரரசு வைரமுத்து ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அந்த படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது உறுதி. அத்துடன் படத்தில் பாடல்கள் எழுதுவது, படத்தைப் பற்றி பாராட்டி பேசுவது மட்டும் நில்லாமல், அந்த படத்தின் செய்தி மக்களிடையே சென்றடைய வேண்டும் என்று வைரமுத்து நினைத்தால், அந்தப் படம் கண்டிப்பாக வெற்றிப் பெறக்கூடிய படம் என்பதும் உறுதி.

அப்படி வைரமுத்துவால் தூக்கி நிறுத்தப்பட்ட படம்தான் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், தேசிய விருதையும் பெற்ற 'தென்மேற்குப் பருவக்காற்று'. இந்த படத்தை தொடர்ந்து வைரமுத்து தூக்கி நிறுத்தும் மற்றொரு படம் 'சேவற்கொடி'.

புதுமுக இயக்குநர் இரா.சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று (மே 27) சென்னையில் நடைபெற்றது. ஏவிஎம் சரவணன் முதல் குறுந்தகடை வெளியிட, குமுதம் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ஜவகர் பழனியப்பன் பெற்றுகொண்டார். இந்த நிகழ்ச்சியில் வசந்த பவன் ஹோட்டல்களின் உரிமையாளர் ரவி, இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சீனு ராமசாமி, ராதாமோகன் ஆகியோர் கலந்துகொணடார்கள்.

புதுமுக இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மேடையில் நேரடியாக பாடினார்கள். பாடல்கள்களின் வரிகளும், இசையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரையுமே கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசிய அத்தனை பேரும் வைரமுத்துவின் பாடல்களின் வரிகளைப் பற்றி பாராட்டி பேச, இயக்குநர் சீனு ராமசாமி, வைரமுத்து புதிய இயக்குநர்களுக்கு எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும், அவருடன் பணியாற்றிய தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "புதியவர்களை என்றுமே நான் எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ என்று பார்ப்பதில்லை. எந்த விதையில் எந்த விரிச்சம் இருக்குமோ என்றுதான் பார்ப்பேன். அந்த வகையில் இயக்குநர் சுப்பிரமணியனும் இந்த படத்தின் மூலம் வெற்றி பெறுவார். தமிழ் சினிமா இந்த காலகட்டத்தில் புத்துணர்ச்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

அந்த அளவுக்கு மேலை நாட்டு திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இங்கு திறைமைசாலிகள் இருக்கிறார்கள். அதுபோல தயாரிப்பாளர்களுக்கு நான் ஒன்று சொல்லிகொள்கிறேன். நீங்கள் புதிய இயக்குநர்களை தேர்ந்தெடுக்கும் போது நன்றாக யோசியுங்கள். அவர்களை தேர்ந்தெடுத்தப் பிறகு யோசிக்காதிர்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள். அப்போதுதான் சாதித்து காட்டுவார்கள். சேவற்கொடி இயக்குநர் சுப்பிரமணியன் ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்கள் இயக்கும் படம் என்றுமே தோல்வி பெறாது. அந்த வகையில் சேவற்கொடியும் வெற்றி பெறும்." என்றார்.


இசைப்ரியா எப்படி கற்பழிக்கப்பட்டாள் : வைகோ வெளியிடும் அதிர்ச்சி குறுந்தகடு


மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் 28.5.2011 அன்று  நடந்தது.    இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியபோது,

’’என் அன்பு சகோதர்களே ....நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன்.    இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன்.

ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன்.

 ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும்.  50 நிமிடங்கள் ஓடும் அந்த குறுந்தகடு. ஒரு வாரத்தில் வெளியிடப்போகிறேன்.

நான் தம்பிமார்களை, இளைஞர்களைக் கேட்கிறேன்.   ஒவ்வொரு கல்லூரி வாயில்களிலும் நின்று அந்த கல்லூரி முடிந்து வரும் பிள்ளைகளிடம் கொடுங்கள்.     அதில் நான் மதிமுகவைச்சொல்லவில்லை.   பம்பரம் சின்னத்தைக் காட்டவில்லை.  கட்சிக்கொடியைகாட்டவில்லை.

