ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் 'நண்பன்'. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா. சமீபத்தில் டேராடூன்னில் நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நண்பன் படக்குழு ஸ்ரீகாந்த்திற்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தது. நடிகர் ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாள் தினமான நேற்று (28 பிப்ரவரி) நண்பன் படக்குழு பிறந்தநாள் கேக் வெட்டி ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாளை கொண்டாடியது. தன்னுடைய சினிமா கேரியரில் கிடைத்த நண்பன் பட வாய்ப்பை மறக்க முடியாத எனக் கருதிய ஸ்ரீகாந்த், இந்த பிறந்தநாளை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.
No comments:
Post a Comment