விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, March 1, 2011

    செல்வராகவனின் புது குழப்பம்!


    கமலுக்கு செல்வராகவன் கதை சொ‌ல்லி, அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும் மீடியாவில் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை. இந்நிலையில் செல்வராகவன் அல்லு அர்ஜுனை வைத்து மெகா பட்ஜெட் படமொன்றை இயக்கவிருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளன. ஆக, செல்வராகவன் இயக்கப் போவது கமலையா? அல்லு அர்ஜுனையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.


    Posted by விழியே பேசு... at 8:05 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    காத்ரீனா கைப்பை கரம்பிடிக்கிறார் ரன்பீர் கபூர்


    பாலிவுட்டின் இப்போது ஹாட் நியூஸ் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம் தான். ரன்பீர்-காத்ரீனா திருமணத்திற்கு, ரன்பீரின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர்.

    பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் தீபிகா படுகோனேவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதேபோல் சல்மான் கானும், காத்ரீனா கைப்பும் வெகுநாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் அனைவரும் பிரிந்தனர். இதனையடுத்து ரன்பீர், காத்ரீனா கைப்பை காதலிக்க ஆரம்பித்தார். இவர்களது காதலுக்கு ரன்பீரின் பெற்றோர் ரிஷி கபூர்-நீது சிங் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் ரன்பீர் ‌தனது பெற்றோரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அவரது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. ரன்பீர்-காத்ரீனா காதலுக்கு ரிஷி கபூர்-நீது சிங் ஓ.கே. சொல்லிவிட்டனர். அத்துடன் விரைவில் திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

    பெற்றோரின் ஆசைப்படி விரைவில் திருமணத்தை நடத்தும் எண்ணத்தில் இருக்கிறார் ரன்பீர். ஆகையால் அடுத்த ஆண்டு 2012ல் ரன்பீர்-காத்ரீனா திருணம் நடைபெறும் என்று தெரிகிறது. இதனிடையே ரன்பீர் தன்னுடைய காதலி காத்ரீனாவை தனது பாட்டி கிருஷ்ணாராஜ் கபூரிடம் அழைத்து சென்று காட்டியுள்ளார். காத்ரீனாவை வரவேற்ற கிருஷ்ணராஜ் கபூர், ரன்பீரிடம் உனக்கு ஏற்ற சரியான பெண் இவள்தான் என்று கூறி இருவரையும் வாழ்த்தியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 7:32 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக...... !


    தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்கு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து நடைபெறவிருக்கிறது.


    தமிழகம், புதுச்சேரி,கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின்  தேர்தல் தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர் குரேஷி. 




    தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக, அதாவது ஏப்ரல் மாதம் 18,23,27ஆகிய தேதிகளிலும்,  மே மாதம்  3,7,10 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  

    ஐந்து மாநிலங்களிலும் மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 5 மாநிலங்களிலும் நடத்தை விதி அமலுக்கு வந்தது.   ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


     தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக  ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  மேற்கு வங்கத்தின் 6 கட்ட வாக்குப்பதிவினால்தான் தமிழக வாக்கு எண்ணிக்கை தேதி தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.


    Posted by விழியே பேசு... at 7:09 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பு


    சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்கலாம் என காத்திருக்கிறார்கள்.  1996 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-த.மா.கா. கூட்டணியை ரஜினி ஆதரித்தார். கருணாநிதி, மூப்பனார் ரஜினி படங்களுடன் ரசிகர்கள் மும்முரமாக தேர்தல் பணியாற்றினர். ரசிகர் மன்றம் சார்பில் தமிழகமெங்கும் சுவர் விளம்பரங்கள் செய்தார்கள். போஸ்டர்கள் அச்சிட்டும் ஒட்டினர்.

    2004 பாராளுமன்ற தேர்தலில் தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா கூட்டணிக்கே எனது ஓட்டு என்று அறிவித்தார். ரசிகர்கள் அவர்கள் விருப்பப்பட்ட கட்சிக்கு ஓட்டு போடலாம் என சுதந்திரம் அளித்தார்.ஆனால் ரசிகர்கள் வேறு கட்சிகள் பக்கம் போக வில்லை. ரஜினி ஆதரித்த கட்சிக்கே வாக்களித்தார்கள்.   அதன் பிறகு வந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் நடுநிலை வகித்தார். அப்போது ரஜினி அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுத்தது.

    ரசிகர்கள் “தலைவா அரசியலுக்கு வா” என்று பகிரங்கமாக போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டினர். சிலர் கட்சி பெயரையும் அறிவித்தனர். கொடியும் அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை அமைதியாக இருந்த ரசிகர்கள் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் பரபரப்பாகியுள்ளனர். எந்த கட்சியை ஆதரிப்பது என்று தங்களுக்கு ரகசிய சுற்றறிக்கைகள் வரலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

    ரஜினி வெளிப்படையாக ஆதரவு பற்றி அறிவிப்பு செய்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீபகாலமாக எல்லா தலைவர்களுடனும் நட்புறவுடன் இணக்கமாக இருக்கிறார். முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். ஜெயலலிதா சில தினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடியபோது வாழ்த்து தெரிவித்தார்.

    பா.ம.க.வினரும் ரஜினி ரசிகர்களும் மோதிக்கொண்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றன.இதற்காகவே அக்கட்சிக்கு எதிராக அதிரடி முடிவுகளை ரஜினி எடுத்தார். இப்போது பகையை மறந்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசுடனும் நட்பு பாராட்டுகிறார். நேற்று நடந்த ராமதாஸ் பேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்று வாழ்த்தி விட்டு வந்தார்.   எனவே எந்த கட்சியையும் ஆதரிக்க மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ரசிகர்கள் அவர்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படலாம் என்று ரசிகர்மன்ற மேலிடம் மூலம் அறிவுறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலின்போது “ராணா” படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்று விடுவார் என்றும் கூறப்படுகிறது.



    Posted by விழியே பேசு... at 6:45 PM 1 comment:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல்


    வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலுக்கான தேதி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான சட்டசபை காலம் மே 16 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்னனு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து முன்ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் பல முறை ஆய்வு கூட்டங்களை நடத்தி ஏற்பாடுகள் முடிந்து ஓட்டுப்பதிவுக்கு தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்நிலையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் குரேஷி தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் நாள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் கமிஷனர் குரேஷி தேர்தல் நடக்கும் நாள் விவரத்தை அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடக்கிறது.


    Posted by விழியே பேசு... at 6:27 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    நண்பன் படக்குழு கொடுத்த அதிர்ச்சியில் ஸ்ரீகாந்த்திற்கு


    ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் 'நண்பன்'. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா. சமீபத்தில் டேராடூன்னில் நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நண்பன் படக்குழு ஸ்ரீகாந்த்திற்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தது. நடிகர் ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாள் தினமான நேற்று (28 பிப்ரவரி) நண்பன் படக்குழு பிறந்தநாள் கேக் வெட்டி ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாளை கொண்டாடியது. தன்னுடைய சினிமா கேரியரில் கிடைத்த நண்பன் பட வாய்ப்பை மறக்க முடியாத எனக் கருதிய ஸ்ரீகாந்த், இந்த பிறந்தநாளை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.


    Posted by விழியே பேசு... at 6:08 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    கார்த்திக்காக போட்டி போடும் டைரக்டர்கள்


    தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் கார்த்தி, சிறுத்தை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகிறார். இப்படத்தை இயக்க டைரக்டர் பூபதி பாண்டியன், ஜெகன் ஆகியோர் இடையே போட்டா போட்டி நடக்கிறது.

    "பருத்திவீரன்" படத்தில் அறிமுகமான கார்த்தி, அதனைத்தொடர்ந்து "பையா", "நான்மகான் அல்ல", "சிறுத்தை" ‌என்று வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்த கார்த்தி அடுத்த படத்திற்கான வேலையை தொடங்க இருக்கிறார். வழக்கம்போல் கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான கிரீன் ஸ்டூடியோஸ் தான் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தரத்திலிருந்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.

    இதனிடையே கார்த்தி படத்தை இயக்க பிரபல டைரக்டர்கள் பூபதி பாண்டியன் மற்றும் ஜெகன் ஆகியோர் இடையே போட்டா போட்டி நடக்கிறதாம். பூபதி பாண்டியன் தனுஷை வைத்து "தேவதையை கண்டேன்", "திருவிளையாடல் ஆரம்பம்" போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். அதேபோல் ஜெகன், "ராமன் தேடிய சீதை" என்ற படத்தை இயக்கியவர். கார்த்தி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் அவரை வைத்து இயக்க இந்த இரண்டு டைரக்டர் இடையே போட்டா போட்டி நடக்கிறது.


    Posted by விழியே பேசு... at 5:41 PM No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ▼  August (1)
      • புலி பட பாடல்கள் டவுன்லோட் (Puli Tamil Movie Songs...
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.