நிலைமை என்னவென்று மாணவ, மாணவிகளுக்கு தெரியவேண்டும்.    அவர்கள் அந்த குறுந்தகட்டை வீடுகளுக்கு எடுத்துச்சென்று எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும்.   அன்று இரவு சாப்பிடமுடியாது;   அன்று இரவு தூங்கமுடியாது.

என்னாலே இரண்டாவது முறை அந்த குறுந்தகட்டை பார்க்க முடியவில்லை.

குண்டு பாய்ந்திருக்கிறது ஒரு தாய்க்கு.  குண்டு பாய்ந்ததின் விளைவாக அந்த குண்டு முதுகு பக்கமாக வெளியேறியிருக்கிறது.

அப்போது இதயமும், நுரையீரலும் ரத்தில் துடிப்பது அந்த குறுந்தகட்டில் இருக்கிறது. அப்படிச்சாகிறாள். அதைப்பார்த்தால் சாப்பிடமுடியாது; தூங்க முடியாது.

 பச்சைக்குழந்தைகள் எப்போது குண்டு வீசுவார்கள் என்று பயந்து பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.   அடப்பாவிகளா!  அவர்கள் புலிகளா.

இசைப்பிரியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாளே.   அவளை எப்படி கற்பழித்தோம் என்பதை சிங்கள மொழியில் பேசி செல்போனில் பதிவு செய்திருக்கானுங்க.

இத்தனையும் தாங்கிய குறுந்தகட்டை வெளியிடுகிறேன்’’ என்று தெரிவித்தார்.போர்க்குற்றத்தை நிரூபிக்க இறுதிக்கட்ட போர் வீடியோ ஆதாரம் உள்ளது; ஐ.நா.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்ட போர் நடந்தது. அப்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

இப்போரின்போது, இலங்கை அரசு போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 என்ற டெலிவிஷன் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லும் 5 நிமிட காட்சிகளை ஒளிபரப்பியது.

அதில், தமிழ் ஆண்கள் மற்றும் பெண்களை நிர்வாணப்படுத்தி அவர்களின் கண்கள் மற்றும் கைகளை பின்புறம் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சிகள் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைத்தது. ஆனால் அக்காட்சி போலியானது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை. இது போன்ற கொடுமைகளை ராணுவம் இழைக்கவில்லை என இலங்கை அரசு மறுத்தது.

ஆனால், அது உண்மையான வீடியோதான். கிராபிக்ஸ்தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படவில்லை, என ஐ.நா.சபையின் மனித உரிமை கமிஷனின் புலனாய்வு பிரிவு நிபுணர் கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ் அறிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றம் இழைத்துள்ளது என்பதற்கு இந்த வீடியோ காட்சிகளே நம்பத்தகுந்த ஆதாரம் என தெரிவித்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்.


செலவு மேல் செலவு திணறும் சிம்பு படம்!

தமிழ்சினிமாவின் 'ஒஸ்தி'யான நடிகர்களில் ஒருவரா சிம்பு என்று கேட்டால் அதற்கான பதில் ஒரு பெரிய சைஸ் கேள்விக்குறிதான். ஏனென்றால் அவர் நடித்து வரும் ஒஸ்தி படப்பிடிப்பு ஒருபுறம் வேகவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அவரால் மூன்று வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட போடா போடி இன்னும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்த இழுவைக்கு காரணம் சிம்புவேதான் என்கிறார்கள் திரையுலகத்தில்.

லண்டனில் இதுவரை 100 நாட்களுக்கும் மேல் படப்பிடிப்பு நடந்திருக்கிறதாம். இதுவே 19 கோடி செலவை விழுங்கியிருப்பதாக கணக்கு வழக்கு சொல்கிறது. இன்னும் முப்பது நாட்களுக்கு குறையாமல் படப்பிடிப்பை நடத்தினால்தான் போடா போடி முடிவுக்கு வரும் என்கிறாராம் சிம்பு. அப்படி பார்த்தால் படத்தை முடித்து முதல் பிரதியை எடுக்க 25 கோடியாவது ஆகுமாம்.

சிம்புவுக்கான வியாபாரம் இன்னும் பதினைந்து கோடியை கூட எட்டவில்லை என்பதுதான் சோகம். இந்த நிலையில் மேலும் பத்து கோடியை இறைத்து படத்தை முடித்து அது வெற்றிகரமாக ஓடினால் கூட லாபம் பார்க்க முடியுமா என்ற கவலை சூழ்ந்திருக்கிறதாம் தயாரிப்பாளர் முகத்தில்.

