Sunday, August 2, 2015

புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs mp3 Download )

Starring: Vijay, Sridevi, Shruti Haasan, Hansika
Music by: Devi Sri Prasad
Directed by: Chimbu Deven
Edited by: A. Sreekar Prasad


Puli 2015 Tamil Movie Song, Puli Tamil Mp3 Songs Download, vijay Puli 2015 Full Movie Mp3 Songs Free Download, Puli full movie

LISTEN users : Left click On Play button
IE users Download: Right click and choose ‘Save Target As’
Firefox users Download: Right click and choose ‘Save Link As’

Tuesday, March 24, 2015

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது


62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின்   
அறிமுக இயக்குநர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்', சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா உறுதுணை நடிகராக   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார். 'சைவம்' படத்துக்கு பாடல் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த குழந்தைகளுக்கான படமாக, தமிழ்த் திரைப்படமான 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உன்னி கிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்கான விருது பெற்றுள்ளார். இவர் 'சைவம்' படத்தில் அழகே அழகு பாடலைப் பாடினார்.

சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான விருது (பிரைட் ஆஃப் தமிழ் சினிமா) ஜி.தனஞ்செயனுக்கு வழங்கப்படுகிறது.

முக்கிய விருதுகளை வென்றுள்ள குற்றம் கடிதல் மற்றும் காக்கா முட்டை ஆகிய திரைப்படங்கள், இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத போதிலும்  பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தை ஈர்த்து தற்போது தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னட படமான 'நான் அவனல்ல அவளு'வில் நடித்த விஜய், சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். 'குயின்' படத்தில் நடித்த கங்கனா ரணவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ப்ரியங்கா சோப்ரா நடித்த 'மேரிகோம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மராத்திய மொழி திரைப்படம் 'கோர்ட்' சிறந்த திரைப்படமாகத்  தேர்வு செய்யப்பட்டுள்ளது

62 வது  திரைப்பட தேசியவிருதுகள் :


சிறந்த திரைப்படம்:"கோர்ட்" (மராத்தி, இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம்)

சிறந்த நடிகர்: விஜய், "நானு அவனல்ல அவலு " (கன்னடம்)

சிறந்த நடிகை: கங்கான ரனாவத், "குயின்" (இந்தி)

சிறந்த பிரபல திரைப்படத்துக்கான பொழுதுபோக்கு படம்  "மேரி கோம்" (இந்தி); தயாரிப்பாளர்:  18 மோஷன் பிக்சர்ஸ்; இயக்குனர்: ஓமங் குமார்

சிறந்த சுற்றுசூழல்  பாதுகாப்பு  படம்: "ஒட்டால் (மலையாளம்)

சிறந்த இயக்கம்: ஸ்ரீசித் முகர்ஜி, " சொட்டுஸ் கோன்(Chotushkone) (பெங்காலி)

சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா"ஜிகர்தண்டா" (தமிழ்)

சிறந்த துணை நடிகை: பிலிஜிந்தர் கவுர், "பக்டி தி ஹானர்" (அரியானா)

சிறந்த பின்னணிப் பாடகருக்கான: சுக்விந்தர்சிங், "ஹைதர்" (இந்தி) (பாடல்: "பிஸ்மில்")

சிறந்த பின்னணி பாடகி: உத்தரா உன்னி கிருஷணன் , "சைவம்" (தமிழ்) (பாடல்: "அழகு")

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: தோலி அகுலுவாலியா, "ஹைதர்" (இந்தி)

சிறந்த இசை அமைப்பாளருக்கான அ) பாடல்கள்: விஷால் பரத்வாஜ், "ஹைதர்" (இந்தி) ஆ) பின்னணி: கோபி சுந்தர், "1983" (மலையாளம்)

சிறந்த இந்தி திரைப்படம்: "குயின்", தயாரிப்பாளர்: பாண்டம் ஃபிலிம்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றும் கோப்பு வரலாறு 18 மோஷன் பிக்சர்ஸ் இயக்குனர்: விகாஸ் பாஹ்ல்

