பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 திரைக்கு வரும் என்று தயாரிப்பாளரால் அறிவிக்கப்பட்ட அஜீத்தின் என்னை அறிந்தால் படம் திடீரென பொங்கல் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது.
பொங்கல் தினத்தில் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் பெரிய படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாக ஆர்வம் காட்டும். ஷங்கரின் ஐ ஜனவரி 9 -ஆம் தேதியே திரைக்கு வருகிறது. ஜனவரி 14 என்னை அறிந்தால், ஆம்பள படங்கள் வெளியாகும் என கூறப்பட்டது.
இரு படங்களுக்கே திரையரங்குகள் போதாத நிலையில் மூன்று படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் இன்னும் நிறைவடையாததால், என்னை அறிந்தால் பொங்கலுக்குப் பதில் ஜனவரி இறுதியில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.
என்னை அறிந்தால் படத்திற்கு திரையரங்குகள் கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வியாக இருந்தது. போதிய திரையரங்குகள் கிடைக்காத்தாலும் , ஐ படத்தின் பிரமாண்டத்திற்கு அனைத்து விதமான ரசிகர்களிடமிருந்தும் கிடைத்துள்ள அமோக வரவேற்புமே என்னை அறிந்தால் தள்ளி போக காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த திடீல் விலகல், அஜீத் ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரம் ஆம்பள படத்துக்கும், ஐ -க்கும் கணிசமான திரையரங்குகள் கிடைக்கும்.
இழப்பிலும் ஒரு லாபம்.

No comments:
Post a Comment