சேவலை முழுங்கிட்டு முட்டையை வாந்தி எடுத்த கதைதான் போங்க...அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கடலில் கோட்டை கட்டுவேன்: கருணாநிதி


முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. வாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பின்போது கருணாநிதி தில்லி சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு திங்கள்கிழமை வந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், திமுக பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் வந்தனர். முன்னதாக, பேரவைத் தலைவர் அறையின் வாயிலில் திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னாள் முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர்.

காலை 11 மணிக்கு வந்த அவர், நேராக பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாரின் அறைக்குச் சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வாக பொறுப்பு ஏற்பதற்கான உறுதிமொழியை வாசித்தார். உறுதிமொழிப் படிவத்திலும், வருகைப் பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்றுக் கொண்ட பிறகு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பேரவைத் தலைவரான டி.ஜெயகுமாருக்கு கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் எழுந்து நின்று கை கொடுத்தார்.

பேரவைத் தலைவர் அறையை விட்டு வெளியே வந்த அவரிடம், பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு, "கூர்ந்து கவனியுங்கள்' என்று பதிலளித்தார். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, கடலில் கோட்டை கட்டபோகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்தார் கருணாநிதி.அமைச்சர் மரியம்பிச்சை மரணம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பு துலக்கியது எப்படி?


அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 


சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் முதல் தனிப்படையில் இடம் பெற்றிருந்த கடைநிலை போலீஸ்காரர்கள் வரை இரவு-பகல் பாராமல் இந்த வழக்கில் துப்புதுலக்கி லாரியை கண்டுபிடித்துள்ளனர்.

துப்பு துலக்கியது எப்படி என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

விபத்து நடைபெற்ற அன்று மாலையே திருச்சி சென்ற நாங்கள் விபத்து நடைபெற்ற வழியாக சென்ற வாகனங்களை முதலில் கணக்கெடுத்தோம். தூத்துக்குடியில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வரும் வாகனங்கள், சமயபுரம் சோதனைசாவடி, திருமாந்துறை சோதனை சாவடிகளை தாண்டித்தான் கட்டாயம் செல்லவேண்டும்.

இந்த 2 சோதனை சாவடிகளுக்கும் இடையில்தான் விபத்து நடைபெற்றுள்ளது. எனவே சமயபுரம் சோதனை சாவடியில் உள்ள கேமராவை போட்டுப்பார்த்து விசாரித்தோம். விபத்து நடைபெற்ற நேரத்தை கணக்கில் வைத்துக் கொண்டு அதற்கு முன்பாக எத்தனை வாகனங்கள் சென்றுள்ளன என்று கணக்கெடுத்தபோது 3,485 நான்கு சக்கர வாகனங்கள் அந்த சாலையை கடந்த சென்றிருப்பது தெரிய வந்தது. 

அதில் 800 லாரிகள். இவற்றில் 127 வாகனங்கள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவை. கேரளாவைச் சேர்ந்தது 4 வாகனங்கள். ஆந்திராவைச் சேர்ந்த 8 லாரிகளும் சாலையை கடந்து சென்றிருந்தன.

சமயபுரம் சோதனை சாவடியில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்குள்தான் அமைச்சரின் கார் விபத்தில் சிக்கியது. எனவே சமயபுரம் சோதனை சாவடியில் இருந்து விபத்து நடைபெற்ற இடத்தை தாண்டி சென்ற வாகனங்கள் அனைத்தும் சரியாக எந்த நேரத்தில் சோதனை சாவடியை கடந்துள்ளன என்பதை முதலில் கண்டுபிடித்தோம்.

இதில் ஆந்திர மாநில லாரிகள் அடுத்தடுத்து சென்றது தெரிய வந்தது. இந்த லாரியின் எண்களை வைத்து முகவரியை கண்டுபிடித்தோம்.   அப்போதுதான் ரகமத்துல்லா பிடிபட்டார். போலீசில் சிக்கியதுமே அவர் உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார்.