 சிறந்த நடன அமைப்பு: "ஹைதர்" (இந்தி)

சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: "ஓதெல்லோ"

பெங்காலி படம் சிறந்த "நிர்பஷிட்டோ"

சிறந்த மலையாளத் திரைப்படம்: "ஐன்"

சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: "கிலா"

சிறந்த ஒடியாதிரைப்படம்: "ஆதிம் விசார்"

சிறந்த பஞ்சாபி திரைப்படம் பஞ்சாப்: "1984"

தமிழ் திரைப்பட சிறந்த: "குற்ரம் கடிதல்

தெலுங்கு படத்தில் சிறந்த: "சந்தமாமா கதலு"

சிறந்த ரபா  திரைப்படம்: "ஓரங்"

சிறந்த ஹரியன்வி, திரைப்படம்: "பகடி தை ஹானர்"

சிறப்பு குறிப்பு: "ஐன் '(மலையாளம்)," நிகோம் Nachom - ஐ ஏ கும்பசார் "&" பூத்நத் ரிட்டர்ன்ஸ் "(கொங்கனி)" கிலா "(மராத்தி) (இந்தி) பூத் நாத் ரிட்டன்ஸ்( இந்தி)

சினிமா சிறந்த எழுத்துல்: தமிழ் சினிமா ப்ரைட் (சிறப்பு குறிப்பு) ஜி தனஞ்செயன் 

சினிமா சைலண்ட் சினிமா  எழுத்து: (1895-1930) பசுபுலிட்டி  பூரணசந்திரராவ் 


சிறந்த திரைப்பட விமர்சகர் -தனுல் தாகூர்



Monday, March 2, 2015

ஷாலினி அஜீத்துக்கு பிரசவம் ஆனது: ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் அஜித்

அஜீத்தின் மனைவி ஷாலினி இன்று அதிகாலை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

 அஜீத், ஷாலினி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அன்பின் அடையாளமாக அவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். 

என்னை அறிந்தால் படத்தை முடித்த கையோடு அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கர்ப்பிணியான ஷாலினியுடன் இருக்க அவர் 2 மாதம் பிரேக் எடுத்துள்ளார். 

இந்நிலையில் ஷாலினிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

அஜீத்தின் அடுத்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி பூஜையுடன் துவங்குகிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். படத்தில் சந்தானமும் உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. 

அஜீத், ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Saturday, February 28, 2015

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் ?

அஜீத்தின் மனைவி ஷாலினி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளும் அஜீத், ஷாலினியின் பிரசவத்துக்குப் பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு.

இந்தப் படத்துக்கு அச்சமில்லை என்ற பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜீத்தின் முந்தையப் படத்துக்கு பெயர் வைப்பதில் கடும் இழுபறி நடந்து, படம் வெளியாகும் நேரத்தில்தான், என்னை அறிந்தால் பெயரை இறுதி செய்தனர்.

அப்படி இல்லாமல் முன்பே படத்தின் பெயரை அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார் சிவா. அச்சமில்லை பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அந்தப் பெயரே இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

Friday, February 20, 2015

லிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன ?

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க விடாமல் ரஜினியை இரு முன்னணி நடிகர்கள் தடுப்பதாக அதன் விநியோகஸ்தர்கள் சிலர் பிரஸ் மீட் வைத்து நிருபர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கூறினர் அல்லவா.. 

அந்த நடிகர்கள் யார் யார் என்று மீடியாக்காரர்கள் திரும்ப கேட்டதற்கு அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினர் விநியோகஸ்தர்கள். 

ஆனால் ஆப் த ரெக்கார்டாக, அந்த நடிகர்கள் விஜய் மற்றும் சரத் குமார்தான் என்று கூறியதாக தகவல் பரவியது. 

