பாகிஸ்தான்
சிறைச்சாலையில் கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங், லாகூர் மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
அவரது உடலை இந்தியா கொண்டு
வர தேவையான நடவடிக்கைகளை மத்திய
அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த
1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட
சரப்ஜித் சிங்கிற்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானின்
கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த
சரப்ஜித் சிங்கை சக கைதிகள்
சிலர் கடந்த 26ம் தேதி
கொடூரமாக தாக்கினர். இதில், தலையில் பலத்த
காயம் அடைந்த அவர், லாகூர்
ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்
தொடர்ந்து இந்தியாவில் இருந்து சரப்ஜித் சகோதரி,
மனைவி மற்றும் 2 மகள்கள், லாகூர் சென்று மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை சந்தித்தனர்.
சரப்ஜித்,
நேற்று, மீள முடியாத கோமா
நிலைக்குச் சென்று விட்டதாக அவருக்கு
சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்
தெரிவித்திருந்தனர். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்க
இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், இந்தியத் தூதர் வலியுறுத்தியதாக, வெளியுறவு
அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு
மணியளவில், சரப்ஜித் சிங் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்துவிட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவக்
குழுவின் தலைவர் சௌகத் தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக
அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை
நிர்வாகம் தெரிவித்தது.
சரப்ஜித்
சிங்கை சந்தித்து விட்டு நேற்றுதான் அவரது
குடும்பத்தினர் இந்தியா திரும்பினர் இந்த
நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் அவர்களை தாக்கியுள்ளது.
கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப்
போராடிய சரப்ஜித் சிங் உயிரிழந்தது, அவரது
குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சரப்ஜித்
சிங் உடலை இந்தியா கொண்டு
வர தேவையான நடவடிக்கைகளை மத்திய
அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர்
இரங்கல்.....
பாகிஸ்தான்
சிறையில் தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங் மறைவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தமது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக
கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங்-ஐ சிகிச்சைக்காக மனித
நேய அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் மறுத்தது
தமக்கு வருத்தமளித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சரப்ஜித்சிங்கின்
உடலை இந்தியாவுக்கு கொண்டுவரத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்
அரசு மேற்கொள்ளும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
உள்துறை
அமைச்சர் ஆறுதல்.....
சரப்ஜித்
சிங்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்
கூறிய உள்துறை அமைச்சர் சுஷில்
குமார் ஷிண்டே, சரப்ஜித்-ன்
உடலை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்
என்று உறுதியளித்துள்ளார்.
அவர் உயிரோடு இருக்கும் பொது
அவரை காப்பற்ற போதிய நடவடிக்கை எடுக்காத
இந்திய அரசு இப்போது உயிரற்ற அவரது
உடலை துரித
நடவடிக்கை எடுப்பது வேடிக்கையாக உள்ளது .
இங்கு இந்தியாவில் எத்தனை சிறைகளில் எத்தனை பாக்கிஸ்தான் நாய்களும்,பாக்கிஸ்தான் உளவாளி நாய்களும் இருக்கின்றன ?அந்த நாய்களுக்கு பொங்கல் வச்சுட வேண்டியதுதான்.......பதிலுக்கு செஞ்சாதான் நாய்களுக்கு புத்திவரும்
ReplyDelete