அவர் மீது விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது, தடயத்தை அழிக்க முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


வடிவேலுவை சீண்டிய விவேக்இன்னும் சில தினங்களில் வெளிவரப் போகிறது கரணின் கந்தா திரைப்படம். பாபு கே.விஸ்வநாத் இயக்கியிருக்கும் இப்படத்தின் விளம்பரங்களில் கரணும் விவேக்கும் மட்டுமே முழுசாக இ(அ)டம் பிடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகி மித்ராவை காணவேயில்லை. (என்ன பஞ்சாயத்தோ?) போகட்டும்... படத்தில் விவேக்கின் குசும்பு இந்த வருடம் முழுக்க பேசப்படுகிற மாதிரி இருக்குமாம். அதுமட்டுமல்ல, முதன் முறையாக வடிவேலுவையும் சீண்டியிருக்கிறாராம். எப்படி?

வைகை புயலுக்கும் காமெடி சிங்கத்துக்கும் நடுவே எழுந்த ரியல் எஸ்டேட் ரகளையை பார்த்து நாடே கைகொட்டி சிரித்ததல்லவா? அந்த ஊழல் எப்படி நடந்தது, யார் மீது தவறு இருக்கிறது என்பதை மிகவும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறாராம் விவேக்.

படத்தில் இவர் வடிவேலு என்றால், சிங்கமுத்து கேரக்டரை சுமந்திருப்பது செல் முருகன். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தீர்ப்பு யார் பக்கம் வரும் என்றே தெரியாது. இந்த நேரத்தில் விவேக்கின் நையாண்டி யார் யாரையெல்லாம் புரையேற வைக்குமோ?இன்று விஜய் கொண்டாடிய பிறந்தநாள் விழா!


இயக்குநர் எம்.ராஜா இன்று தனது பிறந்தநாளை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் வேலாயுதம்படப்பிடிப்பில் கொண்டாடினார். அவருக்கே தெரியாமல் நடிகர் விஜய் 'சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை வரவழைத்து படப்பிடிப்பின் இடைவேளையில் இயக்குநரை ஆச்சர்யப்படுத்தினார். நடிகர் விஜய், கேமராமேன் ப்ரியன் உட்பட படிப்பிடிப்பு குழுவினரின் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் இயக்குநர் எம்.ராஜா. வேலாயுதம்படபிடிப்பில் ஏற்கெனவே நடிகை ஹன்சிகா, கேமராமேன் ப்ரியன், நடிகை சரண்யா மோகன் முதலியோரின் பிறந்தநாள் விழாவிற்கும் நடிகர் விஜய் தான் கேக் வரவழைத்து பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்தார்.


மருத்துவமனையில் ரஜினி முணுமுணுப்பு :'நான் ஒண்ணுமே செய்யலையே...'?


ரஜினி சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நலம்பெற்று நாடு திரும்ப வேண்டும் என்று அத்தனை உள்ளங்களும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சென்னை மருத்துவமனையில் அவர் இருந்தபோது பேசிய சில விஷயங்கள் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான விஷயம் அது என்று கிசுகிசுக்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்திலிருந்து.நினைவு திரும்பிய சில சந்தர்ப்பங்களில், சத்திய நாராயணாவை கூப்பிடு. நான் அவனுக்கு ஒண்ணுமே செய்யல. அவனுக்கு ஏதாவது நான் செய்யணும் என்று கூறினாராம் ரஜினி. ஒருமுறையல்ல, பல முறை இதே வார்த்தைகளை அவர் கூறியதாக கிசுகிசுக்கிறார்கள். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவராக ஆரம்ப காலம் தொட்டு இருந்தவர் சத்யநாராயணாதான். பின்பு என்ன காரணத்தாலோ அங்கிருந்து வெளியேறினார். ரஜினி மருத்துவமனையில் இருந்த போது கூட இவர் அந்த பக்கம் சென்றதாக தெரியவில்லை.இதற்கிடையில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் இந்த முறை மருத்துவமனைக்கு வந்து ரஜினி குடும்பத்தினருடன் சேர்ந்து அவரை கவனித்துக் கொண்டார். இடையிடையே ரஜினி, நான் ராஜ்பகதூருக்கு ஒண்ணும் செய்யலையே என்று புலம்புவதை கேட்க முடிந்தது என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.ராஜாக்களா... நான் திரும்பி வந்து உங்களையெல்லாம் தலைநிமிர்ந்து வாழ வைப்பேன் என்று ரஜினி கூறியது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்த மாதிரி நண்பர்களுக்கும் சேர்த்துதான் போலிருக்கிறது!ஜெயலலிதாவுடன் சன் பிக்சர்ஸின் ஆடுகளம் படக் குழுவினர் சந்திப்பு


முதல்வர் ஜெயலலிதாவை சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்தின் குழுவினர் இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்தன.