சில மீடியாக்களில் செய்திகளும் வெளியானது. இந்த தகவல் கேள்விப்பட்டதும் விஜய்யின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

 யார் வம்புக்கும் போகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய்யை இந்த விநியோகஸ்தர்கள் எதற்காக வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர். 

'லிங்கா விவகாரத்தில் விஜய்க்கு துளியும் சம்பந்தமில்லை. இந்த நிலையில் அவர் ரஜினியிடம் போய், லிங்காவுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறியிருப்பது விஷமத்தனமானது. 

போகிற போக்கில் அத்தனை பேர் பெயரையும் இழுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இவர்கள். இதுபோன்ற விஷமப் பிரச்சாரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.


Wednesday, February 18, 2015

ஓமைகாட்!: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த ராம்ஜெத்மலானி ( வீடியோ)

மும்பையில் நடந்த விருது விழாவில் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஹம் லோக் விருதுகள் வழங்கும் விழா திங்கட்கிழமை இரவு மும்பையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பிரபல இந்தி பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கரை பார்த்தும் அவரை கட்டிப்பிடித்து லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார்.

 நடிகையான லீனா திருமணமான சில நாட்களிலேயே கணவரை இழந்தார். அதன் பிறகு அவர் ஏற்கனவே 3 முறை திருமணமான பாடகர் கிஷோர் குமாரை திருமணம் செய்து சுமித் கங்குலி என்ற ஆண் குழந்தைக்கு தாயானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றான் மனைவிக்கு ராம் ஜெத்மலானி முத்தம் கொடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முன்னதாக ராம்ஜெத்மலானி கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு லிப் டூ லிப் கொடுத்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்டர்நெட்டில் தீயாக பரவியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் முத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராம் ஜெத்மலானி.





ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் "லிங்கா விநியோகஸ்தர்கள்"?

லிங்கா விவகாரத்தை பக்கா அரசியலாக்கிவிட்டார்கள், அதன் விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர். லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். 

அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள். அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில் செவழித்து பிரஸ் மீட்டுகள் நடத்தி வரும் இவர்கள் இப்போது, ரஜினி குடியிருக்கும் ஏரியாவிலிருந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோர, சில 'லெட்டர் பேட்' கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட ஆரம்பித்துள்ளன.

 இந்த நிலையில்தான் லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பொதுத் தலைப்பை பயன்படுத்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு போஸ்டர் அடித்துள்ளனர் (பெரும்பாலான லிங்கா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் யாரும் இவர்களின் போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). 

அதில்தான் இந்த குழுவின் நோக்கம், பின்னணி எல்லாமே அம்பலமாகியுள்ளது. இது லிங்கா நஷ்டஈடு கேட்கும் போராட்டம் அல்ல. மாறாக ரஜினிக்கு எதிரானது என்று பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர். 

இந்த போஸ்டரில் 'சினிமாவுக்குள் அரசியல் நுழையக்கூடாது என்பார்களாம்.. ஆனால் இவர்கள் மட்டும் குறிப்பிட்ட கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பார்களாம்... இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது, என்று சொன்னவருக்கு ஸ்ரீரங்கத்து அரங்கநாதரே உங்களை அங்கீகரித்துவிட்டார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை...' என்று போகிறது அந்த போஸ்டர் வாசகங்கள். 

அதாவது ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டிவிடுகிறார்களாம்! ஆக இவையெல்லாம் தெள்ளத் தெளிவாக ரஜினியின் செல்வாக்குக்கு எதிரான செயலாகவே பார்க்கப்படுகிறது. '

இவர்கள் வர்த்தகம் செய்தது வேந்தர் மூவீஸ், ஈராஸ் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷுடன். ஆனால் அங்கெல்லாம் போகவில்லை. அவர்களின் முகவரி தெரியவில்லையா இவர்களுக்கு? 

