Thursday, January 1, 2015

கிரிக்கெட் வீரர் அசாருதீன் வாழ்க்கை சினிமா படமாகிறது

கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் அவரது இரண்டாவது மனைவி கேரக்டரில் கரீனா கபூர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் முன்னணி ஆட்டக்காரராக இருந்த அசாருதீனின் சொந்த வாழ்க்கை பரபரப்பும் விறு விறுப்பும் நிறைந்தது. இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவி நவ்ரீன். 9 வருடங்கள் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தினர். 

பிறகு அசாருதீன் வாழ்க்கையில் இந்தி நடிகை சங்கீதா பிஸ்வானி வந்தார். இதையடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்தார். சங்கீதா பிஸ்வானியை 1996–ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

2011–ல் அசாருதீனின் மகன் அயாசுதீன் ரோடு விபத்தில் மரணம் அடைந்தார். அசாருதீன் கிரிக்கெட் சாதனைகளையும் குடும்ப வாழ்க்கையையும் உள்ளடக்கிய படமாக இது தயாராகிறது. இப்படத்தில் அசாருதீன் கேரக்டரில் இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார். முதல் மனைவி நவ்ரீன் வேடத்துக்கு பிராச்சி தேசாய் தேர்வாகியுள்ளார். இவர் இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நவ்ரீனை நேரில் சந்தித்து பேசி கேரக்டருக்கு தன்னை தயார்படுத்தி வருகிறாராம். 

அசாருதீனுக்கு நெருக்கமாக இருந்த கிரிக்கெட் வீரர்களிடமும் பேசி வருகிறார். இரண்டாவது மனைவி சங்கீதா பிஸ்வானி வேடத்தில் கரீனாகபூர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. படவேலைகள் விறுவிறுப்பாக துவங்கி உள்ளன.

என்னை அறிந்தால் பாடல்கள் (Yennai Arindhaal songs)















என்னை அறிந்தால் ட்ரைலர் (Yennai Arindhaal Official Trailer)