படத்தின் நாயகன் தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. இயக்குநர் வெற்றி மாறனுக்கு 2 விருதுகள் கிடைத்தன.

இந்த நிலையில் இன்று திடீரென ஆடுகளம் படக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இக்குழுவில் தனுஷ், வெற்றி மாறன், எடிட்டர் கிஷோர், தயாரிப்பாளர் கதிரவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற என்னை முதல்வர் வாழ்த்தினார். மற்றவர்களையும் வாழ்த்தினார். பாராட்டு தெரிவித்தார்.

ரஜினிசாரின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தார் என்றார்.


செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!


செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.


தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக தமிழக அரசு 680 கிலோ தங்கம் வாங்குகிறது


முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 16-ந் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் 7 திட்டங்களை அமல்படுத்த உத்தரவிட்டு கையெழுத்திட்டார். படித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்பது அதில் ஒரு திட்டமாகும்.

"தாலிக்கு தங்கம்" என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திட்டத்தை வெற்றிகரமாக அமல் படுத்த சமூக நலத்துறை சார்பில் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தமிழ் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பெண்கள் திருமண வயதில் இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு தலா 4 கிராம் தங்க காசு வழங்குவதற்காக 680 கிலோ தங்கம் வாங்க தீர்மானித்து இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார். அ.தி.மு.க. அரசின் மிக முக்கியமான திட்டங்களில் இந்த திருமாங்கல்ய திட்டமும் ஒன்று என்றும் அவர் கூறினார்.

தாலிக்கும் தங்கம் திட்டத்தின் படி குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உதவி கிடைக்கும். இதற்காக தமிழக அரசு ரூ.148.22 கோடி செலவிடும். திருமாங்கல்யத்துக்கு 4 கிராம் தங்கம் கொடுப்பதுடன், 50 ஆயிரம் ரூபாய் திருமண உதவி வழங்கவும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


கனிமொழி - நடிகை குஷ்பு சந்திப்பு


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் கனிமொழி 30.05.2011 அன்று காலை 10.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் ஆ.ராசா மற்றும் சரத்குமாரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக் அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.


இதையடுத்து காலை 10.45 மணியளவில் நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி பேசினார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.


பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து குஷ்பு புறப்பட்டுச் சென்றார்.


ரூ.214 கோடி லஞ்சத்தை கடன் போல காட்ட கலைஞர் டிவி முயற்சி-சிபிஐ


டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இது லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான விவாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இவர்கள் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். அவர் கூறுகையில், கனிமொழியும் சரத்குமாரும் விசாரணையின்போது முழு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். கலைஞர் டி.விக்கு கடனாகத்தான் ரூ. 214 கோடி பெறப்பட்டது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இருவரும் தவறு ஏதும் செய்யவில்லை. அது சட்டப்பூர்வமான கடன் தான். இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

இது தொடர்பான எல்லா ஆவணங்களும் சிபிஐ வசம் தான் உள்ளன. இதனால் கனிமொழியும் சரத்குமாரும் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

அப்போது நீதிபதி அஜித் பரிகோகே குறுக்கிட்டு, பணப் பரிமாற்றத்துக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளீர்கள். ஆனால் அவை அனைத்தும் ஜெராக்ஸ் பிரதிகளாக உள்ளன. அசல் ஆவணங்கள் எங்கே? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அல்தாப் அகமது, அசல் ஆவணங்களை சரிபார்த்து வருகிறோம் என்றும் விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.

இதையடுத்து வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இதற்கு ஷாகித் பல்வாவும், வினோத் கோயங்காவும் உதவியாக இருந்திருக்கின்றனர். கைமாறிய பணம் லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது.

