தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் கார்த்தி, சிறுத்தை படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகிறார். இப்படத்தை இயக்க டைரக்டர் பூபதி பாண்டியன், ஜெகன் ஆகியோர் இடையே போட்டா போட்டி நடக்கிறது.
"பருத்திவீரன்" படத்தில் அறிமுகமான கார்த்தி, அதனைத்தொடர்ந்து "பையா", "நான்மகான் அல்ல", "சிறுத்தை" என்று வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்த கார்த்தி அடுத்த படத்திற்கான வேலையை தொடங்க இருக்கிறார். வழக்கம்போல் கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான கிரீன் ஸ்டூடியோஸ் தான் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தயாரிப்பாளர் தரத்திலிருந்து உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.
இதனிடையே கார்த்தி படத்தை இயக்க பிரபல டைரக்டர்கள் பூபதி பாண்டியன் மற்றும் ஜெகன் ஆகியோர் இடையே போட்டா போட்டி நடக்கிறதாம். பூபதி பாண்டியன் தனுஷை வைத்து "தேவதையை கண்டேன்", "திருவிளையாடல் ஆரம்பம்" போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். அதேபோல் ஜெகன், "ராமன் தேடிய சீதை" என்ற படத்தை இயக்கியவர். கார்த்தி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் அவரை வைத்து இயக்க இந்த இரண்டு டைரக்டர் இடையே போட்டா போட்டி நடக்கிறது.
No comments:
Post a Comment