 ரஜினியை அவமதிப்பதுதான் இவர்கள் நோக்கம். அவரது சினிமா மற்றும் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடக்க சிலர் செய்யும் சதியின் முகங்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் முன் இப்போது அம்பலப்பட்டு விட்டார்கள்' என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

 யார் இந்த சிங்கார வேலன்? 

விதம் விதமாக, ரகம் ரகமாக போராட்ட நோட்டீஸ் போட்டு வரும் இந்த குழுவின் தலைவராக செயல்படும் சிங்காரவேலனின் பின்னணி கதைகள் இணையங்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவர ஆரம்பித்துள்ளன. 

இன்று ரஜினிக்கு எதிராக, மக்களின் முதல்வருக்கு நோட்டீஸ் அடித்த இதே சிங்காரவேலன், சில ஆண்டுகளுக்கு முன்பு இதே மக்கள் முதல்வரை கடுமையாகச் சாடி அளித்த பழைய பேட்டிகளை எடுத்து வெளியிட்டுள்ளன மீடியாக்கள். 

குறிப்பாக திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அளித்த பேட்டியில், "தளபதியே அடுத்த முதல்வர். உலகமெங்கும் குடும்ப ஆதிக்கம் ஓங்கியிருக்கும் போது திமுகவை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்? அம்மையார் ஆட்சியில் அவருக்கு எவ்வித ரத்த பந்தங்களும் இல்லாதவர்கள் மண்டலவாரியாக ஆளுமை செலுத்தினார்களே, அதற்கு என்ன பெயர் என்று அகராதியில் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று 'மக்கள் முதல்வர்' ஜெயலலிதா குறித்து ஏக வசனத்தில் பேசியிருக்கிறார். 

அது மட்டுமல்ல, இந்த சிங்கார வேலன் முன்பு திமுக சார்பில் போட்டியிட முயன்று, அங்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றவர். அந்த தேர்தலில் தன்னிடம் மொத்தமே ரூ 3 லட்சம்தான் ரொக்க, சொத்து மதிப்பு என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்திருக்கிறார். 

ஆனால் லிங்காவை ரூ 8 கோடிக்கு வாங்கியதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். இதுபற்றியும் பல கேள்விகளை மீடியா எழுப்பி வருகிறது. வருமான வரித்துறைக்கும் புகார்கள் அனுப்பி வருகின்றனர் 
சிங்காரவேலனுக்கு எதிர்த்தரப்பினர். 

சிங்கார வேலன் மீதுள்ள வழக்குகள், அவர் மீது சென்னை மேயர் சைதை துரைசாமி அளித்த புகார்கள், எஸ் ஆர் எம் தலைவர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தருடனான மோதல் மற்றும் சமரச கதைகள் போன்றவையும் வெளியாகியுள்ளன. 

இப்படி லிங்கா விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் தனக்கு எதிராக நடத்தப்படும் விஷயங்களை ரஜினிக்கு தெரிந்திருக்கிறதா... அவர் நிலைப்பாடு என்ன? அதுகுறித்து அடுத்த செய்தியில் பார்க்கலாம்!

Monday, February 16, 2015

அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள் எக்ஸ் பட போஸ்டர்கள்

பாலிவுட்டில் காமத்தையும், வன்முறையையும் கலந்த படங்களை எடுப்பதில் ஏக்தா கபூரும், மகேஷ் பட்டும் முன்னணியில் உள்ளனர். சன்னி லியோனை பிரபலப்படுத்திய ராகினி எம்எம்எஸ் படத்தை தயாரித்தது ஏக்தா கபூர்தான்.