இந்தப் பணம் கொடுக்கப்பட்டபோது, அதற்கான ஆவணங்கள் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இதிலிருந்தே அது லஞ்சப் பணம் தான் என்பது உறுதியாகிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகுதான், இந்தத் தொகையை திரும்பத் தரத் தொடங்கியது கலைஞர் டிவி.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த பிறகுதான் பணத்தை கடன் போல காட்டவும், அதைத் திருப்பித் தருவது போல காட்டவும் கலைஞர் டிவி சார்பில் அவசர அவசரமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தொகையை கடனாகப் பெற்றதாகவும் அதைத் திரும்ப செலுத்தியதாகவும் ஆவணங்களை அவர்கள் தயாரித்திருக்கின்றனர்.

கலைஞர் டி.வி.யில் கனிமொழியும், சரத்குமாரும் தலா 20 சதவீதப் பங்குகளை கைவசம் வைத்துள்ளனர். இந்த பணப் பரிமாற்றத்தில் இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அவர்களின் கட்டுப்பாட்டில்தான் கலைஞர் டி.வி. இயங்கி வருகிறது. அவர்களது ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது. எனவே அந்த உத்தரவை உறுதி செய்து, அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.

இதையடுத்து கனிமொழியும் சரத்குமாரும் உடனடியாக மீண்டும் திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த எஸ்.எம்.எஸ்.


கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவி விடுதியறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு எஸ்.எம்.எஸ்.தான் இந்த தற்கொலைக்குக் காரணம் என்பது வேதனைக்குரியது.

கல்லூரி மாணவி

மதுரையைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் மீனலோஷினி. இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏ.எம்.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.

செல்போன் எடுக்கவில்லை

நேற்று காலை மீனலோஷினியுடன் படிக்கும் ஜோசன் எனும் மாணவர் அந்த விடுதிக்கு வந்தார். விடுதி வார்டனிடம் மீனலோஷினியின் செல்போன் எண்களை பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. அவர் அறையில் இருக்கிறாரா என பார்க்கச் சொன்னார்.

தற்கொலை

இதனை அடுத்து மீனலோஷினியின் அறைக்குச் சென்ற வார்டன் அறை உட்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் தட்டினார். அறைக்கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த வார்டன் தன்னிடமிருந்த மாற்று சாவியைக் கொண்டு அறையினைத் திறந்தார். உள்ளே மீனலோஷினி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கடிதம்

தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையில் மீனலோஷினி தன் தாய்க்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், தன் தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படியும், மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்தால் உனக்கே மகளாகப் பிறக்க வேண்டும் என்றும் எழுதி இருந்தது.

தற்கொலைக்கு என்ன காரணம்?

மீனலோஷினி தன்னுடன் படித்து வந்த சக மாணவரைக் காதலித்து வந்தார். அவர் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக வேறு எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது, சக மாணவிகளிடம் கூடப் பேசக் கூடாது என்று ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு வைத்திருந்தார். காதலரும் அதை தட்டாமல் கடைப்பிடித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மீனலோஷினியின் செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதை சீனியர் மாணவர் ஒருவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனலோஷினியிடம் பேசிய அவரது காதலர் எனக்கு மட்டும் கண்டிஷன் போடுகிறாயே, இது மட்டும் நியாயமா என்று கேட்டு சண்டை பிடித்துள்ளார்.

இதனால்தான் அவமானமுற்று மீனலோஷினி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்..சொன்னதை செய்வாரா ஜெயலலிதா?


திருப்பூர் மாவட்டம், ஒரத்துப்பாளையம், மருதுறை, பழையகோட்டை, வெங்கரையம் பாளையம், வெள்ளியம்பாளையம், குட்டப்பளையம், சக்கரபாளையம், கொளந்தபாளையம், சின்ன முத்தூர்,  போன்ற நொய்யல் ஆற்றோரத்தில் உள்ள ஊர்களில் திருமன வயதில் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் பென்கொடுப்பதில்லை என்று குறை பட்டுக்கொள்கிரார்கள்.......

காரணம் என்ன...?


எல்லாம் இந்த நாசமாப்போன........ நொய்யல் ஆத்து தண்ணிதான் சாமி..., என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்..

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்து மக்களையும், அவர்களின் கால்நடைகளையும், இரத்தமும், சதையுமாக இருந்து வாழ்வித்து கொண்டிருந்த நொய்யல் நதி இன்று இவர்களின் வாயில் நாசமாய் போனதாகிவிட்டது.


காரணம்.... திருப்பூர் சாயப்பட்டறைகள்...


