தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்கு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து நடைபெறவிருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி,கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர் குரேஷி.
தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக, அதாவது ஏப்ரல் மாதம் 18,23,27ஆகிய தேதிகளிலும், மே மாதம் 3,7,10 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஐந்து மாநிலங்களிலும் மே-13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 5 மாநிலங்களிலும் நடத்தை விதி அமலுக்கு வந்தது. ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தின் 6 கட்ட வாக்குப்பதிவினால்தான் தமிழக வாக்கு எண்ணிக்கை தேதி தள்ளிப்போனது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment