பாலிவுட்டின் இப்போது ஹாட் நியூஸ் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம் தான். ரன்பீர்-காத்ரீனா திருமணத்திற்கு, ரன்பீரின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் தீபிகா படுகோனேவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதேபோல் சல்மான் கானும், காத்ரீனா கைப்பும் வெகுநாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் அனைவரும் பிரிந்தனர். இதனையடுத்து ரன்பீர், காத்ரீனா கைப்பை காதலிக்க ஆரம்பித்தார். இவர்களது காதலுக்கு ரன்பீரின் பெற்றோர் ரிஷி கபூர்-நீது சிங் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் ரன்பீர் தனது பெற்றோரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அவரது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. ரன்பீர்-காத்ரீனா காதலுக்கு ரிஷி கபூர்-நீது சிங் ஓ.கே. சொல்லிவிட்டனர். அத்துடன் விரைவில் திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பெற்றோரின் ஆசைப்படி விரைவில் திருமணத்தை நடத்தும் எண்ணத்தில் இருக்கிறார் ரன்பீர். ஆகையால் அடுத்த ஆண்டு 2012ல் ரன்பீர்-காத்ரீனா திருணம் நடைபெறும் என்று தெரிகிறது. இதனிடையே ரன்பீர் தன்னுடைய காதலி காத்ரீனாவை தனது பாட்டி கிருஷ்ணாராஜ் கபூரிடம் அழைத்து சென்று காட்டியுள்ளார். காத்ரீனாவை வரவேற்ற கிருஷ்ணராஜ் கபூர், ரன்பீரிடம் உனக்கு ஏற்ற சரியான பெண் இவள்தான் என்று கூறி இருவரையும் வாழ்த்தியுள்ளார்.

No comments:
Post a Comment