இவரது புதிய தயாரிப்புக்கு ட்ரிபிள் எக்ஸ் என்று பெயர் வைத்துள்ளார். கென் கோஷ் இயக்கம். அப்பட்டமான உடலுறவு காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் பார்ப்பவரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 

தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை சவால்விடுகிறது இந்தி சினிமா என்று சொல்லி பெருமைப்படுகிறவர்கள், காமத்திலும் ஹாலிவுட்டை இந்தி சினிமா சவாலுக்கு இழுக்கிறது என்று பெருமையாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

சென்சார் இந்தப் படத்துக்கு என்ன சான்றிதழ் தரும்? ட்ரிபிள் ஏ தந்தாலும் இந்தப் படத்துக்கு போதுமானதாக இருக்காதே.

எனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியானது(வீடியோ)

காதலர் தினத்தை முன்னிட்டு அனிருத் இசையமைத்த எனக்கென யாருமில்லையே பாடல் வெளியானது.

முதல் படத்திலேயே இந்தியா அறியப்படும் இசையமைப்பாளராக பிரபலமான அனிருத், ஆக்கோ என்ற தமிழ்ப் படத்துக்கு இசையமைத்து வருகிறார். 
ஆக்கோவின் விளம்பரங்கள் அனைத்திலும் அனிருத்தின் புகைப்படமே இடம்பெற்றது. அதனால், அனிருத் நடிக்கும் படமோ என்ற ஐயம் அனைவருக்கும். ஆனால், இசை மட்டும்தான் அனிருத்.

அக்கோ படத்தின் ஒரு பாடலை மட்டும் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டனர். எனக்கென யாருமில்லையே என்ற அந்தப் பாடல் இணையத்தில் அதிகம் பேரால் விரும்பி கேட்கப்பட்டுள்ளது.




முதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்

நேற்று முன்தினம் தனுஷின் அனேகன் திரைக்கு வந்தது. காதல் கதையை கே.வி.ஆனந்த் சுவாரஸியமாக தந்துள்ளார் எனவும், படம் கொஞ்சம் சொதப்பல் எனவும் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வசூல் கனகம்பீரம்.

முதல்நாளில் தமிழக திரையரங்குகளில் மட்டும் அனேகன் 5.8 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது இந்த வருடம் வெளியான படங்களில் மூன்றாவது அதிக ஓபனிங் ஆகும். 

என்னை அறிந்தால் முதல் இடத்திலும், ஐ இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அனேகன் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், புதுமுகம் அமிரா தஸ்துர் நடித்துள்ள அனேகன் படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸானது. அனேகன் உலக அளவில் 701 தியேட்டர்களில் ரிலீஸானது. 

படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அனேகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பார்ட்டி 

படம் ரிலீஸான அன்று இரவே தனுஷ் தனது நண்பர்களுக்கு வெற்றி பார்ட்டி அளித்தார். அதில் தனுஷின் தம்பி சிம்பு கலந்து கொண்டார்.

ரூ.20 கோடி 

அனேகன் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளது என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 படத்திற்கு இப்படி அமோக வரவேற்பு அளித்துள்ள உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் ஹிட்டானது. அதையடுத்து வெளியாகியுள்ள அனேகன் படமும் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


Saturday, February 14, 2015

என்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் கௌதம், அஜீத் முடிவு என்ன ?


என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருக்கிறது என்று மீண்டும் கூறியுள்ளார் கௌதம்.

தோல்விகளால் துரத்தப்பட்டு தமிழ் சினிமாவின் விளிம்புக்கு சென்ற கௌதமை மீண்டும் மையத்தில் உட்கார வைத்துள்ளது, என்னை அறிந்தால். தன்னுடைய ஸ்கிரிப்டோ இயக்கமோ இதற்கு காரணமல்ல, அஜீத் என்ற நடிகரின் ஸ்டார் பவரே காரணம் என்பது அவருக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது. என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பதே இன்று அவர்முன் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய ஆசை.


யாருக்கு எப்போது எதை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்துகிறவர் அஜீத். 

முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, இனி அஜீத்தால் பழையபடி நடிக்க முடியுமா என்று கேள்வி எழுந்த நேரத்தில், ஸ்ரீ சூர்யா மூவிஸுக்காக அஜீத்தை ஒப்பந்தம் செய்திருந்த ஏ.எம்.ரத்னம் அவரை படத்திலிருந்து நீக்கினார். அந்த சோதனையில் இருந்து அஜீத் மீண்டெழுந்தார். அப்போதுதான், தவறு செய்துவிட்டோமே என்று ரத்னத்துக்கு உறைத்தது. 

அன்றிலிருந்து அஜீத்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பூங்கொத்து அளித்து வந்தார் ரத்னம். ஆனால் அஜீத் அவரை கண்டுகொள்ளவில்லை. ரத்னம் விரும்பியும் அவரது தயாரிப்பில் நடிக்கவில்லை. வரிசையாக படங்கள் தோல்வியுற்று, அவர் கைதூக்கிவிட்ட பிரபல நடிகர்கள் அவரை ஒதுக்கி, இனி வனவாசம்தான் என்று முடிவான நேரம் அஜீத்தே அழைத்து ஆரம்பம் படத்தை தயாரிக்கும் பொறுப்பை ரத்னத்துக்கு அளித்தார். ஒரே படத்தில் கடன்களை அடைத்து நிமிர்ந்தார் ரத்னம். இப்போது அவருக்கு இரண்டே சாமிகள், சாய் பாபாவும், அஜீத்தும்.

அதேபோல்தான் கௌதமும். வரிசையாக தோல்வியுற்று துருவநட்சத்திரம் படத்தை எடுத்தால்தான் வாழ்க்கை என்ற நிலையில் சூர்யா அப்படத்திலிருந்து விலக, ஆபத்பாந்தவனாக வந்து என்னை அறிந்தால் பட வாய்ப்பை கௌதமுக்கு அளித்தார். கௌதமுக்கு இப்போது அஜீத் கடவுளுக்கும் மேலே.


என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் கௌதம் ஆர்வம் காட்டுவதற்கும் அஜீத் மௌனம் காட்டுவதற்கும் ஸ்கிரிப்டுக்கு மேல எவ்வளவோ விஷயங்கள். ரசிகர்களுக்கு இது புரியுமா?


Friday, February 13, 2015

எலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி?

இந்த கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கும் பெரிய படங்கள் என்று பார்த்தால், கமல் படம் தவிர வேறு எதுவும் இல்லை. 

கமலின் உத்தம வில்லன் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய படம் என்று பார்த்தால் சூர்யாவின் மாஸ்தான். ஆனால் வெளியீட்டுத் தேதி முடிவாகவில்லை. 

இந்த சூழலில் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படம்தான் இப்போதைக்கு பெரிய படம். புலியை மே மாதமே வெளியிட்டுவிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். காரணம், தமிழ் சினிமாவின் பெரிய சீஸன் கோடை விடுமுறைதான். 

மே மாதம் வெளியிட்டால் ஒரு மாத காலத்துக்கு வசூலை அள்ளலாம். எனவே மே இறுதிக்குள் படத்தை வெளியிட தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்தப் படம் ஜூலையில்தான் வெளியாகும் என்று கூறி வருகின்றனர்.

விஜய் தனது புலிக்கு போட்டியாக வடிவேலுவின் எலியை கருதுவதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி எலியுடன் புலியை வெளியிட்டால் அது இணையத்தள வாசிகளிடமும் அஜித் ரசிகர்களிடமும் பெரிய கேலிக்குள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் எலியை முந்தி மொண்டு புலியை வெளியிட விஜய் உட்பட புலி படக்குழுவினர் எண்ணியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது 


Thursday, February 12, 2015

கவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை

கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா நடிகைகளாக வலம் வரத் தொடங்கிவிட்டனர். கமலுடன் வாழ்ந்து வரும் கவுதமி நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். 