1990,களில் திருப்பூரில் தொடங்கப்பட்ட நவீன சாயப்பட்டறைகள் நீன்டநாள் வெளுத்துப்போகாத பாஸ்ட் கலர் என்று சொல்லப்படும் சாயங்களை நூல்களுக்கு போட ஆரம்பித்தார்கள்.


நீண்ட நாட்களுக்கு சாயம் மங்காமல் இருக்கவும், சலவை செய்யப்படும் பனியன் துணிகளில் வெண்மை அதிகமாக இருக்கவும், வழக்கத்திற்கு அதிகமான இரசாயன பொருட்களை பயன்படுத்தி பிளிச்சிங் போட தொடங்கினார்கள், இப்படி நூற்றுக்கானக்கில் தொடங்கப்பட்ட சாயப்பட்டறைகள் தங்களின் கழிவுநீரை வெளிய்ற்றியாதன் விளைவு நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் கழிவு நீர் தேங்கியது.


முதலில் அணையை சுற்றியுள்ள கிராமங்களின் கிணறுகள் பாதிக்கப்பட்டன... பின்னர் ஆறு போகும் பாதையில் உள்ள எல்லா கிராமங்களின் கிணறுகளும் பாதிக்கப்பட்டன... கிணற்று நீரை குடிக்கும் மக்கள், கால்நடைகள், பறவைகள் எல்லாமே தொற்று நோய்க்கு ஆளானது.


கிணற்று நீர் பாசனம் செயப்பட்ட விளை நிலம் பாதிக்கப்பட்டது, அதில் வளரும் மரங்களும் செடி, கொடிகளும் தன்மை மாறியது, இதன் காரணமாய் இப்போது தோட்டத்து தென்னை மரத்தில் விளையும் தேங்காய் தண்ணீரை குடிப்பதற்கு கூட அந்த பகுதி மக்கள் பயப்படுகிரார்கள்..


விவசாயிகளின் நீன்ட நாள் போராட்டத்தை அரசு தட்டிகழித்து வந்த நிலையில், நீதி மன்றத்திற்கு போனார்கள் விவசாயிகளும், சுற்று சுழல் ஆர்வலர்களும்,  கடந்த ஜனவரி 28ம் தேதி சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.


அதன்படி இன்று வரை சாயப்பட்டறைகள் மூடப்பட்டுள்ளது, இதனால் பனியன் அலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஈரோடு சந்தைக்கு வரும் சிறுவர் சிறுமிகள்  பயன்படுத்தும் பனியன் ஜட்டிகளின் வரவு குறைந்துள்ளது, பள்ளி கல்லூரிகள் தொடங்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு புதிதாக துணி எடுக்க செல்லும் பெற்றோர்கள் சரியான அளவுகளில் பனியன் ஜட்டிகள் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். சந்தர்பத்தை பயன்படுத்தி ஒருசில நிறுவனங்கள் தங்களிடம் உள்ள துணிகளுக்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள்.


தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு தலைமையில், திருப்பூரில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதி மன்றம் சொல்லியுள்ளது போல ஜீரோ டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட கழிவு நீர் மாட்டுமே வெளியேற்றவேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருந்தார்கள்..


பனியன் மற்றும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் தரப்பில், கலந்து கொண்டவர்கள் சாயக்கழிவு நீரை  ஜீரோ டிஸ்ஜார்ஜ்  செய்யவே முடியாது, கழிவு நீர் குழாய்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கலக்க வேண்டும். அதை தவிர வேறு வழியில்லை என்று சொல்லியுள்ளர்கள்;


தண்ணீருக்கும், மண்ணுக்கும் தீங்கில்லாத மெல்லிய கலருடைய சாய வகைகளை நூலுக்கு போடவேண்டும், கண்ணை பறிக்கும் வென்மை வரவேண்டும் என்பதற்காக அதிகம் கலக்கப்படும் பிளீச்சிங் பவுடர்களை குறைதாலே போதும் என்று சொல்லும் இயற்கை ஆர்வலர்கள் தமிழக அரசு வெளிநாட்டு அறிஞர்களின் ஆலோசனையும் கேட்கவேண்டும் என்கிறார்கள்.


விவசாயிகளுக்கு மட்டுமல்ல... புதிய அரசுக்கும் பெரிய தலைவலி தான் திருப்பூர் சாயப்பட்டரைகள்.