Tuesday, August 30, 2011

கடவுளை படைத்தவர் விஜய் : ரசிகர்களின் பைத்தியகாரத்தனம்



நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா மதுரையில்  நடந்தது.

இந்த விழாவையொட்டி ரசிகர்கள் வைத்த கூவல் பேனர்கள் இது. இந்த மாதிரி பைத்தியகாரத்தனமான செயல்களை செய்து விஜயை உசுபேத்தி அவரை ரனகளபடுத்த போறாங்க விஜயின் தந்தையும் , அவருடைய ரசிகர்களும். கருணாநிதியாவது ஒரு செயல் செய்றதுக்கு முன்னாடி மத்தவங்க என்ன நினைபாங்கனு கொஞ்சமாவது யோசிப்பார். ஆனா ஜெயலலிதா அப்படி கிடையாது யாரைபத்தியும் கவலைபடாம முடிவெடுப்பவர். தனக்கு தேவைப்படும் பொது பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதில் கைதேர்ந்தவர். (இதற்கு அண்மைகால எடுத்துக்காட்டு வைகோ).

இந்த உண்மையை தெரியாம இவங்க ஆடுறாங்க அப்புறம் விஜய் நிலைமை மிகவும் பரிதாபகரமான இடத்துக்கு கொண்டு விடபோறாங்க என்பதில் சிறிதளவும் ஐயமிலை ....!



குடிபோதையில் கார் ஓட்டிய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சித்தப்பா கைது

 குடிபோதையில் கார் ஓட்டயதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் சித்தப்பா கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தந்தையின் ஒன்றுவிட்ட சகோரர் ஆன்யாங்கோ ஒபாமா (67). கடந்த வெள்ளிக்கிழமை ஆன்யாங்கோ குடிபோதையில் கார் ஓட்டினார். ஆன்யாங்கோ சிக்னலில் சிவப்பு விளக்கு எரிவதைக் கவனிக்காமல் ஓட்டிச் சென்று போலீஸ் காரின் மீது மோதப் பார்த்தார். அப்போது அவரை பிராமின்காம் போலீசார் கைது செய்தனர்.

நீங்கள் யாருக்காவது போன் செய்ய விரும்புகிறீர்களா என்று போலீசார் கேட்டதற்கு வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அவர் கென்யாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாதவாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




பெண் குழந்தைகள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு மணப்பெண்கள் இறக்குமதி


சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. 

எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.