அவரும் ‘பாபநாசம்‘ படத்தில் கமலுடன் ஜோடியாக நடித்து திரையுலகுக்கு ரீஎன்ட்ரி ஆகி இருக்கிறார். கவுதமி மகள் சுப்புலட்சுமி. அவரும் வளர்ந்து நிற்கிறார். 

அவருக்கும் நடிக்கும் ஆசை வந்திருக்கிறதாம். தனது விருப்பத்தை அவர் கவுதமியிடம் சொன்னதும் அவர் ஊக்கம் கொடுத்ததுடன் அட்வைஸும் தந்தார். 

ஸ்ருதி ஹாச னை உனது ரோல் மாடலாக எடுத்துக்கொள். அவர் கூறும் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடந்துகொள் என்று கவுதமி கூறி இருக்கிறார்.

 இதற்கிடையில் சுப்புலட்சுமிக்கு வாழ்த்து சொன்ன ஸ்ருதி ஹாசன், நடிக்க வருவதற்கு முன் உன் பெயரை மாற்றிக்கொள் என்று சுப்புலட்சுமிக்கு நிபந்தனை விதித்திருக்கிறாராம். 

சுப்புவை கோலிவுட்டில் அறிமுகம் செய்தால் பிரபலப்படுத்த முடியாது. ஸ்ருதி, அக்ஷராவை போல் பாலிவுட்டிலேயே அறிமுகப்படுத்தி, அதன்பிறகு தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வைக்கலாம் என கவுதமிக்கு அவரது சினிமா தோழிகள் யோசனை சொல்கிறார்களாம்.



என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மறக்காத அருண் விஜய்

என்னை அறிந்தால் படத்திற்காக உடம்பை கட்டுகோப்பாக வைத்து கடினமாக உழைத்திருந்தார் அருண்விஜய்.அவரது  உழைப்பு வீண் போகவில்லை. எதிர்பார்த்தது போலவே, அருண்விஜய்க்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த படத்தில் அருண் விஜயின் கேரக்டர் பேசப்பட்டது.ரசிகர்கள் இடையே அருண் விஜய்க்கு ந்ல்ல வரவேற்பு உள்ளது. 

இதுவரை நாயகனாக மட்டுமே நடித்து வந்த அருண்விஜய், என்னை அறிந்தால் படத்தில் தான் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார்.அதில் அவர் பெயர் விக்டர்.

இப்படத்தை இவர் முதல் நாள் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் அதிகாலையே கண்டு கழித்தார். படம் முடிந்து வெளியே வருகையில் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் அவர் கண் கலங்கியது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இந்த வீடியோ இன்றும் வலம் வரும் பேஸ்புக்கில் இந்திய அளவில் அருண் விஜய் ட்ரண்ட் ஆகியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தின் பச்சை தனது முதுகு பகுதியில் குத்தி உள்ளார். இறக்கைகளுடன் கூடிய விக்டர் டிசைனில் பச்சை குத்தி உள்ளார்.

அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மற்றும் அன்பின் வெளிப்பாடாகவே அருண் விஜயின் இந்த பச்சை குத்துதலை அஜித் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ அடித்த படத்திற்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் போதும் .


கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகிறது

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2, உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக உள்ளன. இதில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அனைத்து படங்களிலும் கமல்ஹாசன் நடித்து முடித்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன. அடுத்து அமீர் கான் நடித்து வெளியான பிகே படத்தின் தமிழ்- தெலுங்கு ரீமேக்கிலும் கமல்ஹாசன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘உத்தம வில்லன்’. இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்

உத்தமவில்லன் தான் முதலில் வர இருக்கிறது என கமலே தெரிவித்து இருந்தார். 

‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் குருவான சினிமா இயக்குனராக கே. பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.

8-ம் நூற்றாண்டில் நடக்கும் ‘உத்தம வில்லனில்’ நடக்கும் கதையில் மன நோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21-ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டு கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசர், ஜேக்கப் சக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன், சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இசைவெளியீட்டை மார்ச் 1-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

ரஜினிகாந்தின் லிங்கா வெளியீடு உரிமையை வாங்கிய ஈராஸ் நிறுவனமே தற்போது கமல்ஹாசனின் உத்தம வில்லன் வெளியீடு உரிமையை வாங்கி உள்ளது.உத்தம வில்லான் வருகிற ஏப்ரல் 2 தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

Wednesday, February 11, 2015

அடுத்து தனுஷை இயக்கும் கௌதம்

ஆம், கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். ஆனால் அது சினிமா அல்ல, விளம்பரம்.
இந்தியில் நடிக்க ஆரம்பித்தபின் அதிக விளம்பரங்கள் தனுஷை தேடி வருகின்றன. விளம்பர விஷயத்தில் அவர் இந்தி நடிகர்களைப் போலவே நடந்து கொள்கிறார். எதையும் விடுவதில்லை.

தனுஷ் நடித்த சென்டர் ஃப்ரெஷ் விளம்பரத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். அதையடுத்து 7 அப் விளம்பரத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இந்த விளம்பரத்தை எடுக்கப் போகிறவர் கௌதம். இவர்கள் - சினிமாவோ, விளம்பரமோ - ஒன்றாக இணைந்து பணிபுரிவது இதுவே முதல்முறை. இந்த கூட்டணி சினிமாவிலும் தொடருமா? 

காலம் பதிலளிக்க வேண்டிய கேள்வி.


என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன. இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். 

சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். 

அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில். சரி படம் உண்மையில் எப்படிப் போகிறது? நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது. 

என்னை அறிந்தால் படம், வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மொத்தமாக. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. 

இந்தப் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. 

சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். 

மொத்தமாக ரூ 60 கோடிக்கும் மேல் வசூலித்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால். தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சந்தோஷமாக அஜீத்தின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.


அட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி?

கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடாத படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி என்று கூறப்பட்டது. பிறகு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தற்போது விஜய்யை மீண்டும் வலைத்து போட்டுள்ளார் சமந்தா. ஆம் விஜய்யின் 59வது படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. இதன் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேரவிருக்கிறார். மேலும் படத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. புலி படம் முடிந்தவுடனே தனது 59வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு


'இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் விறுவிறுப்பான ஒரு காதல் கதையை தயார் செய்து, அதில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சிம்பு-த்ரிஷாவை ஜோடியாக்கி புதிய படம் ஒன்றை இயக்க முயற்சி மேற்கொண்டார். படத்துக்கு கூட அலைவரிசை என்று தலைப்பு வைத்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கப்படவில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, காரணம் எதுவும் சொல்லாமலேயே படத்தை கைவிட்டனர். இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கவிருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இதை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் கூறியதாவது, ''அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மிக சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு வாழ்த்துகள்'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கிய சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆஃபீசில் வெற்றி பெறாததால், இப்படத்தை ஒரு வெற்றிப்படமாக தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் செல்வராகவன், அதற்கேற்ற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறாராம். மேலும் படத்தின் நாயகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் அலைவரிசை படத்தில் ஒப்பந்தமான த்ரிஷாவும், யுவனும் படத்தில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்


என்னை அறிந்தால் கௌதமின் திரைவாழ்க்கையில் நல்ல ஓபனிங்கை மீண்டும் பெற்றுத் தந்திருக்கிறது. கௌதம் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

என்னை அறிந்தால் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் விக்ரமிடம் ஒரு கதை கூறியிருக்கிறார் கௌதம். அது அவருக்குப் பிடித்துள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் முடிந்ததும் கௌதம் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் விக்ரம்.

கௌதம் தற்போது சிம்புவை வைத்து தொடங்கிய படத்தை முடிப்பதில் தீவிரமாக உள்ளார். குறுகியகால தயாரிப்பான இது இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதையடுத்து அவர் விக்ரமை இயக்